Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட குடிசையை அதிகாரிகள் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை கண்டிகை பகுதியில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளதாக துணை தாசில்தார் சுந்தருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி துணை தாசில்தார் சுந்தர் தலைமையிலான வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடிசை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூலி தொழிலாளியான செல்வராஜ்(53) என்பவர் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Heavy Rain: இன்று(1.11.22) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(1.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று(1.11.22) கன மழை பெய்யும் என […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? திடீர் அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை கன மழை பெய்யும் என […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மின் கழிவு மேலாண்மை விதி… “மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெற வேண்டும்”… திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் தகவல்..!!!!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜார்ஜ் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மின் கழிவு மேலாண்மை விதிகளை அக்டோபர் ஒன்றாம் தேதி 2016 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மின்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவு புதுப்பிப்பாளர்களால் மறுசுழற்சி செய்பவர்கள் மட்டுமே மின் கழிவுகளை சேகரித்து செயல்படுத்த முடியும். மேலும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் மின் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் போன்ற மனித […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. புது மாப்பிள்ளை அடித்துக் கொலை…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் அய்யனேரி கிராமத்தில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான சரத்குமாருக்கு ஐந்து மாதத்திற்கு முன்பு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சரத்குமார் தனது மாமனாருடன் ஐபேடு கிராமத்திற்கு இறைச்சி வாங்க சென்றுள்ளார். அந்த கிராமத்தை சேர்ந்த சிலரிடம் சரத்குமாருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சரத்குமார் இறைச்சி வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த தாமோதரன், கோபி, துரைப்பாண்டி, அசோக்பாண்டியன், குபேந்திரன், சதீஷ் ஆகிய ஆறு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வயர் மேனை தாக்கிய மின்சாரம்…. பெரும் சோகம்….!!!!

மின்சார பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தின் மீது ஏறிய வயர் மேன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதிமாஞ்சேரி பேட்டை பகுதியில் உள்ள மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய கிராமத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தின் மீது ஏறி உள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதில் வெங்கடேசன் மின்கம்பத்தில் இருந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த மாற்றுத்திறனாளி”….விபரீத முடிவால் திருவள்ளூரில் சோகம்…..!!!!!

கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ். ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இவர் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததால் மன உளைச்சலில் காணப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் கடம்பத்தூரில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி”…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சோகம்….!!!!!

கும்முடிபூண்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் தபால் தெருவை சேர்ந்த சந்தியா என்பவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். இவர் சென்ற 25ஆம் தேதி கும்முடிபூண்டி சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில் இருக்கும் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கின்றார். அப்போது எதிர்பாராவிதமாக அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“16 வயது சிறுமியை கொலை செய்து ஏரியில் வீசிய கொடூரம்”….. 2 பேர் மீது பாய்ந்தது போக்சோ….!!!!!

பத்தாம் வகுப்பு மாணவியை கொலை செய்து ஏரியில் வீசிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக இவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை. சென்ற சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீட்டிலிருந்து காணவில்லை. இது குறித்து பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் மட்டும் கொடுத்த நிலையில் எழுத்து பூர்வ புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு”… 10 கோடி மோசடி… 2 பேர் கைது…. தீவிர தேடுதலில் போலீசார்…!!!!

தீபாவளி சீட்டு நடத்தி 10 கோடி மோசடி செய்த வழக்கில் நிறுவன மேலாளர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் ஜோதி என்பவர் தீபாவளி நகை பண்டு திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவரிடம் சீட்டு சேர்த்தியுள்ளார். ஜோதிக்கு உடந்தையாக அவரின் மனைவி சரண்யா, சகோதரர் பிரபு, தந்தை மதுரை மற்றும் கடை மேலாளர்களாக நாகலட்சுமி, சரண்ராஜ், வேணுகோபால், சத்தியமூர்த்தி, அவரின் மனைவி உள்ளிட்டோர் இருந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் அனைவரும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன 10 ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

திருவள்ளூர் பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தில் திலகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா (16) என்ற மகள் இருந்தார். இவர் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். சென்ற சில மாதங்களாக முறையாக உஷா பள்ளிக்கு போகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி வீட்டிலிருந்து உஷா மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

துணியை காய போட்ட தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஸ்கர் குளித்துவிட்டு ஈர துணியை இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாஸ்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்புலன்ஸ்…. துடிதுடித்து இறந்த காவலாளி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் வெண்மனம் புதூர் பகுதியில் ஆனந்தவேல்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்தவேல் வேலை முடிந்து நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிய போது பேரம்பாக்கம் நோக்கி வேகமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி முருகன் கோயில்…. “9 வருடங்களாக மாற்றம் செய்யாமல் இருந்த சேவை கட்டணம்”… திடீரென இரு மடங்கு உயர்வு…!!!!!

