Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திடீரென சுமார் 5 அடி ஆழம் உள்வாங்கிய வயல்…. அதிர்ச்சியடைந்த விவசாயிகள்…. திருவாரூரில் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சுமார் 5 அடி ஆழத்தில் வயல் உள்வாங்கியதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கண்டீஸ்வரம் ஊரில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த கொட்டிகுளம் நன்னிலம் வட்டாட்சியர் அனுமதியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில்இதுபற்றி கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கும்போது, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த குளத்தை தூர்வாரியதால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். அந்தக் குளத்தின் மூலமாக பள்ளம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகரில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருக்கின்றார். இதில் கவிதா எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கவிதாவின் தந்தை இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன்-மனைவி இருவரும் கடந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மேற்கூரை…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. திருவாரூரில் சோகம்….!!

மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பிலாவடிமூளை பகுதியில் மூதாட்டி கிளியம்மாள் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்களாக இருக்கின்றனர். இதில் கிளியம்மாள் கொடிக்கால்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது இக்பால் என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கிளியம்மாள் அவருடைய வீட்டிற்குத் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அழைப்பு மணியை கிளியம்மாள் அடித்து விட்டு வாசலில் காத்திருந்தபோது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர்…. சட்டென மோதிய ரயில்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் மீது ரயில் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது மகன் ஆகாஷ். இவர் பி.காம் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள வெண்ணாறு ரயில்வே தண்டவாளத்தில் காலை கடனை முடித்துவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது மன்னார்குடிக்கு வந்த சென்னை விரைவு ரயிலில் அடிபட்டு தலை துண்டிக்கப்பட்டு சம்பவ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. கடித்து குதறிய நாய்கள்…. சோகத்தில் பொதுமக்கள்…!!

 நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் பகுதியில் வசித்துவரும் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை வழக்கம்போல் காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். அப்போது காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அங்கு சுற்றித் திரிந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள் விரட்டி கடித்துக் குதறியுள்ளது. இதனால் காயமடைந்த ஆடுகளை சாத்தனூர் கால்நடை […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

பள்ளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை…. திடீர் அறிவிப்பு….!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 131 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இவர்களில் ஒரு ஆசிரியருக்கு கடந்த 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழுவினர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அங்கு நடந்து வந்த வாலிபர்…. திடீரென நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்தார். இதில் ஆகாஷ் பி.காம் பட்டதாரியாக இருந்தார். இந்நிலையில் ஆகாஷ் அப்பகுதியில் வெண்ணாறு ரயில்வே பாலம் அருகில் காலை கடனை முடித்துவிட்டு தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு வந்த விரைவு ரயிலில் ஆகாஷ் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ.3000 போதாது ரூ.18,000 வேணும்…. ரசாயனம் தடவிய போலீஸ்…. பொறியில் சிக்கிய VAO…!!!

அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தாலும் இன்னும் ஒரு சில அதிகாரிகள், திரை மறைவாக லஞ்சம் வாங்கி கொண்டு தான் இருக்கின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பாலசுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பக்கத்திலுள்ள கிராமத்தை சேர்ந்த சாரங்கன் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு பட்டா கொடுக்குமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதற்கு பாலசுப்பிரமணி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை…. திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சுத்தமாக வைக்க வேண்டும்” தடுப்பூசி செலுத்துவதன் அவசியம்…. கலெக்டரின் பேச்சு….!!

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருநெய்ப்பேர் ஊராட்சியில் கலெக்டர காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கிராமசபை கூட்டம் ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது “மத்திய மாநில அரசின் மூலமாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காலேஜ் பேருந்தில் இருந்த 4 பேர்…. அடித்து பிடித்து ஓடியதால் சந்தேகம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

