Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் இருந்து ஓமலூர் வரை சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எட்டிகுட்டை மேடு பகுதி சாலையின் இருபுறங்களிலும் ஒரு அடி பள்ளம் இருக்கிறது. நேற்று பழைய இரும்பு பொருட்கள் ஏற்றிக்கொண்டு மைசூரில் இருந்து சரக்கு லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே செடியில் பூத்த 10-க்கு மேற்பட்ட “பிரம்ம கமலம் பூக்கள்”…. ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் சிவாயநகர் முதல் கிராஸ் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ நேற்று இரவு நேரத்தில் பூத்தது. ஒரே செடியில் பூத்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பூக்களை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர். சிலர் பூவுக்கு பழம், தேங்காய் உடைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்னிபத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு”…. 7 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!!

7 லட்ச ரூபாய் மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ராமன் நகர் பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு சேலம் மாநகராட்சியில் தணிக்கை குழு துணை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! பரிசுக்கு ஆசைப்பட்டு ரூ.59 ஆயிரத்தை இழந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!!

பெண்ணிடம் 59 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள உடையப்ப செட்டியார் காலனியில் பாலாஜி-கௌதமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கௌதமியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது என கூறினார். இதனையடுத்து அந்த நபர் பரிசு தொகையை பெற சேவை கட்டணம், ஜி.எஸ்.டி போன்றவை செலுத்த […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தி திணிப்பு….. “87 வயது திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை”….. இடியென வந்த செய்தியால் கலங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலின்… ஆழ்ந்த இரங்கல்.!!

சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மோடி அரசே..! இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர் தற்கொலை… சேலத்தில் பரபரப்பு..!!

மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

40,000 பணியிடம்: 8 மணிக்குள் செல்லுங்க உடனே வேலை…!!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே….. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று  நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள 40 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அண்ணாமலை ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு அண்ணாமலை பணம் கொடுக்காமல் பொதுமக்களை ஏமாற்றியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அண்ணாமலையை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகன்கள் தான் காரணமா….? ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை நேரு நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோலார்பேட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நரேஷ் குமார்(27), நிர்மல் குமார்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை விடுமுறை […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. துண்டுகள் வழங்கப்படுமா…? நெசவாளர்கள் கோரிக்கை…!!!

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் அவர்கள் துண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதன் காரணமாக துண்டு உற்பத்தி அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் துண்டுகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி தேக்கமடைந்துள்ளதாக விசைத்தறி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லைசன்ஸ் இல்லை என்றால் பெற்றோர்கள் மீது வழக்கு…. போலீஸ் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

சேலத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போக்குவரத்தை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மாநகர வடக்குத் துணை கமிஷனர் மாடசாமி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணமடைந்தனர். நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 183 பேர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் நாளை (நவம்-24) இங்கெல்லாம் பவர் கட்… உங்க ஊரு இருக்கான்னு பார்த்துக்கோங்க…!!!

நாளை வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம், உடையாபட்டி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதுபோல உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் அவசரகால மின் பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம் துணை மின் நிலையங்களில் கீழ் குறிப்பிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே ரெடியா இருங்க…. நவம்பர் 26-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக தமிழக அரசு தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நிலையில் இந்த முகாமில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி…. இன்று மாலை 5 மணிக்குள் அப்ளை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெரியார் பல்கலை., துணைப் பதிவாளர் பணி நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா?…. பரபரப்பு தகவல்….!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தொலைதூரக் கல்வியில் உறி அங்கீகாரம் இல்லாத படிப்புகள் நடந்த அனுமதி வழங்கியது, கல்வி தகுதி இல்லாத வெளிமாநில இளைஞர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது போன்ற முறைகேடுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மூச்சு திணறல் ஏற்பட்டு 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி நேருஜி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தேவி நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் கவிபுரம் பகுதியில் கோகுல்நாத்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஸ்ரீ நிஷா(2) என்ற குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை கோகுல்தாஸ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஏற்காடு மலை அடிவாரம் பகுதிக்கு சென்று காரில் இருந்தபடி சிறிது நேரம் சுற்றி பார்த்துள்ளனர். இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்க்கரை வியாபாரியிடம் “9.38 லட்ச ரூபாய் மோசடி”…. போலீஸ் விசாரணை….!!!

