Categories
தேனி மாவட்ட செய்திகள்

தனியார் மயமாக்கக்கூடாது…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. வருகின்ற 28, 29ஆம் தேதியில் மத்திய தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடு முழுவதிலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரிய மோசடி நடந்திருக்கு…. கூட்டுறவு சங்கம் முற்றுகை…. பொதுமக்கள் பரபரப்பு புகார்….!!

மோசடி நடந்ததாக கூறி பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் கோபால்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் கூடுதல் தொகைக்காக தனியார் அடகு கடையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் ஒன்று வந்ததுள்ளது. இதுகுறித்து நகையை அடகு வைத்த பொதுமக்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

8 அடி நீள பாம்பு…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. 1 மணிநேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்….!!

விவசாயி வீட்டில் புகுந்த 8 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வெண்ணிமலை தோப்பு 4-வது தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த ஜெயராஜ் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஜெயபால் வீட்டை சோதனை செய்துள்ளனர். மேலும் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாரும் எதுவும் செய்ய முடியாது…. கத்தியுடன் சென்ற மாணவன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கத்தியுடன் வந்து ஆசிரியர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு சரிவர வராமலும், ஒழுக்கமில்லாத செயல்களில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் அவரது பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவன் கடந்த 16ம் தேதி பள்ளிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேருந்து புறப்படுவதில் நடந்த தகராறு…. நடத்துனர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

நடத்துனரை தரக்குறைவாக பேசி தாக்கியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள சொக்குடையான்பட்டியை சேர்ந்த சுபாஷ் என்பவரும், சொக்கதேவன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவரும் சொக்காணூரனி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தனர். அப்போது பேருந்து புறப்படுவதில் இவர்கள் இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, சுபாசை தரக்குறைவாக பேசி தாக்கியதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தியேட்டருக்குள் நடந்த தகராறு…. திடீர் மோதலால் பரபரப்பு…. 5 பேர் மீது வழக்குபதிவு….!!

தியேட்டர் ஊழியர்களை தாக்கிய 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வரும் ராஜாராம்(55) என்பவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜாராம் மற்றும் சில ஊழியர்கள் தியேட்டரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொது அங்கு வந்த பெரியகுளத்தை சேர்ந்த மனோஜ், குணா உள்பட 5 பேர் படம் பார்ப்பதற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1½ கோடி மதிப்பீட்டில்…. தார்சாலை அமைக்கும் பணிகள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

பொதுமக்களின் உத்தரவின்படி சுமார் 1 ½ கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள நேருஜி நகரில் இருந்து மூலக்கடை வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். எனவே இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் நேருஜி நகரில் இருந்து மூலக்கடை வரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான பந்தய காளைகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பேருந்து நிலையம் அருகே இருந்த 2 பந்தய காளைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டி சாலை தெருவில் வசித்து வரும் ரஞ்சித் என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் இடத்தில் வைத்து 5 பந்தய காளைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு காளைகளுக்கு தீவனங்களை வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் தீவனம் வைப்பதற்காக ரஞ்சித் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென கவிழ்ந்த ஆட்டோ…. பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்…. அதிஷ்டவசமாக தப்பிய 3 பேர்….!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள பாலூத்து பகுதியில் கோட்டைகருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அமுதா(46) சம்பவத்தன்று தங்கம்மாள்புறத்தில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தம்பி மகன் கபிலனுக்கு திடீரென வலிப்பு வந்ததால் அவரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் கடமலைக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மயிலாடும்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி திருவள்ளுவர் தெருவில் விமலமணி(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர் தனது தங்கை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் விமலமணி வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய வாலிபர்…. சாகுமூட்டையுடன் கஞ்சா பறிமுதல்….!!

கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 மாதத்திற்குள் ஏற்பட்ட பிரிவு…. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்…. 4 பேருக்கு வலைவீச்சு….!!

தொழிலாளியை காரில் கடத்தி சென்று தாக்கிய மனைவியின் சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தாடிச்சேரி பகுதியில் வசித்து வரும் நவநீத கிருஷ்ணன்(26) என்பவர் கோவையில் மார்கெட் ஒன்றில் பரிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் கம்பத்தை சேர்ந்த பிருந்தா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த 1 மதத்திலேயே கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தது வசித்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று பிருந்தாவின் சகோதரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கராமாக மோதிய கார்…. சுற்றுலாவினருக்கு ஏற்பட்ட விபரீதம்…. தேனியில் கோர விபத்து….!!

கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் வசித்து வந்த சந்திப்பிரானு என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் தேனி மாவட்டம் மேகமலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். இதனையடுத்து மேகமலையை சுற்றி பார்த்துவிட்டு சின்னமனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த காரை மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது தென்பழனி வனத்துறை சோதனை சாவடி அருகே கார் சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் சோகம்…. உயிரிழந்து கிடந்த தொழிலாளி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

மனைவி கண்டித்ததால் வெளியே சென்ற கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிவராம் நகரில் செல்வேந்திரன்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு செல்வேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரா செல்வேந்திரனையும் அவருடன் தகராறு செய்தவர்களையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற ஜீப்…. பறக்கும் படையினர் அதிரடி…. 3 பேர் உடனடி கைது….!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் போடிமெட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த 2 ஜீப்பை நிறுத்த முயன்றனர். அதில் 1 ஜீப்பை நிறுத்திய நிலையில் மற்றொரு ஜீப் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் 1 கிலோமீட்டர் தூரம் அந்த ஜீப்பை விரட்டி மடக்கி பிடித்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த மொய் பணம்…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள போடேந்திரபுரம் காளியம்மாள் கோவில் தெருவில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் வீட்டில் கடந்த 2-ஆம் தேதி விசேஷம் நடந்துள்ளது. அப்போது மொய் பணமாக கிடைத்த 1 லட்சம் ரூபாயை அவர் பீரோவில் வைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மாரிச்சாமி திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்க குப்பையை கொட்ட கூடாது…. வீடு கட்டி தாங்க…. பழங்குடியினர் தாசில்தாரிடம் கோரிக்கை….!!

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அடுத்து சிறைக்காடு என்ற மலைக்கிராமம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்காக 72 சென்ட் நிலத்தை ஒதுக்கியது. ஆனால் தற்போது வரையிலும் அப்பகுதியில் வீடுகள் கட்டித் தரப்படவில்லை. இதற்கிடையே போடி நகராட்சியில் இருந்து குப்பை மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதய நோயால் மனவுளைச்சல்…. காவலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இதயநோயால் அவதிப்பட்ட காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எடுத்துள்ள கொப்பையம்பட்டி பகுதியில் வசித்து வந்த சேகர் என்பவர் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகருக்கு இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து இதயநோய் இருப்பதை அறிந்து மன […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் தொங்கிய பிணம்…. வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

அமராவதி வனப்பகுதியில் முதியவர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அமராவதி வனப்பகுதியில் வனக்காப்பாளர் குருமூர்த்தி, வனக்காவலர் ஜோர்ஜ்குட்டி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மரத்தில் முதியவர் ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை கட்டாயப்படுத்திய பெற்றோர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 4 பேர் மீது வழக்குபதிவு….!!

15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட தொழிலாளி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அ.வாடிப்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு 15 வயது சிறுமியை வற்புறுத்தி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து சிலர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து குழந்தை நலக்குழு தலைவர் விஜயசரவணன் மற்றும் அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று சிறுமி மற்றும் குடும்பத்தினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்பகையால் வந்த விளைவு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தொழிலாளி அதிரடி கைது….!!

முன்பகை காரணமாக பெண்ணை அரிவாளால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஓடக்கரை தெருவில் பஞ்சு(35) என்ற பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான வடமல்ராஜ் (60) என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வடமல்ராஜ் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பஞ்சுவை வழிமறித்து தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி நடத்த திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. அதிரடி காட்டிய தனிப்படையினர்….!!

வெவ்வேறு பகுதியில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர். காலனியில் வசித்து வரும் சந்திரா(70) என்பவர் கடந்த மாதம் 22-ம் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் 2 பேர் சந்திரா அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதேபோல் பெரியகுளம் வரதராஜ நகரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாருன்னு தெரியலையே…. ஆற்றில் மிதந்த பெண் பிணம்…. தேனியில் பரபரப்பு….!!

முல்லை பெரியாற்றில் அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முல்லைப்பெரியாறு கரையோரத்தில் பெண் ஒருவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக வீரபாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை மீட்டனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தலுக்கு துணை போகும் சிறுவர்கள்…. 5 பேர் அதிரடி கைது…. 123 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

கேரளாவிற்கு கடந்த முயன்ற 123 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 5 வாலிபர்களை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே உஷாரா தான் இருக்கணும்…. 14 பவுன் நகை திருட்டு…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பற்கள் தயாரிக்கும் ஆய்வு கூட உரிமையாளர் வீட்டில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள அரசு நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செயற்கை பற்கள் தயாரிக்கும் ஆய்வுகூடம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகள் சரியாக உள்ளதா என திறந்து பார்த்தபோது தங்க சங்கிலிகள், முத்துமாலை குழந்தையின் மோதிரம் என 14 பவுன் தங்க நகைகள் திருடுபோய் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் பயனில்லை…. கவரிங் வியாபாரி செய்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு கவரிங் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கவரிங் நகை வியாபாரம் செய்து வந்த வர கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகததால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கர்னல் ஜான் பென்னிகுவிக்கின்…. 111-வது நினைவு தினம்…. அஞ்சலி செலுத்திய விவசாயிகள்….!!

கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 111-வது நினைவு தினத்தையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 5 மாட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட அணையை கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு தினம் ஆண்டு தோறும் லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன் படி 111-வது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பையுடன் நின்ற மூதாட்டி…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீழராஜ வீதியில் சந்தேகப்படும் படியாக பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் மனைவியான சரசு என்பது தெரியவந்துள்ளது. இந்த மூதாட்டி வைத்திருந்த பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதனை அடுத்து மூதாட்டியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்….!!

குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் ப[ஆகுதியில் கோகுல்ராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடனத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனையால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோகுல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 கோடியை நம்பி…. பறிபோன 9 லட்சம் ரூபாய்…. கவுன்சிலர் அளித்த பரபரப்பு புகார்….!!

கடன் பெற்று தருவதாக கூறி கவுன்சிலரிடம் 9 லட்சம் ரூபாயை ஏமாற்றிய போலி நிதி நிறுவன இயக்குனரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குழப்பகிரி தோட்டப் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். 29-வது வார்டு கவுன்சிலராக பணிபுரிந்து வரும் இவர் ஏலக்காய் ஏற்றுமதி நிறுவமும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்த முரளி என்பவர் தான் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்ததால் விபரீதம்…. மானுக்கு ஏற்பட்ட கதி…. வனத்துறையினர் செய்த செயல்….!!

தண்ணீர் குடிக்க வந்த 2 வயது கடமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் பத்திரமாக புதைத்தனர். தேனி மாவட்டம் கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. இந்நிலையில் அய்யனார்புரம் அருகேயுள்ள தனியார் கிணறு ஒன்றில் கடமான் ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கண்டமனூர் வனத்துறையினர் கிணற்றில் விழுந்த 2 வயதான ஆண் கடமானை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான ஆடு…. கேமராவில் பதிவான காட்சிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

இருசக்கர வாகனத்தில் ஆடை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஆடு மட்டும் காணாமல் போயிருந்தது. இதனையடுத்து பாலமுருகன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஆடு கிடைக்காததால் இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பிடித்த காட்டுத்தீ…. பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

ஒண்டிவீரன் கோவில் மலைப்பகுதியில் தீடிரென காட்டுத்தீ பிடித்து மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலமலை கிராமம் அருகே ஒண்டி வீரன் சுவாமி கோவில் மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவி காட்டுத்தீயாக மாறியது. மேலும் நள்ளிரவு சமயத்தில் தீ பற்றியதால் யாரும் அதை கவனிக்கவில்லை. இதனைதொடர்ந்து  மறுநாள் காலையில் வனப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட தொழிலாளி…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள 3-வார்டில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் விரக்தியடைந்த ராஜா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனையறிந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென கழன்ற டிரெய்லர்…. உயிருக்கு போராடிய தொழிலாளர்கள்…. தேனியில் கோர விபத்து…!!

டிராக்டர் டிரெய்லர் கழன்று சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் புறவழிச் சாலையில் உள்ள தோப்பில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தோப்பில் இருந்த புளியம்பழங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு டிராக்டர் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை அபினேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கம்பம் பாவலர் படிப்பகம் அருகே உள்ள சேனை ஓடையில் சென்றபோது திடீரென டிராக்டரின் டிரெய்லர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோதனை சாவடியில் நடந்த தகராறு…. வனக்காவலர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

வனக்காவலரை தாக்கிய கூலித்தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்திலுள்ள வருசநாடு, கோரையூத்து, காமன்கல்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 27ஆம் தேதி அரசு பேருந்தில் அரசடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது  இந்நிலையில் மஞ்சனூத்து சோதனை சாவடியில் வைத்து பேருந்தை நிறுத்து வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பணியில் இருத்த மேகமலை வனக்காவலர் செல்லதுரை வனத்துறையினர் அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் வேலைக்கு செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் போட்டுகோங்க…. போக்குவரத்து போலீசாரின் முயற்சி…. உறுதிமொழி ஏற்ற வாகனஓட்டிகள்….!!

