நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரத்தில் 3 பேர் மட்டுமே ஈடுபட வேண்டும் என அலுவலர் எம். பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் எம். பிரதீப் குமார் மற்றும் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்துள்ளார். இதில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் பிரதீப் குமார் கூறியதாவது, இம்மாவட்டத்தில் […]
Category: திருப்பத்தூர்
முதியவரை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொல்ல கொட்டாய் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், கல்யாணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கல்யாணி மகனுர்பட்டிப்பள்ளியில் வசிக்கும் சக்திவேல் என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக கல்யாணி தனது பெற்றோரை பார்ப்பதற்காக குரும்பேரி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த 4 மர்ம […]
ஒரே நாளில் 486 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் இருக்கும் 126 வார்டுகளுக்கும் மற்றும் 3 பேரூராட்சிகளில் இருக்கும் 45 வார்டுகளுக்கும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே நாளில் மட்டும் 486 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து நகராட்சி மற்றும் […]
தனியார் இடத்தில் புகுந்த நல்ல பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நல்ல பாம்பை பிடித்து அருகில் இருக்கும் வனப்பகுதியில் விட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 30 வார்டுகளில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க நேரடியாக போட்டியிடுகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கட்சி வேட்பாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் நகராட்சியில் மொத்தமாக 36 வார்டுகள் உள்ளது. இதனை அடுத்து கடந்த 1-ஆம் தேதி நகராட்சியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகன் என்பவர் வெளியிட்டுள்ளார். இதைப்போல் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]
ரயில் பெட்டியில் உள்ள கழிவறை அருகாமையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியிலிருந்து சென்னை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் பெட்டியில் கழிவறை அருகாமையில் 35 வயதுடைய பெண் இறந்து சடலமாக கிடப்பதாக டிக்கெட் பரிசோதகர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அந்தப் பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தனர். இதில் அவர் உயிரிழந்திருப்பது ரயில்வே காவல்துறையினருக்கு […]
பொங்கல் தினத்தை முன்னிட்டு 3,22,800 நபர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அலுவலர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் வசிக்கும் 3,23,332 நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் இதில் 3,22,800 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதன் மூலமாக தமிழகத்திலேயே இம்மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மாவட்டம் முதலிடத்தை பிடித்ததற்காக அலுவலர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் ஆகியோர்களை கலெக்டர் பாராட்டியதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
6 கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடிகாடு கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் மாரியம்மன் கோவில் அருகாமையில் நின்ற வாலிபர் காவல்துறையினரை பார்த்ததும் திடீரென்று தப்பி ஓடியுள்ளார். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் சோழர் நகரில் வசிக்கும் சூரியமூர்த்தி என்பதும், செங்கமேடு […]
நில அளவை பதிவேடு உதவி இயக்குனர் சுப்ரமணி நில அளவையர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சேகர் தனது கிராமத்தில் இருக்கும் 3 வீட்டு மனைகளை அளவிடுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவரிடம் நில அளவையராக பணியாற்றிக் கொண்டிருந்த பாலாஜி என்பவர் 8000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இது பற்றி சேகர் […]
காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் சிப்காட் முகவரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பாக வந்து கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தன் உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை […]
முகாமிற்கு அளிக்கப்பட்ட இடம் உதவியாக இல்லை எனக் கூறி பெண்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் ஒன்றியம் மேல் சின்னபள்ளிகுப்பம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு அதிகாரிகள் தலைமையில் முகாமுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது கட்டிட பணி நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து அந்த இடம் முகாம் மக்களுக்கு உதவியாக இல்லை எனக் கூறி […]
வீட்டிற்கு சென்ற பள்ளி ஊழியர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தனது வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கு வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சரத்குமார் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூர் ராமசாமி வட்டம் பகுதியில் ராணுவ வீரரான சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் கவிதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளனர். இதனை அடுத்து சம்பத்குமார் பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாட விடுமுறையில் வந்துள்ளார். அப்போது சம்பத்குமார் தனது இருசக்கர வாகனத்தில் தாமலேரிமுத்தூர் பகுதியில் இருக்கும் […]
ரயிலில் கடத்த இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடிப் பகுதியில் இருக்கும் இரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரயிலின் மூலமாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலகம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள்கள் மூலமாக மூட்டைகள் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து ரயில் நிலையத்தில் […]
லாரி அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கென்னடிகுப்பம் பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜல்லி ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதனை அடுத்து மின் கம்பத்தில் மோதிய ஜல்லி லாரியை சிறை […]
தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா மற்றும் […]
ஐஸ்கிரீம் கடையில் வைத்து இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரும், பர்கூர் பகுதியில் வசிக்கும் பகலவன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் மற்றும் அவருடன் வந்த பெண்களும் நேதாஜி சாலையில் இருக்கும் ஒரு கடையில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மோகமத் அல்பாஹத் மற்றும் ஷாநாவாஸ் ஆகிய இருவரும் ஐஸ்கிரீம் கடைக்கு வந்து 18 வயதுடைய வாலிபரிடமும் அவரின் நண்பர் பகலவனிடமும் வாய் தகராறில் […]
மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அதனால் வாணியம்பாடி பேருந்து நிலையப் பகுதியில் இருக்கும் எல்.ஐ.சி அலுவலகம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் உதயேந்திரம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பதும், வாணியம்பாடியின் […]
கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபரை தாக்கியதால் சிக்கன் கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் பச்சூர் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகின்றார். அதன்பின் பாலுவிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தமிழரசன் 60 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இதனை அடுத்து கொடுத்த கடனை கேட்பதற்காக பாலுவின் […]
வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 11 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் வங்கியின் மினி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் உரிய ஆவணங்களின்றி 11 லட்ச ரூபாய் கொண்டு சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் […]
உரிய ஆவணம் எதுவும் இன்றி எடுத்து வந்த 18 பவுன் தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பஜார் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னாம்பேட்டை பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பவர் குடியாத்தம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 18 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரை […]
நிலம் அளவீடு செய்வதற்கு லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சேகர் தனது கிராமத்தில் இருக்கும் 22 சென்ட் நிலம் மற்றும் 3 வீட்டுமனைகளை அளவிடுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதன்பின் சேகரை கடந்த டிசம்பர் மாதம் நில அளவை குறித்து தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளராக வேலை பார்க்கும் […]
உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி எடுத்துச் சென்ற 1 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தற்போது ஆம்பூரில் பைபாஸ் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் சத்தியமூர்த்தி என்பவர் உரிய ஆவணங்களின்றி 1,00,000 ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இருணாபட்டு பகுதியில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் விவசாய நிலத்தின் அருகில் இருக்கும் மலைப்பகுதியிலிருந்து மயில்கள் மற்றும் ஏராளமான பறவைகள் இறை தேடி நிலத்திற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. பின்னர் இவை பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க முடிவு செய்த மேகநாதன் விஷத்தை கலந்து அதனை நிலத்தில் தூவியுள்ளார். அப்போது உணவு தேடி வந்த 7 மயில்கள் விஷத்தை […]
வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மள்ளலூர்-பச்சூர் ரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தை கடக்கும் போது 35 வயதுடைய வாலிபர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார், எந்த ஊரில் வசித்தவர் […]
இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திம்மாம்பேட்டை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருப்பதி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சுமித்ராவின் தம்பி மனைவி சரஸ்வதிக்கு தற்போது குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். […]
லாரி மீது கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் பகுதியில் குபேந்திரன்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹாலோ பிரிக்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் உறவினர் ராஜேந்திரசிங்கின் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குபேந்திரன்சிங் மற்றும் அவரின் குடும்பத்தினர் வாடகைக் காரில் சென்று கொண்டிருக்கும் போது பங்களாமேடு அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற நிலையில் அவ்வழியாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் கார் […]
சரக்கு ரயிலில் ஏறிய வாலிபரை மின்சாரம் தாக்கியதால் படுகாயம் அடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் 31 வயதுடைய வாலிபர் ஒருவர் சரக்கு ரயில் மீது ஏறி உள்ளார். அப்போது மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் மின்சாரம் தாக்கி வாலிபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இது பற்றி அறிந்த ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் உமராபாத் அருகில் இருக்கும் பாலூரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் இளம்பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ளனர். […]
டிராக்டர் நிலைதடுமாறி 2 பெண் கூலித் தொழிலாளிகள் படுகாயமடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தாகவுண்டனூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கதிரிமங்கலம் பகுதியில் இருந்து டிராக்டரில் செங்கல்கள் ஏற்றிக் கொண்டு பணியாண்டப்பள்ளி சென்று கொண்டிருந்தனர். இதில் டிராக்டர் வாகனத்தில் கூலி தொழிலாளிகள் சின்னத்தாய் மற்றும் பழனியம்மாள் ஆகிய இருவரும் செங்கல்கள் மீது அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அப்போது ஏரிக்கரை வளைவில் டிராக்டர் சென்ற நிலையில் திடீரென […]
வனப்பகுதியில் மெக்கானிக் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் யுவராஜ் வேலைப் பார்க்கும் கடையில் கணவாய் புதூர் பகுதியில் வசிக்கும் திருமலை என்பவரும் வேலை செய்து வந்திருக்கிறார். அதன்பின் நண்பர்களான இருவரும் வாணியம்பாடி அருகில் இருக்கும் பாலாறு புல்லூர் தடுப்பணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதில் திருமலை மட்டும் வீடு திரும்பியதாகவும், யுவராஜ் […]
ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் அமைக்கப்படாததால் மத்திய அரசை கண்டித்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகாமையிலிருக்கும் பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க நகர செயலாளர் இளங்கோவன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் கே.சி.இ. சிற்றரசு, […]
குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 1 1/4 கோடி மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சல் கிராமத்தில் அமைந்திருக்கும் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடன் இருந்துள்ளார். இதனையடுத்து பல துறைகளில் சிறப்பாக […]
