Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமி கிரிவலம்… தடை விதித்தார் ஆட்சியர்… பக்தர்கள் ஏமாற்றம்…!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் மட்ட ஆட்சியர் தடை விதித்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்று அருணாச்சலேஸ்வரர் கோவில். இங்கு பௌர்ணமி கிரிவலம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மதியம் 3.50 மணியிலிருந்து சனிக்கிழமை மதியம் 2.45 மணி வரைக்கும் பௌர்ணமி உள்ளது. இந்த பௌர்ணமிக்கு கிரிவலம் அனுமதி வழங்கப்படும் என பக்தர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவுக்கு சென்ற குடும்பம்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் போன்றவற்றை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நுணுக்கம்பட்டி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் உஷாராணியும் இருவரும் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வீடு திரும்பியதும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, 30 ஆயிரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முகநூலில்தான் தெரியும்… இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி விசாரணை…!!

முகநூலில் அறிமுகமான இளம்பெண்ணுக்கு கணவர் குழந்தைகள் இருப்பதை நேரில் கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பாலூர் பகுதியில் தனது கணவன் குழந்தைகளுடன் 25 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் சென்னையைச் சேர்ந்த பூபதி என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இது காதலாக நாளடைவில் மாறியுள்ளது. ஆனால் பூபதிக்கு அந்தப் பெண் திருமணமானவர் என்பது தெரியாது. அந்தப் பெண்ணும் இதை மறைத்தே பூபதியுடன் பழகி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென வீசிய காற்று… 5 மாதங்களான பயிர்கள்… விவசாயிகள் வேதனை…!!

திடீரென வீசிய பலத்த காற்றினால் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் வேரோடு சாய்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளான தச்சம்பட்டு, நவம்பட்டு, துறையூர், அல்லிகொண்டபட்டு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் நவம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்த கரும்பு வேரோடு சாய்ந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது எங்கள் பகுதிகளில் பெரும்பாலும் கரும்பு பயிரிடப்பட்டு வருகின்றது. இந்த கரும்பு பயிர்கள் பயிரிடப்பட்டு 5 மாதங்கள் ஆனதால் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிச்ச வெயிலுக்கு… இப்பம் கொஞ்சம் பரவாயில்ல… ஆனா இங்க மட்டும் வெள்ளம் வந்துருச்சு… அவதியில் பொதுமக்கள்…!!

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் நீரால் சூழ்ந்துள்ளது. வளிமண்டலத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர் நிலவி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் திருவண்ணாமலை சன்னதி தெரு, பெரியார் சிலை சந்திப்பு அவலூர்பேட்டை சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… வயலுக்கு சென்ற விவசாயிக்கு நடந்த கொடுமை… போலீசார் விசாரணை..!!

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் வயலுக்கு டிராக்டரில் புறப்பட்ட குமார் வயலுக்கு வரப்பு ஓரமாக சென்று கொண்டிருந்த போது திடீரென டிராக்டர் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 சென்ட் நிலம்தான் பிரச்சனை… அதிமுக கிளை செயலாளரின் செயல்… திமலையில் பரபரப்பு…!!

டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தவரை அதிமுக நிர்வாகி அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருபவர் துரைக்கண்ணு. அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளரான துரை என்பவருக்கும் துரைக்கண்ணுக்கும் 2 சென்ட் நிலம் வழங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நேற்று முன்தினம் முற்றியதால் துரை மற்றும் அவரது மனைவி தீபா மற்றும் அப்பா முனுசாமி ஆகியோர் துரைகண்ணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உழுவதற்காக சென்ற விவசாயி… டிராக்டரால் நேர்ந்த பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியண்ணநல்லூர் கிராமத்தில் விவசாயி குமார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குமார் உழுவதற்காக வயலுக்குள்  டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வழியிலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பலிக்கு பலி வாங்கிய சம்பவம்… போலீஸ் விசாரணை… வெளிவந்த ரகசியம்…!!

