Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி அதிகமாக நீங்கத்தான் காரணம்…இந்த கடைகள் கண்டிப்பா மூடப்படும்… கலெக்டரின் அதிரடி நடவடிக்கை…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார். உலகெங்களிலும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வைரஸ் தொற்றை  தடுப்பதற்காக தற்போது பல்வேறு  நடவடிக்கைகளில் சுகாதார துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொற்று அதிகரிப்பின் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் வைரஸ் தொற்று தடுப்பு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சந்தோசமாக சுற்றுலா சென்றவர்கள்… விபத்தினால் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கார் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரிய நத்தம் பகுதியில் அஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது நண்பரான புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அப்துல்ரசாக் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா ஆகியோருடன் ஒன்று சேர்ந்து செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது  மாமல்லபுரத்திலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார்  வளைவில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அங்க என்ன நடந்துருக்கும்….? தண்டவாளத்தில் கிடந்த சடலம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தாம்பரம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி-பெத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக தாம்பரம் ரயில்வே நிலைய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம்  ரயில்வே நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை உடற்கூறு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உங்களுக்கு வேற இடமே இல்லையா…. சிற்பத்தில் காதல் சின்னங்கள்…. தொல்லியல் துறையினரின் புதிய ஏற்பாடு…!!

குடைவரை சிற்பங்களை பாதுகாக்கும் பொருட்டு தொல்லியல் துறையினர் சிற்பங்களை சுற்றி தேக்கால் ஆன தடுப்பு சுவர்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்கள் அமைந்துள்ளது. இந்த சிற்பங்களில் காதல் ஜோடிகள் தங்கள் பெயர்களை எழுதி சிற்பங்களை அசிங்கப்படுத்தும் காரணத்தினால் தொல்லியல் துறையினர் சிற்பங்களை பாதுகாக்கும், பொருட்டு தேக்கால் ஆன மர தடுப்புகள் அமைக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள குடைவரை கோவில்கள் சிற்பங்கள் 7 -ஆம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அம்மாவும் இல்ல… அப்பாவும் இல்ல… இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பிடித்து இளம்பெண்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எடையாத்தூர் பகுதியில் ரகுநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்ட நிலையில் இவரது மனைவி ஹேமலதா இரண்டு மகள்கள் மற்றும் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹேமலதா குழந்தைகளுக்கு இரவு சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பித்துள்ளது. இதனை பார்த்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“அவங்களுக்கும் எனக்கும் ஒத்து போகல” ஊழியர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருத்தேர் குப்பை காரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுந்தர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுந்தரமூர்த்தி தனது வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காசு கேட்டது ஒரு குத்தமா… ரகளை செய்த கும்பல்… மடக்கி பிடித்த காவல்துறையினர்….!!

உணவு அருந்தி விட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த ஹோட்டலுக்கு சென்ற 15 பேர் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் ஊழியர் பணம் கேட்டதற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து அந்த 15 பேருக்கும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்த 15 பேரும் ஹோட்டல் உரிமையாளரை தாக்கி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் ஹாஜியார் பகுதியில் தினகரன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யோகலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் யோகலட்சுமி மிகவும் மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த யோகலட்சுமி தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் கோர தாண்டவம்…. உயரும் பலி எண்ணிக்கை… உச்ச கட்ட அச்சத்தில் பொது மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோதனையின் மூலம் ஒரே நாளில் 149 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை  தடுப்பதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா  பரிசோதனை  செய்யப்பட்டது. அதில் 149 பேருக்கு தொற்று  இருப்பது சோதனையின்  முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம்  முழுவதும் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. இதில் 52 ஆயிரத்து 904 பேர் […]

Categories
அரசியல் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளன. பாமக 2 முறையும் தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் வரலட்சுமி. செங்கல்பட்டு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,26,535 ஆகும். பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அரசு அரசின் அறிவிப்பு பல ஆண்டுகளாக வெற்று அறிவிப்பாகவே உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தேவை என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. […]

Categories
அரசியல் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் இதயவர்மன். திருப்போரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,93,251 ஆகும். மாமல்லபுரத்தில் படகுகளை நிறுத்துவதற்காக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என்ற […]

Categories
அரசியல் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.  தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் புகழேந்தி. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,26,3463  ஆகும். மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த சிறுவன் … காப்பாற்ற முயன்ற பெண் …. இருவர் பலி…!!

