Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மதகில் சிக்கிக் கொண்ட இளைஞர்… தேடுதல் பணி தீவிரம்..!!!

கொள்ளிடம் ஆற்று மதகுப் பகுதியில் சிக்கிய வாலிபரை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே இருக்கும் திருவைகாவூர் தெற்கு தெருவில் வசித்து வரும் ரவி என்பவரின் மகன் தினேஷ். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றிருக்கின்றார். அப்போது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை பார்த்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்றார். இதில் தினேஷ் மதகு பகுதியில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

5 அடி உலோக அம்மன் சிலை மீட்பு…. கோவிலில் இருந்து திருடப்பட்டதா…? பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையில் இருக்கும் வீட்டில் பழமையான உலோக சிலையை பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சரவணன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி 1 1/2 அடி அகலமும், 5 அடி உயரமும் உடைய சிவகாமி அம்மன் உலோக சிலையை கைப்பற்றினர். இந்நிலையில் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த சிலை தொன்மையான தோற்றத்துடன் இருப்பதால் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. தங்க சங்கிலியை அபேஸ் செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குழந்தை அம்மாள் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி-யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவசங்கரி வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சிவசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உங்களிடம் பேச வேண்டும்”…. பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மனோஜிப்பட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு தயார் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் நான் உங்களிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் அவரது செல்போன் எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு மிரட்டி சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த பெண் நடந்தவற்றை தனது உறவினர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் அந்த பெண் இருக்கும் இடத்திற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போலியான பணி ஒப்புதல் கடிதம்”…. வாலிபரிடம் ரூ.1.84 லட்சம் மோசடி…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. முதலில் நண்பர் போல பேசிய அந்த நபர் வாலிபரிடம் தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பணம் கொடுத்தால் உங்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என அந்த நபர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி பல்வேறு தவணைகளாக வாலிபர் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து 84 ஆயிரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தரையில் உட்கார்ந்த படியே இறந்த ஆசிரியர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாட்டாணிக்கோட்டை வடக்கு பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொன்றைக்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்த வேலுச்சாமி ஆலங்குடி பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே தரையில் உட்கார்ந்த படியே வேலுசாமி இறந்துவிட்டார். இதனை பார்த்த சிலர் அவர் போதையில் உட்கார்ந்து இருப்பதாக நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அசையாமல் இருந்ததால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண்ணின் பெயரில் வந்த “குறுந்தகவல்”…. ரூ. 1 3/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர் பட்டதாரி வாலிபர் குறித்த தகவல்களை கேட்டு கொண்டார். அப்போது தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர் மறுமுனையில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! சிலம்பம், கபடி, நடனம் என அனைத்திலும் சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் ரவி- உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வர்ஷா(20) தஞ்சை மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வர்ஷா கடந்த 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வர்ஷா முதலிடம் பிடித்தார். மேலும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு நடந்து சென்ற மாணவர்கள்…. கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமாட்சிபுரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் காமாட்சிபுரத்திலிருந்து தினமும் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்போது உள்ளம் என்ற இடத்தில் சென்ற போது மாணவ- மாணவிகள் உள்பட 30 பேரை மரத்தில் இருந்த கதண்டுகள் விரட்டி கடித்தது. இதனால் காயமடைந்த 30 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இளையோர் மன்ற விருது… விண்ணப்பங்கள் வரவேற்பு… வெளியான தகவல்…!!!!

தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இளைஞர் மன்றங்களின் சேவைகளை பாராட்ட மற்றும் ஊக்கப்படுத்துவதற்காக வருடம் தோறும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான இளையோர் மன்ற விருதினை பெற நேரு யுவகேந்திரா உடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் மகளிர் மன்றங்கள் மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதிகளில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை ஊராட்சியில்… பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.. தலைமைதாங்கிய கூடுதல் ஆட்சியர்..!!!

பட்டுக்கோட்டை ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், சாமிநாதன், உதவி என்ஜினியர் சத்திய பாமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை அடுத்து கூடுதல் ஆட்சியர் பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை… உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..!!!

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகப் பிரியா என்பவர் எம்பிஏ முடித்திருக்கின்றார். இவரும் ரவிச்சந்திரன் என்பவரும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றார்கள். அங்கு பெண்கள் பிரிவுக்காக நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் லோகபிரியா தங்கப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் கிராம மக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை ரயில் நிலையத்திற்கு வயது 162…. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!!!

தஞ்சை ரயில் நிலையத்திற்கு 162-வது வயது ஆரம்பித்ததால் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தஞ்சை ரயில் நிலையத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும் 7 ரயில்வே பாதைகளும் இருக்கின்றது. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் ரயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்னும் நிலவும் தீண்டாமை… முடி வெட்ட, பொருட்கள் வாங்க தடை…. எங்கு தெரியுமா…???

