அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று முதலே வந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலையில் இருந்தே இங்கு மேலும் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி , ஐந்தருவி , பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று மாலை முதல் வெள்ளபெருக்கு ஏற்பட கூடிய […]
Category: திருநெல்வேலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மில்டன் ஜெயக்குமார் என்பவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரும் இவரது மகளான ரெனி லாரோசும் காரில் சேலத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த நிலையில் கேரளாவிலிருந்து வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் […]
குற்றாலத்தில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீது பாரங் கற்கள் விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய அருவி உள்ளிட்டவற்றில்நீர்வரத்து மிதமாக காணப்ட்டது. இதையடுத்து ஐந்தருவியில் மட்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், ஓடையில் உள்ள பாரங்கல் நீரால் அடித்து வரப்பட்டு குளித்துக் கொண்டிருந்தவர்கள் […]
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையில் இருந்து இன்று காலை விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அடவிநயினார் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவு படி இன்று முதல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அடவிநயினார் […]
நெல்லை வீர தம்பதியினர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாததால் குற்றத்தை ஒத்துக்குமாரு காவல்துறையினர் மிரட்டுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையம் முதிய தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 15 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கொள்ளையர்களை கைது செய்வதற்கு பதிலாக தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டுவதாக கல்யாணபுரம் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி […]
ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஆங்கில படையை எதிர்த்து போரிட்டவர் ஒண்டிவீரன். அவருக்கு தலைவர் கலைஞரின் ஆட்சியில் தான் மணிமண்டபம் கட்டுவதற்கும் , அவருக்கு திருவுருவச் சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடு இன்றைக்கு இந்த மணிமண்டபம் இங்கே அமைந்திருக்கிறது. அருந்ததியர் சமுதாயத்தினருக்கு கல்வி , வேலைவாய்ப்பில் 3 […]
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்களின் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த sdpi கட்சியை சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் மற்றும் வடகரை பகுதி நகர பொருளாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வடகரைபகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்றைய தினம் இவர்கள் வீட்டு முன்பு இருந்த இரு சக்கர வாகனங்களான டிவிஎஸ் ஜுபிடர், splendor plus வாகனங்களை மர்ம நபர்கள் […]
கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்தவயதான நெல்லை தம்பதியினருக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை […]
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி அதிகமான ஆடுகள் விற்பனை செய்யபட்டது. சங்கரன்கோவில் அருகே புகழ்பெற்ற பாம்புக்கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இச்சந்தை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரும் திங்களன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருந்தது. சுமார் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் […]
நெல்லை அரசு மருத்துவமனையில் போலி சிகிச்சை பெற்ற பெண் கருவுற்றதால் 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர் காலப் பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. அவர் சிறுவயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகையால், வலிப்பு நோயை கருத்தில் கொண்டு தனக்கு இரண்டு குழந்தைகள் போதுமென , நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த 2014ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு […]
தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். நேற்று நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் 3 பேரும் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற ஆரம்பித்து மதியம் 1 மணிக்கு 3 பேரு உடல்களும் […]
தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கின்றார் என்று அதிமுகவில் இணையும் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். அமமுக_வில் இருந்து செந்தில்பாலாஜி , கலையரசன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் என பலர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அமமுக_வின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா அமமுக_வில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருக்கிறார் இசக்கி சுப்பையா. அதிமுகவின் முன்னாள் அமைச்சராகவும் , அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டிடிவி […]
ரஜினிகாந்த் ஒருவர் தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா? என்று நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு நெல்லை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு அனுமதி மறுத்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை […]
மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி […]
நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய சீமானுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர் . சில நாட்களாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு சுற்றுச்சூழல் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும், இடதுசாரி இயக்கங்களும் அணுக்கழிவு மையம் அமைப்பதை தடுக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அழிவு மையமானது கூடங்குளத்தை சுற்றியுள்ள உள்ள கிராம பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ள நிலையில்,நாம் […]
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் ஒரே நாளில் நீர் மட்டம் ஆனது 8 அடி உயர்ந்து 20.40 அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதன்படி தற்போது அணையின் நீர்வரத்து 1153 கன அடியாக உள்ளது. மேலும் அதே நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தென்காசி பகுதியில் சாரல் விழுந்து […]
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் சீமான் பரபரப்பாக பேசியுள்ளார். திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார் அவர் பேசியதாவது, தற்போது நடைபெற்று முடிந்தது தேர்தல் மட்டும்தான், நாம் தமிழர் கட்சிக்கான தேடுதல் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறியுள்ளார் . நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் வெறும் தேர்தளுக்கானவர்கள் அல்ல தேர்தலில் தோற்றாலும் […]
திருநல்வேலி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலியை அடுத்த குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அடிக்கடி தனது மொபைல் போனில் டிக் டாக் வீடியோவை காட்டி ஆசை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் வீடியோ காட்டுவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சிறுவன் சத்தம் போட்ட காரணத்தினால் தலையில் […]
சங்கரன்கோவில் அருகில் குடும்ப தகராறால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களாக விடுமுறை காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார்.நீண்ட நாட்களாகவே கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இன்று பிரச்னை முற்றியுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி அவரது மனைவியான வெள்ளைதுரைச்சியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.இதை தடுக்க […]
பாளையங்கோட்டையில் புதிதாக கட்டிவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். நெல்லை மாவட்டம் பகுதியில் மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டில் இரு முறை பலத்த வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஜன்னல் மற்றும் கதவுகள் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இரண்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றினர். […]
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் . ஆலங்குளதிற்கு சென்று கொண்டிருந்த மினி பஸ் , துத்திக்குளம் சாலை அருகே வளைவில் அதிவேகத்தில் திரும்பியபோது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஓட்டுனர் அருள்ராஜ், நடத்துநர் பால்ராஜ் மற்றும் 23 பயணிகள் காயமடைந்தனர். ஆலங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைகளில், அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர் .
மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி மாயமானார் . திருநெல்வேலி மாவட்டம் ,கீரிப்பாறை அருகே தடிக்காரண்கோனம் பகுதியினை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் அபிஷா .பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென காணவில்லை . இதுபற்றி விசாரணை நடத்தியதில், ராஜா என்பவர் அபிஷாவை கடத்தியது தெரிய வந்துள்ளது . இதனால் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவைத் தேடி வருகின்றனர் .
பழைய குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது . நெல்லை மாவட்டம் ,வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நேற்றிலிருந்து போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதால் , தீப்பிடித்து இருக்கக்கூடும் எனவும் ,மூலிகைகள் மற்றும் செடிகளும் எரிந்து வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை ,சேரன்மாதேவியில் பெண்ணிடம் 6 பவுன் செயினை , பட்டப்பகலில் மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியிலுள்ள வைத்தி மேல வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்,பால் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கம் ,சேரன்மாதேவி பேருந்துநிலையம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் பணியிலுள்ள நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்து […]
திருநெல்வேலி,பாளையங்கோட்டை அருகே சமையல் செய்தபோது உடையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பெருமாள்புரம், என்.எச்.காலனியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி 80 வயதான முத்தம்மாள்.இவர் சற்று மனநிலை பாதிக்கபட்டவர்.அவர் வீட்டில் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென உடையில் தீப்பிடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உள்ள கரும்புளியூத்தி சாலையில் காரில் 5 பேர் சென்றுக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லாரி அவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கள் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
ஆலங்குளம் அருகேயுள்ள கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் அருகேஉள்ள கரும்புளியூத்து என்ற இடத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில், இன்று 6 மணியில் இருந்து 6.30க்கு திருநெல்வேலியில் தென்காசி நோக்கி ஸ்விப்ட் காரும் , தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதியின் 75 […]
கடையநல்லூரில், வெண்டைக்காய் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் ,கடையநல்லூரில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாகவுள்ளதால் லாபம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையாகிறது மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் பகுதிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதன் அழகை ரசிக்க சந்தோஷத்துடன் குளித்து மகிழ வருடந்தோறும் வந்து கொண்டே இருப்பார்கள் தமிழகத்திலேயே மிக அதிக அளவிலான மக்கள் கூட்டம் வரக்கூடிய சுற்றுலாத்தளமாக குற்றாலம் இருந்து வருகிறது இதனால் ஏராளமானோர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததால் அப்பகுதி முழுவதும் குப்பை கிடங்காக காணப்படும் ஆனால் இந்த வருடம் […]
முக்கூடல் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள இலந்தகுளம் கிராமத்தில் வசிப்பவர் செல்வம் என்ற செல்வராஜ். 30வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நீண்ட நாளாக தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவரின் பெற்றோர் செல்வராஜிற்கு பல பகுதிகளில் பெண் பார்த்தனர். ஆனால் அவருக்கு எந்த பகுதியிலும் பெண் கிடைக்கவில்லை. இதனால் மகனுக்கும், பெற்றோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது விரக்தியான செல்வராஜ் வீட்டிற்குள் […]
திருநெல்வேலி அருகே சொத்து தகராறு காரணமாக பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் குடும்பத்தினற்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கண்ணன் என்பவர் சிதம்பரம் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.மேலும் இவர் சிதம்பரத்தின் அண்ணன் மகன் ஆவார். இதில் பலத்த காயமடைந்த சிதம்பரத்தின் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]
பண குடியில் 31வது வாக்கு சாவடியில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் பொது மக்கள் திரும்பி செல்கின்றனர். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். […]
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி கலையும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆணைய ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகள் மாபெரும் […]
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . இந்த தேர்தலின் போது தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் பற்றி பயிற்சி வகுப்பில் வாக்கு இயந்திரங்களை கையாளும் முறை, அதில் ஏற்படும் சிறிய பழுதுகளை எவ்வாறு […]
வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய இரு தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடிகளும் தலைவர்களின் புகைப்படங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனையின் உச்சத்தில் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் நான் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கட்சிக் கொடிகள் பேனர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் விற்கப்பட்டு வருகின்றனர் இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சிக் கொடிகள் […]