ஒன்பது வருடங்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த திருத்தணி முருகன் கோவில் சேவை கட்டணம் தற்போது இருமடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இருக்கின்றது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். இக்கோவிலில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், சந்தன காப்பு, தங்க, வெள்ளி கிரீடம் அணிவித்தல், உச்சவர் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத் தேர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பக்தர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாடகை தர மறுத்த தம்பதி…. வீட்டு உரிமையாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம் ஊராட்சி வி.ஜி.கே.புரத்தில் வேணுகோபால் (55). இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு விமலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வேணுகோபால் சென்னை பள்ளிக்கரணையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை பிரசாந்த், வைஷ்ணவி என்ற தம்பதியினருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக  வைஷ்ணவி வீட்டு வாடகை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேணுகோபால் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு…. “பாதுகாப்பு கருதி திருத்தணியில் 300 போலீசார் குவிப்பு…!!!!!

திருத்தணியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியா முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப் பட இருக்கின்றது. இதனால் திருத்தணியில் மக்கள் கடைகளுக்குச் சென்று இனிப்புகள், பட்டாசுகள், புதிய ஆடைகள் உள்ளிட்டவற்றை வாங்க குவிந்து வருகின்றார்கள். பண்டிகை காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் மக்கள் அதிகமாக கூடும் 14 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“4 மாதத்தில் வீடு ரெடி”…. இதெல்லாம் கொடுத்து விண்ணப்பிக்கவும்…. அதிகாரி தகவல்….!!!!!

திருத்தணி அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடற்ற ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் 100 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றிய முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 1040 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட சென்ற 2010 வருடம் அரசாணை வெளியிட்டது. இதற்கான கட்டிட பணிகள் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பாலில் மயக்க மருந்து…. “ரயில்வே ஊழியர் வீட்டில் நகை கொள்ளை”…. ஆந்திர மாநில தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!!

பாலில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து ரயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகையை கொள்ளையடித்த தம்பதியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாதுகான்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசீலா. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தனது தாயார் முனியம்மாள், மகன் சீனிவாசன், மருமகள் மாலதி, மற்றொரு மகன் பார்த்திபன், மருமகள், பேரன் ஹரிஹரன் என கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றார். சென்ற 9-ம் தேதி இவர்கள் வீட்டிற்கு ஆந்திர […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருகிறேன்”…. மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி… போலீசார் அதிரடி….!!!!!

வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தையடுத்த மணவாள நகரை சேர்ந்த பொரியல் பட்டதாரியான பிரசாந்த் என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருக்கும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் வேலை வேண்டி விண்ணப்பத்தை ஆன்லைனில் பார்த்ததாகவும் உங்களுக்கு எங்களிடத்தில் சேர அனைத்து தகுதிகளும் இருக்கின்றது. ஆகையால் உங்களது சான்றிதழ்கள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார். பிரசாந்த் சான்றிதழ்களை அவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! தலையில் டிவி விழுந்து குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிப்பவர் சதாம் உசேன். இவருடைய இரண்டு வயது மகன் சூபியன். சதாம் உசேன் குடும்பத்தாரோடு சம்பவத்தன்று வெளியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் குழந்தை சூபியன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழந்தை மீது டிவி விழுந்துள்ளது. இதில் குழந்தையின் அலர சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது குழந்தையின் தலையில் டிவி விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“44 லட்சம் மோசடி செய்த வழக்கு”…. மனைவியுடன் வக்கீல் கைது….!!!!!!

44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்திருக்கும் பவானி நகர் என்.எஸ்.சி போஸ் தெருவை சேர்ந்த மாரியப்பன் சென்ற 32 வருடங்களாக மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த கடையின் உரிமையாளர் சித்திக் என்பவர் கடையை இராயபுரம் மனோகர் என்பவருக்கு விற்பனை செய்து விட்டார். இந்த நிலையில் மாரியப்பன் தனக்கு சேர வேண்டிய அட்வான்ஸ் தொகை 82 லட்சத்தை பெறுவதற்காக வக்கீல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருட்டு வழக்கில் தலைமறைவு”…. கைது செய்த போலீசார்…. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்….!!!!!!