கல்லூரி பேருந்தை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டம் பாப்பாகோவிலிலுள்ள காலேஜ் பேருந்தானது திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணவாளம்பேட்டை பகுதியில் நின்றது. அந்தப் பேருந்து கடந்த 28-ம் தேதி காணாமல் போனது குறித்து டிரைவர் ராஜசேகரன் நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது அந்த பேருந்து தஞ்சையை நோக்கி செல்வது தெரியவந்தது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கத்தியை காட்டி மிரட்டுறாங்க” வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பத்தூர் பகுதியில் முதியவர் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொரடாச்சேரி கடை வீதியிலுள்ள ஒரு தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் ஹரிஹரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிஹரனிடம் இருந்த 200 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணின் அலறல் சத்தம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளை வழிமறித்து பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலவனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் மகள் ஜீவா வசித்து வருகின்றார். இவர் திருக்கொட்டாரத்தில் உள்ள தனது தங்கை இந்துமதியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அப்துல் கலாம் நகர் அருகில் வந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜீவாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாரியப்பன்…. அலுவலகத்திற்குள் கிடந்த சடலம்…. திருவாரூரில் சோகம்….!!

இ-சேவை மைய அலுவலகத்திற்குள் பணியாளர் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிளியனூர் தெற்குத் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 மனைவியும், 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் மாரியப்பன் வடபாதிமங்கலத்தில் இ-சேவை மைய பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் மாரியப்பன் இ-சேவை மைய அலுவலகத்திற்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இனி பொது இடங்களில் மது அருந்த தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் இனி பொது இடங்களில் மது அருந்த கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துகின்றனர். அதனால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் மது அருந்துவதை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அங்கு சென்று வருவதற்குள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் தெற்கு வீதி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் செல்வகுமார் தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து செல்வகுமாரின் பெற்றோர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொலைவெறி தாக்குதலை கண்டித்து…. நடைபெற்ற சாலை மறியல்…. திருவாரூரில் பரபரப்பு….!!

நிர்வாகிகள் தாக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.மேலூர் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்ற சென்றனர். அப்போது நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ரவுண்டானாவில் விடுதலைச் சிறுத்தைகள்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரான வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிக்கி கொண்ட 3 பேர்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மூட்டையில் இதுவா இருக்கு…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கொண்டுவந்த 3 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காலேஜ் சென்ற ஸ்டெல்லா…. அதிர்ச்சியடைந்த தந்தை…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரிக்கு சென்ற மாணவி காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொட்டாரம் தெற்கு தெருவில் முருகன் மகள் ஸ்டெல்லா வசித்து வருகிறார். இவர் நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற ஸ்டெல்லா  மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் ஸ்டெல்லாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தனது மகளை பாண்டிச்சேரியை சேர்ந்த கோட்டை பாக்கம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தாயை பிரிந்து இருந்த சிறுமி…. பாட்டி செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமி திருமணம் குறித்து 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அலிவலம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பல வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறது. இந்த குழந்தைகள் ராஜாவின் தாய் ராணியிடம் வளர்ந்து வருகின்றனர். இதில் ராஜா நாகப்பட்டினத்தில் இருக்கின்றார். இதனிடையில் பரவாக்கோட்டையை சேர்ந்த காமராஜ் என்பவர் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் 2-வது திருமணம் செய்வதற்காக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்து இருந்த முதியவர்…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகுடி கிராமத்தில் முதியவர் தங்கராஜ் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக தங்கராஜ் மனமுடைந்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தங்கராஜ் தன் மகள் மாரியம்மாளை பார்க்க மருதுவஞ்சேரி சென்றார். இதனையடுத்து ஒத்தங்கரை ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு மரத்தில் முதியவர் தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பொது விநியோக திட்டம்” அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்…. தொழிலாளர்கள் செய்த செயல்….!!

ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலமாக பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து வந்த ரயில்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. பொதுமக்களின் கோரிக்கை….!!

போக்குவரத்து பாதிப்பைத் தடுக்க ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்தில் காலிபெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் வந்தது. இதனையடுத்து ரயில் தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டது. அதன்பின் விரைவு ரயில் வந்ததால் ரயில்வே கேட் சுமார் ஒரு மணிநேரம் அடைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தஞ்சை-திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை வேளையில் எர்ணாகுளம் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரிசி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 29,800 பேருக்கு தடுப்பூசி…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை முதற்கட்டமாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 950 நபர்களுக்கும், 2-ம் கட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… மனித சங்கிலி போராட்டம்… கோஷம் எழுப்பிய அமைப்பினர்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்துள்ளது. இந்த  போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவரான அரசு தாயுமானவன் தலைமை தாங்கியுள்ளார். இதற்குமாவட்ட செயலாளரான தமிழ்மணி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போராட்டம் பீமா கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், உபா  எனும் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்ட எல்லையற்ற அதிகாரங்களை திரும்பப் பெற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி தயாரித்த வெடிகுண்டு…. திடலில் வெட்டப்பட்ட பள்ளம்…. போலீஸ் செய்த செயல்….!!