கிணற்றில் விழுந்த சிறுவனும் அச்சிறுவனை காப்பாற்ற முயன்ற பெண்னும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் சாலையோரம்  பழைய  பொருட்களை சேகரிக்கும் பணியில் இருக்கும் மக்கள்  மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அனீஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது  மகன் அப்துல் நேற்று முன்தினம்  விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக  தவறி விழுந்தான். இதைப் பார்த்த அதே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிகரித்த ஆஸ்துமா… இதற்கு மேல் பொறுக்க முடியாது… பெண் செய்த செயல்…!!

ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட பெண்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை பகுதியில் வேண்டாம்மாள் (வயது 58) என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 ம் தேதி ஆஸ்துமா அதிகரித்து  மிகுந்த அவதிக்குள்ளான வேண்டாம்மாள் பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மறதியால் ஏற்பட்ட சோகம்.. சிலிண்டர் வெடித்து விபத்து… மூதாட்டி உயிரிழப்பு…!!

நியாபக மறதியால் செய்த தவறில்  சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரில் இருக்கும்  பாவேந்தர் பகுதியில் யமுனா (வயது 65) என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வேண்டும்  என்று கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது லைட்டர்  சரியாக வேலை செய்யவவில்லை. இதனால் அடுப்பை ஆப் பண்ணாமல் மறதியால் அப்படியியே வைத்து விட்டு தீப்பெட்டி எடுக்க சென்றுள்ளார். அந்நேரத்தில் கியாஸ் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வெளியே போனவங்கள காணும் …. கிணற்றில் மீட்கப்பட்ட சடலம்… போலீஸ் விசாரணை..!!

காணமல் போன மூதாட்டி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் சுசீலா (வயது 65) என்பவர் வசித்து வந்தார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சுசிலா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த  அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர் . ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொருக்கதாங்களில் உள்ள  கிணற்றில் ஒருவர் மூழ்கி இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் மறைமலைநகர் காவல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருந்த காவலர்கள்… ஏ.டி.எம்-மில் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட பணம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்போரூர் கூட்டு ரோடு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் செங்கல்பட்டில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்காக ரூபாய் 1 கோடியே 8 லட்சம் பணத்தை இரண்டு வாகனங்களில் எடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதனால ரொம்ப அவதிப்படுறோம்… உடனே மூடுங்க… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் கல்குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் வெடிவைத்து தகர்க்கும் போது அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ளவர்களுக்கு சுவாசக்கோளாறு பிரச்சனைகளும் உண்டாகின்றது. இதனால் அந்த கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தேர்தல் ஆணையம் உத்தரவு… முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கியது… தெரிவித்தார் நகராட்சி கமிஷனர்…!!

தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி 28 நாட்களுக்குப் பின்னர் போடப்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கண்டிப்பு… வீட்டைவிட்டு வெளியேறிய வாலிபர்… காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாசிலாமணி. இவருடைய மகன் ரமேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் சிற்பியாக வேலை செய்து வந்தார். இவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளதால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் இருந்து கடந்த பிப்ரவரி 8ஆம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பூங்காவில் விளையாடிய சிறுவன்…. திடீரென்று கேட்ட அலறல் சத்தம்… அதிகாரிகளின் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்..!!

