Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி சிறுமி பலாத்காரம்… சிறுவனை போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோயிலுக்கு சென்ற கோனாமேடு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை, நூருல்லாபேட்டை பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளனர். இந்தப் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் பைக்கை பறிமுதல் செய்த போலீசார்… தீக்குளித்த இளைஞர் மரணம்..!!

ஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று அதிகாலை இறந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி (ஞாயிறு) தளர்வுகள் இல்லாத பொது முடக்கத்தின்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்தவழியாக மருந்து வாங்க வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால், கடும் விரக்தியடைந்த இளைஞர் முகிலன், போலீசாரை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். பின்னர், அவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்திச்சென்ற இளைஞர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச்சென்ற இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய  பள்ளி மாணவியை காணவில்லை என, அவரின் தந்தை, உமராபாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவியை தேடி வந்தனர்.. இந்தநிலையில் நேற்று முன்தினம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.. இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

 ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மிட்டாளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி காணவில்லை என உமராபாத் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார்.. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞனை பிடித்தனர். பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதங்களாக… கிராமங்களில் சுற்றி திரியும் யானை… செல்பி எடுக்கும் இளைஞர்கள்… பொதுமக்கள் அதிர்ச்சி..!!

இளைஞர்கள் விபரீதம் அறியாமல் யானையின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள காவலூர், பீமகுளம், சத்திரம், அருணாச்சலகொட்டாய் மற்றும் நாயக்கனூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒற்றை கொம்புடன் சுற்றித்திரியும் காட்டு யானை ஓன்று விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மலைரெட்டியூர் பகுதியில் அந்த ஒற்றை கொம்பு காட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாந்தோப்பில் தூக்கு போட்டு பெண் தற்கொலை… போலீசார் விசாரணை..!!

சுந்தரம் பள்ளி அருகே மாந்தோப்பில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி அடுத்துள்ள கிருஷ்ணகிரி – திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  கிடப்பதாக அந்தபகுதி பொது மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க போகும் போது… பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்… மனவேதனையில் தீக்குளித்த இளைஞர்… ஆம்பூரில் பரபரப்பு..!!

ஆம்பூர் அருகே மருந்து வாங்க போகும்போது காவலர்கள் பைக்கை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் முகிலன், பேருந்து நிலையம் நோக்கி மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார்.. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்  ஊரடங்கு தடையை மீறி வெளியே வந்தததாக முகிலனை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வாலிபர் பைக்கை தரவில்லை என்றால் நான் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பரிதாபம்.! தரைமட்டமான வீடு.. பெண் பலி… பொய் கணக்கு காட்டி பணத்தை அமுக்கிய அரசு அலுவலர்கள்..!!

மழையினால் பாழடைந்த வீட்டில் இருந்த பெண் சுவர் இடிந்து விழுந்து மரணம் அடைந்ததை தொடர்ந்து வீடு கட்டி தருவதாக மோசடி செய்த அரசு அலுவலர்களை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகாமையில் உள்ள புருஷோத்தம் குப்பம் பகுதியில் சுப்பிரமணி என்பவரின் மனைவி அய்யம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவரின் மகன் ராகுல்காந்தி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அய்யம்மாள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இவருக்கு ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக பிரதம மந்திரி திட்டத்தின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தூக்குமாட்டி விட்டு… தற்கொலை செய்து கொண்ட தாய்.. கணவரால் ஏற்பட்ட விபரீதம்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 11 மாத குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கந்திலியை அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன்-கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பதினோரு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சிலம்பரசனுக்கு தொடர்பு இருப்பது கவிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறுஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார் கவிதா. சம்பவத்தன்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நா குடிக்கனும்… பணம் தா… அடிக்கடி சண்டை போட்ட கணவன்… போட்டுத்தள்ளிய மனைவி.!!

குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருப்பனூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி முருகன் என்பவரது மகன் வெங்கடேசன்.. 30 வயதுடைய இவரும் கூலி வேலை செய்து வருகின்றார்.. வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சுகந்தி (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. மேலும், வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கமும் […]

Categories
சற்றுமுன் சென்னை திருப்பத்தூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய மதுரை…. தப்பிய திருப்பத்தூர்….. மீளும் சென்னை….. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

மலைப்பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாறை மீது தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கதவாளம் பகுதியில் வசித்துவரும் பிரபு என்பவருக்கு நதீஷ் மற்றும் லோகேஷ் என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இந்நிலையில் இவரின் மகன்கள் 2 பேரும் தன்னுடைய நண்பர்களுடன் கதவாளம் மலைப்பகுதிக்கு விளையாடுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது நதீஷ், லோகேஷ்  பாறை மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யார் கிட்ட அடிக்கடி பேசுற… கண்டித்த தாய்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகேயுள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மகள் காவியா.. 20 வயதுடைய இவர், வீட்டில் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் போனில் யார் கிட்ட அடிக்கடி பேசுகிறாய் என்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த காவியா வீட்டில் தனி அறைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன்… இதுதான் காரணமா?

குழந்தை இல்லாததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. திருப்பத்தூர் சிதம்பரனார் தெருவில் வசித்து வரும் 65 வயதான சேஷாலம் என்பவர் அப்பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.. இவருடைய மனைவி மல்லிகா(வயது 60). இவர்கள் இவருக்கும் குழந்தையில்லை. இதுவரையில் குழந்தை இல்லாமல் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில், நேற்று இரவு சேஷாலம் தன்னுடைய மனைவியின் மேல் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதில் பலத்த தீ காயமைடைந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

120 அடி உயர் மின் கோபுரத்திலிருந்து கிழே குதித்து இளைஞர் தற்கொலை…!!

120 அடி உயர் மின் கோபுரத்தின் மேலிருந்து கிழே குதித்து 19 வயது இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியான வீரனமலை பகுதியை சேர்ந்தவர் கேசவன்.. இவருக்கு வயது 19 ஆகிறது.. இவர் பிட்டர் தொழிலாளி ஆவார்.. ஆந்திரப் பிரதேச  மாநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் பிட்டராக இவர் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றால் ஆந்திர மாநிலத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

350 கிலோ கஞ்சா… பதுக்கிவைத்த தந்தை மற்றும் மகன்களை சிறையிலடைத்த போலீஸ்..!!

கஞ்சா பதுக்கிவைத்திருந்த தந்தை மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ள ஆதி சக்தி நகர் புலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 45 வயதுடைய இவருக்கு கோகுல் (24), மனோஜ் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தந்தை மற்றும் மகன்கள் இருவரும் தங்களது வீட்டிற்குப் பின்புறமுள்ள பாழடைந்த குடிசையில் 8 மூட்டைகள் அடங்கிய சுமார் 350 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து விற்று வந்ததாகத் […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூரை சேர்ந்தவருக்கு கொரோனா..!!

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூர் சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நேற்று திருப்பத்தூர் வந்தவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட நபர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை திருப்பத்தூர் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 31 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,497, செங்கல்பட்டில் 128, திருவள்ளூரில் 92, காஞ்சிபுரத்தில் 26, திருவண்ணாமலையில் 22, தூத்துக்குடியில் 18, அரியலூரில் 4, கடலூரில் 8, தருமபுரியில் 3, திண்டுக்கல்லில் 2, கள்ளக்குறிச்சியில் 17, கன்னியாகுமரியில் 6, மதுரையில் 31, நாகையில் 8, நாமக்கல்லில் 2, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 6, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிவகங்கையில் 12, தென்காசியில் 4, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமை….. போதையில் தற்கொலை முடிவு….. தனியார் நிறுவன ஊழியர் மரணம்…!!

மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்து மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியையடுத்த  அதிபெரமனுர் பகுதியில்  வசித்து வந்தவர் தினகரன். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அருகில் இருந்த […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு!!

