சக்தி வாய்ந்த வெடிகளால் பாறைகளை தகர்க்கும் பணி மேற்கொள்வதன் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றியம் சூரிய நகரம் ஊராட்சியில் அரசு கல் குவாரி இருக்கின்றது. இங்கே ஐந்து வருடத்திற்கு குத்தகையை தனியாள் ஒருவர் எடுத்திருக்கின்றார், சென்ற இரண்டு மாதங்களாக இந்த கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலையில் எல்லாம்பள்ளி கிராம மக்கள் அரசு அனுமதி வழங்கிய அளவைவிட […]
Category: திருவள்ளூர்
கல்குவாரிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பெரிய நகரில் கடந்த 2018-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டது. இந்த உரக்குடில் மூலம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து உரமாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இந்த பசுமை உரக்குடில் அருகே பல கல்குவாரிகள் உள்ளது. அந்த கல்குவாரிகளில் […]
பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என ஆந்திர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பிச்சாட்டூர் அணை உள்ளது. இந்த அணை நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த தண்ணீர் ராமகிரி, சுருட்ட பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம் ஆகிய வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் […]
திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு-மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தினம்தோறும் ஏராளமான ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக வந்த சென்னை-கோயமுத்தூர் இன்டர்சிட்டி, சென்னை-திருவனந்தபுரம், சென்னை-பெங்களூரு உள்ளிட்ட பல ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் பழுது பார்க்க ஊழியர்கள் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சியில் உள்ள ஜீவா தெருவில் வசித்து வருபவர் திவாகர் (33). இவர் தி.மு.க-வின் பொன்னேரி நகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரஞ்சனி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையை இவர் நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் ஐந்து பேர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் ஷாலினி (22). இவருக்கும் மத்தேரி கிராமத்தை சேர்ந்த குமாரவேல் என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் ஆன மூன்று மாதத்திலேயே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஷாலினி தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து இரு வீட்டாரும் கடந்த 15-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி ஷாலினி மற்றும் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி காந்திரோடு பகுதியில் 60 வருடங்களும் மேலாக பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது 1300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையின் காரணமாக சுவர்கள் எல்லாம் சேதமடைந்து இடிந்து விழுகின்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் “வழக்கம்போல் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. இதனையடுத்து மதியம் 3 மணியளவில் […]
ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசத்தலை ஆற்றில் தரைப்பாலத்தில் கட்டப்படும் பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலை ஆறு இருக்கின்றது. இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் 16 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும். இந்த ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கொசுத்தலை ஆற்றின் மீது இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். அப்போது பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு மாற்று வழியில் செல்லும் நிலை இருக்கின்றது. […]
திருத்தணி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மாலினி என்பவரை சென்ற நான்கு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் சென்ற இரண்டாம் தேதி மாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து […]
தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது/ இதனால் சென்ற ஒன்பதாம் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் அதிகபட்சமாக வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரி 35 அடி உயரத்தை […]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து யாரும் ஆற்றில் குளிக்கவும் கூடாது என கூறியிருந்தார். நேற்று முன்தினம் ஆரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார்(20) என்பவர் தனது நண்பர்களுடன் திருக்கண்டலம் […]
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (17.12.2022) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோல மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை […]
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்இன்றும் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் பூண்டி ஏறி தண்ணீர் அளவு உயர்ந்தது. இதனால் ஏறியின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 7000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 42 பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். இதில் 18 பேர் […]
ஆபத்தை உணராமல் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிச்சைவாக்கத்தில் இருக்கும் தடுப்பணை நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை […]
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தினால் கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் பொன்னேரி துணை ஆட்சியர், தாசில்தார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதுபோல […]
கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நகுல் (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குப்பன் என்பவரின் மகன் கோபிசந்த்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கண்வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என […]
பண்ணை உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தோட்டத்திலுள்ள பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்த மகிமை ராஜ் என்பவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற மாதம் 30-ம் தேதி இரவு நேரத்தில் இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார் மற்றும் மோட்டார் […]
மாண்டஸ் புயலால் திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் […]
மாண்டஸ் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. சென்னையில் இருந்து […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய நாகபூண்டி என்னும் கிராமம் கிராமத்தில் பிரதான சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்ததால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பின்பும் இந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 4 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு மாலினியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த மாலினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாலினியின் உடலை மீட்டு […]
சக்ராசனத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அருகே சக்கராசனத்தை பின்னோக்கி வளைந்து 29 முறை வாயால் பேப்பர் கப்புகளை கவ்வியபடி முன்பக்கம் வீசி பள்ளி மாணவன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கும்முடிபூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த யஸ்வந்த் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் அங்கு இயங்கி வரும் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயிற்சி பெற்ற வருகிறார். இதையடுத்து இவர் […]
எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருங்குளம் கிராமத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை போட எரிவழி குழாய் பதிக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இங்கு எரிவாயு திட்டம் வருவது குறித்து இதுவரை எங்கள் ஊராட்சிக்கு எந்த ஒரு தகவலையும் […]
சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கவுன்சிலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னங்காரணி ஊராட்சியில் அருண் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற 6- வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் அருண் பாண்டி தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அருண் பாண்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருண்பாண்டி […]
திருவள்ளூர் மாவட்டம் இடையூர் -கலியனுரை இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் முழுவதும் மேம்பாலம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளார்கள். பாலம் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளதால் ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி ஏணி மூலமாக பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க […]
பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே கொசஸ்தலை ஆற்று தடுப்பணையின் கரைகள் சரிந்து சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே இருக்கும் கொசஸ்தலை ஆற்றில் சென்ற 2021 ஆம் வருடம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை சார்பாக 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 230 மீட்டர் நீளம் 2 மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது. இதன் பணியானது 90% நிறைவடைந்த நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்ற சில நாட்களாகவே […]
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி பணத்தை பறித்துச் சென்றுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையம் அருகே இருக்கும் கல்பட்டு ஊராட்சியில் உள்ள எம்.ஜி.எம் நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கின்றார். இவரும் ஜோதிமா என்பவரும் சென்ற 14ஆம் தேதி காலையில் பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்கள். பின் அவர்கள் கிராமத்தில் இருக்கும் கனரா வங்கியில் பணமாக பெற்றார்கள். […]
சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்களை திருடிய வழக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இருக்கின்றது. இங்கு சென்ற 10-ம் தேதி நள்ளிரவில் 12 டன் எடையுள்ள உயர்தர இரும்பு பிளேட்டுகளை மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு அதன் வழியாக கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். ஒவ்வொரு இரும்புப் பிளேட்டாக ஒருவர் […]
கனமழை காரணமால் குடிசை வீடு இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவன் தனது மனைவி முனியம்மாள், மகன் சுரேஷ், மருமகள் நந்தினி, பேரன் சுமித், பேத்தி சுனிதா உள்ளிட்டோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த தேவன் மீதும் அவரின் மனைவி மற்றும் பேரன் மீது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. […]
ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்புகளில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் அடிக்கடி நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தார்கள். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை […]
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வசிக்கும் தம்பதிகள் ரசாக்- ரெஜினா .இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜ்மீர் என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் இந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுடன் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக காபி வித் கலெக்டர் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மாணவ-மாணவிகளுடன் உரையாடினார். அப்போது ஆட்சியர் கூறியதாவது, […]
15 வருடங்களாக பேருந்து இல்லாததால் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று மாணவ-மாணவிகள் படித்து வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவலாங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்த ஊராட்சி ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள நிலையில் அரசு பள்ளிகள் ஏதும் இல்லை. இதனால் கல்வி கற்பதற்காக மாணவர்கள் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்காடு குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றார்கள். மேலும் கல்லூரி படிக்கும் மாணவர்களும் ஆற்காடு […]
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது ஏ.டி.எம் கார்டு எந்திரத்தில் மாட்டிக் கொண்டதால் வாலிபர் போதையில் தனது கைகளால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனையடுத்து போதையில் வாலிபர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் காலை ஏ.டி.எம் மையத்திற்குள் வாலிபர் படுத்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]
கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு […]
அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,
பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பாக முதல்வரின் ஆணைக்கிணங்க மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருக்கும் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, இந்த எந்திரத்தின் மூலம் ரூபாய் பத்து செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம். திருவள்ளூரில் ஒரு […]
நில ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கொரக்கத்தண்டலம் பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவர் எறையூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது தந்தை ஆறுமுகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக தனபால் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி […]
கஞ்சா பொட்டலங்களுடன் தப்பியோட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பா. சீபாஸ் கல்யான் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் நரசிங்கபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாலிபர் போலீசார் இருப்பதை கண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் […]
பிறந்த 54 நாட்களில் குழந்தை உயிரிழந்ததால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்துள்ள கூளூரில் வசித்து வரும் ஜானகிராமன் என்பவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த 54 நாட்களில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் நளினி மிகுந்த மன […]
இளம்பெண்ணை காரில் கடத்த முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி காலனியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்ற வாலிபர் கடந்த 6 ஆண்டுகளாக கொடிவலசை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் ஜெயக்குமாரை காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் தனது தாயாருடன் நகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது […]
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வங்க கடலை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் 300க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்களில் வசித்து வரும் மீனவர்கள் ஏரி மற்றும் வங்க கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றார்கள். இந்த சூழலில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில் கடற்காற்று வீசுவதால் பழவேற்காடு கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் பழவேற்காடு ஏரியில் தங்களது மீன்பிடிப்புகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி உமா ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு செல்போன் ஹெட்செட் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹெட்செட் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோத்தான்டபட்டி- வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் […]
43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பூச்சி அத்திபேடு கிராமத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் பூச்சி அத்திப்பேடு பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூம்புழல் நகர் சாமிப்பிள்ளை தெருவில் கூலி தொழிலாளியான மகேஷ்வரன்(45) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு மகேஷ்வரன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெற்றோருடன் பயணம் செய்த 16 வயது சிறுமியிடம் மகேஷ்வரன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]