பூங்காவில் விளையாட சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சக்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 45 வயதுடைய வரதன் மனைவி 32 வயதுடைய நிஷா மற்றும் இரண்டு மகன்கள் இப்பகுதியில் குடியிருந்தனர். தந்தை வரதன் கூலித் தொழில் செய்து வருபவர். மூத்த மகனான 8 வயது கௌதம் நேற்று மதிய வேளையில் வீட்டிற்கு அருகிலுள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சி பூங்காவிற்கு விளையாடச் சென்றுள்ளான். விளையாடிக் கொண்டிருக்கும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்னு தெரியல… நண்பருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் போலீஸ்…!!

கல்குவாரியில் வேலை செய்யும் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்திலுள்ள போகம் கிராமத்தைச் சார்ந்தவர் சுந்தர். இவர் கல்குவாரியில் கேட் கீப்பராக வேலை செய்து வந்தார். சுந்தருக்கு உறவினரான தமிழ்வாணனும் அதே இடத்தில் வேலை செய்வதனால் இருவரும் உத்திரமேரூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக சுந்தருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் தமிழ்வாணன் மட்டும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்… சாலையை கடக்க முயன்ற இருவர்… பின் நேர்ந்த விபரீதம்…!!

கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ராணி. அதே பகுதியை சேர்ந்தவர் துளசி. இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சாலையை கடக்க முயற்சி செய்யும் போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவரின் மீதும் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

போதையில் அண்ணன் செய்த செயல்… தம்பியின் மனைவிக்கு நடந்த கொடூரம்… செங்கல்பட்டில் பரபரப்பு…!!

சொத்து பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவியை அண்ணன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகு கிராமத்தில் வீரராகவன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டம் என்ற அண்ணன் உள்ளார். இவர்கள் இருவரும் அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்த காரணத்தால் குடிபோதையில் கோதண்டம் வீரராகவனின் வீட்டிற்கு முன்பு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கோதண்டம் மஞ்சுளாவை தகாத வார்த்தைகளால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“யாரும் கவனிக்கல” பனி மூட்டத்தால் நிலைதடுமாறிய கார்…. நடந்த துயர சம்பவம்…!!

பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தொழிலதிபர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூருக்கு தனது நண்பர்களான அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் வின்சென்ட் பாபு, பெரம்பூரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் போன்றோருடன் தொழில் சம்பந்தமாக கோவைக்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் வேலையை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தம்பியின் மனைவிக்கு கத்திக்குத்து…. சொத்து தகராறில் அண்ணனின் கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் தம்பியின் மனைவியை கத்தியால் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகப்பட்டு கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு கோதண்டம் என்னும் அண்ணன் உள்ளார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பல நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோதண்டம் மதுபோதையில் தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் வாசல் முன் நின்று வீரராகவனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நோட்டமிட்டு வேலையை காட்டிடாங்க… பல லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை… வலை வீசி தேடும் போலீசார்…!!

வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கன்னிவாக்கம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் வசித்துவருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள தனது மகளின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 11ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“இதை கொடுத்தாதான் நடவடிக்கை எடுப்போம்” தீக்குளிக்க முயன்ற பெண்… கலெக்டர் அலுவலகத்தில் பதற்றம்…!!

போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பெண் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரட்டை பாளையம் கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரைண்டர் பழுது நீக்கும் தொழில் நடத்தி வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவர் லட்சுமிக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தன்னுடையது என்று கூறி அவரை தாக்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… காவலாளிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தனியார் பேருந்து ஒன்று சைக்கிள் மீது மோதியதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்தார். ஜெயக்குமார் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரகடம் வாலாஜாபாத் பகுதியில் தனது வேலையை முடித்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயகுமார் சைக்கிளின் பின் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் ஊற்றி மனைவிக்கு தீ வைத்த கணவர்…. சிதறிப்போன குடும்பம்…!!

மனைவியின் தகாத உறவு காரணமாக கணவன் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இரும்புலி ஊராட்சி அடங்கிய மேட்டு காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி ஜீவா. தனது மனைவியின் தகாத உறவை பலமுறை கண்டித்தும்  மனைவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் இன்று அதிகாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவ தினத்தன்று வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நான் எவ்ளோ சொல்லியும் கேட்கல… அவங்க ரொம்ப தொல்லை பண்ணுறாங்க… நடந்த துயர சம்பவம்…!!

