தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றும் சமயத்தில் சரியாக கருடன் கோபுரத்தை சுற்றி வட்டம் அடித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தஞ்சை இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பம்சமாக கோபுரங்களில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றப்படும். அந்தவகையில், சரியாக ராஜகோபுரத்தின் கலசத்தில் […]
Category: தஞ்சாவூர்
தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி சுவரொட்டிகள் ஒட்டியதாகக் கைது செய்யப்பட்ட இருவரையும் வருகிற 16ஆம் தேதி வரை காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் மட்டுமே நடத்தக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தஞ்சை நகரம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதிகார அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளான தேவன், பாலாஜி ஆகியோரைக் […]
காயமடைந்து பார்வை பறிபோன நிலையில் மருத்துவ உதவி வேண்டி பள்ளி சிறுவன் ஒருவர் உதவி கோரியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஊமத்தகாடு ஊராட்சிக்குள்பட்ட கிராமமான பெத்தனாட்சி வயல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. அன்றாடம் கூலி வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். இவருடைய மகன் சின்ராசு (12), அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ராசு விளையாண்டு கொண்டிருந்தபொழுது கீழே விழுந்தார். அப்போது சிறுவனுக்கு கண் பார்வை […]
ராஜராஜ சோழன் காலத்தில் பெண்களை கருவறைக்குள் பணி செய்வதற்காக அனுப்பி அதற்கான ஓவியங்கள் குறித்தும் அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் அக்காலகட்டத்தில் 1200 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பிற சமூகத்தவர்கள் அனைவருமே இந்த குழுவில் பணியாற்றி இருக்கிறார்கள். கோவிலில் இருக்கக்கூடிய கருவரைக்கு அவர்கள் எப்போதுமே போகலாம். குறிப்பாக தளிச்சேரிப் பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று வழிபடக்கூடிய உரிமையைப் பெற்றிருந்தனர். மேலும் அவர்கள் கோவிலில் பணி புரிந்ததற்கான ஆதாரங்களும் […]
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களை பார்க்கும்போது அக்காலகட்டத்தில் நாம் பிறந்திருக்க கூடாதா என்ற அளவிற்கு நம்மை வியப்பில் பால் தெரிகிறது. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் பல சிவாலயங்கள் உள்ளன. முதலில் நுழையும் பொழுது கேரளாந்தன் திருவாசகம் என்ற ஒன்று உள்ளது. அதனை தொடர்ந்து ராஜராஜன் திருவாயில் வரும். இந்த திருவாயில் திருசிற்றம் மாலையுடன் அமைந்துள்ளது. மேலும் இதில் 24 சிற்றாலயங்கள் உள்ளன. இந்த இருபத்தி நான்கு சிற்றாலயங்களிலும் உள்ள கடவுள்களை திசை கடவுள் என்று […]
தஞ்சை பெரிய கோவிலுக்கு ஐரோப்பிய சினிமா உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் வந்து வழிபட்டுச் சென்று அதற்கான சான்றுகளாக சிற்பங்கள் விளங்குகின்றன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலின் வடக்குப் பக்கம் சண்டிகேஸ்வரர் ஆலயம் அருகில் இரண்டாவது சிலையாக ஐரோப்பிய சிலை ஒன்று இருக்கும். அதனை பார்க்கும் போது பிற்காலத்தில் செதுக்கிய சிற்பம் என்று நிறைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அது தவறு. அது ராஜராஜன் காலகட்டத்தில் கடல் கடந்து சென்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி சீனர்களுடனும் […]
தஞ்சை பெரிய கோவிலில் இருமொழிகளிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குரூப் 4 பொது தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என தெரிவித்தார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் என்றும் தினகரன் […]
தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால், அதற்கு தடை கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால் தடைகோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சரவணன் தரப்பில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது. தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரியகோயில், குடமுழுக்கு விழாவை நடத்த தடைவிதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக எடுத்து […]
பிப்ரவரி ஐந்தாம் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது தஞ்சை பெரிய கோவிலும் தயாராகி விட்டது ஆனால் கோவிலில் தமிழ் மொழியில் திருகுட நன்னீராட்டு நடக்குமா இல்லை சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்விக்கான பதில் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. பெரும்பாலான இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. கும்பாபிஷேகம் நடத்த கோரி கடந்த 2008ம் ஆண்டு முதலே பக்தர்கள் […]
தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பர்மாவில் இருந்து கொடிமரம் வந்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிதாக கொடிமரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கொடி மரமானது பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என […]
தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த இந்து சமய அறநிலைத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய கோவிலில் நடைபெறும் குடமுழுக்கை தமிழில் திருமுறைகளை ஓதி நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்ததோடு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் […]
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பாமக கட்சி தலைவர் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகமவிதிகள் இந்த கோரிக்கைக்கு எதிராக இல்லை எனவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு […]
1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான் இக்கோவிலில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். காவிரி பாயும் சமதளப் பகுதியில் இது போன்றதொரு கோவில் கட்டுவதற்கான கற்களும் பெரிய பாறைகளை இல்லாத இடத்தில் அரியவகை கற்களைக் கொண்டுவந்து உலகம் வியக்கும் […]
தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ்பெற்ற பெரிய கோவில் இந்த பெரிய கோவிலில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நேரத்தில்குடமுழுக்கு போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சிறப்பு யாகம் நடைபெற்றுவருகின்றது. அஷ்டபந்தனம் என்று சொல்லக்கூடிய 252 சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் யாகத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு […]
