Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி சிறந்த ஆசிரியர் – மாணவி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி சிறந்த வழிகாட்டும் ஆசிரியராக மாணவர்களுடன் சகஜமாக பழகும் கலந்துரையாடிய கலந்துரையாடிய தாக டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாரூர் மாணவி பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் மோடி பங்கேற்ற தேர்வுக்கு பயமேன் என்ற நிகழ்ச்சி கடந்த 20ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 64 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திருவாரூர் மாவட்டம் கொரடாராச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆராதனவும் பங்கேற்றார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் தங்களுடன் இயல்பாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தாலிக்கு தங்கம்” திருமணத்திற்கு ரூ2,80,000….. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்..!!

மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்காக  தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 2,80,000 ரூபாயை மாவட்ட  ஆட்சியர் வழங்கினார்.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டாமாறுதல், கல்விக்கடன், விவசாய கடன், புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 190 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட அவர் பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில் விசாரணையை முடித்து அதற்கான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

54 அடி உயரம்….. தியாக ராஜ சுவாமி கோவிலில் புதிய கொடி மரம்…. திரளாக குவிந்த பக்தர்கள் கூட்டம்….!!

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி எதிரே இருந்த 98 ஆண்டு பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்தது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் இருந்து 54 அடி உயர தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு ஆகம விதிப்படி புதிய மரம் உருவாக்கப்பட்டது. […]

Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் சிறுபான்மையினருக்கு பிரச்சனை வராது….. அதிமுக உறுதி….!!

நாட்டில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசை  உணவுத்துறை அமைச்சர் காமராஜர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்  என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றார். மேலும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய எந்த சிறுபான்மையின மக்களுக்கு […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

‘பணம் வாங்குனியே… ஓட்டு போட்டியா’ – வாக்காளர்கள் மீது கோபித்துக்கொண்ட வேட்பாளர்!

திருவாரூர்: மன்னார்குடி அருகே கிராம மக்கள் பணம் வாங்கி கொண்டு ஒட்டு போடாததால் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் கிராமம் முழுவது நோட்டீஸ் ஒட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருவாரூரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது . இதில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு வழிகளில் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வெற்றியைக் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மர்மக்காய்ச்சல்… மருத்துவர்கள் அலட்சியம்… ஒரே வீட்டில் 2 குழந்தைகள் மரணம்..!!

மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர். ஆனால் […]

Categories
திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விசாரிக்க சென்ற இடத்தில்… “15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… காவலர் மீது பாய்ந்தது போக்ஸோ..!!

புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்குத் திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் உள்ளார். செந்தில்குமார் குடும்பத் தகராறு காரணமாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராகப் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

32 குளங்கள் எங்கே? – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருத்துறைப்பூண்டி வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 32 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குள்பட்ட நெடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக விளங்கிவருவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் செய்வதற்கும் பயன்பட்டுவருகிறது. இந்நிலையில், நிலத்தடி நீரின் அரணாக விளங்கும் இக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோடி, அமித்ஷா உருவ பொம்மைகள் எரித்து போராட்டம்…!! மாணவர்கள் மீது வழக்குப்பதிவு…!!

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து. அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர் அவற்றை போலீசார் அணைக்க முயன்ற போது கடும் வாக்குவாதம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விடுதியிலிருந்து வெளியேற மறுத்த மாணவர்கள்; விடிய விடிய போராட்டம்!

திருவாரூர்: மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விடுதியைவிட்டு வெளியேற்றும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரை அடுத்த நீலக்குடியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து இன்று மாலை திடீரென்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமிகளை அழைத்து சென்ற 2 பெண் தரகர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

பெண் ஒருவரிடம் 20,000 ரூபாய் பணத்தை  கொடுத்துவிட்டு அவரது  இரண்டு மகள்களை பின்னலாடை வேலைக்கு அழைத்துச் சென்ற பெண் புரோக்கர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் ,வெள்ளகுலத்தைச் சேர்ந்த கணவனை இழந்தவரான தனலட்சுமிக்கு 10 மற்றும் 11 வயதில் இரு மகள்கள் உள்ளனர். வறுமையில் இருந்த தனலட்சுமியை  அணுகி கோவையிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் அவர்  மகள்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, நீடாமங்கலத்தை சேர்ந்த தரகர்கள் கனகம் ,சகுந்தலா ஆகியோர் 20,000 ரூபாய் கொடுத்துவிட்டு அழைத்துச் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ10,000க்கு….. பேத்திகளை விற்ற பாட்டி……. திருவாரூரில் பரபரப்பு….!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 2 சிறுமிகள் தலா ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்கின்ற பாட்டி ஒருவர் அவரது பேத்திகளையே ரூ 10,000 க்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள பின்னலாடை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்  சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் குடவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளை […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”புது மாவட்டமாக மயிலாடுதுறை” அறிவிக்கப்படுமா ? மக்கள் எதிர்பார்ப்பு …!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே சந்திப்பு கொண்டிருக்கும் ஊர். கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர். புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் எனும் பெருமை பெற்றது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

50,000 பணத்திற்காக…… பெண் கழுத்தறுத்து கொலை…… திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை அடுத்த  மருதுவம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர்நேற்று மாலை வெளியே சென்று இருந்த பொழுது அவரது மனைவி ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாக விளக்கு எரியாமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது ராஜேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின் காவல்நிலையத்திற்கு தகவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நில தகராறு” அதிமுக பிரமுகர் படுகாயம்……. 18 பேர் மீது வழக்கு…..!!