அதிகாரிகள் மெமோ வழங்கியதால் மன உளைச்சலில் இருந்த கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வ.ஊ.சி நகர் 4 வது தெருவில் இளவரசன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கீதா பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் கடந்த 14 ஆண்டுகளாக தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்கு உட்பட்ட  56 டி மணலி பேருந்து கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவியை உயிரோடு எரித்து கொடூரம்… குடும்பத்தோடு தற்கொலை… செங்கல்பட்டில் பரபரப்பு…!!

மனைவியை உயிரோடு எரித்துக் கொன்று, கணவர் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரும்புலி காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார். இவர் உத்தரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். மேலும் ஜீவா எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால், பார்த்திபனுக்கு அவர் மீது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“அய்யய்யோ!” கத்தியால் குத்தியதோடு… காரை 3 முறை ஏற்றி மனைவி படுகொலை… கணவருக்கு நேர்ந்த சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்தியதோடு அவர் மீது 3 முறை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கோகுல் குமார்(30) என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா (26) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கோகுல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்தனாவும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

டாக்டர் செய்யும் செயலாமா…? மனைவி கொடூர கொலை…. தப்பித்த போது விபத்தில் சிக்கிய கணவர்…. போலீஸ் விசாரணை….!!

மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி சென்ற டாக்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் முரஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் மேல்மருவத்தூரில் பணியாற்றி வந்தார். கீர்த்தனாவிற்கு சென்ற 3 வருடங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற டாக்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. மேலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்போதான் நிம்மதியா இருக்கு…. ஒருவழியா பலன் கெடச்சிருச்சு… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காரணை புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் அருகே இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் பல காலங்களாக அகற்றபடாமல் இருந்த காரணத்தால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவியை கத்தியால் குத்தி காரை ஏற்றி கொலை… மதுராந்தகம் அருகே கணவரின் வெறிச்செயல்…!!!

மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி தெருவில் போட்டு காரை ஏற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் கோகுல் குமார் மற்றும் கீர்த்தனா தம்பதியர் வசித்து வருகின்றனர். அதில் கோகுல் குமார் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும், கீர்த்தனா தனியார் நிறுவன மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…! போக்ஸோவில் டாக்டர் கணவர் கைது ..!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் 11வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை மகளிர் காவல் துறையினர் கையும், களவுமாக கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் வசித்து வரும் வீட்டின் எதிரே உள்ள வீட்டில் 11 வயது சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம். அப்போது  காமுகன் ஸ்ரீதர் சிறுமியிடம் நைசாக பேசுவது போல பழகி, சிறுமியிடம் தவறாக நடந்து, சிறுமிக்கு பாலியல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஒருவழியா கட்டி முடிச்சாச்சு… 6 லட்ச செலவில் கலையரங்க கட்டிடம்… நடைபெற்ற திறப்பு விழா…!!

6 லட்சம் நிதி செலவில் அரசு பள்ளியில் கலை அரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் செங்கல்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாயில் புதிதாக கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வி.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த தலையங்கத்தை சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி, மதுசூதனன் எம்.எல்.ஏ திறந்து வைத்துள்ளார். மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முழு அழகையும் கண்டுகளிக்கலாம்… இந்தியாவிலேயே மிக சிறப்பு வாய்ந்தது… கலங்கரை விளக்கத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

11 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலை மோதுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இது 1887 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த கலங்கரை விளக்கம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இந்த கலங்கரை விளக்கத்தில் மண்ணெண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்ட நிலையில், கடந்த 1940 ஆம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் மின்னணு கருவிகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

விலங்குகள் கடித்து குதறியதால்… சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

மலையடிவாரத்தில் பச்சிளம் குழந்தையின் சடலமானது சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் தமிழ்நாடு ஹோட்டல் பழைய கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றிலும் மரம், செடி, கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அந்த இடத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… அதிவேகம் மிக ஆபத்து… பறிபோன உயிர்கள்… நடந்த கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் ஒரு காரில் 5 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த காரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

BREAKING: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… OMG… 5 பேர் பலி…!!!

