Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடையின் பூட்டை உடைத்து… 53,000 ரூபாய் கொள்ளை… அச்சத்தில் வியாபாரிகள்…!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வெங்கடாசலம். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வெங்கடாசலம்  இரவு  வேலையை  முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். வழக்கம் போல் இன்று  கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த 53 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளாவே உடம்பு சரியில்ல… வாழ்க்கையில் விரக்தியடைந்து… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி(23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் திருப்பூரில் உள்ள ஜி.என் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில்  தம்பதியர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ரேவதி உடல்நிலை சரியில்லாமல் மிகவும்  அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்… 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு…!!

வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(72). சுப்பிரமணியம் தனது மனைவி அமராவதி(64)  மகள் கோகிலா(45) மற்றும்  உறவினர்களான  சந்திரன், சுகுணா, சாந்தாமணி, சுபிக்ஷா, மோகன், செண்பகம், ஜெயபாரதி, யசோதா, ஜெயலட்சுமி, துளசி, சந்தோஷ், செந்தில்குமார் ஆகியோருடன்  கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நேற்று இரவு வேனில் புறப்பட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு மாவட்டம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விடுதி பெண் பொறுப்பாளருக்கு… தொழிலாளியால் நேர்ந்த சோகம்… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

குடிபோதையில் தொழிலாளி கீழே தள்ளி விட்டதில் காயமடைந்த விடுதி  பெண் பொறுப்பாளர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரில் தனியார் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியை அப்பகுதியை சேர்ந்த ரங்கநாயகி(65) என்ற பெண் பொறுப்பாளராக  இருந்து கவனித்து வந்தார். இவ்விடுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி(35) என்பவர் தங்கியிருந்து திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பால்பாண்டி கடந்த  28ஆம் தேதி நள்ளிரவில் குடிபோதையில் விடுதிக்கு  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… அரங்கேறிய சம்பவம்… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த வெளிமாநில தொழிலாளி பணியின்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தம்பலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு லலித்ஓரான் என்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில்  இவர் 6 அடி உயரமுள்ள எந்திரத்தில் நின்று தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த நிலையில் இவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த சம்பவம்… காத்திருந்த அதிர்ச்சி… காட்டிகொடுத்த CCTV கேமரா …!!

டிரைவரின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சரக்கு ஆட்டோ டிரைவரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அங்கு மார்க்கெட்டின் முன்புறம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அவர் சிறிது நேரம் தூங்கிய போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தினேஷ்குமாரின் செல்போனை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலையில் மும்முரம்…காட்டிய தொழிலாளி… நேர்ந்தது சோகம்…!!

உயரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித்ஓரான். இவர் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் ஏழடி உயரமுள்ள எந்திரத்தில் ஏறி நின்று சுத்தம் செய்யும் பணியைமேற்கொண்டுள்ளார். அப்போது அவருடைய கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை   உடன் பணிபுரியும் தொழிலாளர்களால் மீட்கப்பட்டு பல்லடம் அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது… திருடு போன செல்போன்… சிசிடிவி காட்சியால் சிக்கிய இருவர்…!!

செல்போன் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை இவர் திருப்பூர் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு ஆட்டோவை  மார்க்கெட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு ஆட்டோவில் தூங்கியுள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பாக்கியம் பெற பரிகார பூஜை… பறிபோன உயிர்… போலி சாமியார் செய்த கொடூரம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் பெற பரிகார பூஜை செய்வதாக கூறி தம்பதியினரை போலி சாமியார் கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் ஆறுமுகம் ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவரது மகனுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியுள்ளனர். அதனால் மிகுந்த மன உளைச்சலில் அவர்கள் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலி சாமியாரின் பரிகாரப் பூஜையால்… பறிபோன உயிர்… திருப்பூர் அருகே கோர சம்பவம்..!!

