மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னம்மாள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இது குறித்து அறிந்த போலீசார் […]
Category: சேலம்
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பலமுறை இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றன. அவ்வபோது காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாநகர […]
ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் மாவட்டம் வழியாக செல்லும். இந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம் 9 கிலோ […]
கொங்கணாபுரம் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் ஆடு ஒன்றை வைத்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் போலீசை கண்டதும் விரைந்து சென்றதால் போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் தப்பிச் சென்று விட்டார்கள். இதில் பிடிப்பட்டவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் சிவகுமார் […]
சேலத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் சந்தோஷ்குமாரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 700 மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். இதையடுத்து சந்தோஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் […]
வல்வில் ஓரி, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மேட்டூரில் இருந்து கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த சிறப்பு பேருந்துகளானது வரும் 2 மற்றும் 3 தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர், பவானி, கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை, அரபலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர், கொடும்முடி, […]
வங்கி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கேட்டு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டி சமர்ப்பித்த கோரிக்கை சாசனங்கள் மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற கூட்டுறவு வாங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சம்பத் தலைமை தாங்கியுள்ளார். […]
விதிமுறைகளை மீறி இயங்கிய 15 ஆட்டோகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் இருசக்கர வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் அதிகாரிகள் அன்னதானப்பட்டி உள்பட 4 பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் உரிய பெர்மிட் இன்றி இயங்கியதும், தகுதி சான்றிதழ் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதை போல் பல புகார்களின் அடிப்படையில் விதிமுறைகளை […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு காட்டில் ஸ்ரீ விஜய் என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரியான இவர் ஒரு நண்பர் மூலம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜ்மகேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது ராஜ்மகேந்திரன் தனது தாய் கலைவாணி நாமக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணியின் செயலாளராக இருப்பதாகவும், தந்தை சுப்பிரமணி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை ஸ்ரீ விஜய் உண்மை என்று நம்பியுள்ளார். அதனை தொடர்ந்து தனது பெற்றோர் பலருக்கு அரசு வேலை வாங்கி […]
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் சோளிகவுண்டனூர் அருந்ததியர் காலனியில் சென்ற 50 வருடங்களுக்கும் மேலாக 20க்கும் அதிகான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும் மாற்று இடமாக 1 ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அந்த நிலத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்துவதும், அப்போது விரைவில் இடம் தருவதாக […]
சேலம் மாவட்டம் சேக்கானுர், நெருஞ்சிப்பேட்டை, கோகனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலா 30 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பொறுத்து மின் உற்பத்தியின் அளவும் மாறுபடும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனல் மேல் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை, மின் அளவுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோயில் அருகேயுள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரது உடல்மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செவ்வாய்பேட்டை தீயணைப்புநிலைய வீரர்கள் விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார்..? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஜான்சன்பேட்டையை சேர்ந்த வேலாயுதம் […]
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார் மேகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்று பல பிரச்சினைகளை பற்றியும், அதற்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியிருப்பதாவது “ஆத்தூர் தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட […]
மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இருதரப்பினர் இடையே தகராறு இருந்ததால் இறந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாகாடு பகுதியில் 250-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இறந்தால் அருகில் இருக்கும் கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோரம் அடக்கம் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். இந்நிலையில் நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாட்களாக தகராறு […]
தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே காவன்காடு பகுதியில் ஜெய்கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் சில மர்ம நபர்கள் நுழைந்து பீரோவை உடைத்து ரூ. 1,25,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் தொடர்ந்து பல இடங்களில் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் கைவரிசையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
மாவட்ட ஆட்சியர் கல்லறைத் தோட்டத்தை ஆய்வு செய்துள்ளார். சேலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பழமையான ஆங்கிலேயர் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. இந்தக் கல்லறை தோட்டத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமித்து இருந்தவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பழமையான ஆங்கிலேயர் கல்லறைகளை ஆய்வு செய்ததோடு, அதனுடைய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் கல்லறை தோட்டத்தை அழகுபடுத்தி ஒரு பூங்காவாக மாற்ற […]
கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே குள்ளவீரன்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் கார்த்தி என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் கண்ணனை பழிவாங்குவதற்காக கார்த்தி தன்னுடைய நண்பர்களான பாலாஜி, பாஸ்கர், ஜெகதீஷ் ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் […]
சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபெட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றார்கள். ஆனால் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்வதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் சேலம் மாநகரில் வருகின்ற 1ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய […]
ஆத்தூர் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவர் ஆன இவர் கடந்த 24ஆம் தேதி பைத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சீனிவாசனின் அத்தை மகன் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகன்கள் மணிகண்டன், விஜய் இருவரும் ஆத்தூர் கோட்டில் சரணடைந்துள்ளனர். இதற்கிடையே கைதான ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது, சீனிவாசனுக்கும் எங்களுக்கும் நிலம் […]
சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி சேர்ந்த கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. இது பற்றி புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலத்தை கைது செய்துள்ளனர். இதே போன்று முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மிரட்டி பணம், செல் போன் பறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் […]
சேலம் மாவட்ட திருமணிமுத்தாறில் அடிக்கடி சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து செல்கிறது. இதனை தடுப்பதற்காக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேலத்தில் கன மழை பெய்தது. இதனை பயன்படுத்தி ஒரு சில சாயப்பட்டறையில் இருந்து சாயக் கழிவுகள் திருமணிமுத்தாறில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாறில் சாயக்கழிவு நீருடன் கலந்து நுங்கும், நுரையுமாக காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியது, மழைக்காலங்களில் […]
கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கீழக்கள்ளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி மற்றும் ராஜு என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கேசவன் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராஜு, விஜி மற்றும் கேசவன் ஆகிய 3 பேருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியரான கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]
மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை போலீஸ்காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த […]
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் கடந்த 16ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அன்று காலை முதல் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 25,000 கன அடி திறந்துவிடப்பட்ட தண்ணீர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1,10,000 கன அடி வரை தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கடம்பூர் வடக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன். இவர் லாரி டிரைவர் ஆவார். இவர் கடந்த 24ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்றபோது பைத்தூர்புதூர் என்ற இடத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் சீனிவாசன் உறவினர்கள் ரவிக்குமார், மணிகண்டன் மற்றும் விஜய ஆகிய மூன்று பேரும் நிலத்தகராறில் அவரை கொன்றது தெரியவந்தது. இது […]
44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக சேலம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சேலம் அழகாபுரம் புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ போன்ற தொடங்கி வைத்துள்ளனர். இது பற்றி கலெக்டர் கார்மேகம் பேசியபோது, சர்வதேச அளவிலான 44வது ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை […]
சேலம் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களில் ஒருவர் தியாகி தீரன் சின்னமலை. இவர் ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் பிறந்தவர். இளம் வயதிலேயே போர்க்கலைகளான வால் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், வில்யுத்தம் போன்ற கலைகளில் ஆர்வம் காட்டினார். மேலும் நமது […]
பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கும், காரைக்காலில் இருந்து பெங்களூருக்கும் ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் இந்த ரயில் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு வந்த இந்த ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர் நல விளையாட்டு மேம்பாடு அமைப்பின் தேசிய தலைவர் மு விஜய லட்சுமன் தலைமை […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள திருகாளிப்பட்டி பகுதியில் மாதவராஜ்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதவராஜ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாதவராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதவராஜின் […]
கூலிப்படையை ஏவி வியாபாரியை காரில் கடத்திய போலீஸ் ஏட்டுவை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் தில்லை நகர் பகுதியில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டைகோவில் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரியும் சின்னதிருப்பதி பகுதியில் வசிக்கும் ராம்மோகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழ வியாபாரி அன்பரசன் போலீஸ் ஏட்டு […]
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூல் கரடுபட்டி கிராமம் அமைந்துள்ளது. தமிழக கர்நாடக வனப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பயிர் சாகுபடி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உணவு தேடி கிராம எல்லைக்குள் வந்துள்ளது. அப்போது அங்கிருந்து மின் வேலியில் யானை சிக்கி உள்ளது இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சேலம் […]
நில தகராறில் லாரி டிரைவரை குத்திக்கொண்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் கிராமம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் அக்காள் பங்காரு என்பவரது மகன் ரவிச்சந்திரன். இந்த சூழலில் ராஜேந்திரனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முன் விரோதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்தினருக்கும் […]
மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கூல் கரடுபட்டி என்ற கிராமம் தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பணப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கிராம எல்லைக்குள் வந்தது. அப்போது அந்த யானை விவசாய தோட்டத்துக்குள் உணவு தேடிய போது அங்கிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது […]
கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியில் கந்தசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா ஆகியோருக்கும் கந்தசாமிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாரப்பன் விவசாயம் செய்து வந்த 4 1/2 ஏக்கர் […]
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடிரென்று மழைபெய்ய துவங்கியது. இரவு 8:30 மணியளவில் லேசான தூறலுடன் பெய்ய துவங்கிய மழை விடியவிடிய கொட்டி தீர்த்தது. அதுவும் மாவட்டம் முழுதும் பரவலாக பலத்த மழை பெய்தது. எடப்பாடி பகுதியில் சென்ற 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு 146 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விடியவிடிய பெய்த மழையால் எடப்பாடி பகுதியில் ஏராளமான இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதுவும் மோட்டூர்காட்டுவளவு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது. […]
சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டியில் வசித்து வருபவர் தினேஷ்குப்தா. இவரது மனைவி லட்சுமி ஆவார். கணவன்- மனைவி இரண்டு பேரும் தங்களது 4 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைசெய்ய முயன்றனர். இதனை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் கணவன்- மனைவி இருவரையும் குழந்தையுடன் […]
ரயிலில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை போலீசார் சோதனையின் போது கைது செய்தார்கள். தன்பாத் – ஆலப்புழா இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி ரயில் நிலையம் முதல் செயலும் ரயில் நிலையம் வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். அவ்வாறு சோதனை மேற்கொண்ட பொழுது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இருந்துள்ளார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்ததில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதை […]
வாழப்பாடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே இருக்கும் பேளூரில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தின் அருகே இருந்த நபர் போலீசாரை கண்டதும் ஓடி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பார்த்த பொழுது ஒரு நபர் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது […]
தலைவாசல் கால்நடை பூங்காவில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் வி.கூட்டு ரோடு பகுதியில் கால்நடை பூங்காவானது ரூபாய் ஆயிரம் கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நடந்து வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தீவன அபிவிருத்தி ஆலை கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகள் 95 சதவீதம் […]
பணத் தகராறில் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் கணவாய் புதூர் ஊராட்சியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் சென்ற 17ஆம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீவெட்டிபட்டி போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வந்தனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு நாட்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொடங்கி அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தனியார் துறைகளுடன் இணைந்து இன்று ஜூலை 22 ஆம் […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 […]
சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் சுலோஜனா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வாயை துண்டால் கட்டி கை, கால்களை கட்டிப்போட்டு மிரட்டி பீரோவில் இருந்த பணம், தாலி சங்கிலி, காமாட்சி முத்துமணி மாலை எனப்படும் மற்றொரு சங்கிலி, வளையல் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது குறித்து அவர் […]
குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(11), கௌசிகா(9) என்ற மகள்களும், ஹரிஹரன்(7) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நந்தினி தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் முருகேசனும், உறவினர்களும் நந்தினி மற்றும் குழந்தைகளை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நேற்று பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி தற்கொலைக்கு […]
தோல் பதப்படுத்தும் குடோனில் திடீரென அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் அருகே தோல் பதப்படுத்தும் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஆட்டு தோல், மாட்டு தோல் மற்றும் மாட்டு இரைப்பை போன்றவைகள் பதப்படுத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும். இங்குள்ள மாட்டு இரைப்பை சுகாதார மற்ற முறையில் பதப்படுத்தப் பட்டு உணவுக்கு பயன்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட உணவு […]
உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு உணவு வகைகள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது கிரிக்கெட் வீரர் நடராஜன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த ஊர்வலம் 3 ரோடு வழியாக வரலட்சுமி மகால் வரை சென்றது. இந்நிலையில் ஊர்வலத்தில் […]
ஆடி மாதம் முதல் நாளான இன்று காலை முதல் சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. புதிய தேங்காய் எடுத்து அதன் மேல் உள்ள நாறுகளை அகற்றி தேங்காயில் ஒரு கண்ணில் துளையிட்டு, தேங்காய் தண்ணீரை வெளியேற்றி துளையிட்ட கண்களின் வழியாக தேங்காய் கொல் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவுல், ஏலக்காய் போன்றவற்றை கலந்து பின்னர் ஒரு நீண்ட ஒரு முனை கூறாக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகினர். பின்னர் […]
காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய 3 வாலிபர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிக்குட்டை பகுதியில் ரவி, பிரபு, தினேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த 3 வாலிபர்களும் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே தண்ணீர் வெளியேறும் பாதையில் ஒரு பாறை மீது நின்று தண்ணீர் வழிந்து ஓடும் காட்சியை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. […]
16 கண் பாலம் அருகே பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பருவ மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து சென்ற எட்டாம் தேதி முதல் காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் […]