மோட்டார் சைக்கிள்- லாரி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மேகலா என்ற மனைவியும், 1 ஆண் குழந்தையும்,1 பெண் குழந்தையும் இருக்கின்றனர். இதனையடுத்து ரமேஷ் திருமக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் தினசரி வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி ரமேஷ் திருமக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு தனது மோட்டார் […]
Category: திருவாரூர்
திருவாரூரில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் அருகில் ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி […]
மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் புதிய முயற்சியாக இ-பீட் ரோந்து பணியை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி போலீஸ் விழுதுகள் என்னும் குழு அமைக்கப்பட்டு, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த குழு மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களின் விவரங்களை கண்டெடுத்து உள்ளனர். […]
உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி முறையில் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் இயற்கை எரிபொருளாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது கலெக்டர் கூறியபோது, சமையல் எண்ணை பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் அனைத்து வகையான கடைகளும், தரமான […]
சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது அலிவலம் சாலையில் சந்தேகபடும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்ததால் காவல்துறையினர் அவர்களை சோதனை செய்தபோது 3/4 […]
நிலத்தின் புல எண்ணை திருத்தம் செய்து தரக்கோரி விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ மருதூர் கிராமத்தில் மாதவன் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் மேல பனையூர் கிராமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 49 சென்ட் விவசாய நிலப் பகுதியை வாங்கி தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இந்த நிலத்தின் சான்றிதழ் மூலம் கூட்டுறவு வங்கி கடன் பெற்று மானிய விலையில் விவசாய உபகரணங்கள், […]
கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயகிபுரத்தில் பாலு என்பவர் கொத்தனாராக வசித்து வருகின்றார். இவருக்கு 3 மனைவிகள் இருக்கின்றனர். இதில் முதல் மனைவி வசந்தாவுக்கு சஞ்சய்காந்தி, புயல் ராஜன் என்ற 2 மகன்களும், 2-வது மனைவி அஞ்சலி தேவிக்கு ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்ற 2 மகன்களும், 3-வது மனைவி ரஷ்யாவுக்கு சிந்துஜா என்ற மகளும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தனிக் குடும்பமாக வசித்து […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமானில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைவேலன தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குலாம்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து வட்டார தலைவர் முத்துக்குமரன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வரன் […]
சொட்டு மருந்து முகாம் ஏற்படுத்தப்பட்டு 150 நபர்களுக்கு கண்களில் செலுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் கண் சொட்டு மருந்து முகாம் நடைபெற்று மன்ற நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் சித்த மருத்துவர் சங்கரசுப்பு 150 நபர்களுக்கு கலிக்கம் என்ற கண் சொட்டு மருந்தை கண்களுக்கு செலுத்தியுள்ளார். இந்த சொட்டு மருந்தை செலுத்தி கொள்வதால் கண் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை குணமாகும் என்றும் பெண்களின் மாதவிடாய்க் கோளாறு சரியாகும் என்றும் மருத்துவ ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. […]
ஆலங்குடி ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவரான வக்கீல் மோகன் தலைமை தாங்கினார். மேலும் துணைத்தலைவர் ராசாத்தி சின்னப்பா முன்னிலையில், ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்று பேசியுள்ளார். இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் வாங்கப்பட்டு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு வகைப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமில் […]
சேதமடைந்துள்ள கால்நடை மருத்துவமனையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சாத்தனூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவமனையில் சாத்தனூர், பழையனூர், காக்கையாடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தாங்கள் வளர்த்து […]
அரசியல் கட்சி பிரமுகரின் கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் 7 நபர்களை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினி பாண்டியனை கடந்த 9-ஆம் தேதி இரவு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலை குறித்து எடையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் […]
டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேலபருத்தியூர் கிராமத்தில் ராஜேஷ் என்பவர் எலக்ட்ரிஷன் வேலைப்பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மேலபருத்தியூர் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் கோளாறு ஏற்பட்டதால் மின் துண்டிப்பு ஏற்பட்டது. எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதனால் கோளாறை சரி செய்வதற்கு மின்வாரிய ஊழியர்கள் வரமாட்டார்கள் என நினைத்து மின் துண்டிப்பை சரி செய்ய ராஜேஷ் டிரான்ஸ்பார்மரில் ஏறியுள்ளார். அப்போது ராஜேஷ் மீது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் […]
திருமணமான 7 மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள தியானபுரம் சாப்பாவூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் டிரம்ஸ் இசை கலைஞராக இருக்கின்றார். இவருக்கும் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் மகள் திவ்யாவுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரனின் அண்ணன் […]
பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் நகர பேருந்துகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் செல்வதற்கு இலவசம் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடங்கள் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வசதியாக புறநகர் பேருந்துகளை நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்து இயங்கியது. இதனையடுத்து நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை […]
