திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை. இந்த தொகுதியில் உள்ள ஒரே நகராட்சி திருவண்ணாமலை நகராட்சி மட்டுமே. வேறு பேரூராட்சிகள் நகராட்சிகள் இந்த தொகுதிக்குள் வரவில்லை. மேலும் 68 ஊராட்சிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.இங்கு விவசாயமே பிரதானமாகும். நெல், கரும்பு, மணிலா மற்றும் வாழை ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. 55 ஆயிரம் ஏக்கரில் நெல், 42 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, 45 ஆயிரம் ஏக்கரில் மணிலா 20 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. […]
Category: திருவண்ணாமலை
கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வி.வி. தாங்கல் மலையின் மீது கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் குத்தகை காலம் முடிவடைந்ததால் கடந்த ஓராண்டாக இந்த குவாரி செயல்படவில்லை. அங்கு ஜல்லி உடைக்கும் இயந்திரம் ஒன்று உள்ளது அதனை குன்னத்தூரில் வசித்து வரும் சித்திக்பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலாஜி நகரில் வசித்துவரும் முனுசாமி என்பவர் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் டிராக்டர் வண்டியை […]
தாய் மற்றும் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஐங்குணம் என்ற கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாவதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கராபுரத்தில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது தனது ஒரு வயது குழந்தையுடன் யுவனேஸ்வரனுடன் மாயாவதி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தையை எல்லா இடத்திலும் […]
கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் கண்களை பெற்றோர் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு பகுதியில் உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். நாராயணன் தனது மகள்களுடன் பெங்களூரில் வசித்து வந்தார்.இவரது இளையமகள் சுதா(19) கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக நாராயணன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான தும்பைக்கு வந்துள்ளார். இதற்கிடையில் […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசையா. இவருடைய மகன் ஜானி(32). ஜானி சோமாசிபாடியில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார் . அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த லாரி ஜானி சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில் ஜானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையம்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். மாரிமுத்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. […]
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் என்ற பகுதியில் அப்பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு சிலர் லாட்டரி சீட்டுகளை பொது இடத்தில் வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் அண்ணா சிலை அருகிலும், வெண்மணி என்ற கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் போளூர் பஸ் நிலையம் அருகிலும், […]
சாராயம் விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான குழு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. அப்போது குப்பு என்னும் மூதாட்டி சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதனையடுத்து மூதாட்டியை போலீசார் உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த சாராயத்தையும் […]
வந்தவாசி அருகே சாலையில் நடந்து சென்ற பாட்டி, பேத்தி இருவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். நவாப் ஜான் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்து வாணிசெட்டி தெருவை சேர்ந்தவர். இவருக்கு 70 வயதுடைய அலிமாபீவி என்னும் மனைவி இருந்தார். இவர் நேற்று தனது பேத்தி பானுவுடன்(31) நேற்று அக்கி எனப்படும் இயற்கை வைத்தியசாலைக்கு காலை 9.30 மணிக்கு வந்தவாசியில் இருந்து வெண்குன்றம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது […]
இரண்டு மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன். இவர் ஓய்வு பெற்ற அலுவலராக உள்ளார். நந்திவர்மன் தற்பொழுது சேத்துப்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலையில் நந்திவர்மன் சேத்துப்பட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிர்மலா நகரைச் சேர்ந்தவர்கள் ராஜா, ரேணு,மஞ்சுளா. இவர்கள் மூவரும் மரம் வெட்டும் தொழிலாளர்களாக உள்ளனர். நேற்று […]
மதுவிற்கு அடிமையான டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார் . இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சதீஷ்குமார் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சதீஷ்குமார் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். […]
மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்து வர சென்ற காரின் பின் பக்க டயர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயவேலு. இவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை ஜெயவேலு மணமக்களை மறுவீட்டிற்கு அழைப்பதற்காக தனது உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார். அந்த காரில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். திருவண்ணாமலை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீப திருவிழா மிக பிரசித்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் யாரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதனால் நடந்து முடிந்த கார்த்திகை தீப திருவிழாவில் உள்ளூர்வாசிகள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் முழக்கமிட கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. […]
அக்னிஸ் தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மகா தீபத்தையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி செப்புத் தகட்டால் செய்யப்பட்ட 5.2 அடி உயரம் கொண்ட கொப்பரை தயாரிக்கபட்டது. 1,000 […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகாதீபம் மிக பிரசித்தியாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை மீது மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் 200 கிலோ எடையும் 5 அடி உயரமும் கொண்ட கொப்பரையில் […]
போளூர் தாலுகா களம்பூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போளூர் தாலுகா பகுதியில் பிளஸ்டூ மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் என்பவர் மாணவியை […]
தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாணவி வினிஷா என்பவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வினிஷாவிற்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவவே, பலரும் மாணவி வினிஷாவிற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி வாகனத்தை வடிவமைத்துள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவிக்கு பால் சக்திபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் வானவில் நகரைச் சேர்ந்த உமா சங்கர் சங்கீதா தம்பதியரின் மகளான செல்வி வினிஷா தனியார் பன்னாட்டு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயது முதலே அறிவியலில் நாட்டமுடைய வினிஷா அது தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகில் […]