திருப்பூர் அருகே தம்பதிகள் குழந்தை இல்லாத காரணத்தினால் பரிகாரம் செய்ய சென்றபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஆறுமுகம் ஈஸ்வரி. இவரது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை. குழந்தை இல்லாத காரணத்தினால் அவர்களை சுற்றியுள்ள உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவர்களை தாழ்த்திப் பேசி வந்தனர். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். குழந்தை கிடைப்பதற்காக யார் என்ன கூறினாலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழில் போட்டியில்… கொலை செய்யப்பட்ட பெண்… மளிகைக்கடைக்காரர் கைது…!!

மொபட்டில் சென்ற பெண் மீது காரை மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தும்பலப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் கருப்பசாமி- லட்சுமி .லட்சுமி அப்பகுதியில்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்  சந்தையில் கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மொபட்டில் லட்சுமி ஊருக்கு திரும்பி  கொண்டிருந்தார்.அப்போது  குண்டடம்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் அவரது மொபட்டின்  மீது  பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில்… மாடியிலிருந்தது தவறி விழுந்த என்ஜீனியர்… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து என்ஜீனியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது  மகன் தினேஷ்குமார்(26). இவர் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு  சிங்காநல்லூரில் உள்ள  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.  தினேஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றும் நிறுவனத்தில் மாடியில் வைத்து தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு மாடியில் இருந்து அனைவரும் கீழே இறங்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“புத்தாண்டு ஸ்பெஷல்” ஒரே நாளில் 15 குழந்தைகள்… மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது திருப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு திருநாளன்று 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதனைப் பற்றி மருத்துவர்கள் கூறும் பொழுது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளைக்கு 1௦-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது வழக்கம். மேலும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது திருப்பூரில் குழந்தை பிறப்பு என்பது அதிகமாகவே காணப்படும். இதற்கு காரணம் திருப்பூர் தொழில் நகரமாக விளங்குவதும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரை உலுக்கிய “பரிகார பூஜை ” சம்பவம்… குற்றவாளி கைது….!!

தம்பதியரை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான  குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம்- ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார் . இத்தம்பதியினரின் மகன் உதயகுமார். இவர் திருமணமாகி தனது மனைவியுடன் பல்லடத்தில் வசித்து  வருகிறார் .  இந்நிலையில் உதயகுமாருக்கு திருமணம் முடிந்து  இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை இல்லை. இதனால் உதயகுமாரின் பெற்றோர் மகனுக்கு குழந்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி… சிசிடிவியில் சிக்கிய ” பலே திருடன்”..!!

கூட்டுறவு வங்கி கிளையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் கிளை அமைந்துள்ளது. இங்கு டிசம்பர்  27ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் வங்கியின்  கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சத்தம் கேட்டு வந்த காவலாளியை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட பொது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாந்திரீக பூஜை… நம்பி சென்ற தம்பதிகளை… அரிவாளால் வெட்டி… திருப்பூர் அருகே நேர்ந்த கொடூரம்..!!

மாந்திரீக பூஜை செய்வதாக கூறி தம்பதியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அகரப்பாளையம்  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் – ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இத்தம்பதியினருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். அவர் திருமணமாகி கோவை மாவட்டத்தில் பைனான்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் உதயகுமார்  குழந்தை இல்லாமல் இருந்துள்ளார்.  இதனால்  ஈஸ்வரி தன்னுடைய மகன் உதயகுமாருக்கு குழந்தைப்பேறு வேண்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…பரிகார பூஜை செய்வதாக கூறி கொலை… தந்திர மந்திரவாதி…!!!

திருப்பூரில் எனக்கு மாந்திரீகம் தெரியும் என்று கூறி கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலுக்கு அடுத்துள்ள அகலராயபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்- ஈஸ்வரி தம்பதியினர். இவர்கள் அப்பகுதியிலேயே ஃபர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகின்றன. இவர்களுக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது உதயகுமார் தனது மனைவியுடன் கோவை மாவட்டத்தில் உள்ளார். அங்கு அவர் பைனான்ஸ் நிறுவனம் […]

Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் ஏற்பட்ட சோகம்… விடுதியில் கழுத்தை அறுத்து கொலை முயற்சி…!!!

