தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, […]
Category: சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை பகுதியில் சொகுசு பேருந்து மீது omni கார் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஆம்னி காரில் பயணம் செய்த சிறுமி உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
மேட்டூர் அணை 16 கண் மதகுகள் பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் திறந்துவிடப்பட்ட நிலையில் 16 கண் மதகுகள் பகுதியில் இருக்கும் குட்டைகளில் சிறிய அளவிலான மீன் குஞ்சுகள் இறந்து மிதந்தது. இதில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, […]
சேலம் அருகே 2000 டன் வெள்ளை கற்களை கடத்த முயன்ற நிலையில் கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வெள்ளைகற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என பொதுமக்கள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது. […]
கெங்கவல்லியில் தொழிலாளர் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசித்து வந்த சதீஷ் என்பவர் நேற்று முன்தினம் ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்துள்ளார். பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வனிதா மற்றும் அவரின் மகன் சதீஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக […]
தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தல் நடந்து வருகின்றது. இது தற்போது கஞ்சா கடத்தல் ரயில் என்ற பெயரை வாங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ரயில்வே போலீஸ்சார் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது கேட்பாறின்றி ஒரு பை கிடந்துள்ளது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்வததில் யார் கொண்டு வந்தது என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் […]
சேலம் சுகனேஸ்வரர் கோவிலில் வருகின்ற 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. சேலம் மாநகரில் பழமை வாய்ந்த சுகனேஷ்வரர் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு சென்ற 2018 ஆம் வருடம் பாலாயம் செய்யப்பட்டது. இதை அடுத்து சென்ற நான்கு வருடங்களாக கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்த மாதம் செப்டம்பர் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் […]
பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் பிரபல ரவுடியாக இருக்கின்றார். இவர் சென்ற 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் செல்லதுரை என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருக்கின்றது. கருவாட்டு பாலம் அருகே உதுமன் அலி என்பவரை வழிமறித்து 900 ரூபாயை பறித்துச் சென்றார். மேலும் தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவரை […]
மேட்டூர் பூங்காவில் நேற்று அதிக அளவு சுற்றுலா பயணிகள் திரண்டதால் அதிக நுழைவு கட்டணம் வசூலானது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்தார்கள். ஒரு சிலர் பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு அணையின் வலது கரையை பகுதியில் இருக்கும் பவள கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை ரசித்தார்கள். மேட்டூரில் சுற்றுலா […]
கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குப்பூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணா(21) என்பவர் சாலையோரம் கடை அமைத்து தலைக்கவசம் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல ரமணா தலைக்கவசம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரமணா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பாளையம் பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த சுப்பிரமணி(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் […]
தபால்காரர் முதியவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சராயனூர் காட்டுவளவு பகுதியில் கிருஷ்ணன்(70) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் தபால்காரரான செந்தில்குமார்(40) என்பவர் கிருஷ்ணனின் மருமகளுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த கிருஷ்ணன் தனது மருமகளை கண்டித்ததோடு, செந்தில் குமாரிடம் ஏன் எனது மருமகளிடம் அடிக்கடி பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தில் குமார் கிருஷ்ணனை கத்தியால் சரமாரியாக […]
சேலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மூன்று மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் மாணவிகள் மூன்று பேரும் வகுப்பறையில் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் போன்றோர் விசாரணை மேற்கொண்டு மாணவிகளை […]
சேலத்தில் இருந்து பெங்களூருக்கும் சேலத்தில் இருந்து மேட்டூருக்கும் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது. நேற்று மாலை ஓமலூர் ரயில்வே மேம்பாலத்தின் நடையில் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் இரண்டு அடி நீளம் உள்ள இரும்பு துண்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்வுக்கும் ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், துணை போலிஸ் சங்கீதா, ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ […]
மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக் காரன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜி(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மகன் குமார் இருந்துள்ளார். இந்த சூழலில் தந்தைக்கும் மகனுக்கும் சொத்தை பிரிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று குமார் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படி கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி அங்கிருந்த கொடுவாளை எடுத்து குமார் கைமீது வெட்டி இருக்கின்றார். மேலும் அருகில் கிடந்த கட்டையை […]
சேலம் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகம் பகுதியில் பெருமாள் கோவில் ரோடு முதல் குறுக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார் இவர் வீட்டில் வைத்தே ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி மீனாட்சி (48), மகன் அருண் (28), மருமகள் கிருத்திகா (20) அருளும் கிருத்திகாவும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு […]