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். வாணியம்பாடியில் கடந்த 12ம் தேதி காலையில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களின் பழங்களை வீதியில் வீசியும், தள்ளுவண்டிகளை நகராட்சி ஆணையர் கவிழ்த்து விட்டார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

7 மாதத்திற்கு பிறகே கொரோனாவுக்கு முடிவு!.. அருள் வாக்கு கூறிய பெண்.! அதிர்ச்சியான மக்கள்… வைரலாகும் வீடியோ!

திருப்பத்தூரில் பெண்ணின் உடலில் சாமி இறங்கி, கொரோனா கிருமித் தொற்று குறித்து அருள்வாக்கு கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆம், நேற்று மாலை சுமார் ஒரு 5 மணியளவில் மாதனூர் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி என்ற பெண் ஒருவர் தனது கணவருடன் வாணியம்பாடி அருகில் இருக்கும் மாராபட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது உடலில் சாமி இறங்கியதாகக் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டது வாணியம்பாடி… நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது..!

வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள்

காய்கறிகள் இலவசம்…. இலவசம்…. வாட்சப் வதந்தியை நம்பி…… ஏமாந்து போன வியாபாரி….!!

திருப்பத்தூரில் வாட்ஸ்அப் வதந்தியை நம்பி காய்கறி வியாபாரி ஒருவர் ஏமாந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இதை பயன்படுத்தி பலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பீதி.. ஏரியில் உயிருடன் வீசப்பட்ட பிராய்லர் கோழிகள்… கூட்டம் கூட்டமாக வந்து பிடித்து சென்ற மக்கள்!

திருப்பத்தூரில் கொரோனா பீதியால் பிராய்லர் கோழிகளை வியாபாரிகள் உயிருடன் ஏரியில் தூக்கி வீசி சென்றதால் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்து சென்றனர். சமீப நாட்களாக கொரேனா பீதி மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பிராய்லர் கறிக்கோழி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று தீயாக வதந்தி பரவி வருகின்றது. இதனால் பிராய்லர் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் காரணமாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்து விட்டனர். பிராய்லர் கோழியால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : 3 பேர் கைது !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் பெற்றோரை இழந்து காப்பாளரின் உதவியுடன் வசிக்கும் 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி சுமார் இரவு 7 மணி அளவில் பாலாற்றில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர், சிறுமியை கடத்தி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுத்தையும் இல்ல…. நரியும் இல்ல….. சுற்றி திரியும் மர்ம விலங்கு…… பீதியில் ஊர்மக்கள்….!!

திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு சுற்றி திரிவதால் ஊர் மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை  அடுத்த காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முரளி, வெங்கடேசன், திருப்பதி உள்ளிட்டோர் வளர்த்த  மூன்று ஆடுகளை இரண்டு நாட்களுக்கு முன் கொடூரமாக கடித்து குதறியநிலையில் இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.அதில், ஊர்மக்கள் சிறுத்தை தான் ஆடுகளை கடித்துக் கொன்றதாக தெரிவித்தனர். இருப்பினும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஆராய்ந்தபோது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாட்டை அடி வாங்குங்க…. கல்யாணம் நடக்கும்…. திருப்பத்தூரில் வினோத விழா …!!

திருமணம் ஆகாதவர்கள் சாட்டை அடி வாங்கி  தரிசனம் பெற்ற வினோத நிகழ்வு திருப்பத்தூரில் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்து அமைந்துள்ளது நார்சாம்பட்டு பகுதி. இங்கு இருக்கும் பூங்காவனத்தம்மன் கோயிலின்  மாசி மாத அமாவாசை திருவிழாவை அங்குள்ள 18 சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடத்துவார்கள். அப்போது பூங்காவனத்தம்மன் சிலையை ஊர் கிராமங்கள் அனைவரும் தோளில் சுமந்து அங்குள்ள 18  ஊர்களின் வீதிகளில் வலம் வந்து பின்னர் அம்மன் சிலையை கருவறையில் வைத்து பூஜை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ1,25,00,000 ஒதுக்குனீங்க….. இவ்வளவு தான் தரமா…? நல்ல ரோடு கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்….!!

