சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வலவிடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி(32) என்பவர் கடலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக( பயிற்சி) இருக்கிறார். இவர் நேற்று மாலை குடும்பத்தினருடன் ஜீப்பில் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். இந்த ஜீப்பை போலீஸ்காரர் தமிழ்குமரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கூட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லோகேஷ் என்ற சிறுவன் […]
Category: திருவண்ணாமலை
கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டுவந்தாங்கள் கிராமத்தில் வரதராஜுலு -தனலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனலட்சுமி வீட்டில் உள்ள கழிவறையில் திடீரென வழுக்கி விழுந்தார். இதில் படுகாயமடைந்து தனலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வரதராஜுலு, தனலட்சுமி […]
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சாவித்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று லோகு என்பவர் வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சாவித்திரி 1- வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த சாவித்திரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பவுன்குமார் தனது நண்பரான சம்பத் என்பவருடன் சேர்ந்து திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்குமாரின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்கழனி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் அஜித்குமாரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதனால் அஜித்குமாருக்கு லோகேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அஜித்குமார் நேற்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லோகேஷ் மற்றும் […]
மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ஜெயம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லான்பிள்ளைபெற்றான் பகுதியில் ஓட்டுநரான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தினகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கோவிலில் விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கட்டைப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
கஞ்சா போதையில் வாலிபர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் தங்கியுள்ளனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இன்று பழனியாண்டவர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சாதுக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]
திருவண்ணாமலை மாவட்டம், ராட்டின மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி மகேஸ்வரி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். பின்னர் தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளை ஜெயசீலன் கூலி வேலைக்குச் சென்று வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் மூன்று பிள்ளைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.மேலும் தந்தையின் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. இது […]
3 மாத பெண் குழந்தையின் மீது ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிச்சானந்தல் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் விஜய் அந்த பெண் குழந்தையை வீட்டின் தரையில் படுக்க வைத்திருந்தார். அப்போது வீட்டின் பரணில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் எதிர்பாரதவிதமாக தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. இதில் […]
காதலை ஏற்க மறுத்த மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கடலாடி பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனையடுத்து மேல்பாலூர் கிராமத்தில் வசிக்கும் தமிழ்வாணன் என்பவர் கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் தமிழ்வாணன் அடிக்கடி மாணவியிடம் தன் காதலை ஏற்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் […]
பார்சல் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வி.புரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலத்தில் விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வீரன் என்பவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அப்போது பெருமாளின் உறவினரான கர்ணன் என்பவரின் மனைவி கலா என்பவர் தன்னுடன் வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள உறவினர்களைப் பார்த்து விட்டு செல்லுமாறு […]
நெசவு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன், கார்த்திகேயன், குமார் என 3 மகன்கள் உள்ளனர். மேலும் சண்முகத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் கணவன்-மனைவி […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொரகொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அந்த கடையில் அப்பகுதியில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவர் மேற்பார்வையாளராகவும், 3 பேர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து மறுநாள் காலையில் சிவராமகிருஷ்ணனுக்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக […]
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவருக்கு பத்மா என்ற மனைவி உள்ளார். கடந்த 9-ஆம் தேதி விஜயகுமார் வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் விஜயகுமாருக்கு காயம் எதுவும் ஏற்படாததால் பத்மா அவரை அறையில் படுக்க வைத்துள்ளார். இதனையடுத்து […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் அருள்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருள்நாதன் தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு எர்ணாமங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது மாமா சுப்பிரமணி என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது பூவாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சோழபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது […]
ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலித்து ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக சிறுமிக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது […]
1 1/2 பவுன் தங்க நகை மற்றும் 4 செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அன்மருதை கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கீர்த்தனா தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கீர்த்தனாவின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை திருடி சென்றுவிட்டார். மேலும் […]
