புதுக்கோட்டையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையின் காய்கறி சந்தையில் காய்கறி வாங்க வந்த மூன்று நபர்கள் 2000 கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றி சென்றதால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி கணேஷ் நகர் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தார். புகாரை ஏற்ற அதிகாரிகள் உடனடியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், ஜெயராஜ் , […]
Category: புதுக்கோட்டை
காமராஜபுரத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கே எல் கே எஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் ரூ 500ஐ கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார். அப்போது அந்த நோட்டு சந்தேகப்படும் வகையில் இருந்ததால், கடை உரிமையாளர் உடனடியாக கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது, ஜெயராஜ் […]
கறம்பக்குடி அருகே மது விற்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சின்னப்பன் ஆகியோர் கறம்பக்குடி மீன்மார்க்கெட், திருமணஞ்சேரி பாலம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த குமார்(65), சிவா(19), முருகானந்தம்(47) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் […]
சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை மாவட்ட எல்லையான சுகந்திரபுரம் சோதனைச்சாவடி அருகே கே.புதுப்பட்டி காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து புதுவயல் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.. இதையடுத்து சரக்கு […]
தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், […]
புதுக்கோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை, உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]
புதுக்கோட்டை மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தந்தை சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை […]
டாஸ்மாக் மதுக்கடையில் 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து மாலை 7 மணி வரை கடைகள் […]
நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை […]
நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை […]
புதுக்கோட்டை அருகே மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மது கடைகள் ஆகியவை மூடப்பட்டன. இதையடுத்து, மது கிடைக்காமல் பல்வேறு மதுபிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கருப்பு சந்தையில் […]
தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு […]
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைக அனைத்தும் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார். அவ்வாறு, உத்தரவை மீறும் மளிகைகடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட 3 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் முதல் […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
டெல்லி சென்று திரும்பிய புதுக்கோட்டையை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் குணமைடைந்த நிலையில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57 அதிகரித்து அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது டெல்லி நிஜாமுதீன் […]
புதுக்கோட்டையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டாருடன் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனிமையை சகிக்க முடியாத காரணத்தினால் விரக்தியடைந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக அரசு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடைபெறும் விழாவாகும். இந்த தேரோட்ட நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து விழாவை சிறப்பித்து விட்டு சாமியை தரிசனம் செய்து செல்வர். அந்த வகையில் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவிற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், அன்றைய தினம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 9ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதியில் இருந்து அதிகமானோர் பங்கேற்பார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
டிக் டோக் வீடியோ பதிவு செய்ய மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் எனும் கல்லூரி மாணவன் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில் மக்கள்மீது இடித்தும் அவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நடனமாடியும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் […]
நண்பருடன் காரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வீரபட்டியை சேர்ந்தவர் அழகியசோழன் இவர் தனது நண்பன் சுதந்திரனை அழைத்துக்கொண்டு நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை வரை காரில் சென்றுள்ளார். பின்னர் அவர்களது வீரப்பட்டிக்கு இரவு நேரத்தில் திரும்பியுள்ளனர் அழகியசோழனும் அவரது நண்பரும். காரை அழகியசோழன் ஓட்டி வந்துள்ள நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதில் சுதந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் […]
சுப்பையா என்பவர் தனது சொந்த செலவில் ‘அறம்’ என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான சுப்பையா. இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழ்மையில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நாள்தோறும் எண்ணியுள்ளார். இந்நிலையில், இடையாத்தூர் கிராமத்திலிருந்து ஒரு பேப்பர் வாங்க வேண்டுமென்றால் கூட, நான்கு கிலோ மீட்டருக்குச் […]
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனாவில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 46 பேரும் சொந்த ஊர் திரும்பினர். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 45 வயதில் குழந்தை பிறந்ததால் அதனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த புகாரின் பேரில், தம்பதியிடம் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெரியகல்லுவாயை சேர்ந்த காடப்பன், செல்வி தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மகன் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார். செல்விக்கு 45 வயதாகும் நிலையில் இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் […]
புதுக்கோட்டையில் 13 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜூஸ் கடை ஒன்று உள்ளது. அதில் ஒருவர் மதியம் ஜூஸ் சாப்பிட்டு இரண்டு நூறு ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டுகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. இதையடுத்து அந்த நோட்டுகளை பற்றி கேட்கும்போது அவர் முரண்பாடாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த ஜூஸ் கடை உரிமையாளர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் […]
புதுக்கோட்டை அருகே 9 மாத ஆண் குழந்தையை ரூ 5 லட்சத்திற்கு விற்பனை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயல் என்ற கிராமத்தில் காடப்பன் மற்றும் செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம்பதியினருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஆண் குழந்தையை பிறந்து 4 நாட்கள் கழித்து 5,00,000 ரூபாய்க்கு […]
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 9 மாத ஆண் குழந்தை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கல்லை சேர்ந்த காடன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த ஆண் குழந்தை பிறந்து நான்கு நாட்களிலேயே 5 லட்சம் ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு […]
