இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரும் செப்.3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ், ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 35 கடல் மைல் தூரத்தில் இரவு 11: 30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த […]
Category: புதுக்கோட்டை
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்து செல்கின்றனர். இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற […]
அறந்தாங்கியில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை முழுதும் தீயானது பரவியது . மேலும் , அருகில் இருந்த கண்ணாடி கடை மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் தீ பரவியது. இதனால் மூன்று கடைகளிலும் தீ […]
புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் பள்ளி அருகே ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பத்தை சரி செய்ய கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது.பள்ளியின் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்பு நாள் தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பட்டுக்கோட்டை மாவட்டம் பெண்கள் அரசினர் பள்ளி அருகே முறையான […]
திருமயம் அருகே நிலத்தை சமன் செய்யும் பணியின்போது 17 ஐம்பொன் சிலைகளும் சிலை பீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த விவசாயி முத்தையாவிற்கு சொந்தமான நிலத்தில் சமன் செய்யும் பணிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது. அங்கிருந்த மரம் ஒன்றை அப்புறப்படுத்தும்போது 2 சிலைகள் கிடந்துள்ளன.இதையடுத்து அவர்கள் வருவாய்த்துறைக்கும் தொல்பொருள் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அவ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், அந்த இரண்டு சிலைகைளையும் கைப்பற்றினர் மேலும் அருகிலுள்ள பகுதிகளில் இவ்வாறு தோண்டத் தோண்ட […]
அறந்தாங்கி அருகே தண்ணீர் டம்ளரை திருடியதற்காக காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்ட பகுதியில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலில் வைக்கப்பட்ட தண்ணீர் டம்ளர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக காணாமல் போகி உள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த சனி கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள் தண்ணீர் டம்ளரை திருடிச் செல்லும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் […]
கீரமங்கலம் பகுதியில் தன உயிரை கொடுத்து 10 தொழிலாளர்களை வேண் டிரைவர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் குளமங்கலம் போன்ற கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வயல்வெளிகளுக்கு சென்று பணிபுரிந்து வருவது வழக்கம் இந்நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அப்பகுதிகளில் வரக்கூடிய சரக்கு வேனில் ஏறி சென்று பணியை முடித்துவிட்டு திரும்பி வருவர் இந்நிலையில் நேற்றைய […]
நோயாளிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக பேட்டரி பொருத்தப்பட்ட கார் வசதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவ கல்லூரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1கிமீ வரை நடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது வெயில் காலம் என்பதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிற நிலையில், பஸ் நிலையத்தில் இருந்து நடந்து […]
பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]