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவியம்தாங்கல் கிராமத்தில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்து என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் உள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சிந்துவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை நைஸாக திருடியுள்ளார். இதனையடுத்து திடீரென விழித்து பார்த்த சிந்து ‘திருடன் […]
மீன் கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் மக்களுக்கு தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் போன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கடைகளில் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், சிவபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட மீன்களை […]
சாலை ஓரம் கவிழ்ந்த லாரியை காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் அன்சர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மினி லாரியில் நாமக்கல்லில் இருந்து சுமார் 45 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வடதொரசலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]
விஷ பூச்சி கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்குவளைவேடு கிராமத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகாசினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுஷ்கா(9) என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் அனுஷ்கா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளார். இதனை அடுத்து நள்ளிரவு நேரத்தில் சிறுமியை விஷ […]
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் அன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வருகின்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறைகளை மனுக்களில் எழுதி தந்துவிட்டு செல்வர். இதில் வாரத்திற்கு இரண்டு பேராவது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்கின்றார்கள். தீக்குளிக்க […]
மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் தர்மலிங்க நகரில் தச்சுத் தொழிலாளியான மோகன்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகனுக்கு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 26-ஆம் தேதி மாடியிலிருந்து மோகன் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அருகிலிருந்த குழாய் தண்ணீர் பள்ளத்தில் விழுந்து மோகன் படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மோகனை […]
பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் சிவா-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த சத்யா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் சத்யாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சத்யாவிற்கு ஆம்புலன்சில் செல்லும் போதே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேறுவழியின்றி ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சத்யாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். […]
பெண்ணிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறு இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது நீங்கள் பணம் செலுத்தி பணி செய்தால் அந்த பணம் கூடுதலாக வரும் என […]
விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் ரஜினி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 7 மாதமாக நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு குறித்து பலமுறை ஆதாரத்துடன் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர கடைகளின் உரிமத்தை ரத்து […]
மர்மமான முறையில் இறந்த கூலித்தொழிலாளியின் வழக்கில் நியாயம் கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட தானிப்பாடி அருகே இருக்கும் பெருங்குளத்தூர் அருந்ததி காலனியை சேர்ந்த சங்கோதி என்பவர் சென்ற 24ஆம் தேதி காயங்களுடன் பிணமாக கிடந்ததை அடுத்து போலீசார் அங்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த நிலையில் இவரை இரண்டு பேர் கொலை […]
கூலித்தொழிலாளி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி புகார் கொடுத்ததை அடுத்து புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாணாபுரம் அருகே இருக்கும் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் கூலிவேலை செய்து வந்த நிலையில் சென்ற 18-ஆம் தேதி திடீரென உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரின் சொந்த ஊரான சதாகுப்பத்துக்கு கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்தார்கள். இந்நிலையில் அவரின் மனைவி கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், […]
அம்மாபாளையம் பகுதியில் மக்கள் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தை நடத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் அருகே இருக்கும் அம்மாபாளையம் கிராமத்தில் ஏ.எஸ்.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சில மாதங்களாகவே எரியாமல் இருந்து வருகின்றது. இது பற்றி பொதுமக்கள் ஊராட்சி தலைவர் மூலம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகின்றது. ஆகையால் அப்பகுதி மக்கள் நேற்று இரவு எரியாமல் இருந்த மின் கம்பங்களில் தீபந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். இது […]
வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்புப் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே வீடு கட்டுவதற்காக முனுசாமி என்பவர் பள்ளம் தோன்றியுள்ளார். மூன்று அடிக்கு பள்ளம் தோண்டியபோது உலோகத்தால் ஆன செம்பு பாத்திரம் கிடைத்துள்ளது. ஆனால் முனுசாமியின் மனைவி சகுந்தலா யாருக்கும் தெரியாமல் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கு இதுபற்றி தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆரணி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், போலீஸார் சகுந்தலாவின் வீட்டிற்குச் […]
மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் கள ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் மழைநீர் தேங்கும்படி சுனைகள் காணப்பட்டது. இதனை சுற்றி கற்கால மனிதர்கள் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய சிறு சிறு குழிகள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்கால மனிதர்கள் தங்கள் ஆயுதங்களை தீட்டுவதற்கு நீர் தேவைப்படும். இதனால் […]
சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எஸ். ஐ. டி. மற்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.எனவே நமது மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் உள்ளிட்ட […]
