தேனி மாவட்டத்தில் குள்ளப்புரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மே மாதம் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அந்த வழியாக ஊர்வலம் சென்ற பெண்களை ஒரு பிரிவினர் தரக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அந்த பாதை […]
Category: தேனி
தேனி மாவட்ட ஆட்சியர் சோலார் மின் மோட்டார் செயல்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள பூமழைக்குண்டு, வேப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக சோலார் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இதன் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. சோலார் மின் மோட்டார் மூலம் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லாமல் தண்ணீர் […]
தேனி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீராசாமி இந்து கல்லூரி- ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக சென்ற மின்சார ரயில் மோதி வீராசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வீராசாமியின் உடலை […]
தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி நாளை தொடங்க உள்ளது. இதில் 18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு […]
முல்லைப் பெரியாறு அணை ஐந்தாவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை இருக்கின்ற நிலையில் பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. சென்ற மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரள எல்லை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்த நிலையில் நள்ளிரவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் […]
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்க மீனா தலைமை தாங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி வரவேற்றார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் முருகன் விளக்கமாக பேசினார். மேலும் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர், செயலாளர் என பலர் பங்கேற்று […]
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பங்கஜ் காசன் நீலம்முரி என்பவரின் மனைவி உஷா. இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தோட்டங்களில் முந்திரி சாகுபடி குறித்து பார்வையிட முடிவு செய்து நேற்று 15 பேருடன் வேனில் தேனீக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போடிமெட்டு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்நிலையில் வேனில் இருந்த அனைவரும் காப்பாற்றுங்கள் என […]
தேனி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நதியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]
தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனை புதூர் முல்லை நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகமணி என்ற மனைவி உள்ளார். இருவரும் சேர்ந்து அறக்கட்டளையின் பெயரில் மகளிர் சேவை மையம் நடத்தி வருகின்றனர். அதன் மூலம் மகளிர் குழுவினருக்கு கடன் வாங்கி கொடுக்கின்றனர். இந்நிலையில் பிரியா என்பவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மீண்டும் கடன் கேட்டுள்ளார். அப்போது லோகமணி கடன் வாங்கி தர மறுத்ததால் பிரியாவும் அவருடன் வந்த சிலரும் இணைந்து லோகமணியிடம் தகராறு […]
தேனி மாவட்டத்திலுள்ள ஆதிப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திகேயனுக்கு பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு அழைத்து செல்கிறேன் என கார்த்திகேயன் பிரியதர்ஷினியிடம் கூறியுள்ளார். ஆனால் விசா கிடைக்கவில்லை என கூறி அவர் மட்டும் சென்று விட்டார். இதனையடுத்து பிரியதர்ஷினி தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
தேனி மாவட்டம் குமுளி அருகே ஏற்பட்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தற்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் […]
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பள்ளிவாசல் தெருவில் கூலி வேலை பார்க்கும் அக்கீம்(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சாலையோரம் இருந்த திண்ணையில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே மது பாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்துள்ளார். இதனை தட்டி கேட்டவர்களிடம் அக்கீம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்து அக்கீமிடம் விசாரித்தனர். இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். […]
தேனி மாவட்டம் பெரிய குளம் வடகரை பகுதியில் அக்கீம் (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கி வந்து தான் வசிக்கும் பள்ளிவாசல் தெருவில் அடுக்கி வைத்துள்ளார். அதன்பின் அதிலிருந்த ஒரு பாட்டில் மதுவை அக்கீம் குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு படிக்கட்டில் படித்துக் கொண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முத்துக்குமார் என்பவரை அக்கீம் திடீரென டீ […]
பெட்ரோல் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சிவசேனா கட்சி மாநில செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள பழனிச்செட்டிப்பட்டியில் இருக்கும் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் இருக்கின்றது. இங்கே மேலாளராக ஹரிங்டன் என்பவர் பணியாற்றும் நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் மேலாளராக பணியாற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு நாட்ராயன், ஸ்டாலின், குரு ஐயப்பன் உள்ளிட்ட மூன்று பேர் வந்து […]
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஜெனரேட்டர் மூலமாக 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. அதிலும் ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்நிலையில் முல்லைப் […]
தேனி மாவட்டத்தில் உள்ள நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் 18 -ஆவது ஆண்டு தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உறவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தர்மராஜன், கல்லூரி செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கியுள்ளார். உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை […]
