Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் தற்கொலை பண்ணிக்க போறேன்” அதிர்ச்சி அடைந்த சகோதரர்…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமாரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சிவகுமார் மது அருந்திவிட்டு சேவூரில் வசிக்கும் தனது சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

ஆக்கிரமிக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 60 சென்ட் இடம் நொய்யல் வீதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கடந்த 18 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்த வழக்கானது திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடமானது அரசுக்கு சொந்தமானது என உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வருவாய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதுவரை கண்டிப்பா திறக்க கூடாது…. சீல் வைக்கப்பட்ட அலுவலகம்…. தீவிர கண்காணிப்பு பணி…!!

மாநகராட்சி அதிகாரிகள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, அரசியல் கட்சியினரின் செயல்களையும் கண்காணித்து வருகின்றனர். இதனை அடுத்து அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மிஷின்…. திருடிய கொள்ளையர்களை…. பொறி வைத்து பிடித்த காவல்துறை…!!

திருப்பூரில் ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகுல் (24), ரபிக் (24), ஷாகித் (25), ஷாஜித் (21), இர்சாத் (38), காசிம்கான் (45). இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் மிஷினை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் திருடிய காரை விஜயமங்கலத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கண்டெய்னர் லாரியில் சேலம் நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் விஜயமங்கலத்தில் இருந்து சென்ற கண்டெய்னர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏங்க எனக்கு வயிறு வலிக்குது… கண்டுக்காமல் போன கணவர்… கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு…!!!

திருப்பூர் அருகே மூன்று மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமாநல்லூரில் போயர் காலனியில் மணிஸ்வரன்(22) ஹேமலதா (22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஹேமலதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவர்  3 வருடத்திற்கு முன்பே செந்தில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் .அவர்கள் இருவருக்கும் (2) வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதனால் ஹேமலதாமீண்டும் மணிஸ்வரன் என்பவரை இரண்டாவது திருமணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு இதை பற்றி தெரியாது…. சிக்கிய போலி அமெரிக்க டாலர்கள்…. நைஜீரியாவை சேர்ந்த வியாபாரி கைது…!!

நைஜீரிய நாட்டை சேர்ந்த வியாபாரி அமெரிக்க டாலர்களை மாற்றுவதற்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நாதன் இட்சாகு என்பவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நாதன் அமெரிக்க டாலர் நோட்டுகளை கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொடுத்து அதனை இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாலச்சந்திரன் என்பவர் அந்த டாலர் நோட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு ரொம்ப வலிக்குது…. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. நடந்த துயர சம்பவம்…!!

மூன்று மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போயர் காலனி பகுதியில் மணிஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே செந்தில் என்பவருடன் திருமணம் நடைபெற்து 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹேமலதா செந்திலை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து ஹேமலதா அரியலூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

20 கிலோ மீட்டர் தூக்கி சென்று…. நெடுஞ்சாலையில் வீசப்பட்ட எந்திரம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் 1 லட்சத்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அதனை நெடுஞ்சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள எந்திரத்தை முகமூடி கொள்ளையர்கள் பெயர்த்து காரில் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்பட்ட குறை தீர்க்கும் கூட்டம்…. வைக்கப்பட்ட புகார் பெட்டி…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…!!

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வந்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுல நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்ற பெற்றோர்…. ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் தங்கள் குழந்தைகளுக்காக அதனை பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையில் சிலர் கழுதைகளை கொண்டு வந்து கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கழுதை பாலை வாங்கி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கொடுப்பர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இந்த கழுதை பாலில் நிறைந்து இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னது… கழுதைப்பால் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா…? திருப்பூரில் சூடுபிடிக்கும் கழுதை பால் விற்பனை..!!

திருப்பூரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பதற்காக கழுதை பாலை பெற்றோர்கள் வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர். இக்காலகட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகிறது. இதனால் அடிக்கடி குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக குழந்தைகளின் பெற்றோர்களும் கவலையாக காணப்படுகின்றனர். அக்காலத்தில் குழந்தைகளின் எதிர்ப்பு சக்திக்கு கழுதைப்பால் கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தற்போதுகாலகட்டத்தில் கழுதை பால் கொடுப்பது குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் தற்போது திருப்பூரில் இந்நிலையானது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காரில் ஏற்றிச் சென்ற கொள்ளையர்கள் …!!

