தாயை அடித்து உதைத்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் கிட்டப்பா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பம் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இளையராஜா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா தாய் புஷ்பத்திடம் சொத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு ஏற்பட்ட தகராறில் தாய்-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா புஷ்பத்தை அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த புஷ்பத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
Category: தஞ்சாவூர்
மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் பல்வேறு வியாபாரிகள் குவிந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் […]
தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் பிரசித்தி பெற்ற பெரிய கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சியை முன்னிட்டு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் […]
இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கோமா நிலைக்கு சென்ற வாலிபருக்கு இழப்பீடு வழங்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கண்டிதம்பட்டி பகுதியில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சுபா என்ற மகளும், அலெக்சாண்டர், ஸ்டாலின் என்ற மகனும் இருந்துள்ளார்கள். மேலும் ஸ்டாலின் கடந்த 2015 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
வாலிபரை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அக்ரஹார பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் ஜான் கடந்த பிப்ரவரி மாதம் சில நபர்களால் கொலை செய்யப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 4 பேரை கைது செய்த காவல்துறையினர் மேலும் இருவரை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் மறைந்திருந்த […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா சிங்காரபுரம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்துள்ளார். இவள் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் பல மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பாண்டியனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த பாண்டியன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாப்பூர் கிராமத்தில் நாகேஸ்வரன் என்ற முதியவர் வசித்துள்ளார். இவர் அரசு கயிறு ஆலையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகேஸ்வரன் பல்வேறு நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நாகேஸ்வரனுக்கு வயிற்று வலி தீரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரன் தனது வீட்டில் […]
செல்போன் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிரவின்குமார் தனது செல்போனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை பார்த்த வாலிபர் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் தீவிர […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கள்ளப்பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னங்குடி பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து விசாரணையில் வாலிபர்கள் தென்னங்குடியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், சேகர் என்பது […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் தாங்க முடியாத வேதனையை அனுபவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென மேக கூட்டங்கள் இருள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் விடாமல் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் […]
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க பொது மக்கள் வழிபட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்யா என்பவர் தனது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள சத்யாவின் வீட்டை அவரது தந்தை பாண்டியன் பராமரித்து வந்துள்ளார். இதனையடுத்து பாண்டியன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் வீட்டிற்கு வந்த பாண்டியன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டின் உள்ளே சென்று […]
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிகோட்டை பகுதியில் நடன சிகாமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இருந்து 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் தற்போது வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் மணிகண்டன் குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இல்லாதபோது தூக்கில் […]
வெண்ணாற்றின் பகுதியில் நடைபாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட வெண்ணாற்று கரையின் ஒரு பகுதியில் கோட்டூர், காந்தாவனம் ஆகிய கிராமமும் மறுகரையில் மூங்கிலடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி ஆகிய கிராமமும் அமைந்துள்ளது. இந்நிலையில் காந்தாவனம்பகுதியில் அமைந்துள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றுவர மூங்கிலடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி கிராம மக்களுக்கு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எடவாக்குடி பகுதியில் இருந்து […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காந்திநகர் பகுதியில் சுப்பையன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜசேகர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜசேகர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராஜசேகர் காந்திநகர் பகுதியில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை […]
தாய்-மகன் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் இருக்கின்றார். மேலும் ஐயப்பனுக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் கௌசல்யாவை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு ஐயப்பனின் தாய் சரோஜாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து தாய் வீட்டுக்கு சென்ற சரோஜாவை ஆடிப்பெருக்கு அன்று ஐயப்பன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் […]
நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் சுவாமிநாதன், கணேஷ் ஆகிய இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். மேலும் இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பு என பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து முதலீடு செய்த பணத்தை பொதுமக்களுக்கு முறையாக இவர்கள் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாமிநாதன், […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சங்கராம்பேட்டை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சங்கராம்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் வெட்டாற்று பகுதியில் மணல் அள்ளிக் கொண்டுடிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மாட்டு […]