பஞ்சரான டிப்பர் சக்கரத்தை கழற்றிய போது தலையில் அடிபட்டு டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் பகுதியில் சவுரிராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சீதாராமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக இருந்துள்ளார். இவர் டிராக்டரில் டிப்பரை மாட்டி எடுத்துக்கொண்டு திருவாரூர் மாவட்டத்திலுள்ள தேவூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழியில் டயர் பஞ்சர் ஆனதால் சரி செய்வதற்காக டயரை சீதாராமன் கட்டியுள்ளார். அப்போது எதிர்பாராமல் டயர் கழன்று […]
அரசியல் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய பாலை பட்டாபிராமனின் வளரும் தமிழகம் கட்சியில் தெற்கு மாவட்டச் செயலாளராக ரஜினிபாண்டி இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினிபாண்டி […]
திருவாரூரில் கோடை அறுவடை செய்யும் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தி முதல் இடத்தை பிடித்து வருகின்றது. இந்த பகுதியில் மற்ற பயிர்களை விட நெல் உற்பத்தி ஏற்ற மண் வளமாக இருக்கின்றது. இதில் பல இடங்களில் ஆற்றுப் பாசனத்தை எதிர்பார்த்து விவசாயம் நடந்து வருகின்றது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இருந்து வருவதால் உரிய காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி […]
செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக மன்னை எக்ஸ்பிரஸ் மற்றும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை தென்னக ரயில்வே வெளியிடவில்லை. மன்னார்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருப்பூர், கோவை […]
கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த கனமழை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ரா நல்லூர், மரக்கடை, கோரையாறு, திருராமேஸ்வரம், வேளுக்குடி, வடபாதிமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இவ்வாறு பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி மழைநீர் சாகுபடிக்கு உதவியாக […]
பேருந்து நிலையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை கண்காணித்தார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பேருந்து நிலையத்தில் விதிமுறைகளை பயன்படுத்தி பேருந்துகள் இயங்கி வருகிறதா என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணிக்கிறார்களா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சுகாதாரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை உருவாக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகரித்தபோது மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை உருவாக்குவதற்கு பிரதம மந்திரியின் கேர் நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் […]
கூரை வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர் பாலம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான கூரைவீடு இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தினால் கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் இந்த விபத்தினால் வீட்டில் இருந்த கட்டில் பீரோ, […]
கிளியனூர்- புனவாசல் இணைப்பு பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிளியனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிளியனூர் கிராமத்திற்க்கும், புனவாசல் கிராமத்திற்கும் இடையே இணைப்பு பாலம் 80 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த பாலத்தை கிளியனூர், புனவாசல் மற்றும் பல கிராமங்களில் இருப்பவர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நாளடைவில் பாலம் சேதமடைந்து, தடுப்புச் சுவர்கள் இடிந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு மோசமான […]
வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு 2006-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பிக்க வேண்டும். எனவே 2016 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து […]
கட்டுப்பாட்டை இழந்த கார் செங்கலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயன் தனது குடும்பத்தோடு குடவாசல் பகுதிக்கு சென்னையில் இருந்து காரில் வந்துள்ளார். இதனையடுத்து கல்லாத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்த கார் ஆனது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் மீது வைக்கப்பட்டிருந்த செங்கல் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயன் […]
கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின் முதல் வியாழக்கிழமை நேற்று குருபகவான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவிலில் நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலான இங்கு குருவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் போன்ற சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும், […]
நகை பட்டறையில் உள்ள பீரோவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவில் தனாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள வாரச்சந்தை சாலையில் அடகு கடை, நகை கடை மற்றும் நகை பட்டறையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தனாஜி வழக்கம்போல் இரவு தனது பணிகளை முடித்துவிட்டு கடை மற்றும் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனாஜி அதிகாலை […]
கோரையாறு தலைப்பு அணை சுற்றுலாத்தலமாக மாறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்திற்கு அருகில் மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) இருக்கின்றது. இந்நிலையில் வருடதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டபின் அங்கு இருந்து நீர் கல்லணைக்கு வந்து பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டு பெரிய வெண்ணாறு வழியாக நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள மூணாறு தலைப்பை வந்து சேரும். இங்குள்ள அணையில் இருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய 3 ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுவதன் மூலம் திருவாரூர், நாகை […]
பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணியாங்குடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மதுபாஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆனால் தற்போது கல்லூரி திறக்கப்படாததால் மதுபாஷினி வீட்டில் இருந்த நிலையில் மீண்டும் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மதுபாஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]
