அனுமதியின்றி காட்டாற்றில் மணல் அள்ளிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் உள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோவில் மணல் அள்ளிக் கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் தப்பி ஓட முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதியின்றி மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபர்களை […]
Category: தஞ்சாவூர்
மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர்கள், மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மீன்வள மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதனையடுத்து மீனவர்கள் குறிப்பிட்ட வகையான மீன்களை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் […]
நாடியம்மன் கோவிலின் ஏரியை தூர்வார வேண்டி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாடியம்மன் கோவிலின் அருகில் இருக்கும் ஏரியானது மிகுந்த வறட்சி காரணமாக தாமரைக் கொடிகள் ஆகியவை படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் […]
கருவாடு விற்பனை தொழில் பாதிப்பட்டதால் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் துறைமுகப் பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து வெயிலில் உலர வைத்து கருவாடுகளாக்கி தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கருவாட்டு சந்தைகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கொரோனா பரவல் தொற்று குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனையடுத்து […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு […]
ஹோட்டல் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் முகமது பாருக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது பாருக் கண்டியூரில் ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவர் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது இளையராஜா உணவு கேட்ட போது முகமது பாருக் இல்லை […]
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பள்ளியிலிருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியான துயர சம்பவம் நடந்த நாள் இன்று. அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்லாமல், அனைவருடைய நெஞ்சையும் உலுக்கியது. இந்த தீ விபத்து நடந்து இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் அந்த பள்ளியின் முன்பு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூடி, குழந்தைகளின் உருவப்படங்களை வைத்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் விட்டு அழுதனர்.
கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரான மணியரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் வைகரை இந்த போராட்டத்தில் முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் கர்நாடகாவில் புதிதாக அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து […]
கொரோனா விதிமுறைகளை மறந்து மீன் சந்தையில் அதிகப்படியான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் இருக்கும் மீன் சந்தை கொரோனா தொற்று காரணமாக பல நாட்களாக திறக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறக்கப்பட்ட கீழவாசல் மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று […]
வயிற்று வலி காரணமாக கார் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளத்தான்மனை கிராமத்தில் இளஞ்செழியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக கார் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது கடையில் இளஞ்செழியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி […]
கடல் ஆக்குகள் அதிகமாக சிக்குவதால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப் படகுகள் மூலம் தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, தரகர் தெரு, மறவக்காடு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் கடலில் கிடைக்கும் நண்டுகள், இறால்கள் மற்றும் பல வகையான மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், நற்பணி மாவட்ட செயலாளர் தரும சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநிலச் செயலாளர் சிவ. இளங்கோ கோரிக்கைகளை வலியுறுத்தி […]
இடப்பிரச்சினை காரணமாக கூலித்தொழிலாளியை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தகொல்லைமேடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான பிரபு மற்றும் சின்னராசு என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரபு மற்றும் சின்னராசுவை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி […]
கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருதகுடி நெல்லப்பன்பேட்டை பகுதியில் நவதானிய வியாபாரியாக பழனிசெல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக பக்கத்து கிராமங்களில் மணிலா வாங்கி வந்து சின்னசேலத்தில் ஆயில் மில் நடத்திவரும் நைனார்பாளத்தை சேர்ந்த பெரியசாமியிடம் கொடுத்து வருகின்றார். அதன்படி பழனிசெல்வத்துக்கு 1 கோடியே 5 லட்சம் பாக்கியை பெரியசாமி தரவேண்டியது இருந்தது. இதனால் கடந்த […]
பெண்ணை ஏமாற்ற முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேவப்ப நாயக்கன் வாரி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி பணம் எடுப்பதற்காக தஞ்சாவூர் மிராசுதார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் தனக்கு பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த வாலிபர் ராஜலட்சுமியிடமிருந்து ஏ.டி.எம் கார்டையும் ரகசிய […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் தடுப்பூசி கொள்ளுமாறு கூறப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் இன்று பொதுமக்கள் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தென்வெட்டுகாரப் பகுதியில் செந்தில் வடிவேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து செந்தில் வேலன் இருசக்கர வாகனத்தில் பாபநாசம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த காரானது செந்தில் வேலனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. […]
மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கி 9 – ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 – ஆம் வகுப்பு படிக்கும் அகிலன் என்ற மகன் இருந்துள்ளான். அகிலனுக்கு 2 சகோதரிகள் இருக்கின்றனர். இந்நிலையில் அகிலன் தனது வீட்டிற்கு எதிரே உள்ள வயல் வெளியில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளான். இதனையடுத்து வயலில்படும்படி உயர் மின்னழுத்த கம்பி தாழ்வாக தொங்கியுள்ளது. […]
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது தங்கையை மீட்டுத் தருமாறு சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் தன் தங்கையை மீட்டுத் தருமாறு காவல் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறப்பட்டதாவது, தனது சகோதரியான சுந்தரி கணவரால் கைவிடப்பட்ட நிலையில் 2019 – ஆம் ஆண்டு தனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் நாளை திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடு பணிகள் தஞ்சை பெரிய கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக தஞ்சை பெரிய கோவில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை, ஆனால் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன. இதேபோல் பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடும் […]
செங்கல் சூளை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியினருக்கு பிரியங்கா என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான செங்கல்சூளை கட்டுக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் ராஜேந்திரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி என்பவரின் மகனான சந்தோஷிற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சந்தோஷுக்கு தன்னை […]
குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் வழக்கறிஞரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த ஜெயலட்சுமி தனது துப்பட்டாவால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
தஞ்சாவூரில் உள்ள மிக முக்கியமான சாலையில் மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி சாலையில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 14 மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் மட்டும் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து அந்த வழி சாலையில் வரும் பொதுமக்கள், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு […]
ராட்சத அலையில் சிக்கி மீட்கப்பட்ட 2 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் சக்திகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திகுமார் தனக்கு சொந்தமான படகில் பாஞ்சாலன், முருகேசன், நாகூர் பிச்சை, நந்தகுமார் ஆகியோருடன் மீன்பிடிப்பதற்காக கோடியக்கரை கடல் பகுதியை நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து மீன் பிடித்து விட்டு கரையை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையால் இவர்களின் படகு தண்ணீரில் […]
காரில் 2 லட்சம் மதிப்புடைய கஞ்சா கடத்தி சென்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செட்டிமண்டபம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பத்தடி பாலம் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்தக் காரில் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1 1/4 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை […]
கொரோனா தொற்று பாதிப்பினால் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத்தெரு பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் மாரிமுத்துவின் மகன் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு மாரிமுத்து மற்றும் இந்திராணி ஆகிய […]
கனமழை பெய்ததால் வீடு இடிந்து விழுந்து பெண் பலியான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மருவூர் காலனி தெருவில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி என்ற மகளும் சுப்ரமணியன் என்ற மருமகனும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த 1991 – ஆம் ஆண்டு இவர் […]
தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றிய போது குழந்தையின் கட்டை விரல் துண்டானது. இந்த சம்பவத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,75 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்கவும் கட்டை விரலை மீண்டும் சேர்க்கும் வகையில் நவீன மருத்துவ மனைக்கு மாற்றவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நிதி நிறுவனத்தினர் பணம் கேட்டு மிரட்டியதால் வீட்டின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தம்பிக்கோட்டை பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐயப்பன் தனது ஹோட்டலை விரிவாக்கம் செய்வதற்காக 25 லட்ச ரூபாயை நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு காரணமாக நிதி நிறுவனத்திற்கு ஐயப்பனால் முறையாக பணத்தை திரும்ப […]
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகில் பல மாதங்களாக ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரை அங்கு நிறுத்தியவர்களின் விவரம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த […]
விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கான இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விவசாய விளை நிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]
காதலித்து திருமணம் செய்துகொண்ட கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வந்தார். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் சுந்தரி என்ற பெண்ணை கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய இந்த காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் தனியே வாடகை வீட்டில் […]
கால்வாயில் தண்ணீர் வந்ததால் பயத்தில் பரிதவித்த ஏழு பசுமாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 16ஆம் தேதி கல்லணையை வந்து சேர்ந்தது. அதன்பின் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாய்ந்து சென்று தஞ்சை மாவட்டத்திற்குள் நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் எம்.கே.மூப்பனார் சாலை அருகில் கல்லணை கால்வாய் பகுதியில் 7 பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பசுமாடுகள் நின்ற இடத்தை தண்ணீர் கடந்து சென்றதால் […]
தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது முதியவர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சித்தா நகர் பகுதியில் ஜான்சன் என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் சிவாஜி நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே கீழ்பாலம் வழியாக செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அங்கு மழை நீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக அவரால் செல்ல முடியவில்லை. இதனால் […]
குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் பகுதிக்கு எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஐயப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி கரம்பத்தூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சேகர், குமார், கமன் ஆகியோரது குடிசை வீடுகளுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோகிலா, […]
