Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கொள்ளை…! அதிர வைத்த கொள்ளையர்கள்… சேலத்தில் பரபரப்பு …!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தம்பதிகளை தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு 40 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீரகனூர் அருகிலுள்ள ராயர்பாளையம் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். மகன் தீபனுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் தீபனை சரமாரியாக தாக்கி விட்டு மனைவி திவ்யாவுடன் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பண்றதெல்லாம் திருட்டு வேலை… கண்டுபிடிக்கப்பட்ட போலி ஆலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மண் தயாரிக்கும் போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அங்கு இருந்த எந்திரம், 60 டன் மணல் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சட்டவிரோதமாக ஏரியில் இருந்து மணல் திருடி, அதனை கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு கட்ட பயன்படுத்தப்படும் ஆற்று மணலாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மணிவிழுந்தான் பகுதியில் இயங்கி வந்த போலி மணல் ஆலைக்கு நேரில் சென்று ஆத்தூர் துணை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒழுங்கா வேலைய பாருங்க… கழுத்தை நெரித்து கொல்லப்பட்டவர்… சேலத்தில் பரபரப்பு…!!

வடமாநில தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கனககிரி வேலாயுத சுவாமி கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சத்யா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு நிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் செருப்பு ரப்பரை கட்டிங் செய்யும் மிஷின் வைத்து தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் என்பவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆற்று மணலாக மாறிய களிமண்” மக்களை ஏமாற்றிய கும்பலை…. பொறிவைத்து பிடித்த போலீசார்…!!

களிமண்ணை ஆற்றுமணலாக மாற்றி விற்பனை செய்துள்ள மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உலா வசிஷ்ட நதிக்கரையில் சந்தேகத்திற்கிடமான தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக மணல் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் சாதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது களிமண்ணை ஆற்று மணல் போல மாற்றி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக வசிஷ்ட நதியில் இருந்து திருட்டுத்தனமாக தண்ணீரையும் உறிஞ்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கைதிக்கு ஏற்பட்ட நிலைமை… என்ன செய்தும் சரியாகல… பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரனூர் பகுதியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சேலம் செவ்வாய்பேட்டை போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வயிற்றில் பெண் குழந்தை” அபார்ஷன் செய்த போலி டாக்டர்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

வயிற்றில் உள்ள குழந்தையை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்தில் கோபாலபுரம் குட்டைக்காடு கிராமத்தில் வசிப்பவர் விவசாயியான சரவணன் என்பவரின் மனைவி பூங்கொடி. இவருடைய மகள் சரண்யா(29). இவர் திருமணமாகி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இதையடுத்து சரண்யா இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி தன்னுடைய தாயார் பூங்கொடியிடம் தெரிவித்தபோது தாய் பூங்கோடி அவருடைய தோழியான அலமேலுவிடம்  ஆலோசனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரம்… இப்படிக்கூட செய்வார்களா?…!!!

சேலம் மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணை பெற்றோர் நைசாக பேசி அழைத்து சென்று கருவை கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக தாழ்ந்த ஜாதி மக்களை உயர்ந்த ஜாதியினர் இழிவுபடுத்தி கொடூரமான முறையில் தாக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதன்படி சேலம் தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த வாணி என்ற இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களை விட தாழ்ந்த ஜாதியில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதன்பிறகு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுல நான் தலையிட விரும்பல… அவங்கள மக்கள் நம்ப மாட்டாங்க… நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் பேச்சு…!!

திமுக கட்சியானது பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் பரப்பி வருவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, கட்சியின் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான கருத்துக்களை கேட்டு வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க உடன் கூட்டணி முடிவு செய்த பிறகுதான் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண் குழந்தை கசக்குதா….? கருவிலேயே கொல்லப்பட்ட சிசு…. 4 பேர் கைது….!!

கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்டு கர்ப்பிணி பெண்ணிற்கு கருகலைப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை கண்டு சொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். பெண் குழந்தை வேண்டாம் என்ற முடிவில் சிலர் கருவிலேயே சிசுவை அழிக்க கூடும் என்ற நிலையில் தான் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சில இடங்களில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை தெரிந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேருந்து மீது ஆம்னி வேன் மோதி…. 6 பேர் பரிதாப பலி… சேலத்தில் சோகம்…!!

நின்றுகொண்டிருந்த பேருந்து மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் என்ற இடத்தில் சாலையோரம் அரசு பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது.  அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இளைஞர்கள் சுற்றுலா சென்ற ஆம்னி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக அந்த ஆம்னி கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவன் எங்க போனான்னு தெரியலையே… அடுத்தடுத்து மாயமான நபர்கள்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதாளம் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது தாயார் லக்னேஷ்வரியிடம், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற அவர் திரும்ப வீட்டுக்கு வராததால் லக்னேஷ்வரி தனது மகளான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… சட்ட விரோதமாக விற்பனை… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாட்டாமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் விசாரித்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ யாராவது காப்பாத்துங்க… தனியாக தவித்த சிறுவன்… 24 மணி நேர போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நத்தமேடு காலனி பகுதியில் நாகராஜன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திக்ராஜ் மற்றும் நித்திஷ் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கிருத்திக்ராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி தெருபட்டி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தங்களது தாத்தாவிற்கு உணவு கொடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் சென்றுள்ளனர். அதன்பின் தாத்தாவுக்கு உணவு கொடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்று நாடகம்… மகளுக்கு தாய் செய்யும் அநியாயம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சேலத்தில் பரபரப்பு…!!

கணவனை கழுத்தை நெறித்துக் கொன்றதோடு, மகளை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியில் வேல்முருகன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் வேல்முருகன் உடல்நலம் சரியில்லாததால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் காரிப்பட்டி காவல் நிலையத்தில் வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவனைக் கொலை செய்துவிட்டு….” கள்ளக்காதலனுக்கு மகளைத் திருமணம் செய்ய”…. மனைவி போட்ட பலே திட்டம்..!!

கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே  கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளையும் கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம்,யோத்தியாப்பட்டணம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் வேல்முருகன் இறந்த நிலையில் சங்கீதா மகளுடன் வசித்து வருகிறார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயம் இல்ல… போலீசார் வீட்டிலேயே… மர்ம நபர்களின் கைவரிசை… கைது செய்த காவல்துறை…!!

வீடு கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை திருடி சென்ற குற்றத்திற்காக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக குமரலிங்கம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வருவதால் அதற்கு தேவையான இரும்பு கம்பிகளை அப்பகுதியில் அடிக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில் இரும்பு கம்பிகளை சில மர்ம நபர்கள் திருடி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து குமரலிங்கம் இரும்பாலை காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“5 அம்ச கோரிக்கைகள்” நடைமுறைப்படுத்த வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்…!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில்  50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட  வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்…!!!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் போதிய நீர் இழப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் இன்று வரை 165 டிம்சி தண்ணீர்  டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டது. 231 நாட்களுக்கு நிறைவுற்ற நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் இழப்பு 105 அடிக்கும்  குறையாமல் உள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லமா பண்ணுவாங்க… ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்… சேலத்தில் பரபரப்பு…!!

ஓடும் பேருந்தில் வங்கி மேலாளரிடமிருந்து ரூபாய் 9 லட்சத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்ததோடு, மற்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆவர். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் தேவைக்காக ரூபாய் ஒன்பது லட்சத்தை ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் பணம் எனக்கு வேணும்… தவறை கண்டித்த கணவன்… தாய் மற்றும் மகனை சரமாரி குத்தியவர்…!!