தைலமர தோப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் அருகே முனியன், ரேவதி, சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. இந்நிலையில் இந்த தோப்பில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் திரண்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய 2021-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் www.skilltraning.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய முதல்வரான சீராளன் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 4-ஆம் […]
அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவரான சாந்தா தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுச்செயலாளரான பானு, பொருளாளரான மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனவும், 25 ஆண்டுகளாக 1995 வரையில் பணியில் […]
மீன் சந்தையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் மீன் வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊடரங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் திறக்கப்பட்ட தற்காலிக மீன் சந்தையில் பொதுமக்கள் மீன் வாங்க சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் குவிந்துள்ளனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் […]
கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டு கோழி சந்தை செயல்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தமிழக அரசு ஊடரங்கில் படிப்படியாக தளர்வுகளைஅறிவித்துள்ளது. ஆனால் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் வாரச் சந்தைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டுக் கோழி சந்தை நடைபெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சந்தையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவும் […]
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சின்னமங்குடி பகுதியில் குழந்தைசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரண்யா தனது 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சரண்யா வீட்டில் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் முன் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]
மாணவர் விடுதியில் இருந்த ஆறு கேஸ் சிலிண்டர்கள் திருட்டுப் போனது குறித்து விடுதி காப்பாளர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ரமணி என்பவர் காப்பாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர் விடுதி மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பராமரிப்பு பணிக்காக ஊழியர்கள் விடுதியை திறந்துள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த 6 கேஸ் சிலிண்டர்கள் திருடப்படிருப்பதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து விடுதியின் காப்பாளர் ரமணி […]
உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் திராவிடச் செல்வன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் திராவிட செல்வன் சூப்பிரண்டு போலீஸ் அலுவலகத்தின் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த அங்கு பணியில் […]
விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாந்தாங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
லாரியில் ஏற்றிச் சென்ற வைக்கோலில் மின் கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள வைக்கோலை வியாபாரிகள் எந்திரம் மூலம் கட்டி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இளங்காடு பகுதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிச்சென்ற லாரியானது தாழ்வான பகுதியில் இருந்த மின் கம்பியின் மீது உரசியது. இதனால் வைக்கோலில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. […]
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாரதி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பாரதி மீது பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. இதனால் பாரதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு மாவட்ட சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவர் வழக்கு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் பாரதியை கைது செய்யுமாறு […]
சாலையோர கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வியாபாரிகள் மற்றும் தி.மு.க-வினர் அதனை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் மேற்கு பகுதியில் இரண்டு வாயில்களும், கிழக்குப்பகுதியில் இரண்டு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலையோர பழக்கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாநகராட்சி […]
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்து சென்ற கற்பகம் என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தப்பியோட முயன்ற இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]
விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட அதற்கான விலையில்லா உரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பெயரில் திருவோணம் வட்டார விவசாயிகள் அனைவருக்கும் கடந்த சில நாட்களாக விலையில்லா உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இடையங்காடு, திப்பன்விடுதி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு விலையில்லா உரங்களை வழங்க பாரபட்சம் காட்டப்படுவதால் திருவோணம் வட்டார விரிவாக்க வேளாண்மை […]
நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெரும் அவல நிலை உருவாகியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். மேலும் இந்த மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமன்றி புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வசிப்பவர்களும் சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருப்பதால் ஏழை எளிய மக்கள் விரும்பி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காலத்தில் புற நோயாளிகளின் வருகை குறைவாகவே இருந்தது. […]
குடிசை வீடுகளில் பற்றி எரிந்த தீயால் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் இருக்கும் மூங்கில் கொல்லையில் கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதியில் வசிக்கும் செந்தில், செல்வம் ஆகிய இருவரின் குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்துள்ளது. இதனால் அவர்களின் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமாகியது. மேலும் வேகமாக தீ பரவியதால் அடுத்தடுத்து இருந்த அந்தோணிசாமி, […]
முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 1 1\2 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவர் சுகன்யாவை மோட்டார்சைக்கிளில் பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி கொண்டுபோய் விட்டுள்ளார். இந்நிலையில் சோழபுரம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் […]