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தேனி நேரு சிலை சிக்னல் அருகே நடந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனங்களின் வந்த பொதுமக்களிடம் ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என உறுதிமொழி எடுக்க வைத்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லா பொருளும் கிடைக்குதா….? ஆட்சியரின் திடீர் ஆய்வு…. ரேஷன் கடைகளில் சோதனை….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளை ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்சியர் முரளிதரன் அந்த ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ரேஷன் கடை ஆவணங்கள் மற்றும் பொருட்களின் தரம், இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்துள்ளார். மேலும் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களிடமும் முறையாக ரேஷன் பொருட்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள எருமநாயக்கன்பட்டியில் வசித்து வரும் கண்ணன்(25) என்பவர் கூலித்தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் முருக்கோடை பகுதியை சேர்ந்த 12ஆம் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மகளை காணாததால் அவரது தந்தை வருசநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அ.ம.மு.கவை இணைக்க வேண்டும்…. அ.தி.மு.கவினர் நிறைவேற்றிய தீர்மானம்…. கட்சியினரிடையே பரபரப்பு….!!

அ.தி.மு.கவுடன் அ.ம.மு.கவை இணைக்க வேண்டும் என சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டையில் அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இதனை சரி செய்வதற்கு சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் மற்றும் அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற முதியவர்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோம்பை பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் பகுதியில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முதியவர் சம்பவத்தன்று முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளங்கோவன் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற உத்தமபாளையம் காவல்துறையினர் முதியவரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில்…. தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு…. மாமனார் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு….!!

தந்தை-மகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கால்பட்டியை சேர்ந்த அரவிந்த்(33) என்பவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அரவிந்தனின் மாமனார் சிவாஜி மற்றும் அவரது மகன் ஆகியோர் அரவிந்த் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொறியாளர் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை…. செயற்பொறியாளரின் அதிரடி உத்தரவு….!!

காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை-மயிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, சாக்கடை கால்வாய், சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அனிதா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத்தனை பேருக்கு சிகிச்சையா….? மக்களை தேடி மருத்துவம்…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்க்கான மருந்துகளை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்கு ஏற்பட்ட தகராறு…. மதுபோதையில் நேர்ந்த கொடூரம்…. தேனியில் பரபரப்பு….!!

மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் லெட்சுமணனுடன் திருப்பூர் தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து சிவக்குமாரும், லெட்சுமணனும் பெரியகுளம் அருகே உள்ள சுடுகாடு அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு திடீரென […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நான் முதல்வர்”…. நடைபெற்ற திட்ட தொடக்க விழா…. ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்ப்பு….!!

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு “நான் முதல்வர்” என்ற திட்ட தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு திட்டமான “நான் முதல்வர்” என்ற தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த திட்டத்தை மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முழுவதிலும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உரக்கிட்டங்கிகளில் நடத்த ஆய்வு…. பணியாளர்களுக்கு அறிவுரை…. ஆட்சியர் திடீர் சோதனை….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உரக்கிட்டங்கிகளை ஆட்சியர் நேரில் சென்று திடீர் சோதனை செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், கொடுவிலார்பட்டி, லட்சுமிரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உரக்கிட்டங்கிகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து உரம் இருப்பு விவரங்கள் மற்றும் உரத்தின் விலை போன்ற விவரங்களை விவசாயிகளும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதிவைக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து அரண்மனைபுதூர், லட்சுமிபுரம், கொவிலார்பட்டி, வடபுதுபட்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாக்குமூடையால் வந்த சந்தேகம்…. வசமாக சிக்கிய 3 பேர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நாககன்னியம்மன் கோவில் அருகே ஒரு பெண் உள்பட 4 பேர் சாக்குபையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அதில் இருந்த ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக மற்ற 3 பேரையும் மடக்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தானாக வெளியே வந்த குழந்தை…. மயங்கி கிடந்த பெண்…. 5 மணிநேரத்திற்கு பிறகு சிகிச்சை….!!

வீட்டில் தானாகவே பிரசவம் பார்த்து மயங்கி கிடந்த பெண்ணை 5 மணி நேரத்திற்கு பிறகு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிரங்காடு கிராமத்தில் பரமன்(35) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 4 மகள்கள் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். தற்போது ஈஸ்வரி மீண்டும் நிறைமாத கர்ப்பிணியான நிலையில் நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில்மொத்தம்  45 பழங்குடியின மக்களே வசித்து வருவதால் அக்கம்பக்கத்தினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் விதித்த தடையால்…. பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. 25 பேர் மீது வழக்குபதிவு….!!

வனத்துரையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்துகளை சிறை பிடித்த 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மஞ்சனூற்று பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதிக்கு செல்ல முயன்ற கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சென்ற அரசு பேருந்துகளை […]

Categories

Tech |