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை நில விற்பனை தொழிலதிபர் கொலை வழக்கில்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு வசித்து வந்தார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அதிமுக பிரமுகரான கனகராஜ் என்பவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமைச்சர் சொன்னா… யாரும் கேட்க மாட்டாங்க…. அரசு விழாவில் அமைச்சர் அதிருப்தி …!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நடந்த அரசு விழாவில் அமைச்சரை அதிமுக மாவட்ட செயலாளர் மட்டம் தட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் கூட்டத்தின் போது செல்போனில் பேசிய தொண்டரை கண்டித்தார். பின்பு அமைச்சரை விட தனது பேச்சுக்கு தொண்டர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டியதால் மிரண்ட விவசாயி… வழிபறியில் ஈடுபட்ட வாலிபன்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகனான விஜய் என்பவர் செந்தில்குமார் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 3000ருபாய் பணம், ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை பரித்து சென்றுள்ளார். இதுகுறித்து செந்தில்குமார் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென வந்த சத்தம்… பார்த்ததும் பதறிய புவனேஸ்வரி… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையாம்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர் தண்டபாணி-புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ராகுல், ரமணா, அஜய் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்புறம் சென்ற புவனேஸ்வரியை பாம்பு கடித்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் புவனேஸ்வரியை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புவனேஸ்வரி வழியிலேயே இறந்து விட்டதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காரின் மீது மோதி கவிழ்ந்த பேருந்து… பறிபோன ஒரே குடும்ப உயிர்கள்… மருத்துவமனையில் தவிக்கும் குழந்தைகள்…!!

கார் அரசு பஸ் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீபால். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பத்மபிரியா. இவர்களுக்கு மிருதுளா, ஆரியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சென்னையிலுள்ள மாதவரத்தில் பத்மபிரியாவின் தந்தையான சதீஷ்குமார் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சாந்தி. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மர்மநபரின் வெறிச்செயல்… இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை… விசாரணையில் தனிப்படைகள்…!!

இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொரகொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு எதிரே காப்புக் காட்டிற்கு செல்லும் வழியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்துள்ளார். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் யார் என்பது இன்னும் தெரியவரவில்லை. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் இதனால் ஏற்பட்ட தகராறில் மர்மநபர் இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தகவல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமாய் செய்த செயல்… சோதனையில் சிக்கிய பொருள்… போலீசாரின் கைது நடவடிக்கை…!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் இருக்கும் மேட்டூர் ஆற்றுப்படுகை அருகில் தாலுகா காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்  மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கோபி ஆகிய 2 பேரும் இரண்டு மாட்டு வண்டிகளில் அந்த வழியாக மணல் கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரித்தபோது இருவரும் மணல் கடத்தியது தெரிய வந்துள்ளது. அதன்பின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாளை முதல் முகாம்… 48 நாள் பங்கேற்க… பூஜை செய்து அனுப்பப்பட்ட லட்சுமி…!!

ஸ்ரீயோக ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்குரிய லக்ஷ்மி யானை இன்று காலை லாரி மூலம் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக தேக்கம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் இருக்கும் ரேணுகாம்பாள் கோவில் உடன் இணைந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்கு சொந்தமான யானை ஒன்று உள்ளது. இந்த யானையின் பெயர் லட்சுமி ஆகும். இந்த லக்ஷ்மி யானை இன்று காலை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக லாரி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புத்துணர்வு முகாம் நாளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கையை நிறைவேற்றுங்கள்…. மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம்…. 177 அரசு ஊழியர்கள் கைது….!!

தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆரம்பித்து பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் அருகில் பெரியார் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “புதிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே இடத்தில் இரண்டு வீடு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஒரே பகுதியில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பகுதியை சார்ந்தவர் பிச்சுமணி. இவர் தனது உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் சென்றுள்ளார். கடந்த 1ஆம் தேதி அவரது வீட்டின் முன் மற்றும் பின்புற கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் பிச்சுமணி மற்றும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

10 நாளா காத்திருக்கோம்… இனி முடியாது… மறியலில் பொதுமக்கள்…!!

பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 ஆவது வார்டுகுட்பட்ட கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு நிலைமையா….? பார்த்துக்க ஆள் இல்லை…. தம்பதி எடுத்த முடிவு….!!

