குளத்தில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட களப்பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணக்கரை கிராமம் பகுதியில் வெட்டுக்குளம் உள்ளது. கடந்த 5 நாட்களாக இந்த குளத்துக்குள் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 5 நாட்களாக தண்ணீரில் அங்கும், இங்கும் சுற்றி வந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அவரை குளத்தில் இருந்து வெளியே வரும்படி கூறினர். ஆனால் அந்த பெண் குளத்தைவிட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த […]
Category: திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட ஐந்து குழந்தைகள் உட்பட 18 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 பேரும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதானம் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீடாமங்கலத்தில் இருந்து 2,000 டன் நெல் அரவைக்காக சென்னைக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து சென்னை மாவட்டத்திற்கு அரவை செய்வதற்காக 2000 டன் நெல் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பப்பட்டது. இதனால் ராஜகோபாலபுரம், ஆதனூர், பாமணி, அரவத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை 150 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுமை […]
பிரசித்தி பெற்ற கோவிலில் தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக தியாகராஜர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதுடன், கோவிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒரு முறை குளத்தை தெப்பம் சுற்றிவர 3 […]
மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் உழவாரப்பணி நடந்தது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபால சுவாமி கோவிலில் உழவாரப்பணி குழு சார்பாக உழவாரப்பணியானது நடந்தது. இந்த உழவாரப் பணியை மாவட்ட என்.எஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா தொடங்கி வைக்க சங்கரா உழவாரப்பணி குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்க அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் வாசுதேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதில் ராமர் பாதம் தொடங்கி யாகசாலை பகுதி வரை உள்ள செடி, கொடிகளை அகற்றினார்கள். மேலும் இதில் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமுதக்குடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சொந்தமாக வீடு கட்டுவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கான அனுமதி கிடைத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மணிகண்டன் வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் […]
மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீடுகள் வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மானிய விலையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தவணைத் தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தவணை தொகையை விடுவிக்க வேளாண்குடி ஊராட்சி பணிபார்வையாளர் மகேஸ்வரன் […]
பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியிலிருந்து நாலாநல்லூர் பகுதிக்கு செல்ல முள்ளியாற்றின் குறுக்கே மரப்பாலம் உள்ளது. இந்த பாலம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள், முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் என […]
அட்சய திருதியை முன்னிட்டு ராஜகோபாலசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ராஜகோபாலசாமி தங்க கருட வாகனத்தில் கோவிலுக்கு எதிரே இருக்கும் அகோபில மடத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி இருக்கும் நான்கு நான்கு வீதிகளில் வீதி உலா வந்தார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
அசல் ஆவணங்களை தராததால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டு இருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே இருக்கும் நெம்மேலி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது வீட்டு பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வைத்து கடன் பெற்று இருக்கின்றார். கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக திருப்பி செலுத்தியும் அவருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல் வீட்டு வசதி வாரியம் இழுத்தடித்து வந்தது. இதனால் […]
சாலையை சீரமைக்கக்கோரி நூதன முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை நடத்தினார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு ஊராட்சியில் இருந்து தலைக்காடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சீரமைக்கக் கோரி பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் சீரமைக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பாடைகட்டி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் ராஜா தலைமை தாங்க ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் […]
மொபட் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இனாம்கிளியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் தினமும் கடைக்கு சென்று விட்டு மொபட்டில் தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சினேகா கோவிந்த குடியிலிருந்து தனது தந்தையுடன் மொபைட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
வாடகைக்கு இருந்த நபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை ஹரிஹரசுதன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரசுதன் வீட்டு வாடகை சரியாக கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு செந்தில்குமார் ஹரிஹரசுதனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று வீட்டை காலி செய்த ஹரிஹரசுதன் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி செந்தில்குமார் […]
திருச்சி ஏர்போர்ட்டில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்ற முத்துப்பேட்டை வாலிபரை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் வசித்து வருபவர் பக்கிரி முகமது. இவருடைய மகன் 37 வயதுடைய முகமது யூசுப். இவர் கடந்த 2005ஆம் வருடம் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கத்தார் நாட்டிற்கு தப்பித்து சென்றார். அதன்பின் திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் முகமது யூசப்பை பிடிக்க வாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து […]
மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூன்றாம்சேத்தி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மின்மாற்றி மற்றும் மின்சாதனங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடையால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயமாலினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயமாலினி கடந்த 20-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமாலினியின் சகோதரர் கேசவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதங்குடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வதற்காக வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வயலுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் தொடர்ந்து கடித்து வருகிறது. அதேபோல் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஏராளமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 7 ஆடுகள் […]
குருபகவான் கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருவார பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் குரு வார வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வியாழக்கிழமையை முன்னிட்டு குருவார வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட […]
கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவாடியக்காடு பகுதியில் மீனவரான சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சந்திரசேகரன் முன்னாங்காடு துறைமுகத்திலிருந்து மீனவர்களுடன் மேல கடைசி தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென சந்திரசேகரன் படகில் இருந்து தவறி கடலில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் ஏத்தக்குடி கீழகுடியிருப்பு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற அண்ணன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி தனது மனைவியிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் தட்டிக்கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் வீட்டில் இருந்த இரும்பு […]