தோட்டக்கலை பண்ணைக்கு வேலைக்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளம் பகுதியில் தோழப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 30 வருடங்களாக அதே பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோழப்பன் தோட்டக்கலை பண்ணைக்கு வழக்கம் போல் இரவு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதிகாலையில் தோட்டக்கலை பண்ணையில் வேலை செய்ய வந்தவர்கள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தோழப்பன் இறந்து கிடந்ததை […]
தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் ஏரியானது மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குளம் போல் காட்சி அளித்த இந்த ஏரியானது தற்போது சுருங்கிக் கொண்டே வருகின்றது. மேலும் ஏரியின் நடுவே நான்கு வழிச் சாலை போடப்படுவதால் ஏரியானது இரண்டு பகுதியாக காணப்படுகின்றது. இந்த ஏரியின் மறு கரையில் அருள்மொழிபேட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 28 குடும்பங்கள் 300 ஆண்டுகளாக […]
மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் பகுதியில் திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டுவந்த அரசு மணல் குவாரி மூலம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மணல் குவாரியை மூடியதால் வேலை இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மணல் அள்ள அனுமதி தருமாறு மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் மணல் ஏற்றி 3 லாரிகள் […]
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் தென்னம்மநாட்டிலுள்ள கோவிலில் மின்சார விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரசேகரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலுள்ளவர்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி […]
மன அழுத்தத்தால் மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் மீனவரான சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரவிச்சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அம்சவள்ளி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கரையூர் தெருவில் வசிக்கும் மாரிமுத்து என்பவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு அவரது படகில் சுந்தர்ராஜ் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர்ராஜ் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது […]
புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் பிச்சைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபனுக்கும் மன்னார்குடியை சேர்ந்த இலக்கியா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் பார்திபனின் வீட்டில் உள்ளவர்கள் இலக்கியாவை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த பார்த்திபன் தனது […]
இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதால் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊடரங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நூலகங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழக அரசு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நூலகத்தை திறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி தமிழகம் முழுவதும் நூலகங்கள் […]
புதுமாப்பிள்ளை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த பாலகிருஷ்ணன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
குடும்பத் தகராறில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிச்சைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் மன்னார்குடி பகுதியில் வசிக்கும் செந்தமிழ்செல்வனின் மகளான இலக்கியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் இலக்கியாவை அவர்களது உறவினர் வடுவூரில் […]
மாடியிலிருந்து தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் பகுதியில் வியாபாரியான சாகுல்ஹமீது மற்றும் லியாகத் அலி என்ற இரு நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டை பகுதியில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் 2 – வது மாடியின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து சாகுல்ஹமீது காற்று வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விடுதி மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் […]
சரக்கு ஆட்டோவில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வறட்சி பகுதியாக இருக்கும் நெய்வேலி பகுதிக்கு காவிரி தண்ணீர் செல்வதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள அக்னியாறு குடிநீர்த்தேவை மற்றும் விவசாய சாகுபடிக்கு பயன்படுவதால் முக்கிய நீராதாரமாக உள்ளது. இதனையடுத்து அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. இந்நிலையில் அக்னியாற்றில் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டதால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சரக்கு […]
குடிநீர் குழாயில் அசுத்த நீர் தேங்கியதால் அதை சீரமைக்க பக்தர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் பகுதியில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோவிலில் முடி காணிக்கை செலுத்துதல், பால்குடம் எடுத்தல், உயிர் கோழி விடுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். இதனையடுத்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின் அந்த கோவிலில் உள்ள குடிநீர் குழாயில் […]
ஒரு காகத்தால் 3 குடிசைகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பாநகர் பகுதியில் சுந்தரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் சுந்தரம் குடிசை வீட்டின் அருகிலுள்ள உயர் மின்அழுத்த கம்பியில் நிறைய காகங்கள் அமர்ந்திருக்கும். இந்நிலையில் உயர் மின்அழுத்த கம்பியில் வழக்கம்போல் ஏராளமான காகங்கள் அமர்ந்திருந்தன. அப்போது திடீரென மின் கம்பிகளில் ஏற்பட்ட உராய்வினால் மின்சாரம் தாக்கி ஒரு […]
ரயில் வழித்தடத்தில் கிராசிங் கேட்டை அகற்றி கீழ்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யனார்புரம் பகுதியில் தஞ்சை-திருச்சி இரயில் வழித்தடத்தில் உள்ள கிராசிங் கேட்டை அகற்றி கீழ் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளரான முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தில் தி.மு.க ஒன்றிய […]
பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆடுகளை அதிகமாக வாங்கிச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதனை ஈகை திருநாள் என்றும் கூறுவர். இந்நிலையில் பெருநாளன்று இஸ்லாமியர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஆடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பாணியிட்டு மூன்று பங்குகளாக பிரித்து நண்பர்கள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு ஒரு பங்கையும், உறவினர்களுக்கு ஒரு பங்கையும், கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்களுக்காக பயன்படுத்துவார்கள். மேலும் இந்தத் திருநாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிவதும், […]