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகளில் தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக துணைத் தலைவர் திரு. வி. சக்திவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் திரு. எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட […]
சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டறிந்து விருது பெற்ற மாணவிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி இளம் வயதிலிருந்தே அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் என்ற விருது பெற்றுள்ளார். அந்த சிறுமிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயது சிறுவன் விளங்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஹரிதாரி மங்கலம் கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஐந்து வயதில் வேலு என்ற மகன் இருக்கிறான். அவன் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி இருக்கிறான். அதனைக் கண்ட வேலுவின் பெற்றோர் சிறுவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். […]
அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கோவில்களுக்குள் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பக்தர்கள் 5000 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா நவம்பர் 20 […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவளையத்தை நீக்குவதாக கூறி நல்ல பாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் புதூரில் குமரேசன் என்ற பாம்பாட்டி வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்தியுள்ளார். அவர் தங்களின் முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? என்னிடம் உள்ள விஷ பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும், அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும், என்ற ஆசை வார்த்தைகளை […]
களம்பூர் அருகே பெண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்துள்ள களம்பூர் அருகே வடமாதிமங்கலம் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற நபர்கள் அதனை கண்டவுடன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரணி போலீஸார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறந்து கிடந்த […]
திருவண்ணாமலை ஓட்டலில் வாங்கிய சிக்கனில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு கிரில் சிக்கன் பார்சல் வாங்கி இருக்கிறார். பிறகு அவர் அதை வீட்டிற்கு கொண்டு சென்று தனது நண்பர்களுடன் சிக்கனை சாப்பிடத் தொடங்கி இருக்கிறார். அப்படி சிக்கனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதில் புழு இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர் அந்த சிக்கனை சம்பந்தப்பட்ட […]
போளூர் அருகே குட்டையில் மூழ்கி அக்காள்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ பக்சிங் இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இங்கு கூர்காவாக பணிபுரிகின்றார். இவருக்கு 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. இவர்களில் சாந்தி பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பும் , பகவதி காந்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பும் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மணல்கடத்தலின் போது மண் சரிந்து இளைஞர் ஒருவர் உயிர் இறந்தார். ஆரணி அருகே அத்திமலைப்பட்டி ஏரியில் அம்மாபாளையம் சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி நள்ளிரவில் மணல் அள்ளி உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம் என்ற இளைஞர் மணல் அள்ளி ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மண் சரிந்து டிராக்டரில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய பிரேம் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவல் அறிந்து […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளில் பராசக்தி அம்மன் லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் எட்டாம் நாளான நேற்று மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அம்பாள் உற்சவ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேத மந்திரங்கள் முழங்க 16 வகை […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உணவிற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை படம்பிடித்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை தாக்கி அதிமுகவினர் கேமராக்களைப் பரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆஇஅதிமுக ஆலோசனை கூட்டம் செய்யூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக 500 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குயிலம் ஊராட்சியில் 2017-18 ஆம் ஆண்டு பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் குயிலம் ஊராட்சி செயலாளரும், திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமாண திரு காசி என்பவர் இறந்தவர்களின் பெயர்களில் வங்கி கணக்கு தொடங்கி வீடு கட்டி முடித்து விட்டதாக கூறி நான்கு முறை வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோல் இறந்தவர்களின் பெயரில் […]
சிண்டாக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கும் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தற்போது தகர ஷீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு என விளம்பரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்க பட்டுள்ளது. தகர ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ள […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்துள்ள கலிங்கலேரி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவரின் 20 20 வயதுடைய மகள் சரண்யாவுக்கும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஈயகுணம் கிராமத்திலுள்ள பெரியசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சரண்யா தனது கணவருடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று […]
திருமணம் செய்வதாக ஆசை கூறி நகை மோசடி செய்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சூரில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜ். திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர் தனக்கு மணமகள் வேண்டும் என்று இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். இதனைப் பார்த்த விதவைப் பெண்கள், திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் கார்த்திக்கின் […]
கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் எலிகளுடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே முழுவதும் நம்பி உள்ளனர். தற்போது மணிலா பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் மணிலா பயிர்கள் போடப்பட்டிருந்த வயல்கள் முழுவதுமாக எலிகளின் தொல்லை காணப்படுகின்றன. இதனால் மகசூலில் பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடும். இந்த நிலையில் பல்வேறு சங்கங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கையில் எலிகளை வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]
