Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குவிந்துள்ள வாழைதார்கள்… ஏலம் விடும் விவசாயிகள்… சூடு பிடிக்கும் விற்பனை…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ள வாழைதார்களை வியாபாரிகள் வாங்கி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழைத்தார் ஏலம் மையமானது திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் வைத்து ஏலம் விடுவர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் குவித்துள்ளனர். இதனையடுத்து காலை 10 மணியிலிருந்து வாழைத்தார்கள் ஏலம் துவங்கப்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போதையில் சண்டை போட்ட கணவன்… ஆவேசத்தில் சரமாரியாக வெட்டிய மனைவி… தஞ்சையில் பரபரப்பு …!!

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழுக்காடு கிராமத்தில் தங்கவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், இளங்கோ என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார். எனவே தங்கவேல் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கவேல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னோட மகளை காணோம் சார்…! போலீசிடம் அழுத தாய்…. விசாரணையில் சிக்கிய ராகுல் …!!

தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் குமார்- கிருஷ்ணவேணி தம்பதியினர்.இவர்களுக்கு பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மகள் இருக்கிறார்.கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தன் மகளை காணவில்லை என்று கிருஷ்ணவேணி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வழக்கு பதிவு செய்து போலீசார் மாணவியை தேடி வந்தனர். விசாரணையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புயல், மழை… இப்போ எலி தொல்லை…. 1000 ஏக்கரை நாசமாக்கிட்டு… இழப்பீடு வேண்டி விவசாயிகள்…!!

புயல்,மழை பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கீடு செய்யும் அதிகாரிகள் எலிகளால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களையும் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் பாசன வசதிக்காக குறிப்பிடப்பட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முப்போகம் சாகுபடி நடைபெறும் நிலையில் தற்போது புயல் மழை காரணங்களால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து அழுகிய நிலையில் உள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துப்பாக்கி காட்டி மிரட்டி…. தமிழக மீனவர்கள் கைது…! இலங்கை அட்டூழியம் …!!

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மணிபாலன், சக்திவேல், ராஜா ஆகிய 3 பேரும் கடந்த 6ஆம் தேதி அஸ்வத் புருக்காலுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறிய கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் திடீரென மீனவர்களின் நாட்டுப்படகில் சுற்றிவளைத்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் ஆடு திருட்டு…. விரட்டி பிடித்த மக்கள்… 4 பேர் கைது…!!

திருவையாறு அருகில் ஆடு திருடிய 4 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் .  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகில் பனவெளி மாரியம்மன்கோவில் தெருவை சார்ந்தவர் மணிராசு மகன் மணிகண்டன் (வயது24). இவர் தன்னுடைய வீட்டில் ஆடு வளர்த்து வருகின்றார். சம்பவம் நடந்த அன்று இருசக்கரவாகனத்தில் வந்த சிலர் ஆட்டை திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஆடு திருடியவர்களை விரட்டி சென்றுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் தப்பிய நிலையில் மற்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகை… சண்டை போட்ட அண்ணன் தம்பி… பறிபோன உயிர்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தந்தையிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு தகராறு செய்ததால் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(78) என்பவர். இவருக்கு பாலசுப்பிரமணியம் (50), விஸ்வலிங்கம் (45) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி விவசாயக் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் குடும்பத் தலைவரான ராமன் நேற்று தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சார்..! அங்க விக்குறாங்க…! போலிஸுக்கு வந்த தகவல்…. வசமாக சிக்கிய 2பேர் கைது …!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக மருத்துவ கல்லூரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் சாமந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் கொல்லப்பட்ட ரவுடி… அலறியடித்து ஓடிய மக்கள்… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!!

தஞ்சாவூரில் ரவுடி தலையை துண்டித்து கொலை செய்யப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி(35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிரஞ்சீவி  பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியில்  கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக சிரஞ்சீவி  மாலை அணிந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு தேவையான பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக பெரிய கடைத் தெருவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓட்டை பிரித்து திருட முயற்சி… கடையை காப்பாற்றிய மர ரீப்பர்… பரபரப்பை ஏற்ப்படுத்திய சம்பவம்…!!

கடையின் ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் முக்கன்  செட்டி தெருவில் முகமது இசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை மற்றும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை சென்று கடையை திறந்தபோது கடைக்குள் மழைநீர் தேங்கி கிடப்பதை கண்டார். அதன் பின் மேலே பார்த்தபோது கடையில் உள்ள ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
தஞ்சாவூர் தற்கொலை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு…. குழந்தை இல்லாத ஏக்கம்… இளம் பெண் எடுத்த முடிவு….!!

திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருபுவனம்  பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் பவித்ரா மிகுந்த  மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் பவித்ராவின் தந்தை தனது மகளை அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். இத்தகைய நிலையில் பவித்ரா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில் வெகு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம்… சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழபுனவாசலை  சேர்ந்த மணிகண்டன்(32), ஜக்குபாய்(70), மற்றும்  பிரகாஷ் என்பவரது  மகன்கள்  அகிலேஷ்(12), பரணீஸ் (10) ஆகிய நான்கு பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அரசூர்  அருகே  சென்று கொண்டிருந்த போது சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த  டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன்,ஜக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு… தலையில் கருப்பு துணி கட்டி கொண்டு… நூதன முறையில் போராட்டம்…!!

தலையில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வேளாண் திட்டங்களை திரும்ப பெற வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முல்லக் குடியில் விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டியும்,  அதனோடு கருப்பு தினமாக புத்தாண்டு தினத்தை அனுசரிக்க வேண்டியும் நடைபெற்றது.  அப்போது விவசாயிகள் தலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாடு மேல மோதிர கூடாது… டிராக்டர் கவிழ்ந்து…. ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்….!!

 சாலையின் குறுக்கே மாடு வந்ததால் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் ஆதிதிராவிடர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் விவேக் அவரது ஊரில் இருந்து கொல்லாங்கரை நோக்கி  டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது  கொல்லாங்கரை சாலையில் சென்று  கொண்டிருந்த பொழுது, குறுக்கே ஒரு மாடு வந்ததை கண்ட விவேக் மாட்டின் மேல் டிராக்டர் மோதாமல் தடுப்பதற்காக டிராக்டரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பதவி உயர்வு வழங்க வேண்டும்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்…!

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள உதவி பொறியாளர்,  ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவி இயக்குனர் நிலையிலான பணிகளுக்கான பதவி  உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

48 நினைவுச்சின்னங்கள்… ஒரு நிமிடத்தில் கூறி அசத்தல்… நான்காம் வகுப்பு மாணவியின் சாதனை…!!

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி 48 நினைவு சின்னங்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகளுக்கு தயாநிதிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நான்காம் வகுப்பு படித்து வந்த தயாநிதிதா வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை வெறும் ஒரு நிமிடத்தில் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியன் ரெக்கார்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமி…” 1 நிமிடத்தில் 48 நினைவுச்சின்னம்”… அசத்தல் சாதனை..!!

இந்திய சாதனை புத்தகத்தில் 10 வயது சிறுமி இடம் பெற்ற நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரைச் சேர்ந்த தம்பதியினர்  பாலகிருஷ்ணன் -நதியா. இத்தம்பதியருக்கு 10 வயதில் தயாநிதிதா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள  தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். தயாநிதிதா  ஒரு நிமிடத்தில்  48 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதை கட்டியவர்களின் பெயர்களைக் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று […]

Categories
தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டம் அடிக்கும் என ஆசை…! லாட்டரி சீட்டுகளை விற்ற முதியவர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள ஏனாதி கரம்பை என்ற பகுதியில் ராஜாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இம்முதியவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு அருகிலுள்ள ஆவனம் கைகாட்டி என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அம்முதியவரிடருந்து ரூபாய் 2500 மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் காட்டும் ஆர்வம்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….. கரும்பு 2௦ ரூபாய் என பேனர்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயி ஒருவர் ஒரு கரும்பின் விலை 20 என தன் வயலில் பேனர் வைத்துள்ளார் தமிழர் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையாகும். அந்நாளில் மக்கள் புத்தாடை அணிந்து அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவர். இப்பண்டிகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது கரும்பு ஆகும். தற்போது இக்கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளும் வியாபாரிகளும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் கொடுத்தது…! இப்போ ஊழலில் இருக்கு… அதை மீட்டெடுப்போம்… கமல்ஹாசன் சூளுரை ..!!