திருப்பூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காரில் தூக்கி சென்ற கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருப்பூர் ஊத்து குழி சாலையில் உள்ள சர்க்கார் பெரிய பாளையத்தில் பேங்க் ஆஃப் பரோட்டா இயங்கிசெயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து ATM இயந்திரத்தின் கதவுகள் நேற்று அதிகாலை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். வங்கி கண்காணிப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…. கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளி…. திருப்பூரில் பரபரப்பு…!!

தொழிற்சாலைக்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னூர் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் பெயிண்டிங் அடிப்பதற்காக விருதுநகரில் இருந்து சில தொழிலாளர்கள் வந்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு நூற்பாலை வளாகத்திற்கு உள்ளேயே குடியிருப்பும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வேலைக்கு வந்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி பகுதியில் வசித்து வரும் மங்களேஸ்வரன் என்பவர் குடியிருப்பு பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு அங்க போகல…. தொழிலாளிக்கு எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து கொண்டிருந்த செல்வமணி சம்பவம் நடைபெற்ற அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மிஷினை தூக்கி சென்ற கொள்ளையர்கள்…. தேடுதல் வேட்டையில் போலீசார்…. திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் ஏடிஎம் மெஷினை திருடி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு மர்ம நபர்கள் 4 பேர் ஏடிஎம் கதவை உடைத்து, கேமிராவில் ஸ்ப்ரே அடித்து விட்டு, ஏடிஎம் மிஷினை உடைத்து தூக்கி கொண்டு காரில் தப்பி சென்றுள்ளனர். மேலும் ஏடிஎம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து ஊத்துக்குளி காவல்துறைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பணத்தை திருட முடியல… ஏடிஎம் எந்திரத்தை அலேக்காக தூக்கிய பலே திருடர்கள்… அதிர்ச்சி…!!!

திருப்பூரில் ஏடிஎம்மில் பணம் திருட முடியாததால் மர்ம நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை அப்படியே தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாங்க் ஆஃப் பரோடா வங்கி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கூலிபாளையம் நால்ரோட்டில் அமைந்துள்ளது. இந்த வங்கியை ஒட்டி  ஏடிஎம் ஒன்று உள்ளது.  இந்த ஏடிஎம் எந்திரத்தில் பொதுமக்கள் மற்றும்  அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது வழக்கம். அதனைப்போலவே இன்று காலை பொதுமக்கள் சிலர் அந்த ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வந்துள்ளனர். அப்பொழுது ஏடிஎம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பணத்தை எடுக்க முடியல…. ஏடிஎம் மிஷினையே தூக்கியாச்சி…. திருப்பூரில் துணிகர சம்பவம்…!!

ஏடிஎம் மையத்தில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி உள்ளது. இந்த வங்கியில் சம்பவத்தன்று ஏடிஎம் மையத்தின் காவலாளி இல்லாத நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பணத்தை திருட முயற்சி செய்துள்ளது. ஆனால் பணத்தை திருட முடியாததால் ஏடிஎம் மிஷினை அப்படியே தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில், கொள்ளைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஏடிஎம் மெஷினை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் கிடந்த சடலம்…. காய்கறி வியாபாரிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

காய்கறி வியாபாரியை கொலை செய்து கிணற்றில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார்.  இந்நிலையில் தண்டபாணி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் சந்தேகத்திற்கிடமாக சாக்கில் சடலம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடித்த மனைவி..!!

