போலி பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு மக்களிடம் பணம் வசூலித்து வரும் நிருபரை கைது செய்யுமாறு செங்கம் வட்டார பகுதியில் உள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பல குற்றங்களை செய்து வரும் நபர்கள் போலியாக பத்திரிகையாளர் என அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, செங்கம் பகுதியில் சுற்றி வருவதாகவும் பொது மக்களிடையே சென்று தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என மிரட்டிப் பணம் பறித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களைக் […]
Category: திருவண்ணாமலை
கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதார வல்லுனர்கள் யோகாசனம் செய்தால், மூச்சுவிடுவது இயல்பாக நடக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் யோகாசனம் செய்து மக்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி லிர்த்திகாஸ்ரீ ஐஸ் கட்டி மீது அமர்ந்து […]
பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் அடையாள அட்டை மாதாந்திர உதவித்தொகை வழங்கி திருவண்ணாமலை ஆட்சியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை நகர மத்திய பேருத்து நிலையம் அருகே முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனை அவ்வழியே செல்லும்போது கவனித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காரை நிறுத்திவிட்டு முதியவருடன் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து முதியவருக்கு தற்காலிக பண உதவி செய்வதோடு அவருக்கு மழையில் நனையாத மேற்கூரை பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்ட மூன்று […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கணவரை வாழையிலை அறுப்பதற்காக அனுப்பி விட்டு, பெற்ற குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அடுத்துள்ள கீழ் சிறுப்பாக்கம் என்ற கிராமத்தில் கலையரசன்- சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆறு வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. சுகன்யாவிற்கு 28 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கலையரசனின் அம்மா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை சுகன்யா தான் […]
ஆரணி அருகே வறுமையிலும் சாதித்த அரசுப் பள்ளி மாணவி மேல்படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம் எழுத, ஆட்சியர் உடனடியாக உதவிகளை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ரா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜின் மகள் பரிமளா, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 502 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். ஆனால் மேற்படிப்பு தொடர முடியாமல் வறுமையில் வாடியாதல், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் […]
குடிமராமத்து பணி டெண்டருக்காக அமைச்சருக்கு ரூ.21 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளேன் என ஒப்பந்ததாரர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி ஏரி குடிமராமத்து பணிக்காக டெண்டர் விடப்பட்டு ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த டெண்டரை ஆணைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மாதவன் என்பவர் எடுக்க முன்வந்த போது தோக்கவாடி, ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சங்கர் மாதவன் அதே பகுதியைச் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு கொண்ட ஆறு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தெள்ளார் பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த அசோக சக்கரவர்த்தி (56) என்ற நபரை சென்ற மே மாதம் 25ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதுபற்றி தெள்ளார் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசியை சேர்ந்த திருநாவுக்கரசு (38), சாய்பாபா (33), முருகன் (33), […]
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே வெடால் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பதிமூன்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருளர் சமூகத்தை சேர்ந்த அவர்கள் தங்களால் வீடு கட்ட இயலாது என்று கூறியதால் கட்டுமான பணியை ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 75% பணம் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து […]
திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் விளைநிலத்திற்கு அருகே கல்குவாரி அமைக்கும் அதிமுக பிரமுகருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் மலைக்கு அருகே உள்ள விளை நிலத்தை இரவோடு இரவாக வாங்கி அந்த இடத்தில் கல்குவாரி அமைக்க அதிமுக பிரமுகர் திட்டமிட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு குவாரி அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கல் துகள்கள் விளை நிலங்களிலும் மனிதர்கள் மீது படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த பகுதி மக்கள் குற்றம் […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர், மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள சோ.நம்மியந்தல் என்ற கிராமத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் தான் பிரசாந்த்.. இவருக்கு வயது 19.. இவர் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அனிதா என்ற சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் பிரசாந்த் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அனிதா […]