தாய் மற்றும் மகனை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் வனிதா என்பவருக்கும் கட்டிட வேலைக்கு சென்ற போது, பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. அவ்வப்போது சுப்பிரமணியன் அனிதாவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த வனிதாவின் கணவர் அருள் இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பின் சுப்பிரமணியனுடன் பேசுவதையே வனிதா  தவிர்த்துவிட்டார். இதனால் கோபமடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணத்தை தர போறியா..? இல்லையா..? மதுபாட்டிலால் மண்டை உடைப்பு… விற்பனையாளருக்கு நேர்ந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

டாஸ்மாக் கடை விற்பனையாளர் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்து தச்சன்புதூர் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் சிவகுமார் விற்பனையை முடித்துவிட்டு டாஸ்மாக் கடையை பூட்டியுள்ளார். அதன்பின் மதுபாட்டில்களை விற்பனை செய்ததற்கான தொகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீ தான் திரும்ப தரனும்…. தொல்லை செய்த நிறுவனம்…. நண்பருக்கு கொடுத்த கடன்…. சிற்பிக்கு நேர்ந்த சோகம்…!!

நண்பருக்கு வாங்கி கொடுத்த கடனை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்பி கேட்டதால் சிற்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாழையூர் பகுதியில் அத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிற்பக் கலைக்கூடத்தில் சிற்பியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பருக்கு ஒரு பைனான்ஸ் நிறுவனத்திடம் அத்தியப்பன் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது நண்பர் அந்த கடனை திருப்பி செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இவரிடம் அந்த கடனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. மனைவியை பிரிந்த கணவன்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

பாதிக்கப்பட்டதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் முருகேசன் என்ற மெக்கானிக் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த முருகேசன் தனது வீட்டின் குளியல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு குடுங்க…. காவல் நிலையத்தில் காதல் ஜோடி… போலீசாரின் சமாதானம்…!!

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே மில்லில் பணிபுரிந்து வரும் காட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வரும் ஸ்வஸ்திக் ராஜ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு இருவரின்  பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

70 ஆண்டுகள் பழைமை… குடமுழுக்கு விழா… கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர்…!

சேலம் எடப்பாடியில் உள்ள காளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஓம் காளி அம்மன் திருக்கோயில் உள்ளது. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவருக்கு கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளி அறையில் கேட்ட முனங்கல் சத்தம்… கணவரிடம் வசமாக சிக்கிய ஆசிரியை…!!!

சேலத்தில் வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியையுடன் ஆசிரியர் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் இலந்தைவாரி கிராமத்திலுள்ள துவக்கப்பள்ளியில் தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக அணைப்பட்டி பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் பணியாற்றி வருகிறார். பகுதிநேர ஆசிரியர் தினமும் தலைமை ஆசிரியையை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம். இதையடுத்து, அவர்களுக்குள் நெருக்கம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலை வாய்ப்பற்றவா்கள் உதவித்தொகை… எப்படி விண்ணப்பிக்கலாம்?…!!!

சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆட்சியா் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அரசாணையின்படி, படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையினை இருமடங்காக உயா்த்தி ஆணை வெளியானது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா”… பள்ளி மூடல்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. பத்து மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் முடிவை பெற்று தற்போது பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளி மூடல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: பள்ளி திறப்பு… மாணவருக்கு கொரோனா உறுதி… 60 மாணவர்கள் தனிமை… பெரும் பரபரப்பு செய்தி…!!!

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் 60 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடடே..! சேலம் சிறுமி மாஸ் காட்டிடுச்சே…. ”வெறும் 1.16 மணி நேரம்”…. 13 கி.மீ ஓடி உலக சாதனை …!!

சேலத்தில் 8 வயது சிறுமி 13 கிலோமீட்டர் தொலைவை 1.16 மணி நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். சேலத்தில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயது சிறுமியான பிரதா என்பவர் கொரோனா விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார். இவற்றை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஓட்டமானது சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் தொடங்கிய அரிய வகை நாணயக் கண்காட்சி… ஆர்வத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்…!!