எம்ஜிஆர் கொடுத்த தஞ்சை தமிழ்பல்கலை கழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும், மொத்தமாக களவு போகும் முன் சரஸ்வதி நூலகத்தை மீட்க வேண்டும் என்றும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும்  கமல்ஹாசன், கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போது, மக்கள் நீதி மையத்தின் சார்பில்  வாக்கு கேட்க வரும் வேட்பாளர், மக்களிடம் குறைகளைக் கேட்டு, அதனை குறித்த காலத்தில் முடிப்போம் என பாண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

3 வயது சிறுவன் சாதனை… இந்த வயதில் இப்படி ஒரு திறமையா?… குவியும் பாராட்டு…!!!

தஞ்சை மாவட்ட சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் 3 வயது சிறுவனின் சாதனையை பாராட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்துள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மபாலன் என்பவர். அவருக்கு முத்துலட்சுமி எனும் மனைவியும் அகரன் (10), ஆதவன் (3) என 2 மகன்கள் உள்ளனர். அவரின் மகன் ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் கூறினார். அது மட்டுமின்றி 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், இந்தியாவின் 7 தேசிய சின்னங்கள், தமிழ் எழுத்துக்களின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வியக்க வைக்கும் திறமை….! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்…! ஆச்சரியமூட்டும் 3 வயது சிறுவன்…!

3 வயது சிறுவன் 53 உலக நாடுகளின் தலைநகரங்களில் பெயர்களை சரளமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் தர்மபாலா-முத்துலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றன. ஹோட்டல் உரிமையாளரான தர்மபாலாக்கு அகரன், ஆதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் தர்மபாலாவின் இளைய மகனான ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை ஏமாற்றி திருமணம்…. பெற்றோர் கொடுத்த புகார்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் வள்ளலார் நகரை சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மகன் உத்திராபதி (வயது 20) கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள டையிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் உத்திராபதி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2021லில் நாசா விண்வெளியில்…”பறக்கப் போகும்… தஞ்சாவூர் மாணவனின் ராக்கெட்”..!!

தஞ்சாவூரை சேர்ந்த மாணவன் தயாரித்த செயற்கை கோள் ஜூன் 2021ல் நாசா ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ரியாஸூதீன் என்பவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்த செயற்கைக்கோள் நாசா விண்வெளி தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரியாசுதீன் செய்தியாளர்களை சந்தித்தபோது நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூ லேனிங் அமைப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலகிலே குறைவான எடை…. ! ”புதிய செயற்கைகோள் உருவாக்கம்” தஞ்சை மாணவன் அசத்தல் ..!!

தஞ்சையைச் சேர்ந்த ரியாஸ்தீன் என்ற 18 வயது மாணவர் உருவாக்கியுள்ள, உலகிலேயே மிக எடைக் குறைவான இரண்டு செயற்கைக்கோள்களை, அமெரிக்காவின் நாசா விண்ணில் ஏவவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த I DOOLE LEARNING என்ற நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து, cubs in Space என்ற பெயரில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தும். இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், 73 நாடுகளிலிருந்து பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்டுபிடிப்புகளிலில், தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களால்… ரேஷன் கடை ஊழியருக்கு நேர்ந்த கொடுமை….!!

ரேஷன் கடை ஊழியர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவகுமார் – மகேஸ்வரி. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவகுமார் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிராம்பட்டினம் ரேஷன் கடை முன்பு சிவகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் சிவகுமாரை சரமாரியாக கைகளால்  தாக்கினர். இதில் சிவகுமார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… சிவனேனு நின்றிருந்தவங்கள… போட்டுத் தள்ளிய கும்பல்… தஞ்சை அருகே பரபரப்பு..!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை  வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவருடைய மகன்கள் அருண்குமார்(28), அரவிந்த்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த  ரவி என்பவரின் மகன் சந்தோஷ்(22) இவர்கள் மூவரும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர் . நேற்று மாலையில் இவர்கள் 3 பேரும்  அதே பகுதியில் உள்ள அய்யா கோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த காரல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க போன மகேஸ்வரி…! தலை நசுங்கிய சோகம்..! இப்படி ஆகிடுச்சேன்னு கண்ணீரில் குடும்பம் …!!

பேருந்தின் பின்புற சக்கரம் தலையில் ஏறியதால் தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் கண்ணையன்- மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கண்ணையன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் . நேற்று மகேஸ்வரி வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது உறவினரின்  இருசக்கர வாகனத்தில் பின்புறம்  அமர்ந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து மகேஸ்வரி  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில்… காதலியின் கழுத்தை அறுத்து… தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் மாணவி… கழுத்தை அறுத்த இளைஞர்… பட்டப்பகலில் நடந்த கொடூரம்…!!!

காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காதலை கைவிட்ட மாணவி… ஆத்திரமடைந்த காதலன்… ஓடும் பேருந்தில் கோபத்தில் செய்த வெறிச்செயல்…!!!

காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார்.அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா நோய்த்தொற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காதலிக்க மறுப்பு” ஓடும் பேருந்தில்… இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை… அதிர வைத்த சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநல பாதிப்பு…. தாயை கொன்ற மகன்… பின் எடுத்த முடிவு….!!

தாயை  கொன்று விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள செருகுடியை சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணியன்-மலர்கொடி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் பாலகிருஷ்ணன் சற்று மனநலம் குன்றியவர். நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது தாய் மலர்கொடியை  அரிவாளால் தலையில்  வெட்டியுள்ளார். பின்பு அவர் வீட்டில் உள்ள  மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று  காலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மலர்கொடியின் மற்ற 2 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறிக்க சென்ற நபர்… தென்னை மரத்தில் மூன்றரை மணி நேரம்… ஊரே கூடியது… என்ன நடந்தது தெரியுமா?….!!!

தஞ்சையில் தேங்காய் பறிக்க சென்ற நபர் போதையில் தென்னை மரத்தின் மேல் மூன்றரை மணி நேரம் உறங்கிய சம்பவம்  தஞ்சை மாவட்டம் வேலூரை சேர்ந்த லோகநாதன்(40) என்பவர் தென்னை மரம் ஏறுவதை  தொழிலாக கொண்டவர். அவர் நேற்று காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றிருந்தார்.இரண்டு மரங்களில் தேங்காய்களை பறித்து பின்னர் லோகநாதன் மிகவும் சோர்வாகினார். சோர்வைப் பொருட்படுத்தாமல் மூன்றாவது தென்னை மரத்தில் ஏறினார். 50 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… அரசு பேருந்து ஓட்டுநர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவைகாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் குமரன்(10). இவன்  அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்துள்ளான். இந்நிலையில் நேற்று காலையில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த குமரனின் மிதிவண்டி  மீது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக  மோதியது. இதில் படலத்த காயம் அடைந்த குமரனை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குமரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாசப்போராட்டம்” மகளின் மரணம்…. தந்தை எடுத்த முடிவு… தஞ்சையில் சோகம்

மகளின் இறப்பை தாங்க இயலாத தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் விவசாயம் செய்து வந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவனின் மகள் இறந்துவிட்டார். இதனால் இளங்கோவன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். தன்னுடைய மகளின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் இளங்கோவன்  விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார். மயக்கத்தில் இருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடராஜர் கோயில் கலசத்தை காணோம்…? வைரலான வதந்திக்கு நிர்வாகம் முற்றுப்புள்ளி…!!

தஞ்சாவூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். அந்தக் கோவில் மிகப் பிரபலமடைந்ததற்கான முக்கியகாரணம் கோவில்களில் அவ்வபோது மர்மமான, பிரமிக்க வைக்க கூடிய சில சம்பவங்கள் நடக்கும். முற்றிலும் மர்ம முடிச்சுக்களை அதிகம் கொண்டிருக்கும் கோவிலாக இருப்பதால் அதன் மீது பக்தர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு கவனம் அதிகமாக இருக்கும்.  இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் வடக்கு கோபுரத்தில் உள்ள பன்னிரண்டு கலசங்களில் ஒன்றைக் காணவில்லை என்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கைதான கணவன்… விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயற்சி… காவல் நிலையம் முன் பரபரப்பு..!!

கஞ்சா விற்ற வழக்கில் கைதான கணவனை விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைபொருள் விற்பவர்களை பிடிக்கும் பணியில் தஞ்சை போலீஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கூடலூரில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த 36 வயதான ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. ஜெயக்குமார் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிவர் புயல் பாதிப்புகளை சமாளிக்க நடவடிக்கை …!!

நிவர் புயல் பாதிப்புகள் சமாளிக்கும் வகையில் தஞ்சையில் முன் எச்சரிகை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளதுடன் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை அதிகப்படியான கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக மழை பெய்யும் நேரத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கண்ணை மறைத்த காதல்” 10th படித்தவருக்காக…. படிப்பை விட்ட இளம்பெண்…. கண்ணீருடன் பெற்றோர்…!!