முதியோர் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கந்தசாமி காயம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்களின் மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களை கவனிக்க ஆள் யாரும் இல்லாத காரணத்தினால் வெகுநாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீஸார்….. மடக்கிப் பிடித்த லாரி…. சிக்கிய மணல் கொள்ளையன்….!!

லாரியில் மணல் கடத்தியவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் இதர காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செய்யாற்றில் இருந்து ஒரு டிப்பர் லாரி அந்த வழியாக வந்துள்ளது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் சட்டத்திற்கு விரோதமாக கடத்தி வரப்பட்டது என்பதை அறிந்த காவல் துறையினர் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராமானுஜம் என்பவரை கைது செய்துள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் லிப்ட் தாரேன்” கண்ணாடியில் நோட்டமிட்ட நபர்…. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. பொது மக்களிடம் சிக்கி கைது….!!

பெண்ணிடமிருந்து சங்கிலியை பறிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடக்குவெளி கிராமத்தைச் சார்ந்தவர் தர்மலிங்கம்-மீனா தம்பதியினர். மீனா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு வடக்குவெளி கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீனாவிடம் தனது மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள் ஊருக்குள் சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்சி இரண்டாக பிளவுபடும்… ஸ்டாலின் வெற்றி பெறுவார்… நாஞ்சில் சம்பத் அதிரடி பேட்டி…!!

சசிகலாவுக்கு அதிமுகவின் கொடியை பயன்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது “அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் போது அவர் சிறைக்கு சென்று உள்ளார். எனவே அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு முழு தகுதியும் சசிகலாவிற்கு உள்ளது. கே.பி.முனுசாமி வெளியிட்ட கருத்தை வைத்துப் பார்க்கும்போது சசிகலா அதிமுகவில் இணைந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டும் டும் டும்…. 60 அடி ஆழ ஆழ்கடலுக்குள்…. நீந்திக்கிட்டே கல்யாணம்…. ஆச்சர்ய சம்பவம்…!!

புதுமண தம்பதிகள் 60 அடி ஆழம் ஆழ்கடலுக்குள் சென்று திருமணம் செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை வசிப்பவர் சின்னதுரை(29). கோவை யை சேர்ந்த ஸ்வேதா(26). இவர்கள் இருவரும் ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 12 ஆண்டுகளாக சின்னத்துரை ஆழ்கடலில் பயிற்சி எடுத்து வந்தவர் என்பதால் தன்னுடைய திருமணத்தை ஆழ்கடலுக்குள் நடத்த வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். இதை அடுத்து ஸ்வேதாவும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதல் மனைவி கர்ப்பத்தை கலைத்து விட்டு…. வேறு பெண்ணை திருமணம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மனைவியை கர்ப்பமாக்கி கலைத்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பக்கத்திலுள்ள கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் ராஜேஷ்(32). இவர் திண்டிவனம் பகுதியில் வசிக்கும் மஞ்சுளா (25) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2010 ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ராஜேஷுக்கு சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை கிடைத்ததால் மனைவியை அவருடைய பெற்றோரின் வீட்டிலேயே விட்டு விட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளா கர்ப்பமாக இருந்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல் நிலை சரியில்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. தாயை இழந்து கதறும் 4 பிள்ளைகள்….!!

உடல்நல பாதிப்பால் மனவேதனை அடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் வீரகோயில் கோட்டை கிராமத்தை சார்ந்த விவசாயி சரவணன்-சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு ஓவியா, தேவிஸ்ரீ திவ்ய தர்ஷன், பிரவேஷ் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். சகுந்தலா கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவர் பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலனளிக்காத காரணத்தினால் கடந்த 26ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலிலேயே திருட்டு…. காணாமல் போன இருசக்கர வாகனம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ். இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலபேட்டையை சேர்ந்த முகமது சலீம் என்பவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பொண்ணு சீர் வரிசைக்காக வைத்திருந்தோம்…. திருடிட்டு போயிட்டாங்களே…. காவல் நிலையத்தில் புலம்பும் பெற்றோர்….!!

மணப்பெண்ணுக்காக வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் தரணிபாலன்-சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷ், சவுமியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியாவுக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நேற்று காலை சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக தரணிபாலன் அப்பகுதியில் உள்ளவர்களையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு நேற்று அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை…. வேலை இல்ல…. விரக்தியில் இருந்த வாலிபர்…. பெற்றோரைக் கதற வைத்த செயல்….!!