திருப்பூரில் வெங்கடேஷ் என்பவர் காதலித்த பெண்ணை கழுத்தை அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (27) என்பவர். அவர் திருமணமாகி தன் மனைவியைப் பிரிந்து உள்ளார். சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு எழில்மதி (21) என்னும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறிவிட்டது. இந்நிலையில் கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… மது பாட்டிலால் இளைஞனை குத்தி… கேட்பாரற்று கிடந்த சடலம்..!!

மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சாலையோரமாக இளைஞர் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் மானாமதுரையை சேர்ந்த முருகன் என்பது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடைவிதிக்கப்பட்ட குளம்…. அனுமதியின்றி மீன் பிடிப்பு… “நோய் பரவும்” மக்கள் குற்றச்சாட்டு…!!

நஞ்சராயன் குளத்தில் அனுமதியின்றி சிலர் மீன் பிடிப்பதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நஞ்சராயன் குளம் ஊத்துக்குளி அருகே சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலைகள் பிளீச்சிங், பிரிண்டிங் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இக்குளத்தில் கலப்பதால் குளத்திலுள்ள நீர் முற்றிலும் மாசுபட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மேலும் சாயக் கழிவுகள் அதிக அளவில் சேர்வதால் இப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாழடைந்து வருகிறது. சாயக் கழிவுகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேடு…! குவிந்து கிடக்கும் குப்பைகள்…! முகம் சுளிக்கும் வியாபாரிகள்…!

சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் குப்பை தொட்டி அமைத்து தர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர் பேட்டை ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது.  இவ்விடத்திற்கு தினமும் ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.  இவ்விடத்தில் சில்லறை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்படுகிறது.  இக்காரணத்தினால் கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.  ஆனால் மிகவும் பிரபலமான இவ்விடத்தில் குப்பைத்தொட்டி வசதி இல்லை. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. கருப்பு பேட்ஜுடன் ஆர்ப்பாட்டம்…. களமிறங்கிய பிஎஸ்என்எல் ஊழியர்கள்….!!

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் தலைமையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விளக்க அட்டைகள் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். ஓய்வூதியர் சங்க மாநில […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன 71 குழந்தைகள்… கதறும் பெற்றோர்கள்… அதிரடியாக களமிறங்கிய போலீசார் …!!!

திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 71 சிறுவர், சிறுமிகளை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் காணாமல் போன சிறுவர், சிறுமிகள், குழந்தை தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆகியோரை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பெயரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் இதுவரை 71 சிறுவர் சிறுமிகள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஐந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 மாத கர்ப்பிணி… கணவருடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு… திருப்பூர் அருகே பரபரப்பு..!!

எட்டு மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். கரூரை பூர்விகமாக கொண்ட பாலமுருகன் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கும் ஈரோடுமாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த கவிதா என்பவருக்கும் இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் தனது மனைவியுடன் பாலமுருகனின் வீட்டிற்கு அருகில் வசித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 மாத கர்ப்பிணி கணவருடன் தற்கொலை… சோதனையில் சிக்கிய கடிதம்… வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

8 மாத கர்ப்பிணி பெண் கனவருடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்பவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள மீனாட்சி நகரில் வசித்து பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 1/2 வருடத்திற்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கவிதா என்பவருடன்  பெற்றோர்கள் முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக கவிதா இருந்துள்ளார். பாலமுருகனின் சகோதரன் கார்த்திகேயன் நேற்று முன்தினம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கிடங்கில் 6 வயது சிறுமி” அருகில் கிடந்த பண்டத்தால்…. சிக்கிய தாய் – பரபரப்பு சம்பவம்…!!