திருமணம் முடிந்த நான்காவது நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கீதாநகர் பகுதியில் பஞ்சலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் குமார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை அன்று இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சிறுபூலுவபட்டி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 5 நாட்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு…. பிரிவால் கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் சிறுகூடல்பட்டியில் வசிப்பவர் பஞ்சலிங்கம் என்பவரின் மகன் விக்னேஷ் குமார் (31). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கும் வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதியன்று உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பஞ்சலிங்கம் தன்னுடைய மனைவியிடம் வந்து விக்னேஸ்வரன் எங்கே என்று கேட்டுள்ளார்? அதற்கு அவர் குளிக்க சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். ஆனால் விக்னேஷ் வெகுநேரமாகியும் வராததால் பஞ்சலிங்கம் குளியலறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் தூக்கிட்டு தொங்கியதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே மாறியாச்சு… தாசில்தார்கள் திடீர் பணியிடமாற்றம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

12 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரியும் தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கிடங்கு பதவிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தாராக இருந்த ரவீந்திரன் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தனிதாசில்தாராக, தாராபுரம் கோட்ட கலால் அதிகாரியாக இருந்த முருகதாஸ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒரு வயது குழந்தைக்கு….அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலி….” ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி”… எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உணவுக்குழாயில் இருந்த பின்னூசியை மருத்துவர்கள் எச்சரிக்கையாக எடுத்தனர். திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நிதிஷ் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென்று மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழுது கொண்டே இருந்துள்ளார். குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். பின்னர் காது மூக்கு தொண்டை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் ஆசிரியர் குற்றச்சாற்று… மாணவன் எடுத்த விபரீத முடிவு… பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டதால் மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவா மணிகண்டன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் அண்ணாநகர் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவா மணிகண்டனின் ஆசிரியர் மாணவனின் தந்தையை அழைத்து “உங்கள் மகன் ஒழுங்காக படிப்பதில்லை” என்று மாணவன் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில்…. குவிந்து கிடக்கும் குப்பை…. தொற்றுநோய் பரவும் அபாயம்…!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் – தாராபுரம் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்கு பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அகற்றாமல் அதன்  வளாகத்திலேயே மலைபோல் குவித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வப்போது அப்பகுதியில் மழையும் பெய்து வருவதால் அவ்விடம் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் தற்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்காக மாறிய அரசு மருத்துவமனை…. நோயாளிகள் அவதி…. தொற்று நோய் ஏற்படும் அபாயம்…!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர்-தாராபுரம் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனா நோயாளிகளும் உள்ளனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அள்ள படாமல், மருத்துவமனை வளாகத்தில் மலை போல […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அழுதுகொண்டே கூறிய சிறுமி… முதியவரின் முகம் சுளிக்கும் செயல்… கைது செய்த காவல்துறை…!!

முதியவர் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாலக்காடு பகுதியில் வேலுச்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த விவரத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்து விசாரணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

புதுப்பொலிவுடன் பயன்பாட்டிற்கு வரபோகுது… மும்முரமாக நடைபெறும் பணிகள்… எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பொதுமக்கள்…!!

மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகர பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பகுதிகளில்அதிகமாக பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் தங்கள் குடும்பத்துடன் இந்த பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பூரில் உள்ள பூங்காக்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொடூரத்தின் உச்சம்: குழந்தை பெற்றெடுத்த…. 2 மணி நேரத்தில் வேலை…. செய்ய சொன்ன கொடூரம்…!!

குழந்தை பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெண்ணை வேலை பார்க்க சொன்ன கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தேங்காய் களத்தில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து குழந்தை பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த பெண்ணை வேலை செய்ய சொன்ன கொடூரம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் கவிதா. இவர் காங்கேயம் கீரனூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தேங்காய் உடைத்து அதை உலர்த்தும் வேலை செய்து வந்துள்ளார். நிறைமாத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… மகளுக்கு ஆசையாய் சாப்பாடு வாங்கி வந்த தந்தை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தீரன் சின்ன மலை நகர் பகுதியில் வேலப்பன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் என்ற மகனும், பி.காம் பட்டதாரியான கௌசல்யா என்று மக்களும் இருக்கின்றனர். இவரது மகள் கவுசல்யாவை கிளாங்குண்டல் பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த கணேசமூர்த்தி என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கணேசமூர்த்தி அடிக்கடி மது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு புது ரேஷன்கார்டு வேணும்… விண்ணப்பித்த திருநங்கைகள்… நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாம்…!!

பொதுமக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் அலுவலகம் மற்றும் தனி தாசில்தார் அலுவலகங்களில் திருப்பூரில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களுக்கும் நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் புகைப்படம், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் புதிய முயற்சி… விபத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலி… அமலுக்கு வருவதாக அறிவிப்பு…!!

