ரயிலில் கடத்திய ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோம நாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகில் பெங்களூரை நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயிலில் கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் உதவியாளர் அருள் பாண்டியன், கிருஷ்ணன் போன்றோர் அந்த இடத்திற்கு செல்வதற்கும் பாசஞ்சர் ரயிலில் மர்மநபர்கள் ரேஷன் அரிசி கடத்திச் […]
Category: திருப்பத்தூர்
சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கொட்டையை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் வீட்டின் பின்புறத்தில் மறைவான இடத்தில் சாராயம் விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அன்பழகனை காவல்துறையினர் கைது […]
பாங்கி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டு காரணமாக பாங்கி மார்க்கெட் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வியாபாரிகள் மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் மார்கெட்டை திறக்கக்கோரி காய்கறி, மளிகை மற்றும் இதர வியாபாரிகள் பாங்கி […]
மல்லகுண்டா ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லகுண்டா ஊராட்சியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் பதிவேடுகளை பார்வையிட்டார். இதனையடுத்து 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் கலெக்டர் விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி பகுதிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அந்த […]
அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மர அறுவை ஆலைக்கு வனத்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டுவந்த மர அறுவை ஆலைகளை தணிக்கை செய்யும் பணியில் வன அலுவலர் கேவி அப்பால நாயுடு உத்தரவின்படி, உதவி வனப்பாதுகாவலர் ஆர். ராஜ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது டி.வீரப்பள்ளி கிராமத்தில் வேலு என்பவரின் மகன் அசோக் அனுமதியின்றி மர அறுவை ஆலையை நடத்தி வருவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மேலும் அவர் அனுமதியின்றி பட்டியலின மரங்களை இருப்பு […]
மது குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்து மகனை மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கருப்பனூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி கடந்த வருடம் இறந்துவிட்டார். இதனால் ராஜ்குமார் தனது மகன்கள் ராமச்சந்திரன், மஞ்சுநாதன் மற்றும் மகள் அர்ச்சனா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். எனவே மனைவி இறந்ததிலிருந்து ராஜ்குமார் மது குடித்துவிட்டு தினசரி வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கமாக […]
பள்ளி மாணவியை காதலித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் மனோஜ்குமார் பெங்களூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது தந்தையுடன் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இந்நிலையில் மனோஜ்குமாருக்கு மானவள்ளி பகுதியைச் சேர்ந்த 10-ம் […]
ஊர் அடங்கிய சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆர். ஆனந்தன், தங்கபாண்டியன், […]
மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோணாமேடு பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் எழிலரசன் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் எழிலரசன் கோணாமேடு பகுதியில் இருந்து வளையாம்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது எதிரில் வந்த கிரேன் மோதியதால் எழிலரசன் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 அரசுப் பேருந்துகள் கிருமி நாசினி தெளித்து பராமரிப்பு பணிகளுடன் இயக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில தளர்வுளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியிலிருந்து திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து புறநகர் பேருந்துகள், வேலூர், சென்னை, தாம்பரம்போன்ற பல்வேறு பகுதிகளுக்கு 50 சதவீத பயணிகளுடன் 60 பேருந்துகள் இயக்கப்பட்டது. […]
பிச்சை எடுப்பது போல் நடித்து வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மர்மநபர் ஒருவர் பிச்சைகாரர் போன்று வேடம் அணிந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மடிக்கணினி, செல்போன் […]
வீட்டில் மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாவர்த்தம்பட்டறை பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உமராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை வைத்து, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் விற்பனை […]
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூக்கனூர் பகுதியில் கோபி என்ற ஆடு வியாபாரி வசித்து வருகின்றார். இவருக்கு ஸ்ருதி என்ற மகள் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் பிரசாந்த் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதல் […]
18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். திருப்பத்தூரில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டு இமாம் தெரு பகுதியில் உள்ள அகமதியாபள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ, கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து வட்டார மருத்துவ […]
சாராய விற்பனை மற்றும் மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்படி 3 தனிப்படைகள் கொண்ட காவல்துறையினர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கந்திலி, குரிசிலாப்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தல் மற்றும் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, வெற்றிவேந்தன், கந்தன், முத்து, பாலன், சக்திவேல், பிரேமா, வாணியம்பாடியைச் சேர்ந்த குமார், ஆம்பூரை சேர்ந்த ஆனந்தன், சந்திரன், […]