மனைவி மற்றும் மகளை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாநல்லூர் ஜெயந்தி காலனி பகுதியில் தனபால்-சாரதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தீபா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தீபா வேலைக்கு சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனபால் தீபாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தனபால் […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நடுவச்சேரி பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் கடை வீதி தெருவில் கொரடாச்சேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்ற வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகார்தாஸ் என்பதும் சட்டவிரோதமா கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “வருமுன் காப்போம்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம் .பி செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் ரத்தினகுமார், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன், வலங்கைமான் ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.பி. […]
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பூக்கொல்லை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் சாலை ஓரம் அமைந்துள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சலாமத்துநிஷா, ஹர்சத் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூவனூரில் பிரசித்தி பெற்ற சதுரங்கவல்லபநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]
மாணவர்களுக்கு நிழல் இல்லாத நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி காந்தி சிலை முன்பு வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் “நிழல் இல்லாத நாள்” குறித்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் எழிலரசி, கிளையின் பொருளாளர் பாஸ்கரன், அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் சேதுராமன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஆனந்தி தனது கணவர் விஜயபாலனுடன் திருத்துறைப்பூண்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆனந்தி மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]
பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கை பகுதியில் மிக பழமையான பக்தவத்சல பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பக்தவச்சல பெருமாள், சீதேவி மூதேவி நாச்சியாருடன் சிறப்பு தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளை […]
சந்தன ராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சந்தனராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் சீதா, லட்சுமணன், அனுமன் சமேத சந்தனராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், […]
பெய்த கனமழையால் உளுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை கால பயிரான உளுந்து, பச்சை பயிர் போன்றவற்றை சாகுபடி செய்தனர். இந்த பயிர்கள் இன்னும் சிறிது நாட்களில் அறுவடை செய்ய தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பயிர்கள் வயலில் […]
குருபகவான் கோவிலில் 2-ஆம் கட்ட லட்சார்ச்சனை நாளை தொடங்குகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 14-ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு முதற்கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலு என்ற மகன் இருந்துள்ளார்.இந்நிலையில் வேலு வேலைக்கு சென்றுவிட்டு மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ராம நவமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று யானை வாகனத்தில் கோதண்டராமரையும், அன்னவாகனத்தில் சீதாதேவியும் எழுந்தருள செய்து வீதிஉலா நடைபெற்றது. இதனையடுத்து சாமிகளுக்கு பல்வேறு வகையான […]
கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவிடையல் கிராமத்தில் கூலி தொழிலாளியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ரவிச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
நடைபெற்ற நேர்காணல் முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்காரவயல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் தெய்வநாயகி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் வடகரைவயல், கானூர், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் […]
பிரதோஷத்தை முன்னிட்டு அபிமுக்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அபிமுக்தீஸ்வரர் சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அபிதகுஜலாம்பாள் சமேத அபிமுக்தீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் இந்திரா நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் இளம் சிறுத்தை பாசறையின் ஒன்றிய துணை செயலாளரான சின்னத்துரை என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அதே பகுதியில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சியினருடன் சேர்ந்து பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சின்னத்துரை […]
ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் 108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபபாரதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுபபாரதி தனது தோழி ஜெனித்தாவுடன் சேர்ந்து திருவாரூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி சுபபாரதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் […]
கள்ள நோட்டு விற்பனை செய்ய முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பகுதியில் டாஸ்மார் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்த அருள் என்பவர் மது பாட்டிலை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருளை பிடித்து விசாரணை […]
மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மானாநல்லூர் கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மகேந்திரனின் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
குடும்ப பிரச்சனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேதிபுரம் கிராமத்தில் முதியவரான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் தனது பேரனின் பிறந்தநாளை அதிகமாக செலவு செய்து கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஜெயராமனுக்கும் அவரது மகன் கலைச்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய […]
கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மறுபடியும் வெங்கடேசனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கியநிலையில் இருந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க ஒன்றிய தலைவர் சகிலா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பது போல சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு […]
நண்பனின் தாயை தாக்கிவிட்டு நகையை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மலர் வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மலரை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மலரை செந்தில்குமார் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் சதாசிவம்-பிரேமாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் […]
பிரசித்தி பெற்ற கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. அதன் பின்னர் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி […]
ராஜகோபாலசுவாமி திருக்கோவில் திருவிழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏத்தகுடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த விழாவை மன்னார்க்குடி பிரசன்னா தீட்சிதர் கலந்துகொண்டு கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றிவைத்தார். அதன்பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் […]
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குருங்குளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவியான சாந்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]