வியாபாரியிடம் 9.38 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோகன் குமார் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கிரண் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் சர்க்கரை வாங்க முடிவு செய்தார். இந்நிலையில் 25 டன் சர்க்கரை வாங்குவதற்காக மோகன் குமார் அந்த நிறுவனத்திற்கு 7,79,625 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கல்லூரி அருகே நின்று பேசிய நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வின்சென்ட் பகுதியில் இருக்கும் சேலம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி விக்னேஷ் கல்லூரி அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விக்னேஷை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி…. வனத்துறையினருக்கு வந்த தகவல்… அதிரடி நடவடிக்கை..!!!

சேலத்தில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்ததால் வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் வெள்ளார் சின்னம்மம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சியை வைத்து இருப்பதாக டேனிஷ் பேட்டை வனச்சரகர் தங்கராஜுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. அதன் பேரில் வனத்துறையினர் கோவிந்தராஜ் வீட்டை சோதனை இட்டார்கள். அப்போது அவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி இருந்துள்ளது. இதனை வனத்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் “புத்தகக் கண்காட்சி”… நாளை ஆரம்பம்… அதிரடி உத்தரவுகளை வெளியிட்ட ஆட்சியர்…!!!

சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(நாளை) புத்தக கண்காட்சி ஆரம்பமாகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி திடலில் நாளை முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாசிப்பு பழகத்தை அதிகரிப்பதற்காக தமிழக அரசு சார்பாக புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி…. நவம்பர் 21 க்குள் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை….. காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தாயும், குழந்தையும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரில் டிராவல்ஸ் உரிமையாளரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ(1) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வினோத் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று மீனா தோட்டத்து கிணற்றுக்கு அருகே நின்று தனது குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளைநாயகன்பாளையம் பகுதியில் இருக்கும் அச்சம்பட்டி ஏரியை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் அந்த பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை விரைவாக காலி செய்யுமாறு அறிவுறுத்தினர். அதனை கண்டுகொள்ளாமல் சிலர் அங்கேயே வசித்து வந்தனர். இதனால் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது பெய்த மழை காரணமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 3/4 கோடி ரூபாய் மோசடி வழக்கு…. மேலும் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

2 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு அன்னதானபட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் சசிகுமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக அரவிந்த்குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி அரவிந்த் குமார் உட்பட சிலர் கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. தீ விபத்தில் தப்பிய உயிர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் ஊராட்சி அன்பு நகரில் காசியம்மாள் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வெளியூரில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்ததோடு, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே…. கந்து வட்டி கொடுமையா? கவலை வேண்டாம்….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!!

தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடை சட்டத்திற்கு அதித வட்டி வசூல் தடைச் சட்டம் என்று பெயர். இந்த தடை சட்டம் பல விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது வியாபார நோக்கில் வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றமாகும். தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம்.அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற பெற்றோர்…. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அத்தனூர்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆதிஷ், சூரியகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆதிஷ் வாழப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது ஆதிஷ் சுவிட்ச் பெட்டியில் கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. கால்வாயை தூர்வார உத்தரவு பிறப்பித்த உதவி கலெக்டர்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் அருகே 50 ஏக்கர் பரப்பளவிலான புதிய ஏரி கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதனை அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் சௌமியா, எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்துறையினர் மதகு பகுதிக்கு சென்று மலர் தூவியுள்ளனர். இதனையடுத்து ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயில் புதர்கள் மண்டி கிடப்பதால் போர்க்கால அடிப்படையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாலில் விஷம் கலந்து குடித்த தாய்-மகள்…. காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு கிழக்கு முதல் தெரு சுல்தானா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்சு(22), ஜாபியா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவரது கணவர் முகமது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கூலி வேலைக்கு சென்று சுல்தானா தனது மகள்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாபியா தனது தாயும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளில்…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…!!!!!

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டசபையில் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்ற 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் 11 சட்டசபை தொகுதிகளிலும் 14,29,231 ஆண்களும் 14,94, 721 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 248 பேரும் என மொத்தமாக 29,74,250 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருக்கின்றார்கள். திருத்தம் செய்யும் பணி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்காக சிறப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு”.. சேலம் இளைஞர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்புச் சட்டம்…!!!!

வீட்டில் துப்பாக்கி தயாரித்த சேலம் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் சென்ற மே-19 தேதி கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்ற நவ-11 தேதி, கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளே..! சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்…. கோட்ட அதிகாரிகள் தகவல்…!!!!!

ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு கேரளாவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் ரயிலில் அலைமோதும். நெரிசலை தடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசபூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அந்த வகையில் நரசபூர்-கோட்டையம் சிறப்பு ரயில் வருகின்ற வெள்ளிக்கிழமை நரசபூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோள காட்டுக்குள் 66 வயது மூதாட்டி கதறல்…. 22 வயது இளைஞர் கைது…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி மூதாட்டியின் சகோதரர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சிக்காக 66 வயது மூதாட்டி வயல் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர் (22) என்பவர் மூதாட்டி ஜெயலட்சுமியை வாயில் துணி வைத்து அடைத்து அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு தூக்கிச் சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று குரூப் 1 இலவச மாதிரி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மெஷின் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499059410 என்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட 27 பவுன் நகை”…. போலீசார் மீட்பு…!!!!!

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு நகைக்கடையில் சுமார் 80 பவுன் நகைகள் திருட்டுப் போன நிலையில் இது குறித்த புகாரின் பேரில் பள்ளபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த தீபக் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில்… கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் செய்த எல்ஐசி முகவர்கள்…. பலக்கோரிக்கைகள் முன்வைப்பு…!!!!

பல கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் பொருட்படுத்தாமல் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கூட்டுக்குழு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் இளையப்பன் தலைமை தாங்க துணைத்தலைவர், இணை செயலாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி பங்கேற்று சிறப்புரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், முகவர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று  சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி….. ஊர்க்காவல் படை வீரரின் செயல்…. தாயின் பரபரப்பு புகார்….!!!

காதலிக்க மறுத்த மாணவியை மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறிவழகன் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அறிவழகன் தகராறு செய்து தன்னை காதலிக்கும் படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் பெற்றோர்….!!!

8- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை நாயகர்காடு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய மதிஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடிய சிறுமியை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மதிஸ்ரீ தனது […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சேலத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

கனமழை எதிரொலியாக கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிலையில் தற்போது கன மழை காரணமாக சேலத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிவறையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர்…. நொடி பொழுதில் ஏற்பட்ட மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் தென் சோலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் நேற்று காலை சரவணன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறைக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காலில் விழுந்து கெஞ்சியே எம்.எல்,ஏ…. அதிர்ச்சி அடைந்த பெண்கள்… சேலத்தில் பரபரப்பு…!!!!!

சேலத்தில் எம்எல்ஏ ஒருவர் டாஸ்மாக் கடை ஊழியர்களின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் சென்ற 7-ம் தேதி பாமக எம்எல்ஏ அருள் தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்கு அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் கடையை மூடுவதாக உறுதி அளித்தனர். தற்போது ஒரு மாதம் ஆகியும் கடை இன்னும் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் முற்றுகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் உடைந்து விழுந்த முள்ளுவாடி ரயில்வே கேட்”….. வாகன ஓட்டிகள் இல்லாததால் விபத்து தவிர்ப்பு….!!!!

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நகரத்தில் முள்ளு வாடி ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில் வழித்தடமாக சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாச்சலம் செல்லும் பயணிகள் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில், சரக்கு ரயில் செல்லும் போது அங்கே கடுமையாக போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகும். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற 2018 ஆம் வருடம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியானது தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாடகைக்கு வீடு வேண்டும்”…. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. நகை கொள்ளை… மூதாட்டி பலி…!!!!!

சேலத்தில் வீடு கேட்பது போல் வந்து நகை பறித்து சென்றதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்த நசீர் ஜஹான் என்ற மூதாட்டி சென்ற பத்து வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். சென்ற 4-ம் தேதி காலை 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் இவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார்கள். அதற்கு இவர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே ரெடியா இருங்க…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நவம்பர் 13ஆம் தேதி குரூப் 1 இலவச மாதிரி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மெஷின் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499059410 என்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் ரயில்வே கோட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கை”…. 10 மாதத்தில் 874 கிலோ கஞ்சா பறிமுதல்….!!!!!

சேலம் ரயில்வே கோட்டத்தில் சென்ற 10 மாதங்களில் 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 51 பேர் கைதாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சிலர் புகையிலை பொருட்களை ரயிலில் கடத்தி விற்பனை செய்கின்றார்கள். இதனை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் மாநில எல்லை பகுதிகளில் […]

Categories

Tech |