சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் காவல்துறையினருக்கு அண்ணாநகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அண்ணாநகர் அம்மா பூங்கா பின்புறம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே […]
Category: திருப்பூர்
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முனிராஜ் தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் புறப்பட்டுள்ளார். அவர் கோவையிலிருந்து தஞ்சைக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் பயணித்தார். இந்நிலையில் முனிராஜ் […]
தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செந்தில்நகர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி செல்வராஜ் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் செல்வராஜ் மீண்டும் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். […]
திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களை ஏளனமாக நடத்துவதாகவும், கழிவறை சுத்தம் செய்ய அவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அது உறுதியானதால் மாவட்ட கல்வி பள்ளிக்கல்வித்துறை அலுவலரால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் 21 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா அருகில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த இளம்பெண் கொங்கணகிரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, மானபங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் […]
வீடுகள் மற்றும் கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் கடந்த 15-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் 4 மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி, தங்க பொட்டு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கிராம மக்கள் மற்றும் கோவில் […]
கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் பகுதியில் வசிக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கவிதாவின் மகன் தினேஷ்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் கவிதாவின் வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார். இதனை தினேஷ்குமார் கடுமையாக கண்டித்ததோடு தகாத […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் விசைத்தறி கூலி பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் கூலி உயர்வு பிரச்சினை குறித்து விளக்கி பேசினார். அதில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இதனால் அரசு […]
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பாண்டம்பாளையம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் சேவலை வைத்து பணம் கட்டி 6 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த […]
டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரத்தை நிறுத்தினர். இந்நிலையில் உரிய நேரத்தில் […]
கள்ளச்சாராயம் வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நத்தக்காடையூர் அருகில் உள்ள சோழிமடை என்ற இடத்தில் செல்வராஜ் என்பவர் கள்ளச்சாராயம் வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வராஜின் வீட்டில் சோதனை செய்தபோது 5 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த கள்ளச்சாராயத்தையும் […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தவனம்பாளையம் பகுதியில் விவசாயியான ஆ.துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை துரைசாமி நந்தவனம்பாளையத்தில் இருந்து ஜல்லிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று துரைசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த துரைசாமியை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தாராபுரம் […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கர்நாடக மாநிலத்திலுள்ள ஜம்பலிபள்ளி பகுதியில் வசிக்கும் மது என்பவரின் மகன் அய்யன்துரை என்பவர் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு அய்யன்துரை சென்றுள்ளார். அதன்பின் அய்யன்துரை நேற்று முன்தினம் இரவு கல்குவாரிக்கு திரும்பினார். இந்நிலையில் அய்யன்துரை அங்குள்ள தங்கும் அறையில் திடீரென […]
கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் விசைத்தறி கூலி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி திடீரென போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் கூலி உயர்வு பிரச்சனை குறித்து விளக்கி பேசினார். இந்த போராட்டத்தில் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 49 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் எஸ்.பி. கோ.சஷாங்க்சாய் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 49 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 1078 மது பாட்டில்களையும் பறிமுதல் […]
மருமகன் மாமனாரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மகேந்திரன் மாமனார் வீட்டிற்கு பேச வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் மாமனார் லட்சுமணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் […]
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக சேவல்சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சட்டவிரோதமாக சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் குருணைக்கள்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த 10 பேரை காவல்துறையினர் […]
பஞ்சு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரம் பல பாளையம் பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பஞ்சு குடோனை மங்கலம் பகுதியில் வசிக்கும் ஜெய்வுலாதீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் குடோனில் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெட்டுப்பட்டான் குட்டை, அறிவொளி நகர், மேற்கு பல்லடம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த சுந்தரம், கனகராஜ், முருகன், பிரகாஷ், கருணைமலை உள்ளிட்ட […]
விசைத்தறி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சக்திவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன்பின் சர்க்கரைநோய் அதிகரிப்பால் சக்திவேலின் காலில் புண் ஏற்பட்டு அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு கால் அகற்றப்பட்டது. இதனால் மனவேதனையில் […]
பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியில் கிருபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கவுரி கடந்த 13-ம் தேதி ஸ்கூட்டரில் வெங்கமேட்டிலிருந்து சாமந்தக்கோட்டைக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கவுரி அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கவுரி திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
நூல் திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணியகாரம்பாளையம் வி.எஸ்.ஏ. நகர் பகுதியில் நெட்டிங் என்ற பெயரில் பேப்பரிகேஷன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பவானி நகர் பகுதியில் வசிக்கும் சண்முகசுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரத்தினம் கடந்த 13-ஆம் தேதி நிறுவனத்திற்கு வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது குடோனில் அடைத்து வைத்திருந்த 60 கிலோ எடை […]
வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி பணம், செல்போனை பறிமுதல் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் வட மாநிலத்தில் வசிக்கும் சஜல்மண்டல் என்பவர் குடியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஜல் மண்டல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சஜல் மண்டலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணம், […]
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்டமநாயக்கனூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மாரியப்பன் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த கஞ்சா செடிகளை அகற்றினர். மேலும் இது குறித்து […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பாண்டி மனைவி ரஞ்சிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருமணமான மணிகண்டன், அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்ததால் இது குறித்து மாணவியின் பெற்றோர் அவரிடம் […]
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்களை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குருநாதகவுண்டர் வீதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் செரங்காடு ஆர்.கே.கார்டன் பகுதியில் வசிக்கும் டார்ஜன் என்பவரது மகன் சரண் சஞ்சய் என்பவரும் திருப்பூர் கே.எஸ்.சி, மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் அவரது நண்பர்கள் 6 பேருடன் பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பரணிதரனும், […]