மின்வாரிய கோபுரத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசன்குப்பம் கிராமத்தில் இன்பராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டெல்லிபாபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் செய்யாறு அரசு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார்கள். இதனையடுத்து மாயமான இருவரும் கடந்த 21-ந் தேதி […]
டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாரியமங்கலம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கநாதன் டிராக்டரில் நாரியமங்கலத்தில் இருந்து அவலூர்பேட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நாரியமங்கலம் அருகில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதனை அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்காலில் அண்ணா நுழைவாயில் அருகே கிரிவலபாதை இணையுமிடத்தில் திமுக சார்பாக மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க திமுக நடவடிக்கை எடுத்து […]
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாதிரி கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக 100 நாள் வேலை எங்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து நாங்கள் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் 100 நாள் […]
பேருந்து-ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கீழ்பென்னாத்தூர்-திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தும் எதிரே கீழ்பென்னாத்தூரை நோக்கி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் ஜேம்ஸ், ஆட்டோவில் பயணம் செய்த அருமைசெல்வம் ஆகியோர் பலத்த […]
தம்பியை சுட்டு கொன்ற அண்ணணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிப்பூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டராமன் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கோதண்டராமன் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு அண்ணனிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜெகதீஷன் சிறிது நாட்கள் கழித்து பிரித்து தருவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் கோதண்டராமன் சொத்தை பிரித்து […]
பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகர்மன்ற அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர் கார்த்திகேயன், செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் […]
இளம் பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை கர்நாடக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் சுங்கத்கட்டே பகுதியில் வசித்து வரும் நாகேஷ் என்பவன் ஆயத்த ஆடை துணியகம் நடத்தி வருகின்றார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் பணியாற்றி வருகின்ற நிலையில் நாகேஷ் அந்த பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் வேலை பார்க்கும் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட […]
மரம் விழுந்து பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரியகரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏரி கால்வாய்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரம் திடீரென கால்வாயில் விழுந்தது. அப்போது ஏரி கால்வாயில் வேலை செய்து கொண்டிருந்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் வசிக்கும் சங்கர் என்பவரின் மனைவி சுதா, பார்த்திபன் என்பவரின் மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது தென்னைமரம் […]
சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் காதர்பாட்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீலா பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காதர்பாட்ஷா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அச்சரப்பாக்கத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் அச்சரப்பாக்கத்தில் இருந்து வேலூருக்கு சொகுசு காரில் சுவீட் வாங்குவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பிருதூர் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்செவலாம்பாடி கிராமத்தில் அருண்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமாகுலேட் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் சேத்துப்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக […]
தேர்வுக்குப் பயந்து பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள களம்பூர் தந்தை பெரியார் நகர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவன் களம்பூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதனால்விக்னேஷை அவரது தாயார் படிக்க சொல்லிவிட்டு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அந்தனூர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் செந்தில் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் வேலைகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மேல்பள்ளிப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி […]
மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு உட்பட்ட அரசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ், அபிஷேக். இவர்கள் இருவரும் கொருக்கை உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார்கள். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் விஜய் என்ற மாணவரும் பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய […]
ஆரணி அருகே வாலிபர் ஒருவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி புதுகாமூர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 25 வயதுடைய புஷ்பராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக ஆரணிக்கு வந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் இருக்கும் கிணற்றில் குளிக்கச் சென்று இருக்கின்றார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து அவருடன் வந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்த நிலையில் மீட்க முடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் […]
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாராசூர் கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது நண்பரான அபிஷேக் ஆகிய இருவரும் கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதேபோன்று அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவரின் மகனான விஜய் என்பவரும் பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் […]