Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்டதால்…. நுழைவு வாயில் கண்டுகளித்த மக்கள்….!!

புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு கட்டணம் இன்றி பார்க்க கூடிய அர்ச்சுனன் தபசு சின்னங்களை மக்கள் பார்த்துள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை  அறிவித்து வருகின்றது. அதன்படி மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று முதல்  திறக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மக்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதனையடுத்து விடுமுறை தினமான (நேற்று) ஞாயிற்றுக் கிழமை அன்று அதிக அளவு பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்தனர். அவர்கள் கட்டணமில்லாமல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது வீசிய…. 7 பேர் கொண்ட கும்பல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

நந்தி வரத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் பள்ளிக்கூட தெரு பகுதியில் பரத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 1 1/2 மாதத்திற்கு முன்பு பூமிநாதன் என்பவரை வெட்டிய வழக்கில் சிறைக்குச் சென்று விட்டு சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பரத்தை வெட்டுவதற்காக 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 22-ஆம் தேதி அவரது வீட்டிற்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. முதியவர் பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காயரம்பேடு மூலக்கழனி தங்கப்பா அவென்யூ பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவிலிருந்து இறங்கி காயரம்பேடு கூட்ரோடு அருகில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கோவிந்தனை அருகில் இருப்பவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? முதியவரின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தூக்கில் தொங்கியபடி முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கிருஷ்ணன் காரணை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வேப்பமரத்தில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கூறியபோது, முதியவர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தந்தையாக இருக்கலாம் என்றும் வாழ்க்கையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நான் கூப்பிட்டேன் வரவில்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. செங்கல்பட்டில் சோகம்….!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி பகுதியில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சிவானந்தம் பலமுறை அவரது மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் மனமுடைந்த சிவானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விற்றதில் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தொழிலாளியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் காந்திநகர் ஓடை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக இடம் இல்லாததால் அங்கு இருக்கக்கூடிய காலி இடங்களில் தங்கி படுத்து உறங்குவது வழக்கம். இவருடைய நண்பர் ராஜா ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் சொந்த இடம் இல்லாததால் கணேசனுடன் சேர்ந்து அங்கு உள்ள காலியான இடத்தில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அவள் வர மாட்டாளா…? ஏக்கத்தில் தவித்த தொழிலாளி… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தொழிலாளி தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் பகுதியில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சிவானந்தத்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு சிவானந்தம் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உடலில் இருந்த அடையாளங்கள்… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பொய்கைக் குளத்தில் வாலிபரின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொய்கைக் குளத்தில் வாலிபரின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்று காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் வீரர்களின் உதவியுடன் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபரின் இடது கையில் கன்னியப்பன் என்றும், வலது கையில் மீன் முத்திரையும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசு நிலம் ஆக்கிரமிப்பா…? தாலுகா அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

 தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக  அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தான் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இதனை அடுத்து வண்டலூர் பகுதியில் உள்ள பாபா கோயிலுக்கு அருகே இருக்கும் 1 ஏக்கர் 34 சென்ட் நிலம் தமிழக அரசிற்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக 3 கோடியே 75 லட்சம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் மையம்” கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், கருங்குழி, அச்சரபாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசால் கொடுக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு சரியான முறையில் விநியோகம் நடைபெறுகிறதா என்று நுகர்பொருள் கூட்டுறவு கூடுதல் செயலாளர் முகமது நசிமுத்தீன், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மதுராந்தகம் ஆர்.டி.ஓ. சரஸ்வதி, […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

500-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்…. பொதுமக்களின் கோரிக்கை…. தொல்லியல் துறையின் தகவல்….!!

புராதனச் சின்னங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதிலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அடைப்பதற்கு வலியுறுத்தியிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15- ம் தேதி முதல் 2 மாதமாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரின் சோதனை…. புகாரில் சிக்கிய ஆசிரியர்கள்…. தமிழக அரசுக்கு பரிந்துரை….!!

சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சோதனை செய்து புகாரில் சிக்கிய ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து புகாரின்படி சிக்கிய ஆசிரியர்கள் சிலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் பள்ளியிலிருந்து 4 மடிக்கணினிகள் 2 கம்ப்யூட்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். எனவே இந்த சூழ்நிலையில் பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தந்தையின் வெறிச்செயல்…. கொத்தனார்க்கு நடந்த விபரீதம்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் டில்லி என்பவரும் வசித்து வருகின்றார். இவரது மகள் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக பேசியதாக தெரிகின்றது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்த டில்லி கொத்தனார் ராஜேஷை நேரில் அழைத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தந்தை செய்யுற வேலையா இது…? மகள்களுக்கு அளித்த தொந்தரவு… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

54 வயதான தந்தை மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 54 வயதான தந்தை தனக்கும், தனது தங்கைக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார். மேலும் தனது தந்தை தன் மீது இருக்கும் தவறை மறைப்பதற்காக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதனால உயிருக்கே ஆபத்து… நடைபெற்ற தூய்மை பணிகள்… பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாடுவதால் காவல்நிலைய வளாகத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல்நிலையம், மாமல்லபுரம் காவல் நிலைய பின்புற வளாகம் போன்ற பகுதிகளில் செடிகளும், புதர்களும் அதிகளவில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்களும் அங்கு உள்ள மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விஷப்பூச்சிகளும், பாம்புகளும் நிறைந்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ததோடு, […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதுக்கு இப்படியா பண்ணனும்…. கோவில் பூசாரிக்கு நடந்த கொடூரம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

கோவில் பூசாரியை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தைலாவரம் வள்ளலார் நகர் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மனோகரன் தைலாவரம் அம்பேத்கர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகியாகவும் இருக்கின்றார். எனவே கோவில் எதிரில் இருக்கும் மேற்கு பக்கமுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததாக ஏற்கனவே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. சுற்றித்திரிந்தவர்கள் மீது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை ரோட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அத்தியாவசியத் தேவையின்றியும், முக கவசம் அணியாமலும் சிலர் இரு சக்கர வாகனங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். இவ்வாறு சுற்றிக் கொண்டிருந்தவர்கள் 6 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்து அவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதேபோன்று சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“மண் மாதிரிகள் சேகரிப்பு” தட்டுப்பாடின்றி கிடைக்க உத்தரவு…. அதிகாரிகளின் ஆய்வு….!!

மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரம் விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திம்மாவரம் கிராமத்தில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன், களப்பணியாளர்கள் மண் மாதிரிகள் சேகரிப்பு முறைகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது மண்ணின் தன்மை மற்றும் தேவையை அறிந்து உரம் இடுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி சரியான நேரத்தில் கிடைப்பதற்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் இயங்கி வரும் திரவ உயிர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மகளுக்கு நடந்த கொடுமை…. தந்தையின் வெறிச்செயல்…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் மீது உரிய நடவடிக்கையை  எடுப்பதற்கு மகள் புகார் கொடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 18 வயது பெண் மாமல்லபுரத்தை சேர்ந்த அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் மந்திரவாதி போர்வையில் சபல புத்தி உள்ள தனது தந்தை என்னை பாலியல் தொல்லை செய்ய முயன்றதாகவும், என் தங்கைக்கு ஒருமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொடுக்கப்பட்ட மனு…. அந்த இடத்திற்கு சென்று…. கலெக்டரின் ஆய்வு….!!

நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள  அச்சரப்பாக்கம் மலை பக்கத்தில் உள்ள பள்ளிப்பேட்டை மலை, வனம் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலப்பரப்புகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 65 ஏக்கருக்கும் மேல் நில ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் மயில்கள், மான்கள், வாழ்வாதாரம் பாதித்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மர்மநபர்கள் இப்படி பண்ணிட்டாங்க…. மளமளவென பரவியது…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