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இவர் அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்தியாவும் அவரது உறவினர்களும் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கும் கருமாபாளையம் பகுதியில் வசிக்கும் […]
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடையார் காலனி பகுதியில் தண்டீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவதாரணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் வரதபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவதாரணி தனக்கு படிப்பு வரவில்லை என்றும், பள்ளி செல்ல விருப்பமில்லை என்றும் பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அதற்கு பவதாரணியின் பெற்றோர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, நன்றாக படிக்க வேண்டும் […]
விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மிபாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்திவேல், ஜீவிதா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நாகராஜ் அதிக குடி பழக்கத்திற்கு அடிமை ஆகியுள்ளார். இதுகுறித்து நாகராஜின் குடும்பத்தினர் அவரிடம் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் அதை நினைத்து மனவேதனை அடைந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் […]
மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாலையைப்பாளையம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இந்நிலையில் பழனிசாமி அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பழனிசாமி அவினாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து […]
போதை பொருட்கள் விற்பனை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரைப்புதூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நொச்சிபாளையம்-மீனாம்பாறை சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட 20 கிலோ பான் […]
புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஹரிபிரசாத் மற்றும் […]
பஞ்சுமில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூமலூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பஞ்சுமில் உள்ளது. இந்த பஞ்சு மில்லில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பஞ்சு மில் எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டு சற்று நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த வடமாநில தொழிலாளர்கள், பஞ்சு மில் உரிமையாளர் மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காங்கேயத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் காங்கேயம் வாய்க்கால்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தை கார் ஒன்று முந்தி சென்றது. இந்த கார் திடீரென பேருந்தின் குறுக்கே நின்றது. அதிலிருந்து இறங்கிய 2 பேர் திடீரென டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த 2 பேரும் டிரைவர் சுப்பிரமணியன் மற்றும் கண்டக்டர் ஆல்பர்ட் ஆகியோரை சரமாரியாக […]
டிரைவரை கத்தியால் குத்திய பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேடபாளையம் பகுதியில் திருக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மினி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கண்ணனின் வீட்டிற்கு அருகில் சிலர் வாடகைக்கு வந்துள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பேசிக்கொண்டிருந்ததை திருக்கண்ணன் தட்டிக் கேட்டுள்ளார். இந்நிலையில் திருக்கண்ணனிடம் 3 வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் […]
தொழில் நஷ்டத்தால் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வைரம் நகர் பகுதியில் பிரகாஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்விக் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக விசைத்தறியில் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் பிரகாஷ்குமார் மனநிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ்குமார் திடீரென விசைத்தறி கூடத்தில் துணிகள் […]
விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக உள்ளது. இந்நிலையில் இந்த வழியாக வரும் சில வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி எதிர் திசையில் வருகின்றனர். இந்த ஒரு வழிப்பாதையில் நேர் எதிரே வாகனங்கள் இடைவிடாமல் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் பகுதியாக மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். […]
சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தொட்டக்களாம்புதூர் முள்ளுக்காட்டில் சிலர் சேவல்சண்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன், தங்கராஜ் மற்றும் பிரதீப் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேர் மீதும் […]
சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ரேஷன் கடை பின்புறம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பல்லடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 6 பேர் அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மாதப்பூர் பகுதியில் வசிக்கும் […]
அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய தொழிலதிபர் மகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் அரசு பேருந்து ஒன்று திருப்பூரில் இருந்து தேனி செல்வதற்காக தாராபுரம் வந்தது. இந்த பேருந்தை டிரைவர் ரத்தினசாமி ஓட்டி வந்துள்ளார். அதில் கோபாலகிருஷ்ணன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த அரசு பேருந்து தாராபுரம் அமராவதி ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது தாராபுரம் பகுதியில் […]
திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாணிக்காபுரம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மலர்விழி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமி இறந்துவிட்டதால் ஜானகியும் அவருடைய மகள் மலர்விழியும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மலர்விழிக்கு திருமண ஏற்பாடுகளை அவருடைய சித்தப்பா செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து மலர்விழிக்கும் […]
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிமில் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அம்மாபாளையம் பகுதியில் வசிக்கும் ஜோஸ்வா என்பவர் ஜெயப்பிரியாவுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 1 1\2 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இதுகுறித்து ஜெயப்பிரியா ஜோஸ்வாவிடம் பலமுறை கேட்டபோது வேலை சீக்கிரம் வாங்கி தருவதாக […]
மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மூர்த்தியை கைது […]
சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் பகுதியில் காவல்துறையினர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் பெருமாநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 9 பேரை மடக்கி பிடித்து கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ. 1,70,100-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]
2 லாரிகள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியை அடுத்த தெக்கலூர் மேம்பாலம் அருகில் கோவை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே திசையில் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி கொரியர் தபால்களுடன் மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல்லை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கொரியர் தபால் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கொரியர் லாரியின் […]
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக மாணவிக்கு கேரள மாநில இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை […]
பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளிகரட்டுமடம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியர் அசோக் என்பவர் அந்த மாணவியின் வாட்ஸ்-அப்புக்கு ஆபாச பதிவுகளும், ஆபாச படங்களையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் இருந்து […]
கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அமராவதி வனப்பகுதியில் மான்கள், யானைகள், கரடிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு மலையடிவாரம் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் சின்னகுமாரபாளையம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களுக்குள் யானைகள் கூட்டமாக புகுந்துள்ளன. அந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரத்தில் உள்ள குருத்துகளை தின்றன. இதனை தொடர்ந்து யானைகள் சப்போட்டா […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரங்கா நகர் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக விஷநெடியுடன் கூடிய மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம், பாலாஜி மற்றும் வீரபாண்டியன் என்பது காவல்துறையினருக்கு […]