கடையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பாரம் அதிகம் ஏற்றி வந்த டிராக்டர் டிரைவருக்கு பத்தாயிரம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் அருகே ராமலிங்கபுரம் கிராம பகுதியில் கோவிந்தாபேரி பீட் வனகாப்பாளர் பெனாசீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து வனக்காப்பாளர் சோதனை செய்தார். அதில் உரிய ஆவணங்கள் இன்றி அளவுக்கதிகமாக விறகுகளை ஏற்றி வந்துள்ளனர். இதையடுத்து வனக்காப்பாளர் துணை இயக்குனர் உத்தரவின்படி ரூ 10000 அபராதம் விதித்தார்.
Category: தென்காசி
புளியங்குடி கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியில் வசித்து வருபவர் மாடத்தி. இவரது மகள் பிரியா வயது (18). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் புளியங்குடியில் செயல்பட்டு வரும் மனோ கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களில் முன்பு கல்லூரிக்கு சென்ற இந்து பிரியா செல்போன் கொண்டு வந்ததாக கூறி அவரை மன்னிப்பு கடிதம் […]
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி காவல்துறையினர் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக 1000 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கட்சி சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட போது காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி அவர்கள் இந்த பேரணி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து தென்காசி மற்றும் […]
குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குருவன்கோட்டை பகுதிகளில் ராஜ்-சீதாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சீதாலட்சுமிக்கு கடந்த 24 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை ஆலங்குளத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் […]
வனத்துறையினர் 3 பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சத்துணவு கூடத்தில் பதுங்கியிருந்த மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். இதேபோல் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் குருசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும், […]
தூய்மை பணியாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காளிமுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகு காளிமுத்து வீடு திரும்பினார். நேற்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென காளிமுத்து மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து […]
கிளிகளை பிடிக்க முயன்ற குற்றத்திற்காக 2 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் முகமது காசிம் மற்றும் ஷேக் அப்துல் காதர் ஆகிய 2 பேரும் இணைந்து பம்பை ஆற்று சாலையில் பச்சை கிளிகளை பிடிப்பதற்காக மரங்களில் ஏறியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இரண்டு வாலிபர்கள் இடமிருந்தும் தலா 2 […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி சிந்தாமணி நயினார் தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சுப்பையா என்பவருடன் காரில் திருநெல்வேலிக்கு வந்துவிட்டு முக்கூடல் வழியாக மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்த காரை சேகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரிராம் நகர் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் […]
காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்க்காலிபட்டியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கோபாலகிருஷ்ணனின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை, பனை மற்றும் மா மரங்களை சாய்த்தும், முறித்தும் நாசப்படுத்தியுள்ளது. மேலும் காட்டு யானைகள் மாணிக்கவாசகம் என்பவருக்கு சொந்தமான வயலுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அடுத்து விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதை […]
அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெற்றிலை மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு அருகே இருக்கும் தனியார் கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த வாலிபர் […]
காட்டுயானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகில் பங்களா குடியிருப்பு பகுதியில் அந்தோணி பெருநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று கடனா அணைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் மற்றும் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் […]
உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம் காரணமாக 5 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜியாத், கன்ஷுல்லாஹ், அப்துல் அஜீம், ஆசாத் மற்றும் பயாஸ் ஆகிய 5 மாணவர்களை தமிழக அரசு மீட்டுள்ளது. இந்த மாணவர்கள் […]
பா.ம.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் தேரடி திடலில் வைத்து பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மலையான்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாவட்ட செயலாளர் சீதாராமன், துணைத் தலைவர் […]
கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள மாதாங்கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐஸ் வியாபாரம் மற்றும் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது சாம்பவர் வடகரையில் இருந்து கம்பிளி செல்லும் பகுதியில் ஒரு கிணற்றில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் அருகே சமுசிகாபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் மற்றும் சங்கரேஸ்வரன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் மாணிக்கவேல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கரேஸ்வரன் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் சொந்த வேலைக்காக மோட்டார் […]
பெற்றோர் கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் தெற்கு காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கயல்விழி சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கயல்விழி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கயல்விழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