மதுராந்தகம் அருகே கார் மற்றும் லாரி மோதி கொண்ட கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமணம் என்ற இடத்தில் சற்றுமுன் அதிவேகமாக வந்த கார், லாரியின் பின் பக்கமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிவேகம் என்றுமே ஆபத்து… கொஞ்சம் பார்த்து போக கூடாதா… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…!!

சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் காந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தம்மாள் ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக காந்தம்மாள் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அங்க யாரோ இருக்காங்க… இது எப்படி நடந்துருக்கும்… வாலிபருக்கு நேர்ந்த துயரம்…!!

சாலையில் உள்ள குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்-மஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரமாக ஒரு குட்டையில் மழைநீர் தேங்கி கிடந்துள்ளது. இந்த குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் வாலிபர் இறந்து கிடப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என் சாவுக்கு அவங்கதான் காரணம்… ஏமாற்றி திருமணம் செய்த பெண் போலீஸ்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கணவரின் இறப்பிற்கு காரணமான பெண் போலீசை கைது செய்யகோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒளலூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜா என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த சங்கீதா என்ற பெண் போலீசை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“அனாதையான நாய்க்குட்டிகள்” தாயன்புக்கு ஈடாக…. பாசம் காட்டி அரவணைத்த கோழி…!!

கோழி ஒன்று தாயை இழந்து தவித்த நாய்குட்டிகளுக்கு தாயாய் மாறி அரவணைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிப்பவர் ஜெகன். இவருடைய தன்னுடைய வீட்டில் அழகிய  நாய்க்குட்டி ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நாய்க்குட்டியானது 5 நாய் குட்டிகளை ஈன்றுள்ளது. ஆனால் நாய் குட்டிகளை ஈன்ற பத்து நாட்களுக்குள் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கண்களை கூட திறக்காத அந்த நாய் குட்டிகள் பசிக்காக தாயை தேடி அவர் வீட்டில் அங்கும் இங்குமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இன்றும் வாழும் மனித நேயம்… ஆட்டோ டிரைவரின் செயல்… காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தனது ஆட்டோவில் தவறவிட்ட 5௦ பவுன் நகையை ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் வியாபாரிகள் சங்கத் பிரமுகரான பால் பிரைட் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகனின் திருமணமானது அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் மாலையில் வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது, பால் பிரைட் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, தன்னுடைய பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அனாதையான நாய் குட்டிகள்…… தாயாக மாறிய கோழி…… நெகிழ வைக்கும் வீடியோ…..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு கோழி தாயாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் ஜெகன் என்பவரது வீட்டில் ஐந்து குட்டிகளை ஈன்ற நாய் பிரசவத்திற்கு பிறகு பத்து நாட்களில் இறந்துவிட்டது. கண்களை கூட திறக்காத நாய் குட்டிகளை அதே வீட்டில் இருக்கும் கோழி அரவணைத்து பாதுகாப்பதுடன் மற்ற விலங்குகள் நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. மர்ம நபர்களின் கைவரிசை… போலீசாரின் தேடுதல் வேட்டை…!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தகமல நகரில் மோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய மோகன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இன்னுமா குழந்தை பிறக்கல…. உறவினர்களின் செயல்… கோபித்து கொண்ட கணவன்… பெண்ணுக்கு நடந்த சோகம்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் கணவன் பேசாமல் இருந்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாடம்பாக்கத்தில் ஹேமாவதி என்பவர் வசித்துவருகிறார். இவர் சிறுசேரி பகுதியிலுள்ள ஒரு சாப்ட்வேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் நிறுவன ஊழியரான தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் வசிக்கும் […]

Categories

Tech |