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், சின்னமனூர் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையால் சுருளி அருவி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை அருவியில் குளிக்க சென்ற போது வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றுள்ளனர். மேலும் தொடர் கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் ஓய்வூதியதாரர்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான நிலுவையில் இருக்கும் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்வது குறித்த குறைகளை பரிசீலனை செய்யும் வகையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகின்றது. இது அடுத்த மாதம் 6-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்திற்கு […]
மங்கலதேவி கண்ணகி கோவிலை தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டி பட்டியில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மக்கள் மனு ஒன்றை நேற்று முன்தினம் தந்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கூடலூரில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பளியன்குடி அருகே வண்ணாத்தி பாறை மழை மீது மங்களதேவி […]
ரேஷன் அரிசியில் எலிகள் இருந்ததால் ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் ரேஷன் கடையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் வாங்கிச் சென்றார்கள். அப்போது பாலசமுத்திரத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் சாக்கு பையில் அரிசியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதை வீட்டில் எடுத்து பார்த்தபோது சாக்கு பையில் ஐந்துக்கும் மேற்பட்ட எலிகள் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரிசியை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு […]
தேனி அருகே கஞ்சா விற்பதற்காக பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பாண்டியன் நகரில் முற்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புதருக்குள் பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை மடக்கி பிடித்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்ற 14,200 […]
தேனியில் மாணவருக்கே தெரியாமல் கல்வி கட்டணத்தை செலுத்தி விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு மாணவர் ஒருவர் பயின்று வருகின்றார். இவர் தந்தையை இழந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாணவனின் கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்த முடிவு செய்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று முதல்வரை […]
மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 26 மாவட்டங்களுக்கு […]
கம்பம் காவல்நிலையத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் வரவேற்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் யாரிடம் புகார் கொடுப்பது எந்த அதிகாரியை சந்திப்பது என்று குழப்பத்தில் தயங்கி நிற்பது பல இடங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் வரவேற்பாளர்களை நியமித்து வருகின்றனர். இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்க முடியும். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க வந்த நேரம், புகாரின் தன்மை ஆகியவற்றை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் புகார் அளிக்க […]
நிலுவையில் இருந்த 50 மனுக்களுக்கு வீரபாண்டி காவல் நிலையத்தில் தீர்வு காணப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமை தாங்க வீரபாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 60 மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் மற்றும் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் என இரு தரப்பினர் இடையே விசாரணை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் […]
விபத்து ஏற்படுத்தும் பாறைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் லோயர் கேம்ப் இருக்கின்றது. இங்கே போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் இருக்கின்றது. குமிளி செல்வதற்கு வனப்பகுதியில் ஆறு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்திருக்கின்றது. இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும் சில இடங்களில் சாலைகள் குறுக்கலாகவும் இருக்கின்றது. சில இடங்களில் பெரிய பாறைகள், மரங்கள் சாலையில் உருண்டு செல்லும் நிலையில் இருக்கின்றது. அதில் இரண்டாவது மேம்பாலத்திலிருந்து […]
மரத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். தேனி மாவட்டத்திலிருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நோட்டம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிலக்கோட்டையை சேர்ந்த சுப்பையா, விஜயா, ஆண்டிபட்டியை சேர்ந்த காவேரி, ஹரிகிருஷ்ணன், ராசு, காயத்ரி, தேனியை சேர்ந்த கோபால், பஞ்சவர்ணம் உட்பட 11 பேர் […]
குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள கடுமலைகுண்டுவை அடுத்திருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகின்றது. இதனால் மக்கள் காய்ச்சல், தொண்டை வலி, சளி என உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பணம் கொடுத்து கேன்களில் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் […]
விடிய விடிய பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் ஆறு, குளம், அணைகள் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. சென்ற சில நாட்களாக மழை பெய்யவில்லை. வெயிலில் தாக்கவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் போடியில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையால் […]
தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட […]
கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, குவாரிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் 32 […]
சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்திய அரசின் தகுதி பெற்ற முகவர்களை அணுகி விசா, என்ன பணி, முறையான ஒப்பந்தம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக ஏமாற்றுகின்றார்கள். ஆகையால் சோசியல் மீடியாவில் வரும் போலியான விளம்பரங்களைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம். […]