சேலத்தில் அரிய வகை நாணயக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது. அரிய வகை நாணயக் கண்காட்சி சேலத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டு நாணயங்களை கண்டு ரசித்தனர். பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. சேலத்தில் அகரம் நண்பர்கள் குழு சார்பாக பழைய நாணயங்கள் அஞ்சல் தலை உள்ளிட்டவை குறித்து இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொந்த ஊரில் பொது மக்களுடன்… பொங்கல் திருநாளை… உற்சாகமாக கொண்டாடிய தமிழக முதல்வர்….!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் பொது மக்களுடன் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டு தோறும் தை மாதம் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி இந்த ஆண்டும் சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் . அதற்காக நேற்று காலை விமானத்தில் அவர் சென்னையிலிருந்து  சேலத்திற்கு சென்றார். பின்னர் சொந்த ஊரான சிலுவம்பாளையதிற்கு காரில் சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பைக்கில் சென்ற தம்பதி… திடீரென்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பைக்… தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்….!!

60 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொசவப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாபு(35) – சசிகலா(30). நேற்று காலையில் இத்தம்பதியர் ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் நாமக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பாபு வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… மரத்தில் மோதியதால்… நேர்ந்த துயர சம்பவம்….!!

மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியை சேர்ந்தவர்கள் நாகலிங்கம்(17), சிவா(17), மஞ்சுநாத்(17). நண்பர்களான மூவரும் சம்பவத்தன்று  மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து  கீழே விழுந்து 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பல்வேறு நாடக கதாபாத்திரம்… எம்.எல்.ஏ-வின் திறமை… தொடரும் புராண கதை…!!

வள்ளி திருமண நாடகத்தில் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்திய எம்.எல்.ஏ சக்திவேல் அவர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாடக பேராசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம் என்ற புராண நாடகம் நடத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க பொருளாளர், சேலம் தெற்கு எம்.எல்.ஏவு.மான ஏ.பி.சக்திவேல் அவர்கள் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நாடகத்தில் நாடக நடிகர் சங்க […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில்… கத்தி முனையில் 14 பவுன் நகை கொள்ளை… சேலம் அருகே பரபரப்பு….!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கத்தி முனையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் தனியார் மருந்து  நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்திரசேகரன் வாழப்பாடி தாலுகா அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது  நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டு கதவை கற்களால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறி விழுந்து உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட கடை வியாபாரியின் உடல்… விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மை….!!

கடை வியாபாரியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை  சேர்ந்த தம்பதியினர்  சீனிவாசன்-நளினா. சீனிவாசன் அப்பகுதியில் பழைய பேப்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார். இத்தம்பதியருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற சீனிவாசன் தலையில் அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாக சிக்கிய… 5,75,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள்…மளிகைக்கடைக்காரர் கைது…..!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை  செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  சேலம் மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் உழவர் சந்தை அருகே உள்ள ரெங்கா நகரை சேர்ந்தவர்  சல்சார் பாபு . இவர் வீட்டிற்கு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வெண்ணிலா கபடி குழு” பட பாணியில்… நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டி… பரிசை தட்டி சென்ற போட்டியாளர்கள்…!!

சேலத்தில் நேற்று தனியார் உணவகத்தில் நடைபெற்ற  பரோட்டா சாப்பிடும் போட்டியில் பரோட்டா பிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் பரோட்டாவிற்கு முதலிடம் உண்டு. மைதா  மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் மக்களுக்கு பரோட்டாவின் மீது உள்ள ஆசை குறையவில்லை. மேலும் எண்ணெய் பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா போன்றவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்த தொழிலாளி… ஆம்புலனிஸில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு…!!

சுவர் இடிந்து விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்த தொழிலாளி வருமானமின்றி தவிப்பதால் ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளார். சேலத்தில் உள்ள பெரமனூர்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் தர்மதுரை- மங்கையர்கரசி.இத்தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தர்மதுரை கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த தர்மதுரை மீது  திடீரென்று  அவரது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருமணத்தை மீறிய உறவு”… இடையூறாக இருந்த தொழிலாளி கொலை… கொலையாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டணை…!!