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி தஞ்சையில் மாநாடு நடைபெற்று வருகிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் வேள்வி நடத்தப்பட்டது. தமிழிலேயே அனைத்து வேதங்களும் […]
தஞ்சை மாவட்டத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கின்றது. இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மக்களின் கூட்டம் தஞ்சையில் அதிகமாக இருக்க […]
தஞ்சையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் விடுதி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையின்போது மாணவ மாணவிகள் விடுதியில் இருந்து வேறு இடத்திற்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி இன்றி விடுதி நடத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விடுதியில் சோதனை செய்யப் போவதாக […]
பேரிடர் நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்வது தொடர்பான பயிற்சி தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது தேசிய அளவிலான தீயணைப்பு பயிற்சி தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தஞ்சையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தீயணைப்பு துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பேரிடர் நேரங்களில் காயமடைந்தவர்களை கட்டிடங்களில் இருந்து எவ்வாறு மீட்பது, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறையினர்களும் […]
தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்….. தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புகுழு கோரிக்கை விடுத்து இருப்பதையும் […]
தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் முறைப்படி நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது. திராவிடக் கட்டடக்கலை என உலக […]
தஞ்சையில் இருதரப்புக்கிடையே நடந்த மோதலில் 2 பேர் மரணம் அடைய ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் பகுதியை அடுத்த இரட்டை பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் செபஸ்டின். இவரும் இவரது நண்பருமான சதீஷ்குமார் ஆகியோர் வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 4 பேர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்ற தகராறாக மாறியது. இதையடுத்து ஆத்திரமடைந்த நான்கு பேரும் செபஸ்டின் […]
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் கோவில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்தவ மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். 10 ஆவது ஆண்டு கரைகாரர்கள் சார்பில் நடை பெற்ற விழாவில் முன்னதாக கோவிலின் சார்பில் முதலாவதாக 5 பொங்கல் பானைக ளில் பொங்கலிடப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிராம மக்களால் 500 க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியின் […]
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, வாழையை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். வாழையை முதன்மை பயிராகவும் ஊடுபயிராகவும் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கஜா புயலின் போது தென்னை மரங்களுக்கு இணையாக வாழைப் பயிர் அதிகம் சேதம் அடைந்தது. காய்ப்பு தரும் நேரங்களில் கஜா புயல் அடித்ததால் அனைத்து வாழை மரங்களும் வேரோடு பெயர்ந்தும், வாழைத்தார்களின் கனம் தாங்காமலும் கீழே விழுந்து […]
பெரிய கோயிலில் காதல் ஜோடிகள் நடந்துகொள்ளும் முறை பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக உள்ளது.மேலும் கோயிலின் புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் மற்றும் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது தஞ்சைப் பெருவுடையார் கோயிலில். இந்த கோவிலுக்கு தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய […]
பெரிய கோயிலில் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளால், புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகள், […]
தஞ்சை: இஸ்லாமிய இளைஞர்கள் ஆதரவற்ற நிலையில் வசித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆதரவற்ற நிலையில் வசித்துவந்தவர் தேவி (70) என்ற மூதாட்டி. இவருக்கு உறவினர் யாருமில்லாத நிலையில் அந்தப் பகுதியிலுள்ள வீடுகளில் யாசகம் பெற்று வாழ்ந்துவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தும் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார். […]
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . தஞ்சை மாவட்டம் ஆலமன்குறிச்சியை சேர்த்த கனகராஜ் என்பவர் தனது நண்பருடன் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார் .அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை . 1,00,000ரூபாய் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனம் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் […]
தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் காவல்துறையினரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும் பல்லால் கடித்து காயப்படுத்தியும் தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருவோணம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ப்பதாக அருண்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் பற்றிய தகவல்காவல்துறையினருக்கு தெருவிக்கப்பட்டது. அதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதை அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற […]
திருவள்ளுவர்,பாரதியார்,அப்துல்கலாம்,இயற்கை விவசாயி,நம்மாழ்வார் போன்று வேடம் அணிந்தவர்கள் உடன் வந்து வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தது புதுமையாக இருந்தது. தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தென்னரசு என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும், தான் நேர்மையானவன் என்ற செய்தியை மக்களுக்கு அளிக்கும் வகையிலும் திருவள்ளுவர்,பாரதியார்,அப்துல்கலாம்,இயற்கை விவசாயி,நம்மாழ்வார் போன்று வேடம் அணிந்தவர்களை உடன் […]
கேன்களில் அடைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான ஒழுங்குமுறை சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா, சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரபிரபு தலைமையில் நடைபெற்றது . தலைவர் அனந்தநாராயணன், அன்பு, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு தரக்காட்டுப்பாட்டு ஆணைய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து […]