டாக்டர் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குப்பையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில் குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 6 வயது பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் தேர்வில் வாங்கிய குறைந்த மதிப்பெண்… மனமுடைந்த CA மாணவர்… பரிதவிக்கும் பெற்றோர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் 19 வயதுடைய சரத் ராகவ் . இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் சிஏ படித்து வந்தார். கொரோன ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இவர் ஆன்லைன் வகுப்பில் படித்துள்ளார். அப்போது ஆன்லைனில்  சரத்ராகவ் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வில் அவர் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகுந்த  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.15,00,00,000 கொடுக்கணும்…! தொல்லை பண்ணுறாங்க.. வியாபாரி எடுத்த சோக முடிவு …!!

15 கோடி ரூபாய் கடன் தொல்லையால் தாராபுரம் நகை வியாபாரி தனது குடும்பத்தினரை ஐந்து பேருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவரின் மகன் பலராமன். தாராபுரத்தில் நகைக்கடை, நிதி நிறுவனம் மற்றும் தானிய மண்டி நடத்தி வருகிறார். நகைக்கடையில் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட தனது நண்பர்கள் பலரிடம் பலராமன் கடன் பெற்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தொழில் நஷ்டம்” துரத்திய கடன்தொல்லை… குடும்பத்தை சேர்ந்த 5 பேரும்… திருப்பூர் அருகே சோகம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹரிஹரன் – திவ்யா. ஹரிஹரன் தாராபுரத்தில் ஆண்டுகளாக நகை கடை மற்றும் நிதி நிறுவனம்  நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்துள்ளார் . இதனால்  அப்பகுதியில் ஹரிஹரனின் நகை கடை மிகவும் பிரபலமடைந்தது. தாராபுரம் பகுதியை  சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“4 மாசம் சம்பளம் இல்ல”… வேலையும் போச்சு… நகராட்சி ஊழியரின் விபரீத முடிவு..!!

வேலை  பறிபோனதால் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சக்திவேல்-அஜிதா. அஜிதா திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் நகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கடந்த 6 ஆண்டுகளாக செய்து வந்தார் . இந்நிலையில் அஜிதாவிற்கு  கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  அஜிதாவை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்த மாற்றுத்திறனாளி… நள்ளிரவில் திடீரென கேட்ட சத்தம்… பரிதவிக்கும் மனைவி…!!

மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் கிருஷ்ணமூர்த்தி-பிரபாவதி . கிருஷ்ணமூர்த்தி சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். கிருஷ்ணமூர்த்தி பிறந்தது முதல் கால் சிறிது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். இதனை அவர் மனவேதனையில்  தனது மனைவியிடம் பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் கிருஷ்ணமூர்த்தி தனியாக படுக்கச் சென்றார். நள்ளிரவு  1:30 மணி அளவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் அறையில் சத்தம் […]

Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய்ய சொல்லி திட்டிய அம்மா… கல்லூரி மாணவி விபரீத முடிவு…!!!

வீரபாண்டியில் வீட்டு வேலை செய்யச் சொல்லி அம்மா திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள வீரபாண்டி பகுதிக்குட்பட்ட குப்பாண்டபாளையம் கீழ் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு 18 வயதுடைய விவேகானந்தி எனும் மகள் உள்ளார்.திருப்பூர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனாநோய் தொற்றின் காரணமாக கடந்த 8மாதங்களாக வீட்டில் இருந்தபடியே  படித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை அவரது தாயான செல்வி வீட்டு வேலைசெய்ய சொல்லி அவளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் மொபட்டில் பயணம்…. எதிரே வந்த கார்…. தாய்க்கு நேர்ந்த சோகம்….!!

