Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பட்டாக் கத்தியால்…. “கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்”… 2 பேர் கைது..!

திருவள்ளூர் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், பொதுமக்கள் அடிக்கடி நடந்து செல்லும் முக்கிய சாலையில் தனது நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அஜித்குமார், மற்றும் கலைவாணன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சினிமா ஆசை” ரூ1,00,00,000….. 19 சொகுசு கார்…. திருவள்ளூர் அருகே மோசடி சம்பவம்…!!

திருவள்ளூரில் சினிமா நடிகர்களுக்கு கார் வாடகைக்கு தேவைப்படுவதாகக் கூறி எடுத்துச்சென்று ரூபாய் ஒன்றரை கோடி அளவில் மோசடி செய்து தலைமறைவாகிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது  செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கார் உரிமையாளர்களை சந்தித்த மூன்று பேர் சினிமாகாகவும், தனியார் கம்பெனிகளுக்காகவும் கார் வாடகைக்கு வேண்டும் என்றும் நாளொன்றுக்கு 3 ஆயிரம் வாடகை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 19 பேரிடம் காரை பெற்றுச் சென்றனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வந்த புகாருக்கு…. சம்மந்தமில்லா சோதனை….. 15 வயது சிறுவன் மீட்பு…. கரும்புக்கடைக்காரர் கைது…!!

திருவள்ளூரில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக  கரும்பு கடைக்காரர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் மணவாளர் நகர்ப்பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெரிய ஜவுளிக் கடைகளில் தான் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. ஆனால் அங்கெல்லாம் சோதனை மேற்கொள்ளாமல் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கரும்பு ஜூஸ் கடையில் 15 வயது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருந்தவே மாட்டீங்களா…. கடும் கோவத்தில் காவல்துறை….. 6 கல்லூரி மாணவர்கள் கைது….!!

திருவள்ளூரில் பிறந்தநாளன்று பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 6 கல்லூரி மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சேலை கிராமத்தில் வசித்து வருபவர் கவியரசு. இவர் சென்னை தனியார் பள்ளியில் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதியன்று இவரது பிறந்தநாளை கவியரசரின் நண்பர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட நினைத்து சேலை கிராமத்தின் சாலையில் கூட்டமாக வழிமறைத்து நின்று, அவர் பெயர் பொறிக்கப்பட்ட கேக்கை பட்டா கத்தியால் வெட்டி கொண்டாடிய பின் கத்தியை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலி..!!

திருத்தணி அருகே 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தெக்களூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து  குழந்தை ஓன்று உயிரிழந்தது.  அந்தோணி என்ற 4 வயது குழந்தை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்ததபோது எதிர்ப்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அம்பத்தூரில் இளைஞர் கடத்தல் – 3 பேர் கைது

அம்பத்தூரில் இளைஞரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் : அம்பத்தூரில் இளைஞர் திலீப் குமாரை காரில் கடத்திய ஐவரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுத்து ஏமாந்த ஏஜென்ட் சரவணன், தமிழ்சந்திரன், நரேஷ் குமார் கைது செய்யபட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட்ட திலீப் குமாரை புதுச்சேரியில் மீட்டு போலீசார் கொண்டு வந்தனர். வேலைக்காக திலீப்குமாரிடம் 10 லட்சம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இணை இயக்குநர் மீது பாலியல் புகார்… அரசு தலைமை மருத்துவமனையில் விசாரணை..!!

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டையடுத்து, அங்கு கூடுதல் இயக்குனர் விசாரணை நடத்தினார். திருவள்ளுர் மாவட்டத்தில் பொது சுகாதார ஊரக நலப்பணிகள் இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தயாளன். இவர் அங்கு வேலைபார்க்கும் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், பணியிடமாற்றம் செய்யக்கோரி கேட்பவர்களிடம் லஞ்சம் பெற்றதாகவும், நோயாளிகளுக்குரிய மருந்துகளை வாங்குவதில் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கூடுதல் இயக்குனரான மாலதி என்பவர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு தலைமை இயக்குனர் மீது பாலியல் குற்றசாட்டு….