தஞ்சாவூரில் 23 வயதான இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக […]
போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபரை ஏமாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலசுப்பிரமணியம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நிலம் வாங்க முடிவெடுத்து, கமலக் கண்ணன் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை அணுகியுள்ளார். இதனையடுத்து கோடம்பாக்கத்தில் 1.25 கிரவுண்ட் நிலம் விற்பனைக்கு வருவதாகக் கமலக்கண்ணன் கூறியுள்ளார். நிலம் தொடர்பான ஆவணங்களைத் தருமாறு தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் கேட்டுள்ளார். அப்போது முகமது பாட்ஷா என்பவரது நிலம் எனக்கூறி, ஆவணங்கள் சிலவற்றைக் கமலக் […]
பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, காவி துண்டு, திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திருவள்ளுவரை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் சார்பில் போராட்டம் […]
தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர்மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த கிராம பகுதிகளில் வெண்ணாறு கரையோரம் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிராமத்திற்குள் மழைக்காலங்களில் ஆற்று நீர் புகுந்து செல்லும் அபாயம் ஏற்படுகிறது. பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக […]
தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை சேத படுத்தியவர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு […]
தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் மர்மநபர்கள் செயல்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. […]
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]
கும்பகோணத்தில் பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்த முதியவரை கொலை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ரத்தினம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதை பார்த்த ரத்தினம் அவர்கள் இருவரையும் கண்டித்து, தட்டிக் […]
தஞ்சை பெரிய கோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் இந்து சமய அறநிலை துறை ஈடுபட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் நடைபாதையை […]
நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் நீர் கடை மடை வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இன்றி பஞ்சம் நிலவியது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு ஒரு குறுங்காட்டையே உருவாக்கி கால்நடை தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர் . அமெரிக்காவில் கால்நடை மருத்துவம் படித்த ஆனந்தும் அவரது மனைவி ஆனந்தியும் தாய்மண்ணின் மீது கொண்ட அன்பால் நாடுதிரும்பினர். இந்த தம்பதியினர் சொந்த ஊர் ஆன கும்பகோணத்தில் விவசாயம் செய்து வருகின்றனர் .ஜப்பானிய முறைப்படி ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு ஒன்றை உருவாகியுள்ளனர் . அதாவது 20 அடிக்கு ஒரு மரம் நடவேண்டிய இடத்தில் 2 அடிக்கு ஒரு […]
ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது . கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .மேலும் காவிரி அணைக்கு கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர் . ஒகேனக்கல்லில் மெயின் அருவி உட்பட 5 அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் […]
ரஞ்சித்தின் கைது தடையை நீடிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ளதிருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட்து.அதில் தான் கூறியது பல்வேறு ஆவங்களில் […]
கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை மாணவிகள் கழுவ செய்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குலாந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மாணவிகள் பாத்திரம் கழுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சார்ந்த கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் […]
தஞ்சாவூரை சுற்றியுள்ள 13 கிராமத்து மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர் . மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆனது தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டமானது உறுதியாக செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான உபகரணங்களான குழாய்கள், இயந்திரங்கள் போன்றவை கிராமங்களுக்கு தினந்தோறும் […]
தஞ்சையில், கோவிலில் சாமி கும்பிடும் போது 4 பவுன் செயின் திருடு போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் பிரதான சாலை தெருவைச் சேர்ந்தவர் திருஞானத்தின் மனைவி 75 வயதான சீதாலெட்சுமி . இவர் கரம்பயம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ந்தார். கோவிலில் சாமி கும்பிடும் போது, கூட்டத்தில் மர்ம நபர் யாரோ சீதாலெட்சுமியின் செயினை […]
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு துறைக்கு மற்றபட்ட இந்த வழக்கு நேற்று விசாரணை […]
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறையினர் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத போக்குவரத்து பணிமனையில் கண்டக்டர் ஒருவர் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் கீழ் சாவடியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதுக்கோட்டை மண்டல கந்தர்வக்கோட்டை பகுதியில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார் நேற்று முன்தினம் மதுரைக்குச் செல்லும் பேருந்தில் பணிக்கு செல்வதற்கான பேருந்து நிறுத்தம் வளாகத்தினுள் குளிப்பதற்காகச் செல்லும் பொழுது வழியிலிருந்த செடியிலிருந்து ஒரு பாம்பு வந்து அவரை கடித்துவிட்டது அதன்பின் அவரை […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதிக்கு அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சந்திரன் இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனது பக்கத்து தெருவில் வசித்து வந்த பாலன் என்பவர் மகனின் திருமணத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கியிருந்தார் இந்நிலையில் பாலன் பாதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணத்தை கொடுப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தார் இதனால் சந்திரனுக்கும் பாலனுக்கும் இடையே […]