நிலத்தகராறு காரணத்தால் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காயல்நத்தம் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காந்தி என்ற தம்பி இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அண்ணன் தனது தம்பியை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த காந்தியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அயித்தம்பட்டு பகுதியில் பன்னீர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பன்னீர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் பன்னீரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு […]
ரயில் நிலையத்தில் தேசியக்கொடி கிழிந்த நிலையில் தொங்கியதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருக்கும் 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. இந்நிலையில் அதே சமயம் சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட தேசியக்கொடி இறக்கப்படாமல் கிழிந்த நிலையில் பறந்து கொண்டிருந்தது. இதனால் ரயில்வே நிர்வாகம் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக கூறி சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். இது பற்றி ரயில்வே நிர்வாகம் கூறியதாவது, தேசியக்கொடி ஏற்றி […]
அரசியல் கட்சி சின்னங்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கும் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கும் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கப்படுகிறது. பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக வந்துள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்திலிருக்கும் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு அரசியல் கட்சி […]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 18 வயது பூர்த்தியான இளம்பெண் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை அவர் வழங்கி பேசியுள்ளார். பின்னர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு […]
இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்பீம் நகர் பகுதியில் ஏகாம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஏகாம்பரம் தேன்மொழியை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருக்கும் போது தாமல் தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் சென்ற நிலையில் அரசுப் பேருந்து திடீரென இருசக்கர வாகனம் […]
பிரியாணி கடையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பிரியாணி கடையில் சில தினங்களுக்கு முன்பாக கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் ஹார்டு டிஸ்க் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது பற்றி கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசிக்கும் முரளி என்பவரை […]
சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் செயினை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகம்பியம்பட்டு பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் தனது பசுமாட்டிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அப்போது கலைவாணி கூச்சல் போடவே […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 40 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதில் இவரை அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராவிதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் கொள்ளாபுரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கொள்ளாபுரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை […]
சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூரில் ஒரு சில பகுதியில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி தனிப்படை அமைத்து வாணியம்பாடி முழுவதும் சோதனை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அம்பூர்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்த வெங்கடேசன், வேங்கையன், சுகுமார் மற்றும் ஆறுமுகம் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது […]
சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பகுதியில் குறும்படம் தயாரிப்பாளரான அப்துல் மாஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் மாஜித் குறும்படம் எடுப்பதற்காக காரில் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கார் என்ஜினில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை அறிந்த அவர்கள் உடனே காரை நிறுத்தி பார்த்துள்ளனர். அப்போது என்ஜினில் இருந்து அதிகமாகப் புகை […]
நடைப்பயிற்சி சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயமாதா நகர் பகுதியில் அமீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புத்துக்கோயில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா நகர் அருகில் சென்ற நிலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ராமர் ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் பாலமுருகன், அமீன் ஆகியோர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
நிச்சயிக்கப்பட்ட பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் கிராமத்தில் வினிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான ஜேம்ஸ்பாண்டு என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இருவரும் சென்னாகுப்பத்தில் இருக்கும் தேவாலயத்துக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது வினிதா ஸ்கூட்டரை ஓட்டி வர ஜேம்ஸ்பாண்டு பின்னால் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது தனியார் கல்லூரி அருகில் வந்த நிலையில் முன்னாள் மின்கம்பிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஓட்டுநர் […]
தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணடி குப்பம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமாரின் தந்தை அவரை வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றி வந்தால் எப்படி குடும்பம் நடத்த முடியும் என கேட்டதால் மன உளைச்சலில் இருந்த […]
உழவர் சந்தையில் பூமி பூஜை போட்டு பணிகளை வேளாண் துணை இயக்குனர் தொடங்கி வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தமிழக அரசு சார்பாக உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள கடைகள் கொரனோ ஊரடங்கு காரணமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிமெண்ட் பூச்சிகள் விழுந்து தரைத்தளம் பள்ளம் மேடாகவும், மேற்கூரைகள் மழை காற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு உழவர் சந்தை மேம்படுத்த 20 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. […]