அரசு மருத்துவமனை கட்டிடத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் கட்டிடத்தின் மேல் தளத்தில் பெயிண்டிங் வேலை நடைபெற்று வந்தது. இந்தப் பணியை திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் செய்து வந்துள்ளார். அப்போது சதீஷ் கட்டிடத்தில் இருந்து திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனால் தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
நீடாமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவின்படி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து நாளிதழ்களில் செய்தி பரவியது. இந்த செய்தியை திருவாரூரில் தங்கியிருந்த தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் படித்துள்ளார். அதன்பின் முதல்வர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அழைத்து பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு […]
ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அரசு மருத்துவமனைக்கு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் வரும் காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு 1 கோடி மதிப்பிலான எந்திரங்கள் வந்தடைந்தது. எனவே மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ) அமைப்பு பெங்களூரில் இருந்து […]
வீராக்கி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீராக்கி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீரில் நாளடைவில் உப்புத்தன்மை அதிகமானதால் குடிக்கவும், சமைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று […]
நன்னிலம் பகுதியில் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் பொதுமக்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே தற்போது 3-வது அலை கொரோனா அக்டோபர், நவம்பர் மாதத்தில் வரும் என சில மருத்துவர்கள் கூறி வருவதாக தகவல் பரவத் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்து வருகின்றனர். இதனால் பல்வேறு […]
முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தர்மராஜ் மணிகண்டன் ஆகிய இரண்டு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை வெட்டினார். இதில் […]
அரவைக்காக நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்தில் நெல் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கும் இந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10.50கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு குழந்தை நல சிகிச்சை […]
கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ஒருவர் வளாகத்தில் நின்று திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஓடி வந்து அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நீடாமங்கலம் […]
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பு தே.மு.தி.க கட்சி சார்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில், கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நடராஜன், நகரச் செயலாளர் சதீஷ், ஒன்றிய செயலாளர் திருமுருகன், மாநில நிர்வாகி முத்தையா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் […]
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி மற்றும் காவல்துறையினர் கச்சனம் கடைத்தெருவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் […]
நெல் விதைகள் முளைத்து வளருவதற்குள் மழை பெய்ய விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர் . குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த மாதம் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தங்களது வேலையை தொடங்கி இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் உழவு பணிகள் நிறைவு பெற்று நெல் விதைகளை விவசாயிகள் விதைத்து வருகின்றனர். இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகள் […]
வாய்க்கால் கரையில் ஏற்படும் மண் சரிவை தடுத்து தரைப்பாலம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடியிலிருந்து மன்னஞ்சி செல்லும் சாலையின் இடையே பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் இருக்கின்றது. இந்தப் பாசன வாய்க்கால் மூலம் பெரியகொத்தூர். சின்னகொத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் குறுகலாக இருப்பதால் தண்ணீர் அதிகளவு செல்லும்போது கரையில் உள்ள மண் சரிந்து விழுந்து […]
ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலப்பனையூர் கிராமத்தில் சிவகுமார் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான விளைநிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி. குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியதால் வயலில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஓ.என்.ஜி.சி. முதன்மை பொது மேலாளர் மாறன், நல்லூர் பாதுகாப்பு அதிகாரி விஜயராகவன், செயற்பொறியாளர் பரமேஸ்வரன் போன்ற அதிகாரிகள் சம்பவ […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், மின்வாரிய அலுவலகம், மூன்றாம் தெரு சுந்தரம் சுப்ர மகால், இடையர் எம்பேத்தி அரசுப்பள்ளி, இடையர் நத்தம் அரசுப்பள்ளி, காரிகோட்டை அரசுப்பள்ளி, 54- நெம்மேலி அரசு பள்ளி […]
ஆன்லைன் வகுப்பின்போது மாணவியின் பெயரில் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் மாணவி ஒருவரின் பெயரில் வாலிபர் ஒருவர் இணைந்து அவர் தனது செல்போனில் இருந்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கும், பாடம் பயிலும்மாணவிகளுக்கும் ஆபாச செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு குரூப்பில் […]
தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டத்தில் மீனவர்கள், மீன் வளர்ப்போர் சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், […]
லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு வழி பாதை அமைத்து தரக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி சாலை 80 ஆண்டுகளுக்கு மேலாக குறுகலான சாலையாகவே இருகின்றது. இந்த சாலையானது திருவாரூர் – மன்னார்குடி என்ற வழியில் இருக்கின்றது. இதன் வழியாக தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி- கல்லூரி வாகனங்கள், வேன், கார், ஆட்டோ போன்ற பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை, நகராட்சி […]
300 நபர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. எனவே கொரோனாவின் 3-வது அலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதை பொருத்து முகாம்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]