விபத்தை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட செயலியானது தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் என அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தகவலியல் மையம் சார்பில் ஐராடு என்ற புதிய செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு விபத்திற்கான காரணங்கள், உயிரிழப்பு மற்றும் வாகன விவரங்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து ஆவணங்களாக சேகரிக்கும் பணியை அரசு விரைவில் தொடங்க உள்ளது. இந்த செயலியானது நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதல் என்றாலே இதான் நியாபகம் வரும்… மொத்தம் ஒரு டன் ரோஜாக்கள்… ஸ்பெஷல் தினத்தில் அமோக விற்பனை…!!

காதலர் தினத்தையொட்டி ஒரு டன் ரோஜாப்பூ விற்பனைக்காக திருப்பூர் மார்க்கெட்டில் குவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள காட்டன் மார்க்கெட்டுக்கு திருப்பூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மார்க்கெட்டிற்கு ஒவ்வொரு சீசன்களிலும், அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவையை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீ எரிந்ததை கவனிக்கவில்லை… உயிரிழந்த வடமாநில தொழிலாளர்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் ஒன்று உள்ள முத்தூர்-காங்கயம் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த நூல் மில்லில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்குள்ள மிக்சிங் டிபார்ட்மெண்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி உள்ளது. ஆனால் அதனை கவனிக்காத ஊழியர்கள் வேலை செய்து கொண்டே இருந்துள்ளனர். இதனை அடுத்து அந்த கரும்புகை தீயாக மாறி கொழுந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளியின் மர்மமான மரணம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் தவபாண்டி என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த அறையின் கதவை நீண்டநேரம் திறக்காத காரணத்தால் உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் கதவைத் தட்டி உள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒரு பெரிய மனுசன் பேசுறப்ப இப்படியா பண்றது”….? முதல்வர் அப்செட்..!!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மக்கள் கலைந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த  நேரத்தில் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வரின் பேச்சைக் கேட்காமல் திரும்பிச் சென்று கொண்டிருந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்போவும் இதே வேலையா போச்சு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… நடந்த துயர சம்பவம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சந்திராபூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பதூர் என்பவர் தனது மனைவி கோனிகா தேவியுடன் திருப்பூர் மாவட்டத்திலுள்ள செங்கப்பள்ளி பாலாஜி நகரில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் இருவரும் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

நூற்பாலையில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணிக்காபுரம் ராசா கவுண்டம்பாளையம் பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக அப்பகுதியில் நூற்பாலை நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் 50 தொழிலாளர்கள் ஒரு ஷிப்டுக்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நூற்பாலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பலிவாங்கிய பிரைட் ரைஸ்”… அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்…. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்..!!

திருப்பூரில் இரவில் தாமதமாக பிரைட்ரைஸ் சாப்பிட்டு தூங்கிய குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளை சேர்ந்த சந்தோஷ்-ஆர்த்தி தம்பதியினருக்கு இரு மகன்களும், பிரியங்கா என்ற மகளும் இருந்துள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் 3 குழந்தைகளுடன் சந்தோஷ் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஹோட்டலில் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலை பார்த்து வருகிறார். ஹோட்டலில் வேலை முடிந்ததும் தினமும் இரவு 11 மணி என தாமதமாக வரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒருவேளை சாப்பாடு கெட்டுப்போனதா இருக்குமோ… இரு குழந்தைகள் மரணித்த சம்பவம்… கதறி அழுத பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!

ஒரே நாளில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்று வேலை பார்த்து விட்டு மதிய நேரத்தில் சந்தோஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மயக்க நிலையில் தனது மகன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்போ பணத்தை தரப்போறியா இல்லையா…? நண்பரை கழுதறுத்து கொன்ற கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

இருவருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் நண்பரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிக்கண்ணா கல்லூரி ஐந்தாவது வீதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருப்பூரில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற நண்பர் உள்ளார். இந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து பனியன் தொழில் தொடர்பான பாலி பேக் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… அரசின் கவனத்தை ஈர்க்கும் செயல்… தொடரும் நூதன போராட்டம்…!!