சேலத்தில் தொழிலாளியை கொலை செய்த டெய்லருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(35). இவர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி(32). இவர்  சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இந்நிறுவனத்தில் திருவாரூரை சேர்ந்த அருள்செல்வன்(35) என்பவரும் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இவர்களது உறவு பெருமாளுக்கு தெரிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்காக… நிதியுதவி கோரிய சேலம் மாணவி…!!

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி ஒருவர் நிதியுதவி கோரி கடிதம் எழுதியுள்ளார். சேலம் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணத்திற்கு போதிய பணம் இல்லாததால் நிதி உதவி கேட்டு சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில்,” மருத்துவ மாணவிக்கு உதவ சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ண வண்ண பொங்கல் பானைகள்… அதிகளவில் விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

சேலத்தில் பொங்கல் பானை விற்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் வரும் 14-ஆம் தேதி தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சேலம் குமாரசாமிப்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானை விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது. பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு விதமான பானைகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள  பானைகளின் விலை 10 விழுக்காடு முதல் […]

Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

9மாதத்துக்கு பின்…! எல்லாரும் வாங்க…. எல்லாமே OK… திருமலை தரிசன சுற்றுலா தொடங்கியது …!!

ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னையிலிருந்து திருமலை தரிசனத்திற்கான சுற்றுலா சேவை மீண்டும் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே திருமலை திருப்பதி தரிசனத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்தது. இதனையடுத்து ஊரடங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திருப்பதிக்கு சுற்றுலாப்பயணிகள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆந்திர மாநில […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களே… உங்களுக்கு ஒரு அதிரடி வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டி நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூர் தோசை கார்னர் என்ற பெயரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே புதிய ஹோட்டலை செல்வம் என்பவர் திறந்திருக்கிறார். அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நோட்டீஸ் அச்சடித்து அனைத்து பகுதிகளிலும் அந்தக்கடையின் உரிமையாளர் விநியோகம் செய்து வருகிறார். அந்தப் போட்டி […]

Categories
அரசியல் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வரின் சொந்த….. எடப்பாடி சட்டமன்ற தொகுதி….. ஓர் பார்வை …!!

எடப்பாடி தொகுதியின் அம்சங்களும், தொழில்கள் ,நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள்   பாலங்கள் நிறைந்த சேலத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்தத் தொகுதியான எடப்பாடி சேலம் மாவட்டத்தில்  இரண்டாவது பெரிய நகரமாகவும் எடப்பாடி உள்ளது. 1951ஆம் ஆண்டு எடப்பாடி ஆனது சட்டமன்றத் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது அதிலிருந்து பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளது அதில் அதில் நான்கு தேர்தல்களில் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… சிக்கிய சிசிடிவி காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமகவுண்டம்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். மாதந்தோறும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகளும் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பாக உண்டியலை திறந்து அதில் கிடைக்கும் தொகையை கோவில் கணக்கில் சேர்ப்பதை அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் பயணித்த விமானத்தில்… முதல் முறையாக தமிழில் அறிவிப்பு செய்த விமானி… முதலமைச்சர் பாராட்டு…!!

விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த விமானியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கும் நோக்கில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று மீண்டும் சேலத்திலிருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது அவர் சேலம் விமான நிலையத்திலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பார்க்க ஆளு டிப் டாப்” நம்பி ஏமாந்து போன பல பெண்கள்…. 60 லட்சம் அபேஸ்…!!

டிப் டாப் பெண் ஒருவர் அதிக வட்டி கொடுப்பதாக ஏமாற்றி பணம் பறித்துள்ளதால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளேறி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சிதம்பரம் – சத்யா. இந்நிலையில் சத்யா ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இவர் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம் தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டியை தான் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பார்ப்பதற்கு, அழகாகவும், வசதியான பெண் போன்றும் […]

Categories

Tech |