Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களை பார்க்க சென்ற இன்ஜினியர்….. விடுமுறையில் வந்த போது விபத்தில் சிக்கி பலி…..பெரும் சோகம்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருசிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசைராஜா(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இசைராஜா தனது நண்பரான முருகேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருக்கும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மேலப்பாவூர் அடுத்துள்ள கால்வாய் அருகே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டில் நகையை திருடிய பெண்…. செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தபோது சிக்கிய சம்பவம்….. போலீஸ் அதிரடி….!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சிவந்திநகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பங்கஜவல்லி(69) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவரது வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து தென்காசி காவல் நிலையத்தில் பங்கஜவல்லி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்த பங்கஜவல்லி தனது வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் திருடு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நவராத்திரி சப்பர வீதி உலா…. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…. திரண்ட பக்தர்கள்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அரியநல்லூர் தெருவில் முப்பிடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று முன்தினம் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Categories
ஆன்மிகம் தென்காசி மாவட்ட செய்திகள்

நரசிம்மர் கோவிலில்…. தீர்த்தவாரி உற்சவம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதியில் கீழப்பாவூரில் நரசிம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி திருவோண ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் காலை வேளையில் தெப்பக்குளத்திற்கு பிரவேச பலி, வாஸ்து சாந்தி, கலசத்தில் வர்ண ஜெபம் போன்றவை நடைபெற்றது. அதன் பின் பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளி அங்கு அவருக்கு விசேஷ அபிஷேகமும் உற்சவமூர்த்தியுடன் தீர்த்த வாரியம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலையும் தெப்பக்குளத்தையும் வலம் வருதலும் நடைபெற்றது. அதன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

போலியான ஆவணங்களா….?? நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!

நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயிரப்பேரியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்நிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து சோமசுந்தர பாரதி என்பவருக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பதாக கண்ணன் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பத்திரப்பதிவு செய்து கொடுத்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வைரலான வீடியோ…! பெட்ரோல் குண்டு தயார் செய்து…. “பொது வெளியில் வெடிக்க செய்த நபர் கைது”…. ஒருவர் தலைமறைவு.!!

தென்காசி அருகே பெட்ரோல் குண்டு தயார் செய்து அதை பொது வெளியில் வெடிக்க செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.. கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிலர் தொடர்ச்சியாக பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி பொது சொத்துக்களை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.. இவர்கள் மீது ஏற்கனவே காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி” பஞ்சாயத்து துணை தலைவியின் புகார்…. போலீஸ் அதிரடி….!!!

பஞ்சாயத்து துணை தலைவியின் கையெழுத்தை போலியாக போட்டு 9 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே இருக்கும் பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மாரியம்மாள் துணைத்தலைவியாக இருக்கிறார். இவர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது கணவர் காளிராஜ், பஞ்சாயத்து செயலாளர் சீனியம்மாள் ஆகியோர் தனது கையெழுத்தை போலியாக போட்டு ‘செக்’ மூலம் வங்கியிலிருந்து 9 லட்ச […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் சம்பவம்…… குற்றவாளிகள் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை….!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாண்மை என கூறப்படும் மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி, குமார், சுதா, முருகன் என 5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்டம் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோவையில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்தது தெரியவந்தது. அதே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…. புதுப்பெண் கடத்தல்….. தந்தை உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவில்  சின்னராஜ் மகன் சங்கர்முருகன் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த பாண்டி மகள் கோமதி (20) என்பவரும் வேலை பார்த்துள்ளார். உறவினர்களான இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கர் முருகனை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள கணவர் வீட்டில் கோமதி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீண்டாமை விவகாரம்….. கிராம நிர்வாக அலுவலர் அதிரடி மாற்றம்….. திடீர் மாற்றம்…..!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் கடையில் மிட்டாய் வாங்க சென்ற பள்ளிச் சிறுவர்களிடம் பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என கடை உரிமையாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாதி திமிரு….. கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பில் இருந்து நீக்கம்…. கோட்டாட்சியர் அதிரடி….!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள பஞ்சாகுளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும்போது இரு பிரிவு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சாதியை சொல்லி திட்டி இரண்டு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நான்கு பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு நெல்லை மாவட்ட 2 வது செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் அந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காக பெட்டி கடைக்கு சென்றபோது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இன்று முதல்…. தென்காசி வழியாக மீண்டும் சிறப்பு ரயில் இயக்கம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!!

