செய்யாறு பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பலியானதால் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ,புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் மனைவி வினித்ராவிற்கு அரசு மருத்துவமனையில் 2வதாக அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது .தொடர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்த நிலையில் வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு வினித்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது . தவறான சிகிச்சையே அவரது உயிர் இழப்பிற்கு காரணம் என்று […]
Category: திருவண்ணாமலை
மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ […]
திமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அக்கட்சியின் தொண்டர்கள் 16 பேர் பலத்த காயமடைந்தனைர். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள காஞ்சி ரோடு, அன்வராபாத் கிராமப் பகுதி மக்கள் 18 பேர் மினி லாரியில் வந்தனர். திருவண்ணாமலை அருகேயுள்ள புனல்காடு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 16 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் அத்திபாடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மதலைமுத்து என்பவரை வாணாபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்துள்ள அத்திபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 14 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் […]
தென் அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை, தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றப்பட்டது. அப்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு மவுன அஞ்சலியும் சுஜித் நினைவாக கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார். இந்தக் கல்வெட்டில், “நான் சுஜித் பேசுகிறேன், நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் ஆரணி அருகே வந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று தப்பி ஓடியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை […]
திருவண்ணமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஏழுமலை என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 41 சவரன் தங்க […]
திருவண்ணாமலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து ஒரு குடும்பத்தினர் மேல்மருவத்தூருக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். கார் திருவண்ணாமலை அருகில் உள்ள ஓட்டக்குடிசல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது கார் நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற 2 […]
திருவண்ணாமலையில் பாஜகவினர் பிச்சைக்காரர்களை கட்டாயபடுத்தி பொது கூட்டத்தில் அமர வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கேலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உறுப்பினர் சேர்க்கைக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு சென்றிருந்தார். வழக்கம் போல் பணம் கொடுத்தும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வராத காரணத்தினால், கட்சி நிர்வாகிகள் அங்கு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களை கட்டாய முறையில் அழைத்து வந்து பொது கூட்டத்தில் உட்கார வைத்து விட்டனர். இதையடுத்து பாஜக கொடியை ஏற்றிவிட்டு, பொதுக்கூட்டத்தில் பேச […]
ஆரணி மாம்பாக்கம் அருகே அரசு மருத்துமனையில் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருங்கூர் கிராமத்தை சேர்ந்த அரிவிழிவேந்தன் மற்றும் ஜமுனா தம்பதியினர் . இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஜமுனாக்கு தலை பிரசவத்திற்கு மாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார் .இன்று காலை பிரசவவலி வந்தது . இதையடுத்து மருத்துவர்கள் அங்கு இல்லாததால் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை […]
திருவண்ணாமலை அரசு பள்ளியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரம் வளர்ப்பதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணி குப்பம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வருகின்றன. அப்பள்ளி வளாகத்தை சுற்றி மாணவர்கள் சார்பில் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காட்சியளித்து வருகிறது. ஏராளமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் அதிகரித்துள்ள […]
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . திருவண்ணாமலை அருகே கீழ் பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் என்ற சிறிய கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்த்து அதை இரண்டு பேர் பாக்கெட்களில் போட்டு விற்பனை செய்துவந்துள்ளனர் . இதனை அப்பகுதி கூலி வேலை செய்வோர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வாங்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . இதனால் அப்பகுதியில் உள்ள குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் […]
ஆரணியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் 8 அடி பாம்பு இருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி அருகே துலீப் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்களை பள்ளி பேருந்து ஏற்றிக் கொண்டு வந்த நிலையில், ஓட்டுனர் இருக்கை அருகில் இருந்து பாம்பு ஒன்று வெளியில் வந்துள்ளது. அதனைக் கண்ட மாணவர்கள் பயத்தில் அலறினர். அதன்பின் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக […]
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி […]
சூறாவளிக்காற்றில் 70,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் . திருவண்ணாமலையை அடுத்த சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, இரட்டை கார் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அடித்த சூறாவளி காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து வீணாகி உள்ளன. இவை அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.சூறாவளிக்காற்றில் சாய்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களுக்கு தகுந்த இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் […]