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்அடைந்தார். திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினரான ஜெயமாலினி என்பவர் நிலம் வாங்கியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கோபாலன் என்பவருடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயமாலினி மற்றும் பரமசிவம் ஆகியோர் உடன், அங்கு வந்த கோபால், ராமன் மற்றும் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய கற்களால் தாக்கியதாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சோக சம்பவம்…. “மின்சாரம் தாக்கிய மாமனார்”… காப்பாற்ற முயன்ற மருமகள் உயிரிழப்பு…!!

திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கிய மாமனாரை காப்பாற்ற முயற்சி செய்த மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தம் – லிசா(26) தம்பதி. நேற்று இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டாரை லிசாவின் மாமனார் அசோகன் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லிசா மாமனார் கீழே […]

Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு வருஷம் ஆச்சு….. இன்னும் கிடைக்கல , என்ன செய்ய நாங்க…. அரசு மீது MLA பாய்ச்சல் …!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை என திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆடலரசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-திருவாரூர்    மாவட்டத்தில் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், திருத்துறைப்பூண்டி தொகுதி சிக்கியது. இதனால் ஆறு மாத காலமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மிகப்பெரிய ஒரு பேரிடரை சந்தித்துள்ளனர். மேலும் தொகுதி முழுவதும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டபோதும் […]

Categories
காஞ்சிபுரம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

அத்திவரதர் வைபவம் : போலீஸ்_க்கு 2 நாட்கள் விடுமுறை ….!!

அத்திவரதர் வைபவத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு 2 நாட்கள் விடுமுறையை அறிவித்து மாவட்ட SP உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமையில் தீ குளித்த மனைவி”கணவர் மற்றும் மாமனார் கைது !!.

வரதட்சணை  கொடுமையால் தீக்குளித்த  பெண்ணின்   கணவன் மற்றும்  மாமனார் கைது செய்யப்பட்டனர் . திருவாரூர்  மருதப்படினத்தை  சேர்ந்த  அருண்  என்பவரது  மனைவி  மைதிலி  சென்ற  வியாழக்கிழமை  தீக்குளித்தார் . இதையடுத்து  அவர்  திருவாரூர்  அரசு  மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில்  80 %  தீக்காயங்களுடன்   அனுமதிக்கப்பட்டு  தீவிர   சிகிக்சை  பெற்று  வருகிறார் . ஆபத்தான  நிலையில்  சிகிக்சை பெற்று  வரும் மைதிலியிடம்  மாவட்ட  குற்றவியல்  நடுவர்  வாக்குமூலம்  பெற்றார் .வாக்குமூலத்தில்  தனது கணவர் , மாமனார் மற்றும்  மாமியார்  வரதட்சணை  கேட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து 7 வயது சிறுமி சாதனை…!!

7 வயது சிறுமி தனது தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே நெடுங்குளம் என்னும் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்துக்கொண்டனர்.  இப்போட்டியில்  கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அக்சயா தன் தலைமுடியால், 700 கிலோ எடையுள்ள காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.   இதனையடுத்து மாணவி அக்சயாவுக்கு பலர் வாழ்த்துகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“திருவாரூரில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை “கலெக்டர் ஆனந்த் அதிரடி உத்தரவு !!..

திருவாரூர் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்  திருவாரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் டெங்கு கொசுவை ஒழிப்பதற்கான  தடுப்பு நடவடிக்கையை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அம்மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார் அதன்படி 44 கிராம ஊராட்சிகளில் கொசு உற்பத்தியை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதுகுறித்து அவர் கூறியதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுவீடாகச் சென்று சுத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…!!

குடிநீர் வழங்க கோரி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அடுத்து வெங்கத்தான்குடி ஊராட்சி ஆற்றங்கரை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தென்பரை பாமணி ஆற்று படுகையில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றின் வழியாக  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கைப்பம்பு மூலம் வரும் உப்பு நீரை தான் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி விவகாரம் : மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்….!!

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள்  போராட்டம் நடத்தினர்.  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் பெண்களை ஆபாசமாக கொடுமை படுத்தும் வீடியோவை வெளியிட்டனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]

Categories

Tech |