கல்லூரி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து நர்சிங் மாணவி குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் பண்ணைப்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் லட்சிதா. இவர் பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கின்றார். இவர் கல்லூரி வளாகத்தில் செயல்படும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று யாரும் […]
விசாரணைக்கு பயந்து கொத்தனார் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டியில் கொத்தனாரான செந்தில்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வத்தலகுண்டு, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த செலவில் வீடு கட்டி தருவதாக தனியார் தொண்டு நிறுவனத்தினர் பிரச்சாரம் செய்தனர். பின்னர் கட்டிடம் கட்டுவதற்காக கொத்தனார் தேவை என அறிவிக்கப்பட்டதால் செந்தில் அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் கல்லுப்பட்டி, வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் பொதுமக்களை வீடு கட்டும் […]
டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் டிராக்டர் ஓட்டுனரான சோனைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்ததால் இடிபாடுகளில் சிக்கி சோனைமுத்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சோனை முத்துவை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மணியை அவரது குடும்பத்தினர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மணியை தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் மணி தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் மணியின் […]
மாநில அளவிலான மெல்லிசைப் போட்டியில் பெரிய குளம் மாணவி வெற்றி பெற்றுள்ளார். தேனி மாவட்டத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. இதில் மெல்லிசை சம்பந்தமான பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்றார்கள். அதில் வயலின் இசை பிரிவில் பெரியகுளம் மேரி மாதா மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவி எஸ்.ரோநி மணித்ரா முதலிடத்தை பிடித்து இருக்கின்றார். இதையடுத்து நாமக்கலில் நடைபெற்ற மாநில […]
தேனி மாவட்டத்தில் உள்ள தீபாலகோட்டை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் உடுமலை ரோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதற்காக நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி ராகுல் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில் இருந்த செல்போன் மடிக்கணினிகள், சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதை அறிந்து ராகுலும் அவரது நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கட ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோபி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் இரு கரைகளையும் தழுவிக் கொண்டு வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் இருக்கும் ஜவஹர் நகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசித்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் பூதிப்புரம் சாலையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் […]
தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து 137 அடியாக உயர்ந்திருக்கின்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை 136 அடியாக இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று 137. 5 […]
மின் இணைப்பு பெறுவதற்காக லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் கல்லூரி சாலையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று 2016 ஆம் வருடம் விண்ணப்பித்திருக்கின்றார். அப்போது அங்கு மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன் என்பவர் கள ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை கொடுப்பதற்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்டிருக்கின்றார். […]
மாற்று இடம் வழங்க கோரி மக்கள் மனு கொடுத்துள்ளார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு குட்செட் தெருவை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தேனி குட்செட் தெரு பகுதியில் 56 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சென்ற 46 வருடங்களாக வசித்து வருகின்றோம். ரயில்வே துறை சார்பாக எங்களின் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பலமுறை மனு அளித்தும் […]
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கின்றது. இந்த அணையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் வினாடிக்கு 763 கன […]
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து தற்போது மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி […]
கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இந்த உற்பத்தி நிலையத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக நான்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். சென்ற 3-ம் […]
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் […]
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக […]
பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதிகளில் இரண்டு நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகின்றது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே இருக்கும் மதுராபுரி துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (நவம்பர் 4) மற்றும் நாளை ( நவம்பர் 5) நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக மதுராபுரி, பெரியகுளம், தேனி மெயின் சாலை பகுதி, அன்னஞ்சி, கோம்பை, அனுக்கிரக நகர், மணிநகர் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் இன்றும் நாளையும் […]
தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் விஜய் ஆனந்த் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை குணப்படுத்துவதற்கு அவர் பல்வேறு மருத்துவமனைகளை நாடி உள்ளார். ஆனால் எந்த சிகிச்சைக்கும் நோய் கட்டுப்படவில்லை. இதனால் விஜய் ஆனந்த் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜய் ஆனந்தும் அவரது தாயும் உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். அதன் பின் நள்ளிரவில் விஜய் ஆனந்தின் தாய் எழுந்து […]