தீண்டாமை இன்னும் தமிழகத்தில் நிலவி வருவதாக மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்த்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் சலூன் கடைகளில் முடிவெட்ட தடை இருப்பதாகவும், அங்கு இரட்டை குவளை முறையும் இருப்பதாகவும் கூறினார். மேலும் பட்டியலின மக்களுக்கு மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்கக்கூடாது என ஊர் பஞ்சாயத்து கடைகளுக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபற்றி கேட்டபோது கிராம மக்கள் தங்கள் மீது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்…. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு…!!!

கபிஸ்தலம் அருகே இருக்கும் தனியார் சர்க்கரை ஆலை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயி நாக முருகேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பின்வருமாறு, கபிஸ்தலம் அருகே இருக்கும் திருமன்றங்குடி தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நசுவினி அணையை விரிவு படுத்த வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை… உறுதியளித்த உதவி ஆட்சியர்…!!!

நசுவினி அணையை விரிவுபடுத்தி பாசன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தஞ்சை உதவி ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சத்தியசாமி மற்றும் விவசாயிகள் நசுவினி ஆற்றில் இருக்கும் அணையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து உதவி ஆட்சியர் அணையை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முறையான சிகிச்சை அளிக்காததால்…. காலை இழந்த பேருந்து ஓட்டுனர்…. ஆட்சியரிடம் பரபரப்பு புகார்….!!

முறையான சிகிச்சை அளிக்காததால் தன் வலது காலை இழந்த பேருந்து ஓட்டுனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் மேலத்தெருவில் வசித்து வரும் ஜோதி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜோதிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குப்பை அள்ளுவது போல நடித்த வாலிபர்…. 19½ பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை…. போலீஸ் அதிரடி….!!

குப்பை அள்ளுவது போல நடித்து 19½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் மர்மநபர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த 19½ பவுன் நகை மற்றும் பணத்தை கடந்த 9-ஆம் தேதி திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”இது எங்களுக்கான டைம்”.. பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து மோதல்… தஞ்சையில் பரபரப்பு சண்டை…!

எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என,  இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விதை நிலக்கடலையை மானிய விலையில் அரசே வழங்க வேண்டும்… விவசாயி கோரிக்கை..!!!

மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்து இருக்கின்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்தார்கள். அப்போது சிவவிடுதி ராமசாமி என்பவர் கூறியுள்ளதாவது, காடுவெட்டி விடுதி, சிவவிடுதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விருத்தாச்சலத்தில் காணாமல் போன மோட்டார் சைக்கிள்… நாகையில் ஓட்டும் போலீஸ்காரர்… டிஐஜி-யிடம் புகார்..!!!

விருத்தாச்சலத்தில் திருட்டு போன மோட்டார் சைக்கிளை நாகையில் இருக்கும் போலீஸ்காரர் ஓட்டி வருகின்றார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அருகே இருக்கும் வேட்டைகுடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தஞ்சை சரக டிஐஜியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2018 ஆம் வருடம் ஜூலை 7ஆம் தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டி வந்த நிலையில் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் 10ஆம் தேதி விருத்தாச்சலத்தில் உள்ள […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பௌர்ணமியை முன்னிட்டு…. வில்லாயி அம்மன் கோவிலில் திருவாசகப் பாராயணம்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு பகுதியில் வில்லாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று காலை திருவாசகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சை அப்பர் தமிழ் மன்றத்தினர் இணைந்து திருவாசகப் பாராயணம் நிகழ்ச்சியில் நடத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி முதலில் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கி 5 மணி நேரம் விடாது திருவாசகத்தை பாராயணம் செய்யப்பட்டது. இதில் தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஆசிரியர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் தொங்கியப்படி பயணம்…. நடவடிக்கை எடுப்படுமா…? மக்களின் எதிர்பார்ப்பு…!!!!

கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதுபோல பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, வல்லம் போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடேடே..! தஞ்சை ஹாஸ்பிட்டலில் சூப்பரே.. அறிமுகமான புது மெஷின்..!!

உலக அளவில் செயற்கை உறுப்பு பொருத்தல் மற்றும் மாற்றுத் திறனர் உதவிக் கருவி தினமானது நேற்று தான் கொண்டாடப்பட்டது. அதன்படி இந்த தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு செயற்கை அவைய துணை நிலையத்தில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கை, கால்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியினை முதல்வர் பாலாஜி நாதன் முதலில் இயக்கிய வைத்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மது போதையில் தகராறு செய்த தம்பி”… “அடித்துக் கொன்ற அண்ணன்”… போலீசார் விசாரணையில் வெளியான பல தகவல்….!!!