அரசு தலைமை மருத்துவமனையில் இணை இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதையடுத்து அங்கு கூடுதல் இயக்குனர்  விசாரணை மேற்கொண்டார். சுகாதார துறையில்  பொது சுகாதளராக பணிபுரியும் தயாளன் என்பவர் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பணியிடமாற்றம் கோறுகையில் லஞ்சம் பெற்றதாகவும், நோயாளிகளுக்கான மருந்துகளை வாங்குவது முறையீட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்ற கூடுதல் இயக்குனர் மாலதி, செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை மேற்கொண்டார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீரராகவர் கோவில் தேரோட்டம்… பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது…!!

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை மாத பிரம்மோற்சவ தேர் விழா: விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வீரராகவ சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அலங்கரிக்கப்பட்டு,  தேர் நான்கு மாடவீதிகளில் தேர் உலா வந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீரன் படம் பாணியில்…. இரும்பு… கடப்பாரை… ஆயுதங்களுடன்…. திருட முயற்சி….. தனிப்படை அமைத்து மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

திருவள்ளூரில் கடப்பாரை, இரும்பு கம்பிகளுடன் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வசித்து வருபவர் பரசுராமன். இவர் அப்பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் தனது கடையின் பின்புறம் அவர் இருக்கும் வீட்டோடு சேர்த்து மூன்று வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்றையதினம் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் இரும்பு கம்பி கடப்பாரை உள்ளிட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குளிர்பான கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2,00,000 கொள்ளை..!!

குளிர்பான கடையின் ஷட்டரை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நகர காவல் நிலையம் அருகேயுள்ள சத்தியமூர்த்தி நகர் தொகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான குளிர்பான மொத்த விற்பனை கடை உள்ளது. இவர் வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, இன்று மாலை கடையை திறப்பதற்காக செல்வம் வந்துபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுலா….. மலையில் இருந்து விழுந்து….. PT MASTER மரணம்….. ஆந்திராவுக்கே சென்று போராட்டம் நடத்திய உறவினர்கள்…!!

திருவள்ளூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுற்றுலா சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் ஆந்திராவுக்கே சென்று விசாரணை நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் வெங்கலம் பகுதியை அடுத்த வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசக்திவேல். உடற்கல்வி  ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் மாவட்டத்தில் உள்ள இராமகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின் அங்கே சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், மலையின் உச்சியில் ஒரு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிகளில் தீயாய் வெடிக்கும் சாதி மோதல்: ஆட்சியரிடம் மனு

திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் சாதி பிரச்னை காரணமாக மாணவர்கள் மீது பாரபட்சம் காட்டும் பேராசிரியர்கள், சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசினர் கலைக்கல்லூரி ஒன்று இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் திருத்தணி, அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் அதிகமாகப் படித்துவருகின்றனர். அதேபோன்று அப்பகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகத்தினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தக் கல்லூரியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டருகே கோவில்….. அரை மணி நேர கேப்பில்….. 10 சவரன் நகை… ரூ15,000 திருட்டு….!!

திருவள்ளூரில் வீட்டருகே உள்ள  கோவிலுக்கு சென்று வருவதற்குள் லாரி உரிமையாளர் வீட்டில் திருடர்கள் கைவரிசையை காட்டிய  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்  பகுதியை அடுத்த ஆத்திபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவரது  மூத்த மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வர, இளைய மகன் அருகில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இளையமகன்  பணிக்கு செல்ல தனது மனைவியுடன் கஜேந்திரன் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மது போதை” தந்தையை கட்டையால் தாக்கி கொன்ற மகன் கைது….. திருவள்ளூரில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மது போதையில் தாயாரிடம் தகராறு செய்த தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி பகுதியைடுத்த கல்லுகடை வீட்டைச் சேர்ந்தவர் ரவி. இவர்  தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில்  மனைவி வேலை செய்யும் இடத்திற்கே  சென்று பிரச்சினை செய்துள்ளார்.  இது தொடர்பாக இவருக்கும்  அவரது இளைய மகன் சுதாகரன் ஆகியோருக்கும்  இடையே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீர் முடிவு…. தூக்கில் தொங்கிய மனைவி….. என்ன நடந்தது…?? ஏன் தற்கொலை…?? போலீசார் விசாரணை…!!

