கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு வாங்கி அதனை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஓட்டுனர் ஆன இவர், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆற்காடு,சிப்காட், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்டவர்களிடம் கார்களை வாடகைக்கு எடுத்து இருக்கிறார். முதல் நான்கு நாட்களுக்கு சரியான முறையில் வாடகை செலுத்தி விட்ட பின்னர் அலைகளைத்துள்ளார். தொடர்ந்து வாடகைக்கு எடுத்த கார்களை […]
Category: ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி லட்சுமி பிரியா அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,107 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் நேற்று (நேற்றுமுன்தினம்) மட்டும் […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
கடந்த நான்கு மாதங்களாக கொரோனா கால ஊரடங்கால் பொதுமக்கள் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல்ல, மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சரிந்து போன மக்களின் வாழ்க்கை தேவையை மீட்டெடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளையும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக வங்கிகளில் வட்டி கட்டுவது, இஎம்ஐ செலுத்துவது, வீட்டு வாடகை, மின்கட்டணம் போன்ற அனைத்து விதமான விஷயங்களிலும் சில சலுகைகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது. இந்த வரிசையில் […]
ராணிப்பேட்டை அருகே 1 1/2 வயது குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த சின்ன பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனபால் என்பவரது மகள் திவ்யா ராணி என்பவருக்கும், திருப்பத்தூர் பகுதியில் மட்டுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஆண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் வீட்டை விட்டு […]
ராணிப்பேட்டையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திருமணம் நகராட்சி ஆணையாளரால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்தே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வீட்டில் 50க்கும் உட்பட்ட நபர்களை கொண்டு எளிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது முற்றிலும் […]
அனுமதியின்றி பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சி நடுத் தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ்(23) என்பவர் இவரது நண்பரான சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சாமுவேல்(21) என்பவருடன் சேர்ந்து ராணிப்பேட்டையில் இருக்கும் பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிள் மூலமாக பிளாஸ்டிக் பைகளில் மணலை கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சங்கர் நகர் அருகில் வந்த சமயம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இவர்களிடம் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 13 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 46 பேர் குணமடைந்த நிலையில், 35 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதை நிலையில், இன்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் சிகிச்சையில் […]
டிக்டோக் செய்ய வற்புறுத்திய தகராறில் இளைஞர் ஒருவரை ஏழு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த ராபர்ட் டிட்டோக் செய்ய வருமாறு அழைத்துள்ளார். அவரது அழைப்பிற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவிக்க இருவரிடையே மோதல் எழுந்துள்ளது. பின்னர் தனது சகோதரரான விஜயிடம் விக்னேஷ் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் ராபர்ட்டை செல்போனில் அழைத்து மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது. செல்போனில் […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அம்பேத்கர் நகர் நன்னுமியான் சாயுபு தெருவைச் சேர்ந்த குமார்(25). இவரை கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று அரக்கோணம் மசூதி தெருவில் வைத்து மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து குமாரின் தந்தை ஜெயசங்கர் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார் அரக்கோணத்தில் உள்ள முபாரக் நகரைச் சேர்ந்தவர் ஆரிப் ஹாஜிரா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. நேற்று வீட்டில் தனியாக இருந்த ஹாஜிரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் ஹாஜிராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ராணிப்பேட்டை உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் […]
ராணிப்பேட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப் முகமது. இவருக்கும் அரக்கோணம் காஜாமைதீன் என்பவரது மகளான ஹாஜிரா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் ஹாஜிரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
அரக்கோணம் ரயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்று கொண்டிருந்தது. இதில் இரண்டு நபர்கள் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து தயாராக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரயில் பெட்டிக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை ரயிலில் இருந்து இறக்கி அவர்களை […]
அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்ட 29 தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் காற்று, நீருக்கு அதிக மாசுபடுதலை ஏற்படுத்தும்விதமாக செயல்பட்டுவந்த 29 தொழிற்சாலைகளில் ஆய்வுமேற்கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மொத்தமாக அத்தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் […]
ராணிப்பேட்டை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன்-மனைவி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் ஊர் ஊராகச் சென்று கேஸ் அடுப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் புலிவளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டியுள்ள ஒரு வீட்டில் கேஸ் அடுப்பை சரி செய்ய சென்றுள்ளார் காளியப்பன். அங்கு நடராஜன் அங்கம்மாள் என்கிற திருமணமான ஜோடியினர் வசித்து வருகின்றனர். அவரது வீட்டில் அடுப்பு சர்வீஸ் செய்து […]
வாலாஜாப்பேட்டையில் மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் படுகாயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வெங்கடேசன் என்ற இளைஞன் ஒருவன் பாழடைந்த கழிவறை கட்டுமானம் ஒன்றின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்றவைத்து பிடித்துவிட்டு தீக்குச்சியை அருகில் இருந்த குப்பையில் தூக்கி போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து குப்பை எரிந்து கொண்டிருந்தநிலையில் அதிலிருந்த மர்மப்பொருள் ஓன்று திடீரென வெடித்ததில் வெங்கடேசன் படுகாயமடைந்தார். அதன்பின் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசனுக்கு முதலுதவி […]
ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டையில் மர்மப்பொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கைவிடப்பட்ட கட்டுமானம் ஒன்றின் அருகே வெங்கடேசன் என்ற இளைஞர் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்ற வைத்துவிட்டு அருகிலிருந்த குப்பையில் போட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது குப்பையில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு […]
ராணிப்பேட்டை அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் மாமனாரை கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அலமேலு. இவர் அதே பகுதியில் உறவினர்களால் சீட்டு கம்பெனி ஒன்றில் பணம் போட்டு பின் ஏலத்தில் சீட்டு பணம் போக மீத தொகையை எடுத்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் செலவுக்கு பணம் தருமாறு மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் தகராறு முற்றவே […]
ராணிப்பேட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டம் கலவை பகுதியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் அப்பகுதி அதிமுக பிரமுகர் ஆவார். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சொத்து கேட்டு அதிமுக பிரமுகர் வீட்டின் வெளியே நின்று அவரது அண்ணன் மகன்களான […]