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது […]
ஜெயிலில் அடைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. வயது 35 ஆகிறது.. இந்நிலையில் இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த ஜனவரி மாதம், கணவரைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இவரை ஆரணி டவுன் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ், ஜூலை 4ஆம் தேதி கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி விசாரணைக் கைதியாக […]
வரதட்சணை கொடுமை காரணமாக 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஷோபானவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 4ஆவது முறையாக கர்ப்பமாக இருந்தார் ஷோபனா.. இந்த சூழலில் மணிகண்டன் தொடர்ந்து வரதட்சணை கேட்டது […]
தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை 78,161 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளது. 3 முறை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை […]
12ஆம் வகுப்பு மாணவி, தன் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் ஏற்பாடு செய்திருப்பதாக சைல்டு லைனுக்கு போன் செய்து தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்துள்ள மாம்பட்டு கொல்லக்கொட்டாயைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அதே கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில், 11ஆம் வகுப்பு முடித்து, 12 ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில் அந்த மாணவிக்கும் போளூர் வட்டம் திண்டிவனம் ஊராட்சியைச் சேர்ந்த 23 வயதுடைய ராஜிவ் காந்தி என்ற பால் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 999 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]
3ம் நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,939, செங்கல்பட்டில் 248, மதுரையில் 218, திருவள்ளூரில் 146, வேலூரில் 118, சேலத்தில் 34, காஞ்சிபுரத்தில் 98, ராமநாதபுரத்தில் 101, திருவண்ணாமலையில் 127, கள்ளக்குறிச்சியில் 22, ராணிப்பேட்டையில் 96, கோவையில் 33, தேனியில் 35, தூத்துக்குடியில் 43, திருச்சியில் 31, கன்னியாகுமரியில் 34, தஞ்சையில் 16, நெல்லையில் 12, திருவாரூரில் 46, கடலூரில் 11, நாகையில் 40, விழுப்புரத்தில் 62, […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதில் 8 மாத குழந்தை, 39 பெண்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1625 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 70 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மொத்தம் எண்ணிக்கை 1498 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 573 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வரை 916 பேர் சிகிச்சை […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகள் 1,375 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 17 […]
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,654, செங்கல்பட்டில் 131, திருவள்ளூரில் 87, காஞ்சிபுரத்தில் 66, மதுரையில் 97, திருவண்ணாமலையில் 54, விழுப்புரத்தில் 34, தென்காசியில் 5, தூத்துக்குடியில் 49, ராமநாதபுரத்தில் 1, நெல்லையில் 32, தஞ்சையில் 15, ராணிப்பேட்டையில் 2, சிவகங்கையில் 15, கோவையில் 22, அரியலூரில் 8, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 13, ஈரோட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் 18, கன்னியாகுமரியில் […]
தமிழகம் முழுவதும் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,380, செங்கல்பட்டில் 146, கோவையில் 12, கடலூரில் 29, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 44, ஈரோட்டில் 5, கள்ளக்குறிச்சியில் 43, காஞ்சிபுரத்தில் 59, கன்னியாகுமரியில் 9, கரூரில் 3, கிருஷ்ணகிரியில் 3, மதுரையில் 137, நாகப்பட்டினத்தில் 2, நாமக்கல்லில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரியில் 17, பெரம்பலூரில் 12, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 22, ராணிப்பேட்டையில் 29, சேலத்தில் 7, […]
காவல் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள துருகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25), சரவணராஜி (25), சிவகுமார் (24) ஆகிய 3 பேரிடமும் காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய 2 பேர் அவர்களிடமிருந்து 2,25,000 ரூபாயை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, இந்த […]
தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,493, செங்கல்பட்டில் 121, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 64, அரியலூரில் 6, கோவையில் 12, கடலூரில் 102, தருமபுரியில் 5, திண்டுக்கல்லில் 27, ஈரோட்டில் 7, கள்ளக்குறிச்சியில் 21, கன்னியாகுமரியில் 6, கரூரில் 5, மதுரையில் 69, நாகையில் 25, நாமக்கல்லில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரத்தில் 30, ராணிப்பேட்டையில் 2, சேலத்தில் 12, சிவகங்கையில் 7, தென்காசியில் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் இங்கு 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வரை 442 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் […]
தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,254, செங்கல்பட்டில் 180, திருவள்ளூரில் 131, காஞ்சிபுரத்தில் 87, மதுரையில் 90, திருவண்ணாமலையில் 130, ராமநாதபுரத்தில் 49, ராணிப்பேட்டையில் 68, தூத்துக்குடியில் 46, கடலூரில் 16, சேலத்தில் 47, விழுப்புரத்தில் 23, வேலூரில் 36, நெல்லையில் 28, தஞ்சையில் 10, கோவையில் 11, விருதுநகரில் 10, அரியலூரில் 7, தர்மபுரி 2, திண்டுக்கல்லில் 6, கள்ளக்குறிச்சி 4, கன்னியாகுமரியில் 15, கரூரில் 1, கிருஷ்ணகிரியில் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை இன்று கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1009 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றுவரை 879 ஆக இருந்த […]
தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,322, வேலூரில் 103, செங்கல்பட்டில் 95, திருவள்ளூரில் 86, மதுரையில் 58, காஞ்சிபுரத்தில் 39, திருவண்ணாமலையில் 37, கோவையில் 29, கடலூரில் 5, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 7, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 22, கன்னியாகுமரியில் 7, நாகையில் 9, நீலகிரியில் 6, புதுக்கோட்டையில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரூரில் 3, சேலத்தில் 18, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் […]
தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,276, செங்கல்பட்டில் 162, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 61, திருவண்ணாமலை 49, கடலூரில் 77, நெல்லையில் 15, மதுரையில் 27, விழுப்புரத்தில் 20, தூத்துக்குடியில் 50, கள்ளக்குறிச்சியில் 16, ராணிப்பேட்டையில் 70, திண்டுக்கல்லில் 15, சேலத்தில் 14, கோவையில் 2, வேலூரில் 15, தஞ்சையில் 12, திருச்சியில் 8, விருதுநகரில் 2, ராமநாதபுரத்தில் 51, தேனியில் 3, தென்காசியில் 5, திருவாரூரில் […]
திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 768 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் இதுவரை கொரோனோவால் பாதித்த 4 பேர் உயிரிந்துள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்யாறு பகுதியில் 15 பேருக்கும், திருவண்னாமலையில் 10 பேருக்கும் புதிதாக தொற்று […]
தமிழகம் முழுவதும் 2வது நாளாக இன்றும் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 919, செங்கல்பட்டில் 88, திருவள்ளூரில் 52, காஞ்சிபுரத்தில் 47, திருவண்ணாமலையில் 65, விழுப்புரத்தில் 18, நாகையில் 43, ராணிப்பேட்டையில் 76, மதுரையில் 20, கடலூரில் 11, வேலூரில் 16, ராமநாதபுரத்தில் 18, திருச்சி மாற்று திண்டுக்கல்லில் 14, நெல்லையில் 18, திருவாரூரில் 10, தென்காசியில் 13, விருதுநகரில் 8, அரியலூர், தஞ்சாவூர் மற்றும் தேனியில் தலா 4, கள்ளக்குறிச்சியில் […]
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெளிமாவட்ட நபர்கள் வர அனுமதியில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் […]
வந்தவாசி அருகே மின்வேலியில் உயிரிழந்த மாற்றுத்திறனாளியை பெண் காவல் அதிகாரி தூக்கி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று வந்தவாசி அருகே கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியல் சிக்கிய மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மின் வேலியில் சிக்கி உயிரிழந்த அந்த மாற்று திறனாளியை தூக்குமாறு அந்த பெண் காவல்துறை அதிகாரி பொது மக்களிடம் கேட்டபோது கொரோனா அச்சம் காரணமாக தூக்க மறுத்து விட்டார்கள். இருப்பினும் […]
தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,415, செங்கல்பட்டில் 178, திருவள்ளூரில் 81, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 35, கோவையில் 3, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, ஈரோட்டில் 1, கள்ளக்குறிச்சியில் 14, கரூரில் 1, குமரியில் 2, மதுரையில் 16, சிவகங்கையில் 15, நெல்லையில் 21, விழுப்புரத்தில் 16, தென்காசியில் 16, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 2, சேலத்தில் 10, ராணிப்பேட்டையில் 6, விருதுநகரில் 7, திருச்சியில் 9, […]