திருவள்ளூரில் திடீர் முடிவாக பெண் ஒருவர் தூக்கில் தொங்க, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த ஆர்கே பேட்டை கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார். இவர்  எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகிமா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்று குழந்தைகளும் பள்ளிப் படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

 பெரவல்லூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரவல்லூரில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழ வியாபாரிகளான இரண்டு பெண் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவ்விபத்து குறித்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ4,00,000….. அரசு வேலை வாங்கி தாரேன்….. பண மோசடி செய்த கணவன்-மனைவிக்கு சிறை தண்டனை….!!

திருவள்ளூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண ,மோசடி செய்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா. பட்டதாரிகளான இவர்கள் இருவரும் அரசு வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்கான படிப்புகளைப் படித்து வந்தனர். இதையடுத்து இருவரும் அரசு வேலைக்கு ஆசைப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள எண்ணி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“போகி பண்டிகை” பழைய பொருள்களை எரிப்பதை தவிர்ப்போம்…… மாசு கட்டுப்பாட்டு வாரியம்…!!

திருவள்ளூரில் போகியன்று பழைய பொருள்களை கொளுத்தி புகை மண்டலத்தை ஏற்படுத்துவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டுமென மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பழையன கழிதல், புதியன புகுதல் என்பதே போகி பண்டிகை. அதன்படி தமிழக மக்கள் ஒவ்வொரு வருடமும் போகிப் பண்டிகை அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் துணிகள், பழைய பொருட்கள் உள்ளிட்டவற்றை தீயிலிட்டு கொளுத்தி போகி பண்டிகையை  கொண்டாடுவர். ஆனால் தற்பொழுது தமிழக மக்கள் அதுபோன்ற பொருட்களோடு சேர்த்து ரப்பர், நெகிழி […]

Categories
சேலம் தர்மபுரி திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு” பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் …!!

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி கமலா திரையரங்கின் அருகே நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசியக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இஸ்லாமியர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய கீதம் இசைப்பு…!!

பூந்தமல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மூன்றாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” – திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி..!!

பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திரைப்பட சங்க தேர்தல்” 235 வாக்கு வித்தியாசத்தில்…… TR அமோக வெற்றி…..!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவராக டி.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை  காஞ்சிபுரம் திருவள்ளூர்  மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தரர்களுக்கான தேர்தல் காஷ்மீர் திரையரங்கத்தின் அருகே மீரான் சாஹிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தன் அவர்கள் 235 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து செயலாளர் பதவிக்கும் மன்னன். பொருளாளர் பதவிக்கு பாபுராவ். துணைத்தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி கோவில் உண்டியல் பணம் திருட்டு….. மூதாட்டி உட்பட 3 பேர் கைது…..!!

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் பொழுது பணம் மற்றும் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருத்தணி கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபடுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சூரிய பிரபை என்ற மூதாட்டி உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பொழுது ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கத்தை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து…!!

செங்குன்றம் அருகே  தண்டல் பழனியில் உள்ள 2 தனியார் கிடங்குகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.  செங்குன்றம் அருகே  தண்டல் பழனியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ பற்றி  மளமளவென எரிந்து அருகிலிருந்த மரச்சாமான் கிடங்கிற்கும் பரவியது.  தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க போராடினர். இந்த தீ விபத்தில் எண்ணெய் கிடங்கு முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.   ஆனால் விபத்தில் யாருக்கும் காயம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் புதிய சாதனை…!!