இளம்பெண் பெற்றோரை உதறிவிட்டு 10ம் வகுப்பு படித்தவருடன் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவர் பொறியியல் படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக பெங்களூரை சேர்ந்த சுந்தர்(22) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சமூகவலைதளத்தில் துவங்கிய அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுந்தர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் மீது கொண்ட அளவுகடந்த காதலால் மோகனப்பிரியா வீட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இனிமே எவனும் தொட மாட்டான்…பெண்களை தொட்டால் ஷாக் அடிக்கும்… தஞ்சை பொறியாளர் புதிய கண்டுபிடிப்பு…!!!

தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பெண்களைத் தொட்டால் ஷாக்கடிக்கும் செருப்பை கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த இளம் பொறியாளர் அமிர்தகணேஷ் என்பவர் சிறுசிறு பயனுள்ள பொருட்களை கண்டறிவது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் கொடுப்பவர்களை ஷாக் அடிக்க வைக்கும் வகையில் செருப்பு கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ரகுமான் தெருவில் இன்ஜினியர் அமிர்த கணேஷ் (34) வசித்து வருகிறார். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்து முடித்தார். அதன்பிறகு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… சீர்வரிசையுடன் வந்த உறவினர்கள்… முதியவரின் அசத்தல் செயல்… குவியும் பாராட்டு…!!!

தஞ்சையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 75 வயது முதியவர் ஒருவர் தான் வளர்த்து வரும் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஆபிரகாம் பண்டிதர் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி சிங்கப்பூரில் ஒருவரும் சென்னையில் ஒருவரும் வசித்து வருகிறார்கள். தனது மகள்கள் இருவரும் திருமணம் ஆகி தன்னை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த அண்ணன்…. தம்பி செய்த காரியம்…. காவல்துறையினர் விசாரணை….!!

குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் சுரேஷ் என்று திருமணம் ஆகாத இரு மகன்கள் இருக்கிறார்கள்.தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வரும் கார்த்திகேயன் தினமும் குடித்துவிட்டு வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து நேற்றும் கார்த்திகேயன் குடித்துவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தம்பி சுரேஷ் அண்ணனை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேசிட்டு தரேன்…. செல்போனை கொடுங்க…. மறுத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் விசாரணை….!!

தஞ்சையில் அரிவாளை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாங்க போலீஸ் எங்க கூட வா…. 2 நாட்களாக எந்த தகவலும் இல்லை…. கதறும் குடும்பத்தினர்….!!

காவல்துறையினர் அழைத்து சென்ற நகைக்கடை உரிமையாளர் பற்றிய எந்த தகவலும் வெளிவராததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் வல்லம் ஊரணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 4 பேர் காரணம் எதுவும் கூறாமல் தங்களை காவல்துறையினர் என்று கூறி ஆறுமுகத்தை அழைத்து சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் ஆறுமுகத்தின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர்கள் தஞ்சாவூர் […]

Categories
தஞ்சாவூர் தற்கொலை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி….. சிகிச்சை பெற்றும் பலனில்லை….. விவசாயின் சோக முடிவு…..!!

திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். 66 வயதான இவர் விவசாயி ஆவார். வெகுநாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி குணமாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை இதனால் மனமுடைந்த ஞானப்பிரகாசம் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார்.   உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அமைச்சர் துரைக்‍கண்ணு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்‍கம் …!!

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் திரு. வி.ரா துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடந்த 13-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டரர். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 19 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து இன்று பிற்பகல் சொந்த ஊரான தஞ்சை […]

Categories
அரசியல் சென்னை தஞ்சாவூர் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று – திடீர் உத்தரவு போட்ட தமிழக அரசு …!!

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு அதிமுக தொண்டர்கள் உட்பட தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் என ஆளும் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அமைச்சரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமைச்சரின் மரணத்தை தமிழக அரசு அனுசரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் …!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை இடுகாட்டிற்க்கு கொண்டு செல்லும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்லதுரையின் உறவினர்கள் பட்டுக்கோட்டை பேராவூரணி சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை விலைநிலம் வழியாக தூக்கிச் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ராஜராஜசோழனுக்கு சதயவிழா” முதன்முதலாக தமிழில் வழிபாடு… மரியாதை செலுத்திய ஆட்சியர்…!!!

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவில் கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கோலகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. இந்த சதயவிழாவையொட்டி கலெக்டர் கோவிந்தராவ் மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் தேவாரம், திருமுறை பாடி […]

Categories

Tech |