மகளுடன் மொபட்டில் சென்ற போது கார் மோதி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியை  சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி -சுசீலா. இவர்களுக்கு அன்னக்கொடி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று  அன்னக்கொடியும் சுசீலாவும்  உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று மொபட்டின் மீது பலமாக மோதியது. இதில் மொபட்டின் பின்னால்  இருந்த சுசீலா கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் சுசீலாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கையில் எலும்பு முறிவு” ஆபரேஷனுக்கு பின்…. சிறுமி திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்(30). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி, ஹரிணி(3) மற்றும் பிரியதர்சினி(6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி திடீரென்று கீழே விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் கைதான நபர்… தப்பிக்க உதவிய தொழிலாளி கைது..!!

அவிநாசியில் கைதி,  தப்பிக்க உதவிய தொழிலாளியை போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த ஒலப்பாளையத்தை சேர்ந்த தனபால் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் 16 வயது பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக அப்பெண்ணின் தாயார் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஒலப்பாளையத்தை சேர்ந்த சிலர் தனபால் தாக்கியுள்ளனர். இதனால் தனபால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் 4 வயது சிறுமியின் உலக சாதனை …!!

பல்வேறு நாடுகளின் தேசியக் கொடியின் பெயர்கள் சூரிய கிரகங்களின் பெயர்கள் உள்ளிட்ட 18 தலைப்புகளைக் கொண்ட மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனை நிகழ்த்தியதற்காக திருப்பூரை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தாராபுரம் சென்னியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த மல்லீஸ்வரன் அனிதா தம்பதியனரின் 4 வயது மகள் சக்தி வெண்பா 18 தலைப்புகளை பாடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளின் தேசியக் கொடியின் பெயர்கள், சூரிய கிரகங்களின் பெயர்கள், தமிழ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்படியொரு கொடூர நட்பா” நண்பனை கொன்று…. பிணத்துடன் ஒருவாரம் தங்கிய கொடூரன்…. திகில் சம்பவம்…!!

நபர் ஒருவர் தன் நண்பரை தலையில் கல்லை போட்டு கொன்று, அந்த பிணத்துடன் ஒரு வாரம் தங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள குடியிருப்பில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இருவர் ஒரே அறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதையடுத்து திடீரென்று ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – 50,000 ஏக்‍கர் பாசன நிலங்கள் பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள VIP கிளை கால்வாய் பாசன நீர் பயன்படுத்தும் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 50,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்தபடி தங்களது பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

90s கிட்ஸ் க்கு நேர்ந்த கதி …!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் மது போதையில் தகராறு செய்த மகனை தாய்யே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தை அடுத்த உத்துப்பாளையத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்து வைக்கக்கோரி தாய், தமிழரசியுடன் மது போதையில் அவர் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசி மர உலக்கையால் சிதம்பரத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

9 வினாடிகளில் 22 மொழிகளைச் சொல்லி அசத்தும் 3 வயது குழந்தை …!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே 3 வயது குழந்தை 9 வினாடிகளில் 22 மொழிகளை சொல்லும் அபாரதிறமை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அவிநாசி அடுத்த செய்யூர் அருகே லூர்துபுரம் ஓநாய் பாறை பகுதியைச் சேர்ந்த ரவி பெஸ்ஸில் தம்பதியரின் மூன்று வயது மகள் அன்டோனா இந்தியாவில் உள்ள 22 மொழிகளில் பெயர்களை அதிவேகமாகவும் குறைந்த நேரத்திலும் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் மாநிலத்தின் பெயரை சொன்னால் உடனடியாக அதன் தலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

துணியை காய வைக்க சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ஊத்துக்குளி அருகே துணி காய வைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்குளி அருகே இருக்கின்ற செங்கப்பள்ளி ஊராட்சியில் பூசாரி பாலம் என்ற பகுதியில் சண்முகம் மற்றும் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி தனது வீட்டில் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது துணி காயவைக்கும் கம்பியில் துணியை போட்டபோது கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. உடனடியாக தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த சினை ஆடு உயிருடன் மீட்பு …!!