முதன்முறையாக இளைஞருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேம்நாத்  என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அவரது வலது காலை இழக்க நேரிட்டது .இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டது . மருத்துவர்கள் அளித்த ஊக்கத்தினாலும் ,தொடர் பயிற்சியின் மூலமாகவும்  பிறரின் உதவியின்றி  செயல்பட முடிவதாக தெரிவித்தார் இதற்கு உறுதுணையாக […]

Categories
ஆன்மிகம் இந்து திருவள்ளூர் பல்சுவை மாவட்ட செய்திகள் வழிபாட்டு முறை விழாக்கள்

கார்த்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கோயில் எதிரிலுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய்யில், அகண்ட தீபம் ஏற்றப்படவுள்ளது. அதே நேரத்தில் மலைக்கோயிலின் மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

1 கிலோ வெங்காயம் விலை ரூ50 …… சண்டை போட்டுகொண்டு வாங்கிய மக்கள்… !!!

திருவள்ளூரில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு கொடுத்ததால் மக்கள் சண்டைபோட்டுக் கொண்டு வாங்கினர். இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைவதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகளவு சேர்த்து செய்யும் உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட நாடு எங்கிலும் வெங்காயத்தின்  விலை உச்சத்தில் இருக்கிறது. சென்னையின் புகழ்பெற்ற கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ சின்ன  வெங்காயம்  200 ரூபாய் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புதையல் எடுக்க வீட்டிற்குள் பள்ளம் தோண்டிய மனிதர் ..!!

திருவள்ளூர் அருகில் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி வீட்டிற்குள் இருபது  அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபரை வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.  சோழவரம் அருகே கும்மனூர் என்ற சிற்றூரை சேர்ந்த மோகன் என்பவர் தன்  வீட்டிற்குள் புதையல் இருப்பதாக   ஜோதிடர்  கூறியதை நம்பியுள்ளார். அதனால் புதையல் எடுக்கும் முயற்சியில்  தனது வீட்டிற்குள் சுமார் இருபது  அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளார். இதனை தெரிந்துகொண்ட  அக்கம்பக்கத்தினர் பொன்னேரி வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து, அங்கு வந்த  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேட்டி, சட்டையில் நாற்று நட்ட மலேசிய அமைச்சர்!

மலேசியாவின் சிலாங்கூர் மாகாண அமைச்சர் முகமது கைருதீன் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, விவசாயப் பணிகளை செய்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தின் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதீன் பார்வையிட்டார்.அப்போது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை உடை அணிந்து வந்த அவர், உறி அடித்தும், மாடுகளை வைத்து ஏறு பூட்டியும் அசத்தினார். இதில் முத்தாய்ப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி வெறும் 41 நாள்…. பெண் தற்கொலை …. கணவனிடம் விசாரணை …!!

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் கணவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள மேல்மதலம்பேடு மேல் காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமிக்கும், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. நாகராஜ், தனது மனைவி வீட்டிலேயே தங்கி பெயிண்டர் வேலை செய்துவந்துள்ளார். நாகராஜ் வழக்கம் போல் இன்று வேலைக்குச் சென்றுள்ளார். கணவர் வேலைக்குச் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்களை காப்பாற்றிய SUNDAY” கனமழையில் இடிந்து விழுந்த பள்ளிக்கூடம்…… திருவள்ளூரில் பரபரப்பு….!!

திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி இடிந்து விழுந்தது. திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் இயங்கி வரும் ANM என்ற அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பக்கவாட்டு சுவர்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் நனைந்து பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த பள்ளியின் கட்டிடம் திடீரென இடிந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேரம் பேசிய மகிளா நீதிமன்ற வழக்கறிஞர் – பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு…!!

மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளிகளிடம் பேரம் பேசி, பணம் வாங்கியதாக எழுந்த பல்வேறு புகாரின்பேரில், பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் (58), அவரது மனைவி கண்ணகி(52) ஆகியோரின் இளைய மகள் சத்யா(22) திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, துரை ராஜுன் சொந்த ஊரில் நல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை….!!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

11 மாத குழந்தை உட்பட 3 பேர் மரணம்….. மேலும் 19 பேருக்கு சிகிச்சை…. திருவள்ளூரை சூறையாடும் டெங்கு….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 114 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

40_க்கு மேற்பட்ட இடங்களில்… விடிய விடிய இடியுடன் கனமழை …. மின் இணைப்பு துண்டிப்பு…!!

சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட  பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]

Categories
கடலூர் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

இடியுடன் கூடிய கனமழை…. சுவர் இடிந்து விழுந்து பெண் பலி …!!

சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  இரவு முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

150 ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது… சூர்யாவின் அறிவுரையை ஏற்ற திருத்தணி ரசிகர்கள்..!!

திருத்தணியில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வாகன ஓட்டிகள் 150 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.  சென்னையை சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை வழியாக  ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருவள்ளுர் அருகே சோகம்”…. விஷவாயு தாக்கி பிறந்த நாளன்று இறந்த வாலிபர்…!!

திருவள்ளுர் அருகே விஷவாயு தாக்கி வாலிபர்  உயிரிழந்த நிலையில், நண்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.   திருவள்ளுர் அருகே பேரத்தூர் மாந்திப்பை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சம்பத்குமார் என்பவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சம்பத்குமார் தனது பிறந்த நாளையொட்டி நண்பர் நரேந்திரன் (வயது 31) என்பவருடன் ஓம்சக்தி நகரில் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரமத்தில் இருக்கும் போது  சந்தானம் குருஜி என்பவர்  கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் இருவரும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கஞ்சா போதையில்” பள்ளி குழந்தைகள் கடத்தல்…. 3 மணி நேரத்தில் இளைஞன் கைது…!!

திருவள்ளுர் அருகே கஞ்சா போதையில் இரண்டு குழந்தைகளை கடத்தி சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  திருவள்ளூர் மாவட்டத்தின் ஏரி மேட்டை சேர்ந்த வீரன் என்பவரது பிள்ளைகளான தனுஸ்ரீ, அருண் ஆகியோர் நேற்று வழக்கம் போல்  அனுப்பம் பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் தான் உங்களை பள்ளியில் இறக்கி விடுகிறேன் என்று கூறி லிப்ட் கொடுத்துள்ளார். அதை நம்பி அந்த இரு குழந்தைகளும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான பெண்ணிடம் ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த கேவலமான செயல்…!!

திருவள்ளூரில் விபத்துக்குள்ளாகி மயங்கிய நிலையில் இருந்த பெண்களிடம் இருந்து 4 சவரன் நகையை திருடி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. இவர் தனது  சகோதரிகளான லாவண்யா, சரண்யா உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. பின் அவர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக அவ்விடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூவரையும் மீட்டு ஏற்றிச்  சென்றது. இதில் செல்லும் வழியிலேயே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் தாக்குதல் “விசாரணை நடத்திய காவலருக்கும் அடி” இருவர் கைது..!!

திருத்தணியில் நண்பரை பேருந்தில் ஏற்றாததால் நடத்துனர் மற்றும் காவலரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர் விஜய்யை ரேணிகுண்டாவிற்கு வழியனுப்ப ஆந்திரா அரசு பேருந்தில் ஏற்றி விடுவதற்கு  பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் விஜய்யை ஏற வேண்டாம் என்று  நடத்துனர் கூறியதால்  சக்கரவர்த்தி ஆத்திரமடைந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அங்கிருந்த போக்குவரத்து காவலரான ராமன் என்பவர் வந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் கொலை செய்த மர்மநபர்கள் … பயத்தில் காவல்துறையில் சரண் ..!!

திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர்  காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  மகேஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பட்டா பட்டிகளுடன் வந்த கும்பலினால்  ஓட ஓட விரட்டப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் திருத்தணி முருகன் கோவிலின் அடிவாரத்தில்  உள்ள உணவகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் .   பின்னர் கொலையை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து  தப்பி ஓடினர் . அதன்பின் காவல் துறையினர் கொலையாளிகளை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி “ஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக்கொலை” 4 பேர் காவல்நிலையத்தில் சரண்…!!