தெற்குபட்டில் மது குடித்துவிட்டு மர்மநபர்கள் வயல்வெளிகளில் தீ வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை, தெற்குபட்டு கிராமங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் 100 ஏக்கர் வயல்வெளி விளைநிலங்கள் இருக்கின்றது. அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான வயல்வெளிகளில் எந்தவித நெற்பயிரும் பயிரிடாமல் கோரைப்புற்கள், செடி, கொடிகள் என வளர்ந்து காடுபோல் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதை கடக்க முயன்றபோது…. பிளஸ்-2 மாணவனுக்கு நடந்த விபரீதம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

ரயில் தண்டவாளத்தை கடக்கச் முயன்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி யமுனை நகரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சாய் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவன் சாய் கிருஷ்ணன் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். அப்போது ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படம்… இளம்பெண்ணின் விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுவேதா என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் விதவிதமாக பதிவிடுவதில் சுவேதா மிகுந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில்…. கல்லூரி மாணவிக்கு நடந்த துயரம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வலைத்தளங்களில் சித்தரித்த ஆபாச புகைப்படம் வெளிவந்ததால் மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுவேதா சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதன்படி சுவேதா  வழக்கம்போல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் பெய்த மழை…. 7-ஆம் வகுப்பு சிறுமிக்கு நடந்த பரிதாபம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மின்சாரம் தாக்கியாதல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் புறநானூறு தெருவில் சசிகலா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சனா என்ற மகளும் சித்தரஞ்சன் என்ற மகனும் இருந்துள்ளார். இதனையடுத்து சென்னை புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ததால் சசிகலா வீட்டின் உள்ள  மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டின் மாடிக்கு சென்ற சஞ்சனா மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் குழாயை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்கள் அலட்சியமா இருக்காதீங்க…. 4 ஏக்கர் அளவில் இடம் ஒதுக்கீடு…. கலெக்டரின் வேண்டுகோள்….!!

ஊரடங்கு தளர்வுகளோடு இருப்பதனால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க என்று கலெக்டர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க தாம்பரம் மார்க்கெட் பகுதி அடைக்கப்பட்டு கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தாம்பரம் மார்க்கெட் பகுதியை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்து விற்பனையாளர்களின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எல்லாரும் கவனமா இருங்க…. 400 அடி உயரத்தில் இருந்து…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

முழு ஊரடங்கு முன்னிட்டு  ஆளில்லா விமானத்தின் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதனால் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் போன்றவை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் கிழக்குக் கடற்கரைச் சாலை, ஐந்து ரதம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை கண்காணிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் 400 அடி உயரத்தில் ஆளில்லா விமாத்தை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சரியான முறையில் நடக்கல…. குடிநீர் வழங்குவதில் தடை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் திடீரென்று கிணறு உள்வாங்கி பூமிக்குள் சென்றதால் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பாண்டூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூ செலவில் மின் மோட்டார் அறை மற்றும் திறந்தவெளியில் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றின் இருந்து  தினசரி ஆம்பூர் பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த கிணறு திடீரென்று பூமிக்குள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“பணத்தை பறிச்சிட்டு போயிட்டாங்க” நாடகமாடிய லாரி ஓட்டுநர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ரூபாய் ஏழு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாடகமாடிய லாரி டிரைவர் கைது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டை பகுதியில் தங்ககுமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு முட்டை வியாபாரம் செய்யும் ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களிடம் உதயகுமார் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரி ரூபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை லாரி டிரைவர் உதயகுமாரிடம் கொடுத்து நாமக்கல் சென்று முட்டைகளை கொள்முதல் செய்து வருமாறு கூறியுள்ளார். அவர் பணத்தை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

” உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு” அதிகாரிகளின் சிறப்பு பணி….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் மரக்கன்றுகள் நட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளிலும் பொது இடங்களிலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  பேரூராட்சி செயல் அலுவலர் சேசவன் மரக்கன்றுகளை நட்டார். இதனால் ஊழியர்கள் பொது சுகாதார பணிகளை செய்துள்ளனர். இதனையடுத்து அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத்தி உள்ளிட்ட ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமுத்து, மாலதி மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். அப்போது ஒரத்தி ஊராட்சி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி…. விற்பனையாளர்கள் வாங்க வரல…. கவலையில் விவசாயிகள்….!!

கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்த பூசணிக்காயை விற்பனையாளர்கள் வாங்க வராததால் அழகி சேதமடைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லூர், காரணை, அமைப்பாக்கம், கடம்பாடி, வடகட்பாடி, குன்னத்தூர் போன்ற கிராமங்களில் வசிக்கக்கூடிய விவசாயிகள் 5 ஏக்கர் விளைநிலங்களில் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளனர்.ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. அதன்படி மளிகை, காய்கறி கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் விற்பனையாளர்கள் பூசணிக்காய் வாங்குவதற்கு முன்வராத காரணத்தினால் விவசாயிகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதை திரும்ப பெறவில்லை என்றால்…. விவசாயிகள் ஒன்று கூடுவோம்…. செங்கல்பட்டில் நடந்த பரபரப்பு….!!

தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையிலான, விவசாய சங்கத்தினர் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் வேளாண் சட்ட நகல்களில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குழாய் அமைப்பதில் தகராறு…. அதுக்கு இப்படியா பண்ணனும்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் அருகில் குழாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விளம்பூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இதில் கோபாலகிருஷ்ணனுக்கும் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் விஸ்வநாதனின் மகன்கள் சுப்பிரமணியன் மற்றும் முருகன் ஆகியோருக்கு இடையில் வீட்டின் அருகில் குழாய் அமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் முருகன், சுப்பிரமணியன் மற்றும் அவரது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. சமூக இடைவெளியுடன்…. இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தினர்….!!

திருக்கழுக்குன்றத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் நடைபெற்றது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் வைத்து தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலரான திருஞானசம்பந்தம் மேற்பார்வையில் மருத்துவ பணியில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் 18 மேற்பட்டவர்கள் 130 பேரும், 45 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. சமூக இடைவெளி இல்லை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மாமல்லபுரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இன்றி நடத்திவந்த டீக்கடையை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் பகுதியில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி டீ கடையை நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இல்லாமல் டீ விற்பனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. செங்கல்பட்டில் சோகம்…!!

திருக்கழுக்குன்றம் அருகில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் கருணாகரன்- காயத்ரி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கருணாகரன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். எனவே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கருணாகரன்- காயத்ரி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயத்ரி உறங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் கருணாகரன் மற்றொரு அறைக்கு உறங்கச் சென்றுள்ளார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணவே கூடாது… அதிகாரிகளின் அதிரடி ஆய்வு… தீவிர கண்காணிப்பு பணி…!!

ஊரடங்கின் விதிமுறையை மீறி செயல்பட்ட டீ கடையை அதிகாரி பூட்டி சீல் வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திலுள்ள ஒத்தவாடை பகுதியில் முழு ஊரடங்கின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் டீ கடைகளில் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்துகொண்டிருந்த டீ கடையை அதிகாரிகள் மூடி ‘சீல்’ […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எவ்வளோ சொன்னாலும் கேட்கவே மாட்டீங்களா….? அதிரடி வேட்டையில் ஈடுபட்ட போலீசார்…. சிறைக்கு சென்ற 3 பேர்….!!

சாராயம் விற்ற மூன்று பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஓதியூர் கிராமத்தில் அதிரடி சாராய வேட்டை நடத்தியுள்ளனர். இதில் அந்த கிராமத்தில் காமாட்சி, கோப்பு, விஜயா ஆகியோர் சாராய விற்பனையில் ஈடுபட்டது  காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து செய்யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். அதன்பின் காமாட்சி, விஜயா ஆகியோரை சென்னை புழல் சிறையிலும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு… கூடுதலாக படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கூடுதலாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் கொண்ட வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் செல்வம் எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மருத்துவமனை டீன் முத்துக்குமரன், இணை இயக்குனர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நோய் ரொம்ப பரவுது… கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது… கோரிக்கை விடுத்த மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் அதை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள  மணமை கிராமத்தில் ஊராட்சி பொது குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு இதுவரை மூடப்படாமல் திறந்த வெளியாக இருப்பதால் அதில் பறவைகள் மற்றும் பூச்சிகள் அடிக்கடி விழுந்து இறந்து கிடக்கின்றது. மேலும் மரங்களிலிருந்து இலைகள் எல்லாம் விழுந்து கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றிலிருந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு… கலெக்டர் கூறிய தகவல்..!!