திருவண்ணமலையில் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதியானதால் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று வரை 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 393 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 191 ல் இருந்து 241ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலையில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது ஏற்கனவே 500ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நேற்று வரை 565 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 217 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் 6 பெண்கள் உட்பட ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை […]
மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் ஒருவரைக் கிணற்றில் தள்ளி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள நாராயணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், ராஜா, பாலகிருஷ்ணன் ஆகிய 4 நண்பர்களும் சேர்ந்து அதே பகுதியிலுள்ள விவசாய கிணறு ஒன்றின் அருகில் உட்கார்ந்து மது குடித்துவிட்டு சீட்டு விளையாடியுள்ளனர். அப்போது சங்கருக்கும், நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.. இந்த தகராறில் சங்கரை, தாக்கிய அவரது […]
சென்னை மற்றும் பெங்களுருவில் இருந்து திருவண்ணாமலை வந்த 8 பேர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 548 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுவரை 522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதுவரை 310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]
ஆரணி அருகே கிளினீக் நடத்திய போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள களம்பூர் மருத்துவமனை தெருவை சேர்ந்த 40 வயதுடைய ரவி என்பவர் குன்னத்தூரில் கிளினீக் நடத்தி வருகிறார்.. பி.ஏ. படித்துள்ள இவர் எம்.பி.பி.எஸ். படித்ததாக கூறி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதாக ஆரணி மருத்துவ அலுவலர் நந்தினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் குன்னத்தூருக்கு விரைந்து சென்று, அங்குள்ள ரவியின் கிளினீக்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர். […]
திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்தும், வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.. திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு […]
தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் […]
தமிழகம் முழுவதும் இன்று சுமார் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1149, செங்கப்பட்டில் 134, திருவள்ளூரில் 57, காஞ்சிபுரத்தில் 18, திருவண்ணாமலையில் 11, கடலூரில் 10, நெல்லையில் 4, அரியலூரில் 1, விழுப்புரத்தில் 4, தூத்துக்குடியில் 26, மதுரையில் 5, கள்ளக்குறிச்சியில் 20, சேலத்தில் 5, திண்டுக்கல்லில் 9, விருதுநகரில் 4, ராணிப்பேட்டையில் 6, தேனியில் 2, தஞ்சையில் 4,ராமநாதபுரத்தில் 6, தென்காசியில் 3, கன்னியாகுமரியில் 7, நாகப்பட்டினத்தில் 5, ஈரோட்டில் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் இருந்து வந்த 6 பேருக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமையில் நேற்று வரை 492 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 240 பேர் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனவால் […]
தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவண்ணாமலையில் 229 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்து […]
தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டாலும் தமிழகத்தில் சில தளர்வுகள் அளித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாலையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதையில் […]
தமிழகத்தில் சென்னை,கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் பரிசோதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளன…! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவல் நிலைக்கு சென்று விட்டதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நான்கு கட்டங்களைக் கொண்ட கொரோனா பரவலில் முதல் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும். இரண்டாம் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் பரவுகிறது. 3ம் கட்டத்தில் வெளிநாடு செல்லாதவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 500க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வருகின்றது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி வருகின்றது. அங்குள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலமாக 20க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று […]
திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் இன்று பலியாகியுள்ளார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 […]