ஊரடங்கு காலத்தில் பூசணிக்காய் வாங்க வியாபாரிகள் முன்வராத காரணத்தினால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வடவாளம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் பூசணிக்காயை சாகுபடி செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் கலியன் என்ற விவசாயி தனது நிலத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் பூசணிக்காய் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாகுபடி செய்யப்பட்ட பூசணிக் காய்களை அதிக விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது சமையலுக்காகவும், திருஷ்டிக்காகவும் அனைவரும் […]
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 17 1/2 பவுன் நகை மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழபுனவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் லால்குடி பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் கீழபுனவாசல் பகுதியில் இருக்கும் தனது வீட்டை பூட்டி விட்டு திருவையாறு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று கீழபுனவாசல் பகுதியில் உள்ள வீட்டுக்கு கோவிந்தராஜ் சென்ற போது வீட்டின் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் கிராமத்தில் சோமு-மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும் பாலக்கரையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கள்ளபுலியூர் அருகில் வந்த கார் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சோமுவும் […]
சோதனைச் சாவடி மீது லாரி மோதிய விபத்தில் சப் இன்ஸ்பெக்டரும் பெண் போலீசும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை கோடி அம்மன் கோவில் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதனருகில் கம்பிகளால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]
வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானமூர்த்தி. அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள இளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் மற்றும் நல்லசென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர்கள் மூவரும் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் ஆலங்குடி சாலையில் மண் எடுக்கும் இடத்தில் மூன்று பேரும் பணியில் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் சக்திவேல் திருஞானமூர்த்தி லாரியில் இருந்து தண்ணீரை […]
ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்து வசூலித்தனர். தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசின் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் பால் கடை, மருந்து கடை ஆகியவை தவிர மீதம் உள்ள கடைகள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த விதிமுறையை மீறி யாரேனும் செயல்படுகின்றனரா என்பதை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியில் மளிகை கடை, […]
முடைந்த கீற்றுகளை ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் பெண்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் கீற்றின் மூடையும் தொழிலை அப்பகுதி பெண்கள் சிறு தொழிலாக செய்து வருகின்றனர். கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலைக்கு பின்னர் சிறிது புத்துணர்ச்சி கண்ட கீற்று முடையும் தொழில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக முடங்கி போயுள்ளது. பொதுவாக கிராமப்பகுதிகளில் முடையும் கீற்றுகளை வியாபாரிகள் வாங்கி வேனில் ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம், காரைக்கால், அறந்தாங்கி, ஆலங்குடி போன்ற பல்வேறு […]
பாசி தூசிகள் கலந்து துர்நாற்றத்துடன் வரும் குடிநீரால் பொதுமக்கள் அச்சத்தில் அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் நீர் எடுத்து சுத்தம் செய்யப்பட்டு பின்பு தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பின்பு பொதுமக்களுக்கு தொட்டிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இம்முறையில் வினியோகிக்கப்படும் தண்ணீர் கடந்த சில தினங்களாக பாசி தூசிகள் […]
கொரோனா சிகிச்சைக்காக 25 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனிப்பிரிவை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்துள்ளார். தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் தாலுகா அளவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் கீழ் வேலூர் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் அரசு […]
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரை வெயில் மழையில் இருந்து காக்க மேற்கூரை அமைத்து தர பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் சாரங்கபாணி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோவிலுக்கு பெரிய தேர், சிறிய தேர் என இரண்டு தேர்கள் உள்ளன. இதில் பெரிய தேரில் சித்திரை மாதமும் சிறிய தேரில் வைகாசி மாதமும் தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த திட்டமிட்டு கடந்த […]
பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி பகுதியில் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துறை பணிகளில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஆச்சாம்பட்டி பகுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வினோத் இடையன்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் […]
நேற்று ஒரே நாளில் 10,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை விட அதிக ஆண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள், தனியார் மையங்கள் என மொத்தம் 117 மையங்களில் தினமும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கரந்தை பகுதியில் மருதையா ஜெயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ஆரம்பத்தில் சமையல் வேலை செய்து வந்துள்ளனர். பின்பு வயது முதிர்வு காரணமாக அவர்கள் வேலைக்குச் செல்லாமல் தனது மகள் வீட்டில் தங்கி வசித்து வந்தனர். இந்நிலையில் ஜெயா வயது முதிர்வு காரணமாக சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதைப் பார்த்த மருதையா மிகவும் மனவேதனை […]
ஊரடங்கு காரணமாக தர்பூசணி மற்றும் கிர்ணிப் பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சாலையோர பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஏழு கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி மளிகை கடைகள், பேக்கரி கடை, காய்கறி கடை போன்றவைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் பால் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் உணவு பார்சல்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் விதிகளை மீறி […]