சிறுமியை காதலித்து நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நியூ டவுன், ஹாஜி முகமது தெருவில் கரிம்கான் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் பைசல்கான் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது பைசல்கான் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரது வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். இதனையடுத்து சிறுமி நகை மற்றும் பணத்தை […]
இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆம்பூர் தார்வழி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒரு இளம் பெண்ணிடம் பழகியதாக தெரிகின்றது. இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் அஸ்கர் உன்னை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]
காவல் நிலையத்தில் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் காவல் நிலையத்தின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றுள்ளனர். இதனை பார்த்த உயரதிகாரிகள் பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் காவலர் தண்ணீரில் பூச்சிமருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த சக அதிகாரிகள் அந்த தண்ணீரை தட்டிவிட்டு பெண் காவலரை காப்பாற்றியுள்ளனர். […]
சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு சிறப்புரை கூறி பாடப்புத்தகங்களையும் வழங்கினார். இதனையடுத்து அவர் கணிதப்பாட புத்தகத்திலிருந்து சில கேள்விகளை கரும்பலகையில் எழுதி மாணவிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் எந்த மாணவிகளுக்கும் இதற்கான பதில் தெரியாத காரணத்தால் அவரே […]
7 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் திலீபன் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. தற்போது காவியா மீண்டும் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு திலீபன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அடுத்து திலீபன் இரவு 10 […]
யாரும் இல்லாத வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 25 பவுன் நகை மற்றும் ரூபாய்10,000 பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் வசீம் அக்ரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வசீம் அக்ரமித்திற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூரில் […]
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுட்டகுண்டா வனப்பகுதி அருகில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்சணாமூர்த்தி என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு கிடந்த மாங்கொட்டையை மாடு கடித்ததில் அதில் இருந்தகுண்டு வெடித்து மாட்டின் தாடை தொங்கி படுகாயம் ஏற்பட்டது. எனவே மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டு மாங்கொட்டையின் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
காரில் மணல் கடத்திய வரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு மணல் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, தனிப்படை காவல்துறையினர் பாலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மொளகரம்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இதனையடுத்து குணசேகரன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன் […]
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமர்நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி சாயிதா என்ற சைதமா தனது கணவரை பிரிந்து 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மகள் மட்டும் சென்றதால் சைதமா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மகள் திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவருடைய தாய் சைதமா நிர்வாண […]
கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின்படி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் செல்வராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி எதிரில் டீக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு அகிலா என்ற மனைவியும், தருணிஸ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் கல்லாத்தூர் பகுதியில் புதிதாக கட்டியிருக்கும் வீட்டில் தினசரி இரவில் அங்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் செல்வராஜி தனது மோட்டார் சைக்கிளில் […]
அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா சென்று அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவ அலுவலர் செல்வகுமார் மற்றும் சிவசுப்பிரமணியன், டேவிட் விமல்குமார், பார்த்திபன் போன்ற மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு அமைப்பதற்கும், கூடுதல் கட்டிடங்கள் அமைப்பது குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் […]
இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிய 2 பேரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ரவீந்திரன் என்பவர் ஆசை வார்த்தைகளைக் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்வதாக மாணவியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து […]
ஆம்பூரில் அருகில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவலாபுரம் பகுதியில் கோபி- சிந்தனா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகின்றது. இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சிந்தனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்தனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளுக்கு கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் எம்.எல்.ஏ. வில்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டு கவச உடையுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். அந்த ஆய்வின் போது ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.
கசிநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக செயற்கை மணல் உருவாக்கி கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி பகுதியில் நிலப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அதனை சுத்தம் செய்து செயற்கை மணல் உருவாக்கி கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று செயற்கை மணல் தயாரித்து கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மோட்டூர் […]
துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே நகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் உமா சங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை வேலை வாங்கி வருகின்றனர். அவர்கள் சொல்லும் வேலைகளை துப்புரவு பணியாளர்களும் செய்து வருகின்றனர். இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. […]
ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்கு முயற்சி செய்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி தலைமையில், அதிகாரிகள் பச்சூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் லாரியில் ரேஷன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்திற்கு 4 டன் ரேஷன் அரிசியை கடத்துவதற்கு முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. […]
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுட்டகுண்டா பகுதியில் தட்சிணாமூர்த்தி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் பசுமாடு வளர்த்து வருகின்றார். இவர் தினசரி அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியியொட்டி மாடு மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வனப்பகுதியொட்டி பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் மர்மநபர்கள் யாரோ வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்க்காமல் அங்கு […]
தனது தம்பி மனைவியுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜனதாபுரம் சவுக்கு தோப்பு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வேலூரை சேர்ந்த ஒரு பொண்ணுடன் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் […]
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலையாம்பட்டு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பராசக்தி நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பராசக்தி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்ததும் அவரது உறவினர்கள் […]
கொரோனா விழிப்புணர்வுக்காக மோட்டார் சைக்கிளில் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தவரை மாவட்ட கலெக்டர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூர் பகுதியில் இருசக்கர வாகன வீரரான தினகரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் காதுகேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். இதனையடுத்து தினகரன் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், முகக் கவசம் அணியுமாறும் […]
தனியார் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு இருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் பணியில் புத்தூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ், ரத்தினம் மற்றும் மோதகப்பல்லி கிராமத்தில் வசிக்கும் பிரசாத் ஆகிய 3 தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ் கழிவு தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது தீடீரென […]
காதல் திருமணம் செய்த இளம் ஜோடிகள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னமூக்கனூர் பகுதியில் ரவி – செல்வி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகள் இருக்கிறார். இவர் கடந்த 12 ஆம் தேதியன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜெயந்தியின் தாயார் செல்வி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி காவல்துறையினர் […]
கார் விபத்தில் பாதிரியார்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கும் ஈதனஹள்ளி பகுதியில் பாதிரியாராக சாந்தன், தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகிய மூவரும் வசித்து வருகின்றனர். இவர்களின் நண்பர் ஒருவர் சென்னையில் பாதிரியாராக பணி புரிந்து வந்துள்ளார். தற்போது உடல் நலக் குறைவால் அந்த நண்பர் காலமானார். இந்நிலையில் சாந்தன், தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகிய மூவரும் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி காரில் பயணித்துள்ளனர். இதனை அடுத்து […]
காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சரத்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சரத்குமார் இரவு நேரத்தில் காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து சரத்குமார் […]
கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை அடுத்த காந்தாரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியப்பிரியன் அங்குள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சத்தியப்பிரியன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ஒரு காரில் வந்துள்ளார். அப்போது காலை சாப்பாடு வாங்குவதற்காக சத்தியப்பிரியன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரு ஓட்டலுக்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்ற போது திடீரென கார் […]
தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கிராமத்தில் முத்து-ஜெயசுதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் முத்து வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்கூரை அமைப்பதற்காக முத்துசென்றுள்ளார். அங்கு கல்லூரியின் 2-வது மாடியில் வெல்டிங் பணியை தொடங்கியபோது எதிர்பாராத விதமாக முத்து மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் கொரோனா தொற்று குறைந்து வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திற்கு 8 ஆயிரத்து 750 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 750 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்தது. இதனையடுத்து திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற 45 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயதிற்கு மேல் இருப்பவர்களும் 45 வயதிற்கு மேல் இருப்பவர்களும் […]
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரயில் படிக்கட்டில் 50 வயதுடைய ஒரு ஆண் பயணம் செய்துள்ளார். அப்போது ஆம்பூர்- விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருக்கும் போது அவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கி வந்த தோல் தொழிற்சாலை தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- கச்சேரி ரோட்டில் அப்துல் ரசாக் என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இருக்கின்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் திடீரென ஆட்டோ ஸ்ப்ரே பாய்லரில் தீப்பற்றி மேற்கூரைக்கு பரவியது. இதனால் தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் அணைக்க முடியாமல் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த 16 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு பாங்கிஷாப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது ஆம்பூர் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் […]
குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மியாவாக்கி குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.எஸ். அப்துல்கலில் மற்றும் எஸ். சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். அதன்பின் கலெக்டர் சிவன் அருள், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஷ்பாபு, ஊராட்சி உதவி […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்திய 15 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பலர் கடைகளை திறந்து வைத்திருப்பதாக நகராட்சி ஆணையர் சதீஷ்குமாருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின்படி நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில், பொறியாளர் நடராஜன், தூய்மை பணி ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் வாலாஜாபேட்டையில் ஆய்வு […]