சேலம் மாவட்ட தலைவாசல் அருகில் உள்ள செல்லியம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. இதனையடுத்து தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் பங்களிப்புடன் புதிய தேர் தயார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 57 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் சக்தி அழைத்தல், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]
சேலம் மாவட்டம் எடப்பாடி மஞ்சல்க்கல்பட்டி பகுதியில் ராதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் இருந்து எடப்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக தன் இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி-எடப்பாடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பம்பாளையம் பால்வினியோகம் மையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை பறித்துச் சென்றனர். இது குறித்து ராதா போலீசில் புகார் […]
சேலம் மாவட்டம் மேச்சேரியில் சேலம் மெயின் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் 53 சென்ட் உள்ளது. இதில் சில வீடுகள் மற்றும் கடைகள் அமைத்துக் குடியிருந்து வந்தனர். இது குறித்து மேச்சேரி அருகில் உள்ள கோனூர் ஆண்டிக்கரையை சேர்ந்த சின்னசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சந்தைப்பேட்டை பகுதியில் 10 வீடுகள், 3 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து […]
ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி கூறியது, எர்ணாகுளம்- சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் வருகின்ற செப்டம்பர் 1-ந் தேதியும், மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரல்- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் வருகிற 2-ந் தேதியும், மேலும் தாம்பரம் -மங்களூர் சிறப்பு ரெயியில் வருகிற 2-ந் தேதியும், மங்களூர்- தாம்பரம் சிறப்பு ரெயில் வருகிற 3-ந் தேதியும், தாம்பரம் -கொச்சுவேலி சிறப்பு ரெயில் […]
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இப்போது சாலைகள் போடும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலைகள் அனைத்தும் தார்சாலைகளாக மாற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி 28வது கோட்டத்துக்கு உட்பட்ட அப்புசாமி தெருவில் பல்வேறு வருடங்களாக பழுதடைந்த நிலையில் இருந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் அனைத்து பகுதிகளும் தார் சாலைகளாக மாற்றப்பட்டது. இந்நிலையில் சாலை ஓரத்தில் பல்வேறு வருடங்களாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து நிலையில் […]
தமிழகத்தில் கடந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றிலும் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி மற்றும் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நகரமாக உள்ள பவானியில் காவிரி ஆறும், பவானி ஆறும் அங்குள்ள கூடுதுறை பகுதியில் ஒன்றாக கலக்கிறது. இதனால் இங்கு வெள்ள […]
நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது .இந்நிலையில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி […]
சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று 10-ந்தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி பணி நாளாக […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 ஆம் தேதி […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தமிழக பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் சென்ற 16ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அப்பொழுது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் சென்ற […]
மல்லூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி இரும்பு வியாபாரி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூரில் இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரின் மகன் ராமு. இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராமுவுக்கும் அவரின் அத்தை மகன் ராஜா என்பவருக்கும் பூர்வீக சொந்தமான வீடு சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்திருக்கின்றது. இதில் […]
தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற 4-ம் தேதி வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவேரி கரையோர பகுதிகளில் […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 […]
சேலத்தில் வருகின்ற 12ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேட்டில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமிற்கு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு […]
சேலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை-லோகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதையில் 55 வயது உடைய ஒரு நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரயில்வே போலீசார்கள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு […]
சங்ககிரி அருகே ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த 2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி அருகே இருக்கும் இருகாலூர் ஊராட்சியில் உள்ள புது ஏரி 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் இந்த ஏரியை ஆக்கிரமித்து சில விவசாயிகள் வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருந்தார்கள். இதனால் சங்ககிரி தாசில்தார் பானுமதிக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தாசில்தார் சங்ககிரி கிழக்கு வருவாய் ஆய்வாளர் ராஜு, சங்ககிரி வட்ட […]
நீதிமன்றத்தில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட 1.50 லட்சத்தை திரும்பி வழங்காத மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டு சிராஸ்தார் செந்தில்குமார் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2016 ஆம் வருடம் தாரமங்கலம் அருகே இருக்கும் பாறைக்கல்லூர் பகுதியை சேர்ந்த சுசிலா என்பவர் ஒரு வழக்கு சம்பந்தமாக 1.50 லட்சம் அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகையானது அவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது. […]
இடங்கணசாலை நகராட்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட சின்னேரி பகுதியில் மின் மயானம் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கஞ்சமலையூர், இ.காட்டூர், மெய்யனூர் மற்றும் இடங்கணசாலையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்துக்குள் திரண்டு தலைவர் கமலக்கண்ணனிடம் மனு அளித்தார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது, சின்னேரி பகுதியில் மின் […]
துப்பாக்கிகள் தயாரித்த வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் போலீசார் வாகன சோதனை நடத்திய பொழுது இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட இருவரிடம் இருந்து இரண்டு கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து […]
10 லட்சம் கடன் தருவதாக கூறி 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவரின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் 10 லட்சம் கடன் தருவதாகவும் அதற்காக ஆதார் எண், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக விவரம் உள்ளிட்டவற்றை கூறுமாறு தெரிவித்துள்ளார். இதை முருகேசன் நம்பியுள்ளார். இதையடுத்து 1 லட்சத்து 40 ஆயிரத்தை […]
சேலம் மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் மோகன் பாபு சேலம் டவுன் காவல் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரராஜன் செவ்வாய் பேட்டைக்கும் செல்வராஜ் கன்னங்குறிச்சிக்கும் சசிகலா இரும்பாலைக்கும் விக்னேஸ்வரன் கருப்பூருக்கும் விஜயேந்திரன் அழகாபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அன்னதானப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]
ஏற்காட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைசோலை மலை கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த சூழலில் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல வருடங்களாக சேதமடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்காட்டில் நடைபெற்ற கோடை விழாவிற்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதன் முதற்கட்ட பணியாக சாலையின் மேற்பகுதியை தோண்டி பெரிய பெரிய ஜல்லிகளை போட்டு சாலை […]
அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் நவ., 15 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இதில் கடலூர், சென்னை, காஞ்சி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்.,3 வரை தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவர்களுக்கான அனுமதிச்சீட்டு நவ.,1-ல் வெளியிடப்படும். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், வேலூர் […]
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகில் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 2 கைத்துப்பாக்கிகள், கத்தி, முக மூடிகள் போன்றவை இருந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் […]
தொழிலாளி மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இறந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியின் உறவினர் சுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சுப்பிரமணி […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி கேட் திருவள்ளுவர் நகரில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்து விழாவுக்கு உறவினர்களை அழைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் நந்தினி அறைக்கு சென்றுள்ளார். […]
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தையல் தொழில் கற்பதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்திர தையல், துணி ஓவியம் ஆகிய இலவச பயிற்சி வகுப்புகள் 30 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தகவலை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி […]
11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் சுகந்தி(16) என்ற மகளும், அபிஷேக்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சுகந்தி தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக சுகந்தி செல்போனில் ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சுகந்தியின் பெற்றோர் படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை என […]
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் செல்வகணபதி நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோட்டம்மாள்(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று மாலை கோட்டம்மாள் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்ததால் கோட்டம்மாள் மாட்டை வீட்டிற்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி கோட்டம்மாள் […]
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் வசூலித்தனர். சேலம் மாவட்ட போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 1-ஆம் தேதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர். நேற்று முன்தினம் விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த 2,292 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 1, […]
சேலத்தில் இருந்த புறப்பட்ட கார் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எலவானா சூர்க்கோட்டை புறவழிச்சாலை இருவழிப்பாதையில் கார் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற கொண்டிருந்த மினி லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது திடீரென மினிலாரியின் மீது கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய இரு சக்கர வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கார் மற்றும் மினி லாரியில் வந்தவர்கள் படுகாயம் அடைந்து […]
மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர […]
சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வர். விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி படகு துறைக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அங்குள்ள கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.