பறிமுதல் செய்யப்பட்ட சணல் வெடிகுண்டுகளை காவல்துறையினர் செயலிழக்க செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையில் வியாபாரம் செய்வதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதியின்றி ஒரு இடத்தில் சணல் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது. அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் சணல் வெடிகுண்டுகள், அதற்கு பயன்படுத்தப்படும் திரி, புஸ்வானம் தயாரிப்பதற்கான மண் குடுவை, ஒலக்கை வெடி போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை காவல்துறையினர் பாதுகாத்து வந்த நிலையில் அதனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மாட்டி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வண்டாம்பாளை பகுதியில் பல்லு செந்தில் என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த ஜெகதீசன் என்ற சிவசுப்பிரமணியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜெகதீசன் 2008-ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி 11 ஆண்டுகளாக மலேசியாவில் தனது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தேசிய மக்கள் நீதிமன்றம்” 1,444 வழக்குகளுக்கு தீர்வு…. 99 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூல்….!!

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,444 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 99 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், சார்பு நீதிபதி வீரணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான சரண்யா, உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த கலைஞர்…. நடந்த துயர சம்பவம்…. திருவாரூரில் சோகம்….!!

செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்த கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி அருகில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு செண்டை  மேள கலைஞர்கள் 11 பேர் கேரள மாநிலத்தில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் திருமண நிகழ்ச்சிகள் செண்டை மேளம் வாசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பாலக்காடு சேட்டப்படி பகுதியில் வசித்து வரும் விஷ்ணு என்ற கலைஞரும் செண்டை மேளம் வாசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் விஷ்ணு திடீரென மயங்கி கீழே விழுந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார்சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. திருவாரூரில் சோகம்….!!

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு தஞ்சையிலிருந்து அம்மாபேட்டை, அவளிவநல்லூர் வழியாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்து வழக்கம்போல் அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு சென்றுவிட்டு பின் தஞ்சைக்கு சென்றுகொண்டிருந்தது. இதனையடுத்து பேருந்து அவளிவநல்லூர் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் திருபுவனம் மருத்துவ தெருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் அருண்குமார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கனும்…. மாதர் சம்மேளத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்திய மாதர் சம்மேளனம் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பு இந்திய மாதர் சம்மேளத்தினர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்ற தனி தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடோனில் சோதனை…. சிக்கி கொண்ட வியாபாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பதவியேற்றார். அப்போது இந்த பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து துணை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு விடுத்த கோரிக்கை…. இடிந்து விழுந்த மேற்கூரை…. பார்வையிட்ட எம்.எல்.ஏ….!!

காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தை எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் காய்கறி மார்க்கெட் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த காய்கறி மார்க்கெட்டில் 40 கடைகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் காய்கறிக் கடை வைத்திருப்பவர்கள் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் கடையின் மேற்கூரையானது இடிந்து கீழே விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

யார் இப்படி செய்தது…? ரத்தமாதிரிகளுடன் வீசப்பட்ட ஊசிகள்…. அதிகாரியின் நடவடிக்கை….!!