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம் 6-ஆவது நாளாக நடைபெற்று உள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராணி என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அகவிலைப்படி, சரண்டர் போன்ற பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் எனவும், அங்கன்வாடி, வருவாய் கிராம […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1000 கிலோ… அமோகமான கருப்பட்டி ஏலம்… மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்…!!

நான்கு லட்சம் ரூபாய்க்கு தென்னம் மற்றும் பனம் கருப்பட்டி ஏலம் போனதாக கருப்பட்டி விற்பனை சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கருப்பட்டி விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் விடப்படுகிறது. இங்கு நடைபெற்ற ஏலத்திற்கு தென்னங்கருப்பட்டி மற்றும் பனங்கருப்பட்டி 1000 கிலோவை  உற்பத்தியாளர்கள் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து பனங்கருப்பட்டி ஒரு கிலோ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மூதாட்டி… தனது மகளுடன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!!

வயதான தாய் மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடாமேடு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு நல்லமுத்து, பழனியம்மாள் என்ற 2 மகள்களும், மணி என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவருக்கு பழனியம்மாளை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமான 2 ஆண்டிலேயே தனது கணவரை பிரிந்து விட்டு பழனியம்மாள் தனது தாயுடன் வசித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் பெரிய தப்பு… அரசாங்க பணம் தனி நபர் கணக்கில்… பணி இடைநீக்கம் உத்தரவு…!!

அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தாமல் பணம் கையாடல் செய்ததாக நகராட்சி ஊழியரை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சியில் கண்ணன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் கணக்காளராக பணிபுரிகிறார். இந்நிலையில் 2019-2020ஆம் நிதியாண்டிற்கான தணிக்கை நடத்தப்பட்டபோது, நகராட்சியில் இருந்து சேவை வரி, வருமான வரி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ஒப்பந்ததாரர் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது போக ஜி.எஸ்.டி போன்றவற்றை அந்தந்த இடங்களுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இன்றும் வாழும் மனிதநேயம்… டிரைவரின் சிறப்பான செயல்… கவுரவித்து பாராட்டிய போலீசார்…!!

ரோட்டில் கீழே விழுந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மினி ஆட்டோ டிரைவரை போலீஸார் பாராட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு மினி ஆட்டோ வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரமோகன் அவிநாசி தாலுகா அலுவலகம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரது வாகனத்திற்கு முன்பு பல இருசக்கர வாகனங்கள் அவிநாசி வடக்கு ரத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப தொல்லையா இருக்கு… தொழிலிலும் ஏகப்பட்ட நஷ்டம்… பனியன் நிறுவன உரிமையாளருக்கு நடந்த சோகம்…!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறிய பனியன் நிறுவன கம்பெனியை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் பனியன் நிறுவன தொழிலை செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக ஏற்பட்ட கடன் தொல்லை காரணத்தால் கணேசன் அந்த தொழிலை விட்டுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்… சக்கரத்தில் சிக்கி பலியானவர்… திருப்பூரில் பரபரப்பு…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயக்கனூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பலகாரத் தட்டம் சுப்பிரமணி காம்பவுண்டில் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பல்லடம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருப்பூர்-பல்லடம் சாலை வித்யாலயா பேருந்து நிலையம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் ஒரு சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்டித்து உறவினர் வீட்டிற்கு அனுப்பிய பெற்றோர்… கர்ப்பமான 10-ஆம் வகுப்பு மாணவி… வாலிபருக்கு சிறை… திருப்பூரில் பரபரப்பு…!!

பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொடி கம்பம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் பிரின்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவிக்கும், கார்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். அதன்பின் அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்க விளைச்சல் கிடையாது… டெல்லிக்கு அனுப்பப்படும் 1 லட்சம் தேங்காய்கள்… முக்கிய பங்களிக்கும் தமிழக விவசாயிகள்…!!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு லட்சம் தேங்காய்களை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனுப்ப உள்ளனர். திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக்கவுண்டர் பேட்டி அளித்த போது, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு வன்முறையாளர்களை தூண்டிவிட்டு குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கு அவப்பெயரை உண்டாக்கி […]

Categories

Tech |