சாலைளை சுத்தம் செய்வதற்கான நவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு சேகரித்து செல்கின்றனர். மேலும் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு […]
Category: திருப்பூர்
ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் பொலையம்பாளையத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை இறுதியில் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் வளையல்கள் வழங்கப்பட்டன.
பாசன கால்வாயில் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக திருமூர்த்தி அணை இருக்கின்றது. இனிமேல் அணையின் வாய்க்காலில் கழிவு நீர் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியுள்ளதாவது, விவசாய தொழிலுக்கு முக்கியமாகவுள்ள பாசன நீரைக் கொண்டுசென்று விவசாயிகளும் சேர்வதற்கு பாசனக்கால்வாய்கள் கைகொடுக்கின்றது. திருமூர்த்தி அணையில் இருந்து புறப்படும் உடுமலை கால்வாயின் வழித்தடத்தில் உடுமலை நகராட்சி மட்டுமல்லாமல் அதனை ஒட்டிய […]
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 21 அணிகள் கலந்து கொண்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோட்டில் உள்ள ஜெய்நகர் வித்ய விகாஷினி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து போட்டியானது நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதில் 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக மாணவர்களுக்கு கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இப்போது மாவட்டம் முழுவதிலும் இருந்து 14 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 21 அணிகளாக […]
ஆசிரியர்கள் தரக்குறைவாக திட்டுவதாக கூறி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோட்டில் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு வகுப்பறைக்கு செல்லாமல் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்கள் பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களை தரக்குறைவாக திட்டுவதாகவும் கைகளில் கயிறு கட்டக் கூடாது என திட்டுவதாகவும் புகார் கூறினார்கள். இதை […]
திருப்பூர் அருகே ரயிலில் போலீஸ்சார் சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படி இருந்த ஒரு இளைஞனிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை இட்டார்கள். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இளைஞரை கைது செய்து திருப்பூர் ரயில்வே போலீஸ்சார் சப் இன்ஸ்பெக்டர் […]
10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசை பயிற்சி பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இசை பயிற்சி பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி தனது உறவினர் மகளான 17 வயது மாணவி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டுட்டோரியல் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். மேலும் தந்தையை […]
சாலையோர பழக்கடை வியாபாரிகள் பழங்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறி, பழங்களை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் வியாபாரிகள் சிலர் காலை 4:00 மணி முதல் காலை 8 மணி வரை சாலையோரம் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனால் […]
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் சந்திராபுரத்திலிருந்து செரங்காடு செல்லும் சாலையில் உள்ள ஹோட்டல் அருகே சென்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி முன் விரோதம் காரணமாக சுரேஷ்குமார் என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரின் நண்பர்களான இதயக்கனி, மணிகண்டன், பிரகாஷ், பிரவீன் குமார், குணா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் […]
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட சதுரங்க போட்டியின் செல்பி ஸ்பாட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையும் சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சதுரங்க போட்டியில் செல்பி ஸ்பார்ட் […]
குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் தாலுகா உட்பட்ட குமரலிங்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி கற்பகம். கிருஷ்ணன் கிளி ஜோதிடம் பார்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிடம் பார்த்துவிட்டு வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்பொழுது தனது மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார். பின் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்து கத்தி எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தியுள்ளார் […]
பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. மேலும் சாலையில் தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு க் கொள்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகையால் […]
வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டோரமாக ராஜாராம் மற்றும் அவரின் நண்பர் சதீஷ் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ராஜாராமை தனியாக அழைத்து எந்த ஊர் என கேட்டதோடு தனியாக பேச வேண்டும் எனக் கூறி சிறிது தூரம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ராஜாராம் சட்டை பையில் இருந்த 550 எடுத்துக்கொண்டு செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் ராஜாராம் மற்றும் […]
திருப்பூர் அருகே சரியான நேரத்திற்கு பேருந்துகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இங்கிருந்து ஏராளமானோர் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கும் திருப்பூர், அவிநாசி, கோவையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களும் செல்கின்றார்கள். திருப்பூரில் இருந்து கணியாம்பூண்டி வழியாக அவிநாசிக்கும் அவிநாசியில் இருந்து திருப்பூருக்கும் இரண்டு அரசு டவுன் பஸ்களும் ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்கி வருகின்றது. மேலும் ஒரு அரசு […]
மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குட்டைக்காடு பகுதியில் விவசாயியான விவேகானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதித்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் காங்கேயத்திற்கு விவேகானந்தனும், ஆதித்யாவும் வந்துள்ளனர். அதன்பின் காரில் காங்கேயம்-சென்னிமலை சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை விவேகானந்தன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். காரின் இடது இருக்கையில் ஆதித்யா அமர்ந்திருந்தார். இந்நிலையில் […]
பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வெள்ளிரவெளியிலிருந்து புளியம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமியம்பாளையம் தரைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்று பாதையில் சென்று வருகின்றன. […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிப்பாளையம் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 13-04-2019 அன்று பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவரை செவிலியர்கள் சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும் கடந்த 25-04-2019 அன்று அருணா தேவியை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு அளிக்கப்பட்ட […]
பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் தொடர்ந்து வழிப்பறி நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் காவல்துறையினர் அவினாசி-திருப்பூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பூர் ராயபுரம் பகுதியில் வசிக்கும் ஷாஜஹான், சிங்காநல்லூர் மூகாம்பிகை நகர் பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
தூர்வாரும் பணியின் போது வாய்க்காலுக்குள் பொக்லைன் எந்திரம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாலிபாளையத்தில் ராஜ வாய்க்கால் இருக்கின்ற நிலையில் மாவட்டத்தின் வடக்கு பகுதியிலிருந்து வரும் கழிவு நீரானது ராஜ வாய்க்கால் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கின்றது. இந்நிலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ராஜவாய்க்காலை தூர்வாரும் பணியானது நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக வாய்க்காலை தூர்வாரும் பணியானது நடைபெற்றது. அப்போது எதிர்பாராவிதமாக பொக்லைன் எந்திரம் ஒன்று வாய்க்காலுக்குள் […]
குடிமங்கலம் அருகே வேன் ஆட்டோ மோதியதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சேர்ந்த மாசாணம் என்பவர் ஒட்டன்சத்திரத்திலிருந்து காய்கறிகளை ஏற்றுக் கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூருக்கு செல்வதற்காக தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக வேன் ஒன்று 11 பேர்களை ஏற்றிக் கொண்டு ஓட்டமடம் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதில் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி […]
பல திருட்டுகளில் ஈடுபட்ட இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் போடிப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்ற மாதம் மூன்றாம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். பின் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபொழுது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் மடத்துக்குளம் தாலுகாவில் […]
தாராபுரம் பகுதியில் நான்கு மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பெரியார் சிலை அருகே உள்ள தளவாய் பட்டணம் சாலையில் கணேசன் என்பவர் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று காலையில் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பொழுது கடைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் […]
செங்கோடம்பாளையம் கிராமத்தில் உள்ள தைல மரத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அருகே இருக்கும் செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தைலம் மரம் நட்டு சாகுபடி செய்து இருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12:30 மணியளவில் தைலம் மர தோட்டத்தின் கீழே உள்ள ஒரு பகுதியில் தீப்பிடித்ததுள்ளது. இதனால் குழந்தைசாமி குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு […]
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். இவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள், சத்துக்களும் கிடைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான நோய்களும் பரவி வரும் சூழலில் காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. எனவே நாம் மார்க்கெட் செல்லும் பொழுது மிகவும் சத்து நிறைந்த கீரைகள் கிடைக்கிறதா என்பதை தேடி பார்த்து வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு […]
திருப்பூர் மாவட்டத்தில் 18 சாயக்கழிவுநீர், பொது சுத்திகரிப்பு மையங்கள் உள்ளது. இவற்றில் “ஜீரோ டிஸ்சார்ஜ்” தொழில்நுட்பத்தில் சுத்தரிக்கப்படுகிறது. இறுதி நிலையில் கலவை உப்பு பிரித்து எடுக்கப்படுகிறது. சரியான தொழில்நுட்பங்கள் இல்லாததால் இந்த கலவை கழிவு உப்புக்கள் சுத்திகரிப்பு மையங்களில் தேக்கி வைக்கப்படுகின்றனர். இதனால் 45 டன் கழிவு உப்பு தேங்கியுள்ளது. இந்த உப்புகளை அகற்றும் வழிமுறைகளை கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் குழுவை தமிழக ஜவுளித்துறை நியமித்து உள்ளது. இக்குழுவின் தலைவரான மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகம், […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை ஏப்ரல் மாதம் 21-ம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் தென்காசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் மதுரை வழியாக மறுநாள் அதிகாலை […]
நடு ரோட்டில் ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இதே நேரத்தில் தனியார் பேருந்து ஒன்றும் கோயம்புத்தூருக்கு கிளம்பியது. இந்த 2 பேருந்துகளின் ஓட்டுநர்களும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அதிவேகமாக சென்றுள்ளனர். இதில் திடீரென அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து சாலையை ஆக்கிரமித்து சென்றுள்ளது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் […]
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருந்து காங்கேயம் க்ராஸ் ரோடு பகுதி வரை பெரிய கடைவீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற […]
விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதியில் வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எப்போதும் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை பொதுமக்கள் சிலர் அங்குமிங்கும் நிறுத்தி விட்டுச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துகின்றனர். […]
கடன் தொல்லை அதிகரித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருக்கு கடன் சுமை அதிகரித்ததால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இவருக்கு டெய்லரான மெர்சி ராணி என்ற மனைவி உள்ளார். இவர் சோழமாதேவி பகுதிக்கு வேலை தேடி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்த போது […]
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் பெருமாநல்லூர்-திருப்பூர் சாலையில் சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்டோக்களும் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டன. இதனால் நடுரோட்டில் நீண்ட நேரமாக 2 ஆட்டோக்களும் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் டிரைவர்கள் ஆட்டோவை எடுக்க முயற்சி செய்தும் அதை எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பிச்சம்பாளையம்புதூர் முதல் புதிய பேருந்து […]
திருப்பூர் மாநகராட்சியில் 980 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு சார்பாக மின்னணு கழிவு சேகரிக்கும் முகமானது திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றதில் ஆணையாளர் முகாமை தொடங்கி வைக்க துணை மேயர் முன்னிலை வகித்தார். இதில் பிரிக்ஸா ஸ்ரீ சாய் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 200 கிலோ அவர்கள் பயன்படுத்திய மின்னணு கருவிகளை கொடுத்து அதற்கான தொகையை பெற்றுக் கொண்டார்கள் மொத்தம் 980 கிலோ மின்னணு […]
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் லட்சுமணன்(72) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வஞ்சிக்கொடி(62) இவர்கள் நெருப்பெரிச்சல் பகுதியில் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தனர். இதற்காக காந்தி நகரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் பூபதியிடம் வீடு கட்டி கொடுக்க ஒப்பந்தம் போட்டனர். அதன்படி ரூ.16 லட்சத்தை லட்சுமணன் கடந்த 2018 ஆம் ஆண்டு கொடுத்தார். அதனைதொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி 85% வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் லட்சுமணன் புதுமனை புகுவிழா […]
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட 103 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் தூர்வாருதல், பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின்விளக்கு அமைத்தல், வார சந்தையை மேம்படுத்தல், 5 பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணியிகளுக்கு […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கூடிய வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின்படி பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் […]
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பதாரர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் வருவாய் துறை ஆவணங்களில் கோவில் பெயரில் இருந்தது .அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையாளரான குமரத்துரை உத்தரவின்படி நேற்று ஆக்கிரமிப்புத்தாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மொத்தம் 53 ஏக்கர் 97 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதில் கோவில் உதவியாளர் விமலா, இந்து சமய […]
திடீரென பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, பல்லடம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் பல வருடங்களாக 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளனர். இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜூலை […]
திருட்டு கும்பலிடம் விவசாயி சாமர்த்தியமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ஒரு பெண் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உங்களுடைய இடம் செல்போன் டவர் அமைக்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது அதற்காக உங்களுடைய நில பத்திரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் பிறகு உங்கள் நிலம் செல்போன் டவர் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அட்வான்ஸ் பணமாக ரூபாய் 40 லட்சம் கொடுக்கப்படும் என்றும், மாதந்தோறும் ரூபாய் […]
தரை கடைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதால் வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துறையூரில் நகராட்சிக்குட்பட்ட சாமிநாதன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமார் 45 தரைக்கடைகள் உள்ளன. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடை வைத்துள்ள வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்து மேற்கூரை அமைத்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக நகராட்சி நிர்வாகம் கடை ஒன்றுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்து வசூலித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் சன் பவுலரிங் என்ற பெயரில் கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. அந்த பண்ணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாயி பசு மாத்திரி என்பவர் தனது மனைவி ஹசாரி மற்றும் 2 வயது குழந்தையான புஞ்சா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பண்ணைக்கு சொந்தமான டிராக்டரில் கோழித் தீவன மூட்டைகள் ஏற்றி கொண்டுவரப்பட்டது. அந்த டிராக்டரை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசிக்கும் […]
கண்டெய்னர் லாரி