ரத்த மாதிரிகளுடன் ஊசிகளை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகில் திருக்கண்டீஸ்வரம்-சோத்தக்குடி இணைப்புசாலை இருக்கின்றது. இந்தச் சாலையோரத்தில் ரத்தமாதிரிகளுடன் 200-க்கும் மேற்பட்ட ஊசிகள் குவிந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சுகாதாரதுறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி நன்னிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குவிந்து கிடந்த ஊசிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியபோது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் சிரமப்பட்ட இளம்பெண்…. விரக்தியில் எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இதில் அகிலா அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவிற்கு வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அகிலாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழை…. பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்கை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமக்கோட்டையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் காற்றுடன் கனமழை நீடித்ததால் கடைவீதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோன்று கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், வேளுக்குடி, நாகங்குடி, பண்டுதக்குடி பழையனூர்,சித்தனங்குடி, திருராமேஸ்வரம், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதான் நடக்கு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரயில்வே மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ரயில்வே மேம்பாலம் தஞ்சை-நாகை சாலையை இணைக்கும் வகையில் அமைந்து இருக்கின்றது. இந்த சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் செல்லும் பிரதான சாலை செல்வதால் 3 வழிப்பாதையாக இருந்து வருகின்றது. இதில் தஞ்சை-நாகை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக வாகனங்கள் எந்நேரமும் செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொடுக்கப்பட்ட புகார்…. 101 செல்போன்கள் மீட்பு…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

திருட்டுப்போன 101 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது குறித்து கடந்த 2020-21-ஆம் ஆண்டில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி செல்போன் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் காவல்துறையினர் திருட்டுபோன செல்போனை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் திருட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பு நடவடிக்கை” 300- க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள 52 புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அந்த முகாமில் திருவிடச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கலைவாணி முன்னிலையில், திருவிடச்சேரி, வடவேர், சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், மூலங்குடி மஞ்சக்குடி ஆகிய கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” அரசு விதித்துள்ள தடை…. கவலையில் வடமாநில தொழிலாளர்கள்….!!

விநாயகர் சிலை வைப்பதற்கு அரசு தடை விதித்ததால் வடமாநில தொழிலாளர்கள் சிலையை விற்பனை முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்தல், ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல் மற்றும் நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி, அருகில் உள்ள நீரில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. சிக்கி கொண்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியில் விக்னேஸ்வரன்- கார்த்திகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகா தனது குடும்பத்துடன் கடந்த 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு வெள்ளி டம்ளர், செல்போன், 8 ஆயிரம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. கொள்ளையர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பத்மசாலவர் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மன்னார்குடி கீழபாலம் பகுதியில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கார்த்திக்கிற்கு அருகில் இருப்பவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் கார்த்திக் கொடுத்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு” நடைபெறும் தீவிர பணிகள்…. பக்தர்களின் கோரிக்கை….!!

ஆழித்தேரின் தற்காலிக கூரைகள் பிரிக்கப்பட்டு ராட்சத தூண்கள் கொண்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்று வருகின்றது. அதன்படி ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆழித்தேரோட்டம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திவ்யா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குணமாகவில்லை. இதனையடுத்து மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் திவ்யா  எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தேசிய கைத்தறி தினம்… அமைக்கப்பட்ட சிறப்பு கண்காட்சி… தொடங்கி வைத்த ஆட்சியர்…

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சியை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில்  கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்தும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தி கௌரவிக்கும் வகையிலும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கூடுவதை தடுக்க… குளத்தின் கதவுகளை அடைத்த அதிகாரிகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ஆடி அம்மவசை அன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கமலாலயம் குளத்தின் கதவுகளை நிர்வாகிகள் அடைத்துள்ளனர். கொரோனா 3ஆம் அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆடி அம்மாவாசை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் கோவிலில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆகமவிதிப்படி அர்ச்சகர்கள் மட்டும் கோவில்களுக்குள் சென்று பூஜை செய்துகொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கமலாலயம் குளத்தில் பொதுமக்கள் ஆடி அமாவாசை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 வருடங்களாக நடைபெற்ற வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!…!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் சேகரை பகுதியில் விஜய் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விஜய் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஆசிரியர்… வழியில் நடந்த விபரீதம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியரிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சக்தி குமாரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் பால்ராஜ் நகரை சேர்ந்த கலைமதி என்ற ஆசிரியையும் பள்ளியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மடப்புரம் ஆட்டூர் வழியாக சென்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில்… புறப்பட்டு சென்ற சங்கத்தினர்… நடைபெறும் 5 நாள் போராட்டம்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் டெல்லிக்கு சென்றுள்ளனர். மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டதின் போது 300 விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். ஆனாலும் மத்திய அரசு அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு சென்று […]

Categories

Tech |