மது போதையில் தகராறு செய்த தம்பியை  அவரின் அண்ணன் அடித்து கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் புளியம்பட்டி குருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த வைரப்பன் என்பவர் சிற்ப தொழிலாளி. இவரின் மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீரப்பன் கீழே தவறி விழுந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“400 வருடங்களைக் கடந்த தஞ்சை பீரங்கிமேடு”…. மும்முரமாக நடந்து வரும் சீரமைக்கும் பணி…!!!!!

21 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தஞ்சை பீரங்கி மேடு புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோவில் இருக்கின்றது. தஞ்சையில் ஆசியாவின் பழமையான நூலகமான தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம், ஆயுத கோபுரம் உள்ளிட்ட பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள் இருக்கின்றது. இந்த வரிசையில் ராஜகோபால் பீரங்கியும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பீரங்கி தஞ்சைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். எப்போதும் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் இது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விடிய விடிய ஆற்றுக்குள் இறங்கி நின்ற ஆசிரியையால்…. தஞ்சையில் பெரும் பரபரப்பு….!!!!

தஞ்சை மாவட்டத்தில் பள்ளியக்ரஹாரம் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு வெண்ணாற்றங்கரைக்கு அருகே ரேவதி நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் திடீரென ஆற்றுக்குள் இறங்கி வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார். இதனை கண்டதும் வழியாக சென்றவர்கள் அவரை வெளியே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் வெளியே வர மறுத்துள்ளார். இது குறித்து அவருடைய குடும்பத்திற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எந்திரத்தை சிறைபிடித்த விவசாயிகள்…. புறவழிச்சாலை அமைக்க தொடர் எதிர்ப்பு…. தஞ்சையில் பெரும் பரபரப்பு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு பகுதியில் தியாகராஜர் சமாதி மற்றும் புகழ் பெற்ற கோவில்கள் அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு செல்வதற்கான சாலைகள் மிக குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் கண்டியூர் போன்ற பகுதிகளிலும் சாலை குறுகலாக இருப்பதினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து திருவையாறு கண்டியூர் பகுதிகளில் அரசூரில் இருந்து விளாங்குடி வரை சாலையை இணைக்கும் வகையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்…. ஆய்வுப் பணியில் கலெக்டர்….!!!!

வடிகால் உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை நேற்று மாலை சுமார் 3:30 மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. இதனால் கொடி மரத்து மூளை பகுதியில் இருக்கும் அகழியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வடியும் தண்ணீர் வடிகால் மூலம் வடவாற்றிற்கு சென்று சேரும். இந்த நிலையில் வடிகாலில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறி நூற்றுக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கிய நிலையில் இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மூன்றாம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் தவிக்கும் இலங்கை பெண்” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு…!!!!

இலங்கை யாழ்ப்பாணத்தில் நாகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வானதி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெனித் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா விசாவில் வானதி தமிழகம் வந்து கும்பகோணம் பகுதியில் இருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு முடிந்ததும் கோவை தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரில் இருக்கும் தோழி ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருச்சி-அகமதாபாத் வாரந்திர புதிய ரயில்”…. சிறப்பான வரவேற்பு…!!!!!

திருச்சி-அகமதாபாத் வாரந்திர புதிய ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு மெயின் லைன் வழியாக ரயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மும்பை, தஞ்சை வழியாக அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு ரயிலானது தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் உள்ள இடும்பன் கோவில்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் சில்லத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து 56 ஏக்க விளைநிலங்கள் மற்றும் நான்கு வீடுகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நம்பி மாணவியை விட்டு சென்ற சித்தி…. நள்ளிரவில் அத்துமீறிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(30) என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெற்றோரை இழந்து சித்தி வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர பணிக்கு சென்றதால் மாணவியின் சித்தி அவரை கார்த்திக்கின் அக்கா வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வருகிற 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. ஏன் தெரியுமா…? தஞ்சை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இதனை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா கோவில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வருகிற 2- ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்று, 3- ஆம் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 3- ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. இன்ஜினியர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரங்கீஸ்வரன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரங்கீஸ்வரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களான பிரவீன் குமார், அருண்குமார், அன்பன், ராம்கிஷோர் ஆகியோருடன் ரங்கீஸ்வரன் காரில் நாட்டானி கிராமம் முதலை முத்து வாரியில் இருக்கும் அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நாட்டானி பேருந்து நிலையம் அருகே சென்றபோது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் சாகசம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீசாரின் நுதன விழிப்புணர்வு…

ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 5 வாலிபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செய்வது தொடர்ந்து வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் தலைகவசம் அணியாமல் பைக் ரேஸ் செய்வதால் விபத்தில் பலரும் உயிரை இழக்கும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்”… போதிய பேருந்து இல்லாததால் அலைமோதிய கூட்டம்…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்காக டெல்டா மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனால் மக்கள் புதிய பேருந்து நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கும்பகோணம் கடை வீதிகளில் குவிந்த மக்கள்”…. வட மாநில விற்பனையாளர்களின் ஆடைக்கு ஆர்வம்….!!!!!