திருட்டு வழக்கில் தலைமறையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிப்பூண்டி காவல் நிலையத்தில் பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பொன்னேரி திருப்பாலைவனத்தை சேர்ந்த விஜி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தார்கள். போலீசார் விசாரணையில், தன்னை தாக்கிய ஒருவரை 25 நாட்களுக்கு முன்பு அடையாளம் கண்டு கும்முடிபூண்டி சிப்காட் போலீஸ் கள்ளிக்கோட்டை கிராமத்தில் இருக்கும் 30 வயது கொண்ட ஒருவரை கொலை செய்து வீசியதாக கூறினார். தாக்கிய நபரை சம்பவ இடத்திற்கு  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்” டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்தை குடித்து டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் குருவய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பஸ் டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி குருவய்யா வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதன் மறுநாளும் டிரைவர் பற்றாக்குறையால் குருவய்யா பேருந்தை இயக்கியுள்ளார். அதன்பின் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்ற குருவய்யாவை அதிகாரி சிறப்புப் பேருந்து இயக்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு என்ற பெயரில் பணமோசடி….. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!!

சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாளந்தூர் ஊராட்சியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி சீட்டு நடத்தி ஏஜென்ட்கள் மூலம் ஜோதி பணம் வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் 8 கிராம் தங்கம், 4 கிராம் தங்கம் என இரண்டு வகையான சீட்டை ஜோதி நடத்தியுள்ளார். ஆனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வயர் அறுந்து கிடப்பதாக கூறிய தாய்….. மகனுக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நடுக்குத்தகை அருந்ததிபாளையம் பகுதியில் பெயின்டரான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராஜ் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது மின்சார வயர் அறுந்து கிடப்பதாக நாகராஜின் தாயார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாகராஜ் பிளாஸ்டிக் டேப்பை வைத்து அறுந்து கிடந்த வயரை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த இளம்பெண்கள்…. வீடியோ எடுத்த வாலிபர் கைது….. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு குளியல் அறையில் இரண்டு இளம்பெண்கள் குளித்து கொண்டிருந்தனர். அதனை சதீஷ்குமார் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த இளம்பெண்களின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தந்தை பெயரை சொல்ல தயங்கிய நபர்…. சந்தேகமடைந்த சார்பதிவாளார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்க முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சூரியநகரம் கிராமத்தில் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் 97 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தெக்கலூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மனைவி பாரதி வாங்க இருந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சூரிய நகரம் கிராமத்தில் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் உள்ள நிலத்தை வாங்குவதற்காக 2 பேர் வந்தனர். அப்போது சார்பதிவாளர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்…. அது என்ன தெரியுமா…? இதோட மதிப்பு இத்தனை கோடியா…???

திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் அருகே உள்ள கடப்பாகுப்பம் என்னும் கிராமத்தில் வசிப்பவர் இந்திரகுமார். மீனவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நண்பர்களோடு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்கள் வகையில் சுமார் 35.6 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் கழிவு(வாந்தி) கிடைத்துள்ளது. இந்த திமிங்கலத்தின் கழிவில் என்ன இருக்கிறது என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் ambergris எனப்படும் இந்த திமிங்கலத்தின் வாந்தி கழிவானது பல கோடி விலை மதிப்பானதாகும். இந்த திமிங்கல கழிவானது ஒரு கிலோவுக்கு ஒரு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“நாளை(செப் 22) இங்கெல்லாம் பவர் கட்”….. மின்துறை உதவி பொறியாளர் தகவல்…..!!!!!!

கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகின்றது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, பைபாஸ் சாலை, கோட்டக்கரை, பிரித்விநகர், முனுசாமிநகர், பூபாலன்நகர், மங்காவரம், ஆத்துப்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம், ம.பொ.சி.நகர், பெத்திக்குப்பம், சாமிரெட்டிகண்டிகை, வேற்காடு, ரெட்டம்பேடு சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், அயநல்லூர். சோழியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவியகரம், பெரியநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருவள்ளூரில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்”… தலைமை தாங்கிய ஆட்சியர்….!!!!!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஓய்வு ஊதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 30 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இதை அடுத்து ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு பயனாளிக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தமிழருக்கு வேலை இல்லை…… என்ன ஒரு அநியாயம்…. கொந்தளிக்கும் மக்கள்….!!

கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப் பகுதிகள் என 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை விபத்தினால் ஏற்படும் பிரச்சனை உள்ளிடவற்றை தவிர்க்கும் நோக்கில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளூர் மக்களை வேலைக்கு வைக்காமல் பீகார்,  ஒடிசா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வேலை கொடுத்து வருகின்றனர். உற்பத்தி பாதிக்காமல் இருக்க தினசரி தவறாமல் அவர்கள் வேலைக்கு வரவேண்டும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்…. “அரசு பேருந்தில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா”… வசமாக சிக்கிய 2 பேர்…!!!!!

அரசு பேருந்தில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்து இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்தில் 10 பாக்கெட்டுகளில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யதார்கள். இந்த கஞ்சா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிக்னல் கோளாறால் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்”…. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்….!!!!!!!

சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. திருவள்ளுரை அடுத்திருக்கும் திருவாலங்காடு மற்றும் மோசூர் ரயில் நிலையம் இடையே நேற்று காலை 7 மணி அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் அரக்கோணம் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே வழித்தடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்”…. பரிதாபமாக டிரைவர் உயிரிழப்பு….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த சிவபதி (டிரைவர்) என்பவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிவபதி திருவள்ளுவரை அடுத்திருக்கும் கோவிந்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சென்ற பொழுது வேகமாக வந்த மினிவேன் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தீண்டாமை சுவர்”….. இடித்த அதிகாரிகள்…. மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி…!!!!!

தீண்டாமை சுவரை அதிகாரிகள் இடித்ததால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சென்ற ஐம்பது வருடங்களாகவே வசித்து வருகின்றார்கள். இவர்கள் செல்லும் பொது வழி பாதையை சிலர் ஆக்கிரமித்து தீண்டாமை சுவர் எழுப்பியதாக சொல்லப்படுகின்றது. இதனால் இந்த சுவற்றை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பெட்டி கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்காரர்கள்”…… போலீசார் அதிரடி….!!!!!!

கும்முடிபூண்டி அருகே பெட்டி கடையில் ஆய்வு செய்வதுபோல் பணம் கேட்டு மிரட்டியை இரண்டு போலி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்திருக்கும் புதுப்பேட்டை பகுதியில் 2 பேர் தங்களை போலீசார் எனக் கூறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றா என சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது கடைக்காரர்களை மிரட்டி பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்கள் இருவரையும் கைது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!!

வெங்கல் கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கல் கிராமத்தில் உள்ள பஜாரில் கிளினிக் ஒன்று சென்ற 15 வருடங்களாக செயல்பட்டு வருகின்ற நிலையில் ராமச்சந்திரன் என்பவர் பியூசி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக சுகாதாரத் துறையினருக்கு புகார் வந்து கொண்டே இருந்தது. இதனால் நேற்று சுகாதார துறை இணை இயக்குனர் தலைமையிலான சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில் ராமச்சந்திரன் பியூசி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொழிற்சாலை ஊழியர்களை தாக்குதல்…. “25 பேர் மீது வழக்குப் பதிவு”… போலீசார் விசாரணை….!!!!!!

தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருவள்ளூர் அடுத்திருக்கும் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கின்றது. இந்த தொழிற்சாலையானது சில வருடங்களுக்கு முன்பாக வேறு ஒரு நிறுவனத்திடம் சென்றது. இதையடுத்து புதிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் பணியில் இருந்த 178 பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி சென்ற நான்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இனி சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்”….. பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொற்றுப் பரவலுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டு பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. பல மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் விடுமுறை நாட்களில் எந்த காரணத்தை கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நாங்க வேலையில ரொம்ப சின்சியர்….. வாரம் 6 நாட்கள் லீவ்….. 1 நாள் திருட்டு….. வைரல் சம்பவம்….!!!

செஞ்சியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற இளைஞர் வாரத்தில் 6 நாள் ஓய்வு எடுத்து விட்டு, ஒரு நாள் மட்டும் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ… “பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து”…. 5 பெண்கள் படுகாயம்….!!!!!