திருத்தணியில் இளைஞரை ஹோட்டலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்த 4 பேர் காவல் நிலையத்தில் தாமாகவே சரணடைந்தனர்.   திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்ற இளைஞரை 4 பேர் ஓட ஓட விரட்ட,  உயிருக்கு பயந்து அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர் புகுந்துள்ளார்.  இருந்தும் விடாமல் ஓட்டலுக்கு சென்று 4  பேரும்  அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கைப்பந்து போட்டியில் தகராறு ஏற்பட்டதே  இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ .1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கல் ..!!போலீசார் அதிரடி ..!!

திருவள்ளூர் , சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள  செம்மரக் கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில்  உள்ள தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் செம்மரங்களை வெட்டி சேமித்து வைத்துள்ளனர் .அவ்வப்போது அதனை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்று வந்ததாக கூறப்படுகிறது .இம்மரங்கள்  ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெட்டியுள்ளனர் . இத்தகவல் பற்றிய  ரகசிய துப்பு  கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கிடைத்துள்ள நிலையில்  போலீசார் அந்த குடோனை சோதனை செய்தனர் .இதில் சுமார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் குழந்தையின் தங்கச் செயின் பறிப்பு…..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரைச் சேர்ந்த ரம்யா என்பவர் தனது குழந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக அதிகமாக இருந்ததால் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில்  இருந்த பெண் வேகமாக இறங்க முயற்சிப்பதைக் கண்டு அவரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நூதன திருட்டு …புடவைக்குள் வைத்து பொருட்களை திருடிய பெண்கள் ..!!

திருமுல்லைவாயலில் பொருட்களை புடவையில் மறைத்து வைத்து நூதன திருட்டு செய்த பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயலில் கடையில் இருந்த பொருட்களை சேலைக்கு  உள்ளே  பதுக்கி  கொண்டு பொருட்களை  திருடிய இரண்டு  பெண்களை காவலர்கள்  கைது செய்யதனர்.தர்மராஜ் என்பவருடைய   கடைக்கு நேற்று மாலை வந்த இரண்டு பெண்கள் பொருட்களை வாங்குவது போல பாவனை செய்து கடையின் தொழிலார்களின் கவனம் குறைந்த  நேரத்தில் பொருட்களை புடவையின் உள்ளே வைத்து பதுக்கி கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றனர்.       அவர்களுடைய  வித்தியாசமான […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ..!!! பொதுமக்கள் தர்ம அடி …!!!

பணத்  தேவைக்காக  செயின்  திருட முயன்ற  கல்லூரி  மாணவர்களை  மடக்கி பிடித்த  பொதுமக்கள்  தர்ம  அடி  கொடுத்து  காவல்துறைனரிடம்   ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை  அடுத்த   ரமணா நகரில்   தெய்வானை என்கிற  பெண் சாலையின்  ஓரமாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு  கல்லூரி மாணவர்கள்  தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன்  தங்க தாலி செயினை பறிக்க  முயற்சி செய்தனர் .இதனை  கண்ட  அக்கம் பக்கத்தினர்   இருவரையும்  மடக்கி பிடித்து கைகளை  கயிற்றால்   கட்டி   தர்ம அடி  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி “திருவள்ளூரில் பரபரப்பு !!..

ATM  இயந்திரத்தை   உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை  கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு ஏடிஎம் மையங்களில்  ஒன்றை தேர்வு செய்த மர்ம நபர் ஒருவர்  நேற்று இரவு  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார் . அப்போது அலாரம் ஒலிக்க அங்கிருந்து தப்பிய மர்ம நபர், அருகிலுள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார். அங்கும் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி உள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தடையை மீறி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி பெண் பலி…!!!

பழவேற்காட்டில் தடையை மீறி சென்ற படகு மற்றொரு படகுடன் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் எட்டு ஆண்டுகளுக்கு முன் பல விபத்துகள் ஏற்பட்ட காரணத்தால்  படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 16 பேருடன் முகத்துவாரம் பகுதிக்கு சென்றுவிட்டு கரை திரும்பிய சுற்றுலா பயணிகளின்  படகு எதிர்பாராமல் எதிரே வந்த மற்றொரு படகு மீது மோதியதில் அனைவரும் கடலுக்குள்ளெ விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து படகோட்டி  அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பயணிகளை கண்ட […]

Categories

Tech |