திருவண்ணாமலையில் ரவுடி மாமுல் கேட்டு கடைகள் மற்றும் வாகனங்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வேலூர் சாலையில் 50க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றனர். அங்கு உள்ள இறைச்சிக் கடையில் ஒன்று புகுந்த மர்ம நபர்கள் பொருளை வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் கடையின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைக்காரருக்கும் மர்ம நபர்களுக்கும் வாய்த் தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்து சென்றவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா நுழைவு […]
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் னர் விவசாயிகள் அனைவரும் தங்கள் கையில் எலிகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் விளைநிலங்களில் மணிலா பயிரிட்டுள்ளனர். அந்த வயல்களில் எலித்தொல்லை மிக அதிகமாக இருப்பதால், மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இந்நிலையில் பல சங்கங்களை சார்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனையை போலி ஆவணங்கள் மூலம் உறவினர்கள் அபகரித்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் 6 மாதங்களாக கோவிலில் வசித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் வருவாய் துறையினரை போலி ஆவணங்களை தயாரித்து இறந்தவரின் பெயரில் பட்டா மற்றும் மாற்றம் செய்வதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வந்தவாசியை அடுத்த சாலமேடு கிராமத்தை சேர்ந்த வெட்டியானுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு 3 சென்ட் அளவு வீட்டுமனை பட்டா வழங்கியது. அந்த இடத்தில் கட்டிய […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அடிப்படை வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கும் இருளர் இன மக்களின் அவல வாழ்க்கையை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பூதக்குலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக தாங்களாகவே மண் பாதையை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வேண்டும் என்றால் அருகிலுள்ள கிராமங்களில் […]
செல்போன் வாங்கி தராததால் 9 வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்த்தவர் சௌந்தர்ராஜன்-சத்யவாணி தம்பதியினர். இவர்களுக்கு நாதஸ் ஸ்ரீ (14), பிரீத்தி(13), பத்மஸ்ரீ (11 )என மூன்று மகள்களும், யோகேஸ்வரன்(9) என்ற மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நாதஸ்ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பும், ப்ரீத்தி பத்மஸ்ரீ ,யோகேஸ்வரன் ஆகியோரும் படித்து வருகின்றனர். நாதஸ்ஸ்ரீ பெற்றோரிடம் செல்போன் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் அருகே இருக்கின்ற தேவனூர் என்ற பகுதியில் சவுந்தர் ராஜன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், 14 வயதுடைய நாதஸ்ஸ்ரீ, 13 வயதுடைய ப்ரீத்தி, 11 வயது உடைய பத்மஸ்ரீ ஆகிய மூன்று மகள்களும், 9 வயதுடைய யோகேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகளான […]
விவசாயியை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். 51 வயதான இவர் விவசாயம் செய்கிறார்.இவர் மனைவி வசந்தா.இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நடராஜன் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் கழுத்துப்பகுதி அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்குறித்து […]
தந்தை செல்போன் வாங்கித் தராததால் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வெட்டவளம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் என்பவரது மகன் பரத். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தனது தந்தை ரத்தினவேலிடம் தனக்கு புதிதாக செல்போன் வாங்கித் தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ரத்தினவேல் கூலித்தொழில் செய்து வருவதால் தனது சூழலை மகனிடம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் அதனைப் […]
செஞ்சி அருகே தீக்குளித்து பெண் இறப்பிற்கு காரணமாக இருந்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்பனின் மகன் அன்பழகன், சோம சமுத்திரத்தை சேர்ந்த ராஜேஸ்வரின் மகள் செல்வி இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் அன்பழகன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.கடந்த 11ஆம் தேதி அவர் உறவினர்கள் பேச்சைக் கேட்டு செல்வியிடம் தகராறு […]
சாதம் வடித்த தண்ணீரில் விழுந்த ஒன்றை மாத வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கனகம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி யுவராணி இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதில் ஒன்றரை வயது ஆன இளையமகன் மணீஸ்வரன் கடந்த 12ஆம் தேதி வீட்டில் விளையாடியபோது சாதம் வடித்த தண்ணீரில் தவறி விழுந்தான். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை அரசு […]
நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]
திருவண்ணாமலையில் நீதிமன்றம் உத்தரவுகளைமீறி அதிமுகவினர் பேனர் வைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் திரு பழனிசாமி வரும் 9-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெறாதது அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளை […]
எஸ்பி அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் உயிருக்கு ஆபத்து என்று தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பவுன்குமார்- விஜி என்ற திருமணமான காதல் ஜோடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக விஜி கூறுகையில் “நாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். சமீபத்தில் வேறொரு பையனுடன் எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர் தீர்மானித்ததால் இருவரும் […]
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக கண்ணை கவரும் பட்டாம்பூச்சிகள் ஜவ்வாது மலைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. பட்டாம்பூச்சிகள் பொதுவாக அடர் காடுகளில் மலைப் பிரதேசங்களில் வாழும் தன்மை கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சில வகை பட்டாம்பூச்சிகள் அங்கு பெய்து வரும் மழை பொழிவால் தற்போது கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அங்கமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை போன்ற மலை பிரதேசங்களில் தற்போது படையெடுத்து வருகின்றன. ஜவ்வாது மலையை பொறுத்த வரையில் முரசை, இலந்தை […]
திருவண்ணாமலையில் போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்பவர் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி வந்துள்ளார். மேலும் நீ பாஸ் மற்றும் கார் வாடகை என ஒவ்வொருவரிடமும் தலா 4,500 ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களும் பணத்தை தந்து அவரது காரில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை பெரியார் […]
வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி என்ற கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான தடயங்கள் இருப்பதாக குண்ணகம்பூண்டியை சேர்ந்த மின்வாரிய அலுவலர் பழனி என்பவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன், ஆய்வாளர்கள் சுதாகர், பழனிச்சாமி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கிராம நிர்வாக […]