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் ராஜீவ் காந்தி என்பவர் தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சர்க்கரை ஆலை மூடப்பட்டு உள்ளதால் அவர் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜீவ் காந்தி குடும்பத்தை நடத்துவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடன் தொகை 5 லட்சத்திற்கும் மேல் உயர்ந்ததால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குழந்தை திருமணம்” காப்பாற்றப்பட்ட 14 சிறுமிகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

14 சிறுமிகளுக்கு  குழந்தை திருமணம் செய்ய இருந்ததை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மணப்பெண்ணாக இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களால வளர்க்க முடியாது…. அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண் குழந்தை…. “ஆதவன்” பெயர் சூட்டி மகிழ்ந்த ஆட்சியர்….!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தையை அதன் குடும்பத்தினர் வளர்க்க இயலாத சூழ்நிலை காரணத்தால் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்தனர். அதன்படி அக்குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் அரசுத் தொட்டில் குழந்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3ஆண் குழந்தைகளை தவிக்கவிட்டு…! வாழ்க்கையை முடித்துக்கொண்ட இலங்கை தமிழ்ப்பெண்… காரணம் என்ன ?

திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சனையினால் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள தென் பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்களின் முகாமை சேர்ந்த தம்பதிகள் கனகராஜ் மற்றும் மேரி. இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனகராஜ் மற்றும் மேரி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். சம்மபவத்தன்று இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டதில் மன விரக்தியில் இருந்த மேரி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன்பின்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வராங்க…! காத்திருந்த குடும்பதுக்கு அதிர்ச்சி… ! மாமியார், மருமகளுக்கு நடந்த விபரீதம் …!!

இருசக்கர வாகன விபத்தில் மாமியாரும் மருமகளும் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் இருக்கும் சாத்தனுரைச் சார்ந்தவர் முத்து-சின்ன குழந்தை தம்பதியினர். முத்துவின் தம்பி மகன் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி பச்சையம்மாள். சின்ன குழந்தைக்கும், பச்சையம்மாளுக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்றுமுன்தினம் இரவு சின்ன குழந்தையின் மகன் சங்கர் இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி ரோந்து…. சிக்கிய மணல் கடத்தல்… தி.மலையில் கைது நடவடிக்கை …!!

டிப்பர் லாரியில் மணல் கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் வழிமறித்தனர். அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிப்பர் லாரியை ஓட்டி வந்த கல்பூண்டியைச் சேர்ந்த பிரஷாந்த் என்பவரை கைது செய்தனர். மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஜம்முனு நடந்த வருஷாபிஷேகம்… குவிந்த பக்கதர்கள் கூட்டம்… களைகட்டிய தி.மலை …!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகின்றது. இதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடைபெற்றதில் அருணாச்சலேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்துள்ளது. அதன்பின் 6 மணிக்கு மேல் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் வீதியுலா நடைபெற்றுள்ளது. இந்த ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர்கள் கவனித்துக் கொண்டனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக… வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை கைது செய்ததோடு, அதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்பூண்டி கிராமத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து அந்த லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்பூண்டி பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

17 வயசுதான் ஆகுது…. நிறுத்தப்பட்ட திருமணம்… எச்சரிக்கப்பட்ட பெற்றோர்… அதிரடி நடவடிக்கை…!!

மைனர் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதோடு, அவரது பெற்றோரை எச்சரித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் பிளஸ் டூ படித்து முடித்துள்ள 17 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் உறவினர் மகனான அருண்குமார் என்பவருடன் வரும் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைத்து திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த லாரி…. சக்கரத்தில் சிக்கிய பெண்… தி. மலையில் பரபரப்பு…!!

விபத்தின்போது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பெண்ணாத்தூர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வி என்ற சகோதரி உள்ளார். இவர் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரியகோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் செல்வி தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் தலை சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சீக்கிரமா மீட்டு குடுங்க… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்… தி. மலையில் பரபரப்பு….!!

தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரும்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலர் கொட்டாய் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேனை மறைத்து கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தரவில்லை…. விரக்தியில் மாணவன் எடுத்த முடிவு… தவிக்கும் தாயார்…!!

செலவுக்கு பணம் தராததால் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் ரயில்வே கிராஸ் ரோடு பகுதியில் சந்திரா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விக்டர் ரோசாரியோ என்ற மகன் உள்ளார். இவர் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டை வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்டர் தனது தாயிடம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டபோது அவரது தாய் தன்னிடம் பணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற தம்பதிகள்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்களின் கைவரிசை…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவில்மாதிமங்கலம் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது, சத்யநாராயணன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு கதவை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து வீட்டிற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற விவசாயி…. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தி. மலையில் பரபரப்பு…!!

விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவில்மாதிமங்கலம் கிராமத்தில் விஸ்வநாதன் என்ற விவசாயி வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய முதியவர்…. மருமகள் அளித்த புகார்… தி. மலையில் பரபரப்பு…!!

மொபட்டில் சென்ற போது முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாயனதாங்கள் கிராமத்தில் முனியப்பபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரும்பாக்கம் ஏரியில் மீன் பிடிக்க கடந்த 2ஆம் தேதி தனது பேரன் மகேஷ் என்பவருடன் சென்றுள்ளார். அதன்பின்னர் அவரது வீட்டிற்கு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் சென்னை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நீ என்னை கல்யாணம் பண்ணு” லவ் டார்ச்சரால்…. பினாயிலை குடித்த இளம்பெண்…. தலைமறைவான காதலன்…!!

இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்குமாறு கட்டயப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மோட்டு குடிசை கிராமத்தில் வசிப்பவ சந்தியா (21). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த கோதண்டராமன் என்ற இளைஞர் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சந்தியா கோதண்டராமனை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கோதண்டராமன் சந்தியாவை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ள்ளார். இதற்கு சந்தியா மறுத்ததால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் இறந்த அக்கா, தம்பி…. அதிர்ச்சியில் பெற்றோர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தரமற்ற இனிப்புகளை சாப்பிட்ட அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசிங்கநல்லூர் தொகுதியில் பழனி சென்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பாஞ்சாலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆஷானி என்ற மகளும், ஹரி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்புகளை வாங்கி தந்துள்ளார். அதனை சாப்பிட்ட இரு குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருவரும் மயங்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எதுக்குடா இங்க நிக்குற ? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… தி.மலையில் பரபரப்பு …!!

சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமாட்சி புறத்தில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வசிக்கும் மகா என்ற மகாதேவன் என்பதும், அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாராயம் விற்பனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாட்பட்ட பலகாரம் சாப்பிட்டு…. பரிதாபமாக உயிரிழந்த 2 குழந்தைகள்…. பெரும் பரபரப்பு…!!

நாட்பட்ட பொங்கல் பலகாரம் சாப்பிட்டு 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இரண்டு குழந்தைகள் பொங்கலுக்கு தங்கள் வீட்டில் செய்த பலகாரத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலன்று செய்த வடை மற்றும் அதிரசம் ஆகியவை வீட்டிலிருந்துள்ளது. இதை யாஷினி(6) மற்றும் ஹரி(4) என்ற சிறுமிகள் எடுத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்பட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நம்பிக்கையோடு வந்தோம்… ஆனா இப்படி நடக்குது… கலெக்டர் அலுவலகத்தில் புலம்பும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தடுப்பதற்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப் போச்சு… பெண்கள் இப்படி பண்ணலாமா…? கைது செய்த போலீஸ்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த  குற்றத்திற்காக 4 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மோத்தகல், வேப்பூர் செக்கடி, தட்டரணை போன்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தயாளன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பிற தனிப்பிரிவு போலீசார் இணைந்து தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் நடத்திய சோதனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்கையில் விரக்தி… மதுக்கு அடிமையான தொழிலாளி… முடிவில் நடந்த விபரீதம்…!!

மதுவில் விஷத்தை கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முள்ளிபட்டு என்ற கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பழனி ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. அதோடு ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையான பழனி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனி கடந்த 9ஆம் தேதி விஷத்தை […]

Categories

Tech |