திருப்பத்தூர் அருகே தரமான சாலையை அமைக்க கோரி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  பகுதியைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அவர்களது கிராமத்திற்கும், நகரத்திற்கும் சென்றுவர இடைப்பட்ட கரடுமுரடான சாலையை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து  ஒழுங்கான சாலையை அமைக்க கோரி பலமுறை நடத்திய போராட்டங்களுக்கு பின் 1 ¼ கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதில் முறைகேடு செய்து தரமற்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய AC….. பாப்பா நீ உள்ள போ….. தீயில் கருகி…. கணவன் மனைவி மரணம்….. திருப்பத்தூர் அருகே சோகம்…!!

திருப்பத்தூர் அருகே ஏசி  வெடித்து கணவன் மனைவி தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். செங்கல்பட்டில் ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் 8 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில்ண்முகம் குடும்பத்தினரோடு சண்முகம் ஏசி போட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மகள் தாய் மஞ்சுளாவை எழுப்பி கழிவறைக்கு போக துணைக்கு அழைத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாமுண்டீஸ்ஸ்வரி கோவிலில்…. கேட்…. உண்டியலை உடைத்து திருட்டு….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த வீராணம் குப்பம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், நாள் தோறும் சிறப்பு பூஜைகள் இன்று வரை நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பூஜைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது மரணம்….. விவசாயி வெட்டி கொலை….. தம்பி பொண்டாட்டி வெறிச்செயல்….. திருப்பத்தூர் அருகே பரபரப்பு….!!

திருப்பத்தூர் அருகே தூங்கும் போது விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கம்பம் கிருஷ்ண பள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். முருகேசனின் தம்பி வெங்கடேசன். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட அவரது இன்சூரன்ஸ் பணம் 3 லட்சம் வெங்கடேசனின் மனைவி சித்ராவிற்கு வந்துள்ளது. இதை அறிந்த முருகேசன் விவசாய நிலத்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா வைரஸ்” 13 படுக்கை…. தனி வார்டு…. திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி விளக்கம்…!!

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் வகையில் 13 படுக்கை கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை அண்டை நாடான சீனாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட பல இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சீனாவில் இருந்து வந்த இந்தியர்கள் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காற்றின் மூலம் எளிதில் பரவும் இந்த வைரஸ்  தமிழகத்திலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அக்க்ஷய பாத்திரம்” பணம்…. பொருள்…. நகை….. எல்லாம் UNLIMITED….. ரூ2,10,00,000 மேசடி…. 8 பேர் கைது….!!

திருப்பத்தூர் அருகே அக்ஷய பாத்திரம் இருப்பதாக கூறி ரூபாய் 2 கோடியே 10 லட்சம் மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் இவரிடம் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று எங்களிடம் பணம், பொன், பொருள் உள்ளிட்டவற்றை அளவில்லாமல் கொடுக்கக்கூடிய அட்சய பாத்திரம் இருப்பதாகவும் அதன் விலை ரூபாய் 2 கோடியே 10 லட்சம் என்றும் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய நவீன்குமார், பணத்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன் மரணம்….. வீட்டை விட்டு வெளியே போ…. மைத்துனர்கள் துரோகம்…. தீ குளிக்க முயற்சி….. பாதிக்கப்பட்ட தாய்…மகன்….மகள் கைது….!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை  சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி மனுக்களை  அளித்தனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருப்பத்தூர் வேடியப்பன் நகர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ7,50,00,000 செலவு….. PLEASE உதவி பண்ணுங்க…. இல்லைனா FINE தான்….. நகராட்சி ஆணையர் பேட்டி….!!

குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் எங்களுக்கு அபராதம் விதிக்க அனுமதி உண்டு அதை செய்யக்கூடாது எனில், மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவ வேண்டும் என்று ஆம்பூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை  அடுத்த ரெட்டிதோப்பு, தார்வழி உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை வேலூர் மாவட்ட நகராட்சி ஆணையர் ஆலோசனைகளின் படி பல்வேறு மாறுதல்கள் செய்து திட்டத்தை ஆம்பூர் நகராட்சி செயல்படுத்தியுள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண நாளன்று…. கோர விபத்து….. மணமகன்… மணமகள் படுகாயம்….. திருப்பத்தூர் அருகே சோகம்…!!

திருப்பத்தூரில் திருமணம் நடைபெற இருந்த நாளன்று மணமகன் மணமகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அமலா என்பவரை சிலம்பரசன் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, இருதரப்பு வீட்டார்களும் முடிவு செய்து செய்த நிலையில், நேற்றைய தினம் திருப்பதியில் இருவருக்கும் திருமணம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல் … திருப்பத்தூரில் பரபரப்பு ..!!

திருப்பத்தூரில்  பொது கழிவறையை சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் 32-வது வார்டு கவுதம் பேட்டையில்  சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வீடுகளில் தனிநபர் கழிபறை கிடையாது. இதனால் அங்குள்ள பொதுக்கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிபறையில் போர்வெல் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படும். இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பு போர்வெல் இயந்திரம்  பழுது ஏற்பட்டது. இதனால் கழிவறைக்கு தண்ணீர் வரவில்லை என்பதால். அப்பகுதி பெண்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

டாக்டர் லீவு…. பிரசவம் பார்த்த NURSE….. தாய்-சேய் மரணம்…. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை….!!

திருப்பத்தூரில் மருத்துவரிடம் செல்போனில் பேசிக் கொண்டே செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய் சேய் உயிரிழந்தது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆரீஃ ப் நகரைச் சேர்ந்தவர்  இம்ரான். இவரது மனைவி பரிதா என்பவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றெடுத்த சில மணிநேரங்களிலேயே பரிதா உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர்  அன்று மருத்துவமனையில் […]

Categories
திருச்சி திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஐந்து நாட்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வாணியம்பாடி தனியார் மைதானத்தில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மாபெரும் கண்டன பேரணி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பூட்டு

கொல்லகுப்பம் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு இளைஞர்கள் பூட்டு போட்டது அந்த பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய  இளைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எந்த ஒரு  நடவடிக்கையும் இல்லை எனவும் கிராமசபை தீர்மானங்களை நிறைவேற்றாதது  குறித்து அதிகாரிகளுடன் கொல்லகுப்பம்  இளைஞர்கள் வாக்குவாதம். கிராமசபை தீர்மானங்களை நிறைவேற்றவில்லை அதுதான் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இளைஞர்கள் பூட்டு போட்டனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ3,11,00,000 மதிப்பு….. 9,096 மாணவர்களுக்கு….. இலவச சைக்கிள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3கோடியே 11 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் அமைச்சர்  நிலோபர் கபில் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2019 2020 ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்ஆகியோர் கலந்துகொண்டு மிதிவண்டி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்து இறந்த காளை…. ஊர் தலைவர்கள் கைது….. ஊர் மக்கள் சாலை மறியல்….!!

திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் காளை உயிரிழந்ததிற்காக ஊர் தலைவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை  அடுத்த கொத்தட்டை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கிருஷ்ணகிரி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தவகையில் ராமன் என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று  களத்திற்குள் விடப்பட்டபோது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“DIFFRENT AWARENESS” ஹெல்மெட் போடாதவர்களுக்கு ரோஜா பூ….. பெண்காவலர்கள் புதிய முயற்சி….!!

திருப்பத்தூரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெண் காவலர்கள் ரோஜா பூ வழங்கி புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழாவானது தமிழகத்தில் நடைபெறும். இவ்விழாவின் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான விழிப்புணர்வுகளும்  ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இவ்வாண்டு திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் பெண் காவல் அதிகாரிகளும், மானிய விலையில் ஸ்கூட்டர் பெற்றவர்களும் தங்களது ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர். இப்பேரணியானது […]

Categories

Tech |