திருப்பூர் அருகே கிணற்றில் விழுந்த சினை ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர்ப்புற பகுதியில் சார்ஜ் ரோடு தனியார் மகளிர் பள்ளிக்கூடம்  எதிரில் இடிந்த கட்டிடம் அருகே சென்ற ஒன்றரை வயது மதிப்புள்ள சினையில் உள்ள ஆட்டுக்குட்டி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர். ஆட்டுக்குட்டியை மிட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூட்டியிந்த வீடு…. துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்…. காவல்துறையினருக்கு அதிர்ச்சி…!!

தண்ணீர் தொட்டியில்  அழுகிய நிலையில் கிடந்த  பிணம் பெரும்   பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரே ராஜு என்பவருக்கு 9 சொந்த வீடுகள்  வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதிலில் ஒரு வீட்டில் நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாய்லருக்குள் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு …!!

திருப்பூர் அருகே நெல் ஊறவைக்கும் பாய்லரில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் இயங்கிவரும் தனியார் அரிசி மில்லில் திருவாரூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இன்று வழக்கம்போல் தனது பணியைத் தொடங்கிய அவர் நெல் ஊறவைக்கும் பாய்லரில் தண்ணீரை நிரப்பி நெல் மூட்டைகளை கொட்டிய போது பாய்லரில் அவர் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் வந்த போலீசார் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் …!!

திருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீரை முறையாக வழங்க கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

4 வழிச்சாலைக்கு 100 லோடு வரை கிராவல் மண் அள்ளியதாக புகார்…!!

திருப்பூர் உடுமலை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நான்கு வழி சாலைக்காக கிராவல் மண் அள்ளியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித அனுமதி இல்லாமலும், கூட்டுறவு சர்க்கரை விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமலும் மடத்துக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்குவழி சாலைக்கு கனரக வாகனங்கள் மூலம் 100 லோடு வரை கிராவல் மண் எடுத்துச் சென்றதாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி… திருமணம் செய்த கூலித் தொழிலாளி… விரட்டிப் பிடித்த போலீஸ்…!!!

திருப்பூரில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி திருமணம் செய்துகொண்ட கூலி தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கம்பம் அருகே இருக்கின்ற காமயகவுண்டன்பட்டி பகுதியில் விஷ்ணு என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியுடன் ஆசை வார்த்தைகளை பேசி கடத்திச் சென்றுள்ளார். அதன் பிறகு சுருளி அருவி பகுதியில் இருக்கின்ற கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
திருப்பூர் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் திருப்பூர் அதிமுக எம்.எல்.ஏ…!!

சிண்டாக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கும் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தற்போது தகர ஷீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு என விளம்பரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்க பட்டுள்ளது. தகர ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிரபல ஜவுளி நிறுவனம் பெயரில் போலி மாஸ்க் தயாரிப்பு…!!

பிரபல உள்ளாடை  தயாரிப்பு நிறுவனம் பெயரில் போலி முகக்கவசம் தயாரித்த நபர்களை லாவகமாக பிடித்து ஊழியர்கள் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருப்பூரை தலைமையகமாக கொண்டு வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகள் தயாரிப்பு என மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனம், தற்போது முக கவசங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் முகநூல் பக்கத்தில் சீனு என்பவர்  பிரபல நிறுவனத்தின் பெயரில் உள்ள மாஸ்க் குறைந்த விலையில் கிடைக்கும் என விளம்பரம் பதிவிட்டதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பரபரப்பு : ஜாதிப் பெயரை கேட்ட காவலர்….. ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் மாஸ்க் அணியாத நபரிடம் காவலர் காசிராஜன் என்பவர் ஜாதி பெயரை கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அந்த இளைஞரிடம் சென்று ஜாதி பெயரை கேட்பதை அங்கிருந்தோர் வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி, உயரதிகாரிகள் பார்வைக்கு செல்ல, அவர்கள் காவலரான காசிராஜனை  ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என எஸ்பி திஷாமிட்டல் உறுதியளித்துள்ளார். 

Categories

Tech |