கவரைப்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்முடிபூண்டி அடுத்திருக்கும் கவரப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பயணம் மேற்கொண்டார்கள். இந்த ஆட்டோ மேல்முதலம்பேடு சென்ற பொழுது சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி, ஜெயா, வைலட், விமலா, ரோஸ் உள்ளிட்ட 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். இவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி…. “பதாகைகளை ஏந்தியபடி சென்ற மாணவர்கள்”….!!!!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்களை கேதீராக மாணவர்கள் விழிப்புணர்வு நடத்தினார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்தினார்கள். இந்த பேரணிக்கு சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த பேரணியானது பள்ளியில் தொடங்கப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக மீண்டும் பள்ளி வந்தடைந்தது. பேரணியின் போது போதை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“லட்சுமி பூஜை செய்ய வேண்டும்”….. தங்க நகைகள் அப்பேஸ்…. 2 பேர் கைது…!!!!!

 பூஜை செய்வதாக ஏமாற்றி தங்க நகைகளை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வரும் ரவீந்திர பாபு என்பவர் சோளிங்கர் ரோட்டில் வெங்கடேசன் என்பவரின் கடை பக்கத்தில் ஜோதிடம் பார்ப்பதற்கான போர்டு இருப்பதை கண்டு இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்கு சென்றுள்ளார். அங்கே இருந்த இரண்டு பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அவரை அமர வைத்து உங்கள் கஷ்டங்கள் தீர அம்மன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை”…. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை….!!!!!!

சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். துணை போலீஸ் சூப்பிரண்டு திருத்தணியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, வாகன ஓட்டிகள் சிலரின் அலட்சிய போக்கால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வதால் ஏற்படுகின்றது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில்…. “திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு”…..!!!!!!

பள்ளிப்பட்டு அருகே இருக்கும் அரசு பள்ளிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார்குப்பம் மற்றும் பாலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஆட்சியர் பள்ளி மாணவர்களிடம் ஏதாவது குறைகள் இருக்கின்றதா? என கேட்டறிந்தார். இதையடுத்து அவர் அம்மையார்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்குச் சென்று அங்கிருக்கும் சத்துணவு கூட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களுக்கு தயார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வாலிபர் கொலை வழக்கு”…. 5 தனிப்படை போலீசார்…. 3 பேர் அதிரடி கைது….!!!!!

வாலிபர் கொலை வழக்கில் 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு திருட முயன்ற ஆசாமிகள்”…. மடக்கிப் பிடித்த போலீசார்….!!!!!

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவர்கள் கடைக்குள் மது அருந்திய பொழுது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி அடுத்துள்ள கவரைப்பேட்டை அருகே தண்டலச்சேரி கிராமம் இருக்கின்றது. இங்கிருக்கும் மதுபான கடையில் இரவு நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் திருடுவதற்காக கடையில் பின்பக்க சுவரை கடப்பாறை கொண்டு துளையிட்டு உள்ளே சென்றார்கள். ஆனால் உள்ளே சென்றவர்கள் மது குடித்ததில் போதை தலைக்கேறி வந்த வேலையை மறந்து அங்கேயே அமர்ந்து சத்தமாக பேசிக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணியில் சுமார் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்”…. கடும் போக்குவரத்து நெரிசல்….!!!!!!

திருத்தணியில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் நூறுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலில் திருமண கோலத்தில் இருக்கும் முருகன் பெருமானை திருமணம் ஜோடிகள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்கின்றார்கள். மேலும் முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதுகின்றது. இந்நிலையில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் கோவிலில் 30க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. மேலும் கோவிலை சுற்றியுள்ள 70 மண்டபங்களில் திருமணம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. 5 தனிப்படை போலீஸ் அமைப்பு…!!!!!

வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிபடை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் அறிவாளால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓட்டையை போட்டு நுழைந்த பெருச்சாளிகள்(குடிமகன்கள்)….. குடித்து குடித்து உப்பிய வயிறு…. வடிவேலு பாணியில் அரங்கேறிய சம்பவம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் வைகை புயல் வடிவேலு ஒரு படத்தில் மது கடைக்கு சென்று மது அருந்துவார். வடிவேலு மது குடித்துக் கொண்டிருப்பதை கவனிக்காத கடை உரிமையாளர் கடைக்குள் வைத்து வடிவேலுவை பூட்டி விட்டு சென்று விடுவார். பின்னர் நள்ளிரவில் வடிவேலு கடை உரிமையாளருக்கு போன் செய்து ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா கடையை எப்ப சார் திறப்பீங்க என்று கேட்பார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓனர் உடனடியாக கடைக்கு […]

Categories

Tech |