கும்பகோணத்தில் புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கும்பகோணத்திற்கு வந்தார்கள். இதனால் கும்பகோணம் நகர் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் சூழ்ந்தது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுவடை செய்யப்பட்ட நெல்… “மழையில் நினைந்ததால் விவசாயிகள் கவலை”… கோரிக்கை…!!!!!

அறுவடை செய்த நெல் மழையில் நனைந்ததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு வருட சாகுபடி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்களில் இதுவரை 85 சதவீதம் அறுவடை பணி நிறைவடைந்து இருக்கின்றது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அறுவடை செய்ததில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கொள்ளிடம் 35 மதகுகளும் திறப்பு”….. ஆறு கடல் போல காட்சி….!!!!

கொள்ளிடம் 35 மதகுங்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் கல்லணையில் இருக்கும் 35 மதகுகளும் திறக்கப்பட்டு 57 ஆயிரத்து 675 கன அடி நீர் வெளியேறுகிறது. இதனால் கல்லணை கொள்ளிடம் பாலத்தின் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பாதி அளவு மூழ்கி நிலையில் இருக்கின்றது. கொள்ளிடம் புதிய பாலத்தில் இருந்து பார்க்கும்போது கொள்ளிடம் ஆறு கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று மாலை நிலவரப்படி கல்லணை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த…. “தஞ்சையில் 2 1/2 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்….!!!!!!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இரண்டரை கோடி மதிப்பில் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் 2 கோடி 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை….. தாய் என்றும் பாராமல் அடித்து கொன்ற மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள குதிரைக்காரர் வீதி பகுதியில் பத்மினி என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் சங்கு,மணி மற்றும் துப்பட்டா ஆகியவற்றை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வருகின்றார். இவரின் இளைய மகன் முரளி (37)கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு முரளி தாய் பத்மினி இடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பணம் தர […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து….. காயமடைந்த 18 பேர்…. கோர விபத்து….!!!

சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்ணாமூர்த்தி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கார்த்திகேயன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுனர் கண்டக்டர் உள்பட 18 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மதிமுக நிர்வாகிகளிடையே தகராறு”…. எதுக்காக தெரியுமா…??? தேனியில் பரபரப்பு….!!!!

தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் நேற்று மதிமுக சார்பாக வைகோ ஆவணப்பட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆவணப்படத்தை வெளியிட்டார். இதை தொடர்ந்து திரையரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தார்கள். இதில் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லப்படுகின்றது. இதனால் நிர்வாகிகளிடையே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போலி சான்றிதழுடன் மருத்துவம் பார்த்த சித்த வைத்தியர்”…. அதிரடியாக கைது செய்த போலீசார்….!!!!!

போலி சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்து வந்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அத்திவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த தென்னரசு என்பவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய மகன் நேசன். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததால் எனது மகனை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் பாரம்பரிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பட்டுக்கோட்டையில் 12ம் தேதியிலிருந்து இதை பயன்படுத்தக் கூடாது”…. நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்…. ஆணையர் அறிவிப்பு….!!!!!!

தஞ்சையில் வருகின்ற 12ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும் என ஆணையர் சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் உடனான பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பேசும்போது கூறியதாவது, அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றோம். அனைத்து விற்பனை மண்டலங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்வு”…. பயணிகள் அவதி….!!!!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தஞ்சையின் மையப் பகுதியில் தஞ்சை ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருக்கும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் கொரோனா காலத்தில் ஐம்பது ரூபாயாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

6 ஆண்டுகள் கழித்து…. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன் என்பவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரகுநாதன் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகா கர்ப்பமானார். இதனை அடுத்து பிரசவத்திற்காக கார்த்திகாவை தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒரே பிரசவத்தில் அவருக்கு ஒரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. டீ குடிக்க சென்ற ஊழியர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் காஜா அலாவுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னவராயன்கோட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஜா அலாவுதீன் கடையில் டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காஜா அலாவுதீனின் மோட்டார் […]

Categories

Tech |