செங்கலபட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் வேலைக்கு தகுதியானவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பணிபுரிய செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மூலமாக பொது மருத்துவர், முதுநிலை மருத்துவ நுரையில் நிபுணர் தகுதியுடைய  மருத்துவ அலுவலர்கள் மற்றும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற மூதாட்டி… சட்டென ஏற்பட்ட விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் ரயில்வே தண்டவாளத்தை 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு வேகமாக வந்த சரக்கு ரயில் மூதாட்டி மீது மோதி விட்டது. இதனால் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கையில் இருந்த அடையாளம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி தண்டவாளத்தை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் சென்னை நோக்கி வேகமாக சென்ற ரயில் இந்த வாலிபர் மீது மோதி விட்டது. இதனால் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் அடிபட்ட நபரை பார்வையிட்ட போது அவரது கையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாயிருச்சு… எங்கேயும் இல்லை… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்ணீர் எடுக்க சென்ற மூதாட்டி குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சாரதா அப்பகுதியிலுள்ள குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அப்பகுதிகளில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் கோவில் குளத்திற்கு சென்று பார்த்த போது குளத்தில் குடம் மட்டும் மிதந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க… கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய சகோதரர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் பின்புறம் வைத்து சாராயம் காய்ச்சிய சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி மதுபிரியர்கள் மது அருந்துகின்றனர். இந்நிலையில் குன்றத்தூர் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சபடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… புதிதாக 145 படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக புதிதாக 145 படுக்கை வசதிகளை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர், பவுஞ்சூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி செய்து தர  திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படும் வகையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியல… மாறுபடும் சீதோஷ்ன நிலை… கோரிக்கை விடுத்த மீனவர்கள்.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்திலுள்ள கடலில் திடீரென கடல் சீற்றம் காணப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்திலிருக்கு கடலில் எப்போதும் இல்லாத வகையில் திடீரென கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டதுடன் கடல் வழக்கத்திற்கு மாறாக 5 அடி உயரத்தில் சீறி எழும்பியுள்ளது. மேலும் ராட்சத அலைகள் கரை பகுதி வரை 20 அடி தூரத்துக்கு உட்புகுந்துள்ளது. இதனால் கரைப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டதால் மீனவர்கள் படகுகளை நிறுத்த இடமில்லாமல் படகுகளை வீட்டில் கட்டிடங்களில் கட்டி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அது குடிக்காமல் இருக்க முடியல… போதைக்காக செய்தோம்… ஊரடங்கினால் ஏற்பட்ட விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது பரவலை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுகடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் சிவசங்கர் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்துள்ளனர். அப்போது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எந்த கவலையும் இல்லை… ஊரடங்கு காலத்திலும் கிடைக்க ஏற்பாடு… அதிகாரி கூறிய தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்திலும் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் அனைத்தும் எந்த வித தடையுமின்றி கிடைக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் தோராயமாக 10 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் நெல் பயிர் விதைகள் மற்றும் உரம் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் ஊரடங்கு காலத்திலும் எந்தவித தடையுமின்றி கிடைப்பதற்கு அப்பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து அரசு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு… வெறிச்சோடிய சாலைகள்… உணவு தேடி ஊருக்குள் புகுந்த குரங்குகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி  இருப்பதால் குரங்குகள் வீட்டு வாசலிலும் தெருக்களிலும் சுற்றித்திரிகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன. இதனையடுத்து கொத்திமங்களம் பகுதியில் ஏராளமான குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் உணவு மற்றும் நீர் தேடி தெருக்களில் புகுந்துள்ளன. மேலும் சில குரங்குகள் அங்குள்ள வீடுகளில் அமைதியாக அமர்ந்திருந்தது.

Categories

Tech |