புதுக்கோட்டை அருகே சாப்பாடு கொடுக்காமல் 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கும் கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணன்-செல்லாயி தம்பதியரின் மகளின் பெயர் தனலட்சுமி. 20 வயதான இவர் கடந்த 24-ஆம் தேதி இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்கு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பாமல் திடீரென மாயமாகி விட்டார். இதையடுத்து காணாமல் போன […]
திருமயம் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நகை பை காவல் துறையினரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர் நாடி அம்மாள். இவர் நேற்று மாலை 6 மணி அளவில் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றைக் கண்டு அதை எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் ஒப்படைத்துள்ளார். சிக்கந்தர் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் நகை, […]
புதுக்கோட்டையில் மனைவியை நண்பனுடன் சேர்ந்து கொன்று 3 வருடம் கணவன் நாடகமாடி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரண்யா. இவரும் அதே பகுதியை அடுத்த பள்ளத்திவிடுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் கடந்த 2005 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் ஆகும். இவ்வாறு இருக்கையில் […]
அரிமளத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்காததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அரிமளம் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கவில்லை எனக் கூறி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர். மாலை நேரம் ஆகிவிட்டதால் உணவு கிடைக்காததால், பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் […]
புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் நாயொன்று வெறிபிடித்து திடீரென அப்பகுதியில் உள்ள பலரைக் கடித்து துரத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஓடியுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருமயம் நெடுஞ்சாலை வழியாக சுமார் ஏழு மீட்டர் தூரம் வரை பார்க்கும் எல்லோரையும் அந்த நாய் துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் ராயபுரம் […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி கடந்த 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் தொடர்பாக எந்த பணியும் தொடங்கவில்லை என்றும், உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் […]
சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது . புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நெடுஞ்சாலை ஓரம் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர் அருகே ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கால் முதல் இடுப்பு வரை எரிந்து நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் […]
குடி போதையில் குழந்தையை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து ஒப்படைத்தனர் . புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவமணையில் பிரசவவார்டுக்குள் நேற்று இரவு புகுந்த இளைஞர் அங்கிருந்த குழந்தை ஒன்றை தூக்கி ஓட முயற்சித்தார் .இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர் .இதை அடுத்து மருத்துவமனையில் இருந்த காவல் மையத்தை சேர்ந்த போலீசார் இளைஞரை மீட்டு கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . பிடிபட்ட நபர் வடசேரிபட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் […]
திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன் வெங்காயத்திற்கு […]
புதுக்கோட்டையில் பேத்தியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட சென்ற தம்பதியினரின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் – காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால், […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, […]
குற்றங்களைக் களைய பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றுவோம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண்சக்தி குமார் பதவியேற்றார். இவர் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்றாலும், ஐபிஎஸ் ஆவதுதான் இவரது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. முன்னதாக திருநெல்வேலியில் பணியாற்றிய இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இவர், “அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு புதுக்கோட்டையில் […]
மணப்பாறையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை 1,15,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம், இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மேலும், மூன்றாவது முறையாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விஜயா குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து திருச்சி மருத்துவமனையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை பெற்றோரின் உதவியுடன் செவிலி, தரகர் […]
50 வருடங்களாக புதுக்கோட்டை மக்களின் ஃபேவைரட்டாக முட்டை மாஸ் திகழ்ந்து வருகிறது. அவ்வாறு பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறவைக்கும் முட்டை மாஸ் பற்றி தான் இந்த சிறப்புத் தொகுப்பு! தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதாவது திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லிப்பூ, திண்டுக்கல் பூட்டு, சேலம் மாம்பழம், திருப்பதி லட்டு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு ருசியான சிறப்பு சேர்ந்துள்ளது. அப்படி ஒரு சுவையான உணவு […]
புதுக்கோட்டையில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய இளைஞர் வரும் வழியில் பைக் நிலை தடுமாறி மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் விராலிமலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அன்னவாசல் சித்தன்ன மலை பகுதியில் சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். வரும் வழியில் சித்தூர்பட்டி அருகே வேகமாக […]
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவர் டோலக்கேட்டில் வரி செலுத்த மறுத்ததின் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைடைந்த வேட்பாளர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்த பொழுது மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். […]
தேசிய அளவில் 19 மாநிலங்களுக்கு நேரடியாக சென்று குழந்தைகள் தொடர்பாக 5,000 குறைகள் கேட்டறியப்பட்டு, அவற்றில் 4,500 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்தவதை தடுக்க பயன்படும் வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பெற்றோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், […]
மாவட்ட நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புறங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் 38 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓரளவிற்கு அனைவரும் பாதாளச் சாக்கடை இணைப்பை செய்து முடித்துவிட்டனர். தற்போது பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியிருக்கிறது. மழைக்காலங்களில் மட்டுமல்லாமல், வெயில் காலங்களிலும் இந்தக் கழிவு நீர் வெளியேற்றம் இருந்துவருகிறது.தற்போது டெங்கு காய்ச்சல் பரவ […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக […]
புதுக்கோட்டை கடைமடை பகுதி வரை காவேரி நீரை கொண்டுவர தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை பூமி பூஜை நடத்தி பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,காவிரி கடைமடை பகுதிகளில் ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் கடைமடை பகுதி வரை காவிரி நீர் வந்து […]