செங்கோட்டை நகரசபை தலைவர் தேர்தலில் திமுக அதிமுகவினர் இடையில் மோதல் ஏற்பட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரசபை கூட்ட அரங்கில் அலுவலர் இளவரசன் தலைமையில் நேற்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நகரசபை தலைவர் பதவிக்கு அதிமுக இரண்டாவது வார்டு உறுப்பினர் ராமலட்சுமி மற்றும் தி.மு.க சார்பாக 6வது வார்டு உறுப்பினர் பினாஷா ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திமுக உறுப்பினர் எஸ் எம் […]
பிளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாசையாபுரம்-இலவன்குளம் சாலையில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் அடிக்கடி செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த பெற்றோர் செல்வராகவனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வராகவன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார்குளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சண்முகத்தை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முருகன் சங்கரன்கோவில்-புளியங்குடி மோட்டார் சைக்கிளில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பணியாளர்களை தனியார் நூற்பாலைக்கு ஏற்றி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் வேன் […]
முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள நாரணபுரம் பகுதியில் சங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சங்கையா தனது கடைசி மகன் வீட்டில் தங்கியிருந்து தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி தனது மூத்த மகனுடன் சென்று விட்டார். இந்நிலையில் மனவேதனையில் இருந்த […]
பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வரகுணராமபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பொன்ராஜ் கடந்த 14-ஆம் தேதி சுரண்டை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொன்ராஜ் அவரது வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்று அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் பொன்ராஜ் அவரை கத்தியால் கீறி விட்டு […]
தாய் படிக்கச் சொல்லி திட்டியதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் தாலுகாவில், சொக்கம்பட்டி போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்லச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகத்தாய் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார் .செல்லச்சாமி, சண்முகத்தாய் தம்பதியரின் 17 வயதான மகள் பெனியாராஜ், கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் . இந்நிலையில் பெனியாராஜ் […]
தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள போன் அல்லூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்ல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பெனியாராஜ் என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் அதிக கவனம் […]
மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மேலவீதி 2-வது தெருவில் கட்டிட தொழிலாளியான பரமசிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பரமசிவன் முத்துமாரியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவன் […]
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான வேலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் வேல் சாமியின் மகளான சுதா பட்டப்படிப்பு படித்துவிட்டு தனது தாய்க்கு உதவியாக பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் […]
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மானூர் பள்ளி கோட்டை வடக்குத் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மகன் மாடசாமி(23), சுரண்டை கோட்டை தெரு பகுதியில் இருக்கும் மனோஜ் குமார்(19), விருதுநகர் நகரில் உள்ள மற்றொரு மனோஜ் குமார்(19) ஆகிய 3 பேரையும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சப் இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் தலைமையில் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த […]
இரண்டு மிளாக்களை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகல்யாணிபுரம் அருகில் மிளா ஒன்று நிற்பதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த மிளாவை பிடித்தனர். இதனையடுத்து காயமடைந்த அந்த மிளாவுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து ஆம்பூர் கசிவு ஓடையில் விட்டனர். இதேபோல் சிவகல்யாணிபுரத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் 3 மாத பெண் மிளா குட்டி நின்றுள்ளது. இதனையும் வனத்துறையினர் பிடித்து ஆம்பூர் பீட் […]
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சில்லரைபுரவு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 800 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தென்னை, வாழை, மா, நெல் உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒற்றை தந்தத்துடன் காட்டு யானை ஒன்று திரவியம்நகர் பகுதியில் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானை விவசாய […]
மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி மூதாட்டி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருசிற்றம்பலம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் பூஞ்செடி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து அக்கம்பக்கத்தினரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய […]
வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மேல பிள்ளையார் கோவில் தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் திண்டுக்கல்லில் இருக்கும் மகளை பார்ப்பதற்காக வீட்டில் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்லப்பா அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]
மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை அழகாபுரிபட்டணம் பள்ளிக்கூட தெருவில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இதற்கு வெங்கடாசலம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மிளகாய் வத்தல் மற்றும் பூண்டு மொத்த வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாச்சலம் சுரண்டை-சேர்ந்தமரம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது புளியங்குடி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து வெங்கடாசலத்தின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கௌசல்யா மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யாவுக்கு பிறந்த பெண் குழந்தை இரண்டு வாரத்தில் இறந்துவிட்டது. மேலும் கௌசல்யா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கௌசல்யாவை மீட்டு மருத்துவமனைக்கு […]