இன்று முதல் தென்காசி வழியாக நெல்லை- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையம், தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில்களில் ஏராளமான பொதுமக்கள் பயணிக்கின்றனர். நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7:20 மணிக்கு நெல்லையில் […]

Categories
தென்காசி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிறுவர்கள் மீது தீண்டாமை…! குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை … ஐஜி அதிரடி உத்தரவு ..!!

பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவில் தொடர்புடைய மகேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஒரு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். பட்டியலின […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பாஞ்சாங்குளம் பள்ளியில் தீண்டாமை கொடுமை…..? கடும் துன்பத்தில் மாணவர்கள்….. கண்டுகொள்ளாத ஆசிரியர்கள்…..!!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தீண்டாமை கொடுமை நடப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது. அதாவது இருக்கையில் அமர்வது மற்றும் சாப்பாட்டுக்கு தட்டு வழங்குதல் போன்றவற்றில் தீண்டாமை பார்க்கப்படுவதாக குழந்தைகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த தீண்டாமை கொடுமைகளை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் மாணவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் பாஞ்சாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் பட்டியல் இனத்தைச் மாணவரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்….. கடையை இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரி….. அதிரடி உத்தரவு….!!!!

பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த பெட்டி கடைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே பாஞ்சாலங்குளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பெட்டிக் கடைக்காரர் இந்த சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் தின்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என்றும், பொருள்களை தரமாட்டார்கள் என உங்கள் வீட்டில் பொய் சொல்லுங்கள் என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்…. உறவினர்களின் செயல்…!!!

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமலிங்காபுரம் பகுதியில் செல்வராஜ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் நேற்று முன்தினம் செல்வராஜ் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து செல்வராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து உறவினர்களிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதித்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஆகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்காலிகமாக சுப்புலாபுரத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஊரில் வசித்த மகேந்திரன்(20) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் விடுமுறையில் மகேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷூம் மகேந்திரனும், மோட்டார் சைக்கிளில் செங்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதிய சொகுசு கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியில் இருந்து கேரளா அரசு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆரியங்காவு வாகன சோதனை சாவடி அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து காரில் பயணம் செய்து படுகாயமடைந்த 5 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குறுவட்ட அளவிலான போட்டியில்…. சாதனை படைத்த…. ஆழ்வார்குறிச்சி பள்ளி மாணவிகள்….!!!!

எறிபந்து போட்டியில் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகள் பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்தது. இதில் எறிபந்து போட்டியில் மட்டும் 19 வயதுக்கு வயதிற்கு உட்பட்டவர்கள் மொத்தம் ஒன்பது பேர் கலந்து கொண்டனர். அதில் ஆழ்வார்குறிச்சியில் உள்ள குட் செப்பேர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் குறுவட்ட அளவிலான […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சுற்றுலா பயணிகளுக்கு நீடிக்கும் தடை….!!

அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த ஆண்டு சீசன் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று நான்காவது நாளாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் இருளப்பசாமி கோவில் தெருவில் சுடலையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான பெரியசாமி (35) என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் பெரியசாமி 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பழகி வந்தார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெரியசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமான சிறுமியை கருக்கலைப்பு செய்வதற்காக பெரியசாமி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. மர்ம நபர்களின் கொடூர செயல்….. தென்காசியில் பரபரப்பு….!!

பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் (54) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் நாகராஜன் கோவையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் அங்கேயே தங்கி இருந்து வேலை செய்வதால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வார். இவர்களது மகள் கார்த்திகா சென்னையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 5 நாட்களில்….. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளம் பெண்….. தென்காசியில் பரபரப்பு…..!!!!

இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே துப்பாக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து சிறிது தூரம் உள்ள ஒரு ஓடையில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு கல்லூரி மாணவிகள் போராட்டம்…. “தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை”…. பரபரப்பு….!!!!!

அரசு கல்லூரி மாணவிகள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் சென்ற 2019-20-ம் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது பிகாம், பிபிஏ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாட வகுப்புகளில் 750 மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்நிலையில் போதிய இட வசதி இல்லை என கூறி அரசு மகளிர் கல்லூரி மாணவிகளை நெல்லை காந்தி நகரில் இருக்கும் ராணி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் அமைக்க உள்ள நிலம்…. குத்தகைக்கு கேட்கும் தீர்மானம்…. ரத்து செய்யப்பட்டதாக நகராட்சித் தலைவர் அறிக்கை….!!!!!!

கடையநல்லூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலத்தை குத்தகைக்கு கேட்கும் தீர்மானமானது ரத்து செய்யப்பட்டதாக நகராட்சி தலைவர் கூறியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் நகராட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டமானது எனது தலைமையில் நடைபெற்றது. தற்பொழுது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தற்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தந்தை-மகள் எடுத்த விபரீத முடிவால் நேர்ந்த சோகம்”….. தீவிர சிகிச்சையில் தாய்…. போலீசார் விசாரணை….!!!!!

குற்றாலத்தில் தனியார் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தந்தை மகள் தற்கொலை செய்து கொண்டார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தனியார் விடுதி ஒன்றில் தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் சென்ற பொழுது கதவு பூட்டப்படாமல் இருந்தது. இதனால் ஊழியர் வெளியே இருந்து சத்தம் கொடுத்தும் யாரும் வரவில்லை. இதை தொடர்ந்து ஊழியர் உள்ளே சென்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

Breaking: விநாயகர் ஊர்வலத்தில் பெரும் விபத்து….. மரணம்…!!!!

ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சொக்கநாதன்புத்தூரில் உள்ள ஒரு தெருவில் திரும்பிய போது சப்பரம் ஒரு மரத்தில் மோதியுள்ளது. அப்போது அதிலிருந்து விழுந்த விளம்பரப் பலகையில் இருந்த ஒயர் வழியாக மின்சாரம் சப்பரத்தில் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதே போல நடந்த ஒரு தேர் விபத்தில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு….. வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயம்….!!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் பரவி நாட்டையே உலுக்கியது. இது மறக்க முடியாத ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு ஓமைக்ரான் பரவலும் பரவத் தொடங்கியது. இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதுபோன்று நோய்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கியது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள நல்லூர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரெடிமேடு ஆடை தொழில் தொடங்கணுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

ரெடிமேடு ஆடை தொழில் துவங்க நிதிஉதவி வழங்கப்படும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறி வரும் சூழலுக்கு ஏற்பவும் இந்த மக்களில் 10 பேரைக் கொண்டு குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்திக்கு ரூபாய்.3 லட்சம் நிதியளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆகவே பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….!!!!!

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது நடந்தது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சாதிர் தலைமை தாங்கி உறுதி மொழியை வாசித்து நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு துணைத் தலைவர் கே.என்.எல் சுப்பையா, ஆணையாளர் பாரிஜான் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள். தூய்மை இந்தியா திட்ட […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கம்பளி ஊரில் இருக்கும் வயலில் விவசாயிகள் சூரியகாந்தி பூக்களை வளர்த்து வருகின்றனர். இதனை பார்க்க கேரள மாநிலத்தில் இருந்து வாலிபர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். நேற்று மாலை திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்(52), அவரது மனைவி மினி(52), அதே பகுதியில் வசிக்கும் தீபு(50), பிஜூ(52) பிரசாந்த்(59) ஆகியோர் காரில் வந்து சூரியகாந்தி பூக்களை பார்த்து புகைப்படம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“144 தடை உத்தரவு அமல்” தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சேரி கிராமத்தில் நாளை ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் செப்டம்பர் 1-ஆம் தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் புலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் இன்று முதல்… 144 தடை உத்தரவு அமல்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…..!!!!