திருவண்ணாமலையில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்து தம்பதி வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அப்பாவு இவருக்கு வயது 90 ,இவரது மனைவி அலமேலு வயது 85 இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள், மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உண்டு ஏழு பேரும் தங்களுக்கென்று திருமணம் ஆனதும் தனித்தனிக் குடும்பங்கள் அமைத்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் சென்று விட்டனர். ஏழு பிள்ளைகள் […]
கோடை காலம் என்பதால் மண் பானை வியாபாரம் அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் பகுதியில் ஏராளமானோர் பானை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். எப்பொழுதும் பொங்கல் பண்டிகை மற்றும் சுப தினங்களில் மட்டுமே மண் பானை விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான மக்கள் மண் பானையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மண் பானையில் சமைத்து சாப்பிடுவது மற்றும் தண்ணீர் ஊற்றி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு ஆரோக்கியமானது கூட. இதனால், பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் மண் பானையை வாங்கி செல்வதாக […]
செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட விட்டு வைக்காமல் மணல் கொள்ளையர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கரியமங்கலம் எனும் கிராமம் செய்யாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகின்றது . அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் 9 ஜீவசமாதிகள் இருக்கிறது. இதை கிராம மக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை செய்து பதுக்கி வைத்து விட்டு இரவு சமயங்களில்,டிராக்டர்கள் […]
வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. 57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும் அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நில பட்டா மாற்றுவது தொடர்பாக லஞ்சம் வாங்கிய வி. ஏ .ஓ கைதானார். சென்னை மேடவாக்கப் பகுதியை சேர்ந்தவர் கபாலி . இவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றுவதற்கு, அதியனூர் கிராம நிர்வாக அலுவலரான அப்பாசாமியை தொடர்பு கொண்டுள்ளார் . அதற்காக அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே 8500 ரூபாயைக் கொடுத்துள்ளார் கபாலி. இந்நிலையில் மீதமுள்ள 1500 ரூபாயை, அப்பாசாமி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் […]
வந்தவாசி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணனை வெட்டிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அறுவடைத் தாங்கல் எனும் கிராமத்தில் வசித்து வந்த பாலாஜி மற்றும் அவரது தம்பி தாமோதரன் அண்ணன் தம்பியான இவர்களிடையே பல ஆண்டுகளாகவே மனைத்தகராறு இருந்து வந்துள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி தனது அண்ணனை அவரது தம்பியான தாமோதரன் தாக்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது அண்ணனை சரமாரியாக […]
ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, தந்தையின் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் காம்பட்டு கிராமத்தை சேர்ந்த தனபாலின் மகன் கார்த்திகேயன், இவர் கடந்த ஜனவரி மாதம் தனது மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகப்பட்டு அவர்களது மூன்று மாதக் குழந்தை சர்வேஸ்வரனை கொலை செய்ததற்காக போலீசாரால் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவர் தந்தை தனபால் கொலையாளியான தன் மகனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று பெட்டிக்கடையை […]
கீழ்பென்னாத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் கூலி தொழிலாளியாக பனிப்புரிகிறார் . இவரது மனைவி இந்துஜா 21 வயது .இவர்களுக்கு திருமணமாகி 2 வயதான ஹரிணி மற்றும் 4 மாதத்தில் சுகாசினி என்ற இருமகள்கள் உள்ளனர். இந்துஜாவிடம் அவரது கணவர் கார்த்திகேயனும், மாமியார் சேர்ந்து அடிக்கடி தகராறு செய்வதால் தனது […]
ஆரணி அருகே மனநிலை சரியில்லாத இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்துவிட்டதால் அவரது அத்தை வீட்டில் இருந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் ரேணுகோபால் ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]
காஞ்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் கிணற்றை தூர்வாரிவிட்டு ஏறிய போது இரும்பு வடம் முறிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை அடுத்த ஆலாத்தூர் தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தன. 70 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், கிரேன் உதவியுடன் பெரிய மரப்பெட்டி மூலம் அப்பணியாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி பாறைகளைத் தகர்க்க வெடிகளைப் பொருத்தியுள்ளனர். பாறைகளை தகர்க்க வெடிகளைப் பொருத்திவிட்டு மேலே ஏறும்போது […]
இந்திய ராணுவத்தை முன்வைத்து மோடி அவர்கள் வாக்கு சேகரிப்பதை நிறுத்தவேண்டும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவண்ணாமலை மக்களவைத் தேர்தல் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ […]
ஆரணியில் உள்ள வக்கீல் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியின் டி.ஆர்.எஸ். நகரில் வசித்து வருபவர் புலிகேசி . 45 வயதான இவர் வக்கீலாக இருக்கிறார் . புலிகேசிக்கு கல்யாணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு நேற்று முந்தினம் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலையில் வீட்டின் முன்புற கதவு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் புலிகேசியிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். […]
சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டி சேத்துப்பட்டை அடுத்த உள்ள ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு குப்பம் கிராமத்தை சார்ந்த ராமஜெயம் வயது 38 ஆறுமுகம் 68, சந்தோஷ் 21 ஆகிய மூவரும் மூன்று( 3) மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணலினை கடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் மூவரையும் மடக்கிப்பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமலிங்கம் […]
அரூர் அருகே அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டு சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.அப்போது அந்த பேருந்தில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் இருந்த மொத்தம், 3 கோடியே […]