பொத்தையில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரத்தில் முள்ளிமலை பொத்தை அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த பொத்தையில் ஏராளமான மரம், செடி கொடிகள் இருக்கின்றன. இங்கு நேற்று மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரம் மற்றும் செடிகளில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். சுமார் […]
மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது நண்பரான ஸ்ரீதர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பொட்டல்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கௌசல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில் இறந்துவிட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
விவசாயியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சோலைசேரி மெயின் ரோடு பகுதியில் விவசாயியான ராஜகுரு என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் இருக்கும் மகனின் வீட்டில் தங்கியிருந்து ராஜகுரு தனது மனைவிக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜகுரு தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் […]
ஆபத்தான நிலையில் இருக்கும் நீர்த்தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள திப்பணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்த நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. அதன் தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் இருக்கும் […]
கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ மோதிய விபத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருந்த வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் வியாபாரியான சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சங்கரன்கோவில்- நெல்லை சாலையில் இருக்கும் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாமி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் புனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த புனிதா கணவர் வேலைக்கு சென்ற பிறகு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]
மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி மூதாட்டி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை அடுத்து மூதாட்டியை தேடி வந்த அவரது மகன் சுப்பிரமணியன் கிணற்றில் தனது தாய் சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லூத்து கிராமத்தில் கூலி தொழிலாளியான லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பொன்னரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பவுத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உணவு இடைவேளையின் போது பொன்னரசி பள்ளி ஆய்வக கட்டிடத்தின் 2-வது மாடியில் […]
கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்துப்பட்டி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் அப்பகுதியில் இருக்கும் அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேங்காய்களை பறித்துள்ளார். அப்போது சில தேங்காய்கள் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனை எடுப்பதற்காக செல்வராஜ் கிணற்றுக்குள் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக மயங்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் தேரோட்ட திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று காசி விஸ்வநாத சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி -அம்பாள் காலை, மாலை இருவேளை, சிறப்பு பூஜை மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா நடைபெற்றன. இதனால் பக்தர்கள் ஏராளமானோர் தினமும் […]
பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் புளியங்குடியில் இருந்து அம்பை செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் பேருந்தின் படியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து தென்காசி புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று கொண்டிருந்த போது திடீரென தங்கவேல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த தங்கவேலை அருகில் உள்ளவர்கள் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் விஜயகுமாரின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் மரத்தில் குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
குத்துச்சண்டை போடியில் இண்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்ற மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள எஸ் .எம். எஸ். எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து குத்துச்சண்டையில் இன்டர்நேஷனல் சம்பியன்ஷிப் பட்டம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், குத்துச் சண்டை பயிற்சியாளர் ஜாகிர் உசேன், தலைமை ஆசிரியர் முருகேசன், உடற்கல்வி இயக்குனர் சஞ்சய் காந்தி, ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து […]
நகைக்கடையில் திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் ஒரு நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் வந்துள்ளார். இந்த பெண் நகை வாங்குவது போல நடித்து 4 கிராம் தங்க நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு […]
சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய குற்றத்திற்காக லாட்டரி வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை மாரிமுத்து பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பதும், சட்டவிரோதமாக அவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்ய முயன்றுள்ளார். அப்போது முருகேசன் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் லாவண்யா என்ற பெண்ணை பொன்ராஜ் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து பொன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் டி.என் புதுக்குடி பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் […]