தென்காசி மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் இருபதாம் தேதி நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251 வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நெற்கட்டும் சேவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுதந்திரதினம் எதிரொலி!…. 75 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…. வெளியான தகவல்….!!!!

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கீழக் கடையம் ஊராட்சி மன்றம் சார்பாக வாசுகிரி மலைப் பகுதியில் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். அத்துடன் கடையம் ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டிகே பாண்டியன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் மரக்கன்று நட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளிர்ந்த காற்று வீசி குளுகுளுவென வானிலை நிலவுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொலை தொடர்பாக முன்விரோதம்…. 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு…. தென்காசியில் பரபரப்பு…!!!

2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பாவூர் வடக்கு தெருவில் சுரேஷ், முத்துசாரதி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த கனிபாண்டி, முத்து ஆகிய இருவருக்கும் இடையே ஒரு கொலை சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முத்துவும், கனிபாண்டியும் இணைந்து சுரேஷ் மற்றும் முத்துசாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மீரான் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை”…. நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சி….!!!!!

தென்காசி மீரான் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மீரான் மருத்துவமனையில் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனை சார்பாக மேலாண்மை இயக்குனர் டாக்டர் சஹதுல்லா உத்தரவின் பேரில் ஐ.சி.யு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆம்புலன்ஸில் அனைத்து நவீன வசதிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிறுவன டாக்டர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்க தென்காசி மாவட்ட வருவாய் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்”…. ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசி பறிமுதல்….!!!!!!

ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். நெல்லை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆட்டோவில் 2,320 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த கதிரவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். தற்போது கதிரவனை போலீசார் தேடி வருகின்றார்கள்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…. நீண்ட வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்…!!!!!

குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். தற்பொழுது சீசன் நன்றாக இருக்கின்றது. அவ்வபோது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகின்றது. மேலும் குளிர்ந்த காற்று வீசுகின்றது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகின்றது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு குவிந்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 நாட்கள் தடை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளை வேடிக்கை பார்த்து சென்றனர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மேல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அந்த அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை விட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி”…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!!!!

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இருக்கும் மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததன் எதிரொலியாக அறிவியலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 1-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு குறிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

6 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் அனுமதி….. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி….!!!!

6 நாட்களுக்கு பிறகு குற்றால மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஆபத்தான பகுதியில் யாரும் சென்றுவிடாதபடி தடுப்புக் கயிறு கட்டி பாதுகாப்புடன் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கடையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய ட்ராக்டர்”…. விவசாயி பலி….!!!!!

கடையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கபாண்டி என்பவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆம்பூர் ரயில்வே கேட் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த ட்ராக்டரும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாரவிதமாக மோதிக்கொண்டதில் தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி வேன் மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குறிப்பன்குளம் நடுத்தெருவில் விவசாயியான பால்துரை(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாயமான்குறிச்சி விலக்கு அருகே சென்றபோது பால்துரையின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பால் துரையை அக்கம்பக்கத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. 3-வது நாளாக நீடிக்கும் தடை…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3-வது நாளாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று 3-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற பெண்…. மின்னல் தாக்கி பலியான சோகம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மூவிருந்தாளி கிராமத்தில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கோமதி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பாட்டி மற்றும் பேரன் கொலை வழக்கு…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை கிராமத்தில் முகமது காசிம்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி மேக்கரை பகுதியில் வசித்த பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வழக்கில் முகமது காசிமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய மதுபோதை…. தோசை கல்லால் மனைவியை தாக்கிய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மனைவியை தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள வயலிமிட்டா கிராமத்தில் சண்முக பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிகண்டன்(30) என்ற மகன் உள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணிகண்டன் ராமலட்சுமியை தோசை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த ராமலட்சுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories

Tech |