மயிலாடும்பாறையில் கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்ற நிலையில் இங்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது […]
Category: தேனி
தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. ஆகையால் நிரந்தர […]
பார்வையற்ற பெண்ணின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகள் மணிமேகலை. இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவரின் வீட்டில் கழிப்பறை இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த பெண்களின் உதவியுடன் பொதுக்கழிப்பறைக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவர் மிகவும் சிரமம் அடைந்து வந்த நிலையில் இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்தது. இதனால் […]
கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். தேனி மாவட்டத்திலுள்ள நாராயணதேவன்பட்டியில் நேசன் கலாசாலை அரசு உதவி பெறும் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளி, நேசன் கலாசாலை பள்ளி வீதியில் இருக்கிறது. நேற்று நள்ளிரவு அந்த வீதிக்குள் மர்ம நபர்கள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை அந்த சாலையில் வீசிவிட்டு தப்பி சென்றார்கள். இதனால் அப்பகுதியில் பலத்த சத்தமும் கரும்புகைமூட்டமும் இருந்தது. சத்தம் கேட்டு […]
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தகுதியான குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கான விண்ணப்பங்களை www.theni.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். இல்லையென்றால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை […]
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நான்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.- தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நேற்று முன் தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி மின்சார உற்பத்தியும் […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
நில பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடுகளை விவசாயி விட்டுச் சென்றார். தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் காலியாக இருக்கும் இடத்தில் இன்று பகலில் இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடுகள் மாலை வரை அங்கேயே இருந்தது. உரிமையாளர் யாரும் வந்து அழைத்துச் செல்லவில்லை. இதனால் தகவல் அறிந்து வந்த போலீசார் ஆடுகளை பார்வையிட்டு உரிமையாளர் யார் என விசாரணை மேற்கொண்டார்கள். போலீசார் விசாரணையில் ராயப்பன்பட்டி அருகே இருக்கும் […]
சின்மனூரில் போதை ஊசி விற்பனை செய்ததில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் சென்ற சில நாட்களாக போதை ஊசி விற்பனை செய்ததாக போலீசார் பலரை அதிரடியாக கைது செய்தார்கள். இந்நிலையில் போலீசார் கைது செய்யப்பட்ட ஜோனத்தன் மார்க்கிடம் விசாரணை மேற்கொண்டதில் சின்னூரில் இருக்கும் அய்யனார்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் சுமார் 20க்கும் மேற்பட்ட போதை மருந்து பாட்டில்களை வாங்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் நிஷாந்தை […]
முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தமிழக மற்றும் கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் எனவும், பேபி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரூல்கர்வ் என்ற விதியின்படி தற்போது பருவமழைக்கு ஏற்ப […]
மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த குற்றங்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறது. இருப்பினும் பெண்கள், சிறுமிகள் போன்றவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் நடக்கத்தான் செய்கிறது. அதன்பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக தங்குவதற்கான விடுதிகளிலும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் விடுதியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு […]
ஆண்டிபட்டி அருகே தற்பொழுது சிமெண்ட் கலவையால் தடுப்பணை கட்டப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலக்குண்டு மலை அடிவாரத்தில் வண்ணானூத்து ஓடை இருக்கின்றது. இந்த ஓடையின் குறுக்கே சென்ற 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் சிமெண்ட் கலவைக்கு பதிலாக செம்மண் கலவையால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவோடு இரவாக தரமற்ற தடுப்பணை அகற்றப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரிடம் […]
போதை மருந்து விற்பனையில் 100 இடைத்தடகர்கள் ஈடுபட்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் போதை ஊசி விற்பனை மற்றும் பயன்படுத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் கைதானவர்களில் ஜோனர்த்தன் மார்க் என்பவர் போதை மருந்து விற்பனையை செய்து வந்திருக்கின்றார். இவர் இதற்காக ஒரு தனியார் மருந்து விற்பனை நிறுவனம் ஆரம்பித்து அந்நிறுவனத்தின் பெயரில் ஊக்கம் மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து பல மாவட்டங்களுக்கும் புதுச்சேரி […]
மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென மாவட்ட ஆட்சியர் முரளிதரன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இவர் அங்கன்வாடி மையத்தில் இருப்பவர்களிடம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், எடை அளவிடும் கருவி, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் வேலாயுதபுரம், புதுராமச்சந்திரபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் […]
சாலையில் மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள குமுழி, லோயர் கேம்ப், கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழுந்தது. இதனால் மலைப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து லோயர் கேம்ப் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலைகளில் கிடந்த […]
போதை ஊசியை பயன்படுத்திய இளைஞர்கள் மற்றும் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் சிலர் போதை ஊசிகளை பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்னமனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில வாலிபர்கள் போதையில் இருந்தனர். இந்த வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் போதை ஊசி […]
மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்ரா ஹவுதியா கல்லூரி சார்பாக நடந்த மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் முதலாமாண்டு தமிழ் இலக்கிய துறையைச் சேர்ந்த மாணவி மாயா முதலிடத்தையும், மூன்றாம் ஆண்டு வணிகம் மேலாண்மையியல் துறையைச் சேர்ந்த மாணவி சாருமதி நாலாம் இடத்தையும் மற்றும் இரண்டாம் […]
கலெக்டர் அலுவலகத்திற்கு தன்னார்வலர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை சார்பாக ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான முகாம் பாரத் நிகேதன் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் 12 நாட்களும் முகாமில் தங்கி பயிற்சி பெற வேண்டும். இதனை அடுத்து பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் […]
சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி தொழிலாளர் உதவியாளர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சுதந்திர தினமான நேற்று தேனி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அழிக்கப்பட்டதா அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டதா என உணவு நிறுவனங்கள், கடை நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தொழிலாளர் உதவியாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு […]
அரசரடி வனப்பகுதியில் இரை தேடி வந்த பொழுது பாறையில் வழுக்கி விழுந்து காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசரடி வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணி சென்ற பொழுது காட்டெருமை ஒன்று உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த வனத்துறையினர், மேகமலை வனச்சரகர் அஜய்க்கு தகவல் கொடுத்தனர். இதன்பின் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின் மருத்துவக் குழுவினர் காட்டெருமையை உடல் பிரேத பரிசோதனை செய்தார்கள். இதை தொடர்ந்து […]
போடியில் தேசியக்கொடி ஏற்றுவதில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேற்று சுதந்திர தின விழாவையொட்டி தேனி மாவட்டத்திலுள்ள போடியில் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் முபராக் மந்திரி தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியினர் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய சாலையில் ஊர்வலமாக வந்து பின் தேவர் சிலை, இந்திரா காந்தி சிலை, வள்ளுவர் சிலை அருகே இருக்கும் கொடி கம்பங்களில் தேசிய கொடி ஏற்றினார்கள். இதன் பின்னர் பெருமாள் கோவில் […]
தேனியில் விதிகளை மீறி செயல்பட்ட 3 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தார்கள். தேனி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் மாவட்டத்தில் உள்ள 24 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதி மீறல்கள் செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து உதவியாளர் சிவகுமார் கூறியுள்ளதாவது, […]
தேனி மாவட்டம் முழுவதும் வீடுதோறும் தேசியக்கொடி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடு வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட […]
மாற்றுத்திறனாளி மாணவருக்காக சோலார் மோட்டார் சைக்கிள் வடிவமைத்து தேனி அரசு ஐடிஐ மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள குரியம்மாள்புரத்தைச் சேர்ந்த அழகுசிங்கம் என்பவரின் மகன் கார்த்திகேயன். இவர் நடக்க முடியாத மாற்று திறனாளி. இவர் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வருகின்றார். இவரால் நடக்க முடியாததால் தினமும் தந்தை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தூக்கிச் வந்து வகுப்பறையில் விட்டு செல்வார். இதைப் பார்த்த தொழிற்பயிற்சியில் பயிலும் மின்சார பணியாளர் மாணவ-மாணவிகள் நித்யா, பொன்மொழி, மகாலட்சுமி, புனிதா, […]
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை நிறைந்த கும்பக்கரை அருவி அமைந்திருக்கின்றது. எனவே கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 28ஆம் தேதி முதல் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை […]
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நான்காவது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயரம் கொண்டதாகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. மேலும் இந்த அணையில் பருவ காலத்திற்கு ஏற்ப நீர்மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதி சென்ற வருடம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் அணையில் 137.5 அடி வரை தண்ணீரை தேக்கிக் […]
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் மின்சார சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி என்.ஆர்.டி நகரில் இருக்கும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக காலை 8:30 மணி அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் […]
மதுரை-தேனி இடையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 9:35 மணியளவில் தேனிக்கு வரும் இந்த ரயில், மாலை 6:15 மணியளவில் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறது. ரயில் வந்து செல்லும் நேரங்களில் பெரியகுளம், மதுரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் அடிப்படையில் இந்த இருசாலைகளிலும் ரயில்வே மேம்பாலமானது அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே மதுரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் 71 அடி உயரம்கொண்ட வைகை அணை இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் தேனியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வைகைஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளி மலை, அரசரடி, மூலவைகை, கொட்டக்குடிஆறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணையிலிருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக […]
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தங்கும் விடுதி உரிமையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஜக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் போடியில் தங்கும் விடுதி நடத்தி வந்த நிலையில் நேற்று இவர் விடுதியிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி தபால் நிலையம் அருகே சென்ற பொழுது அங்குள்ள கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டிருந்தார். அங்கு திடீரென ஜீப்பில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அறிவால் […]
போடி அருகே சீரமைத்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் மலைப்பாதை உருக்குலைந்துள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் குரங்கனி மலைப்பகுதியில் முதுவாக்குடி என்ற மலை கிராமம் இருக்கின்றது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மழை பாதை அமைக்கப்பட்டது. நாலடைவில் இந்த பாதை பராமரிக்கப்படாததால் பல வருடங்களாக உருக்குலைந்து காணப்பட்டது. இதனால் மலை கிராம மக்கள் சீரமைக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக 10 லட்சம் ரூபாய்க்கு மலைப் பாதை […]
தொடர் கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதில் வைகை அணை நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. தற்போது பரவலாக மழை பெய்வதால் பாசனத்திற்கான தண்ணீர் நிரப்பப்பட்டதால் […]
வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்ய வேண்டுமென உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 18 வகையான தொழிலாளர்கள் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல வகையான கட்டுமானம், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் 18 வயது முதல் 60 வயது […]
வரதட்சனை கேட்டு தாய் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், யாசித் என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிவப்பிரியாவிடம் அவரின் கணவர் மற்றும் மாமனார் ஆகிய 2 பேரும் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவப்பிரியா மற்றும் குழந்தை யாசிக் மீது […]
திமுக நிர்வாகிய தாக்கிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மெயின் தெருவில் ரத்தின சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரத்ன சபாபதி வீடு புகுந்த மர்ம கும்பல் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியுள்ளனர். அதன்பின் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த ரத்தினசபாபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகராட்சியில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தற்போது கம்பம் கமிஷனர் குடியிருப்பு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டிராக்டர் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனையடுத்து பின்னால் வந்த ஜீப்பும் அந்த பள்ளத்தில் சிக்கியுள்ளது. […]
நிலம் மோசடி செய்த 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு பூங்கா அமைப்பதற்காக 12,877 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2,348 சதுர அடி நிலம் அப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த நிலத்தில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகமும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் தேனி மாவட்ட […]
அரசு பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது நீதித்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த பெட்டியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோபிநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு பால் சுதிர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த […]
தொடர் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகளுக்கும், ஆறுகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வீரபாண்டியில் உள்ள தடுப்பணையிலும் தண்ணீர் […]
மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோசந்திர ஓடையில் இருந்து லோயர்கேம்ப் வரை உள்ள சாலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதிக விபத்து ஏற்படும் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கம்பம் கோசந்திர ஓடை அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து 450 மீட்டர் தூரம் உள்ள சாலை அகலப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் சாலயோரம் இருக்கும் மரங்களை அகற்றாமலேயே […]
தொழிலாளி தூக்கிட்டு கொள்வதாக கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளின் கால்களுக்கு லாடம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் கயிறுடன் வந்தார். அதன்பின் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட போவதாக திடீரென கோஷம் எழுப்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக முருகனின் கையில் இருந்த கயிறை வாங்கினர். அதன் பிறகு காவல்துறையினர் முருகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது […]
மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 18 வயது முதல் 60 வயது உட்பட்ட காது கேளாத, வாய் பேசாத, மன வளர்ச்சி குன்றிய மற்றும் 70 சதவீதத்திற்கும் மேல் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி களின் தாய்மார்கள் தையல் மெஷின் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தையல் மெஷின் வழங்குவதற்கு அடுத்த மாதம் 4-ம் […]
தி.மு.க சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு தொண்டர் ஒருவர் நன்றி கூறி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாங்குட்டை பாளையத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் தீவிர தொண்டர் ஆவார். இவர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மொபட்டில் சென்று தி.மு.க சின்னத்திற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார். இவர் தற்போது தேனிக்கு வந்துள்ளார். இவர் தலையில் வைத்துள்ள தி.மு.க தொப்பியை பார்த்து மக்கள் வடிவேலுவை வேடிக்கையாக பார்த்து செல்கின்றனர். […]
தொழில் தொடங்க கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் 4 லட்சம், 63 பவுன் நகைகளை மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் இருக்கும் கீழஓடைத்தெருவை தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி சித்ரா. இவர் தேனி சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் சுய தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக கடன் பெறுவதற்கு சென்ற 2016ம் வருடம் […]
முகக்கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது . ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் ஒரு பள்ளிக்கூடம் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக கூறப்படுகின்றது. மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் சமீப காலமாக பள்ளிகளில் ஆய்வு செய்யும் போதெல்லாம் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டு […]
பிள்ளையார் தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் சென்ற இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பிள்ளையார் தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் வெளியில் சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கூட்டமாக உள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிய வேண்டும் . பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். […]
தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண் சத்யா தலைமையில் 3 குழுக்கள் அமைத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதி பெறாமல் மதுபான பார் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த […]
செல்போன் டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டருக்கு பின்புறம் இருக்கும் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் இருப்பதாக உளவுத்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி உளவுத்துறை காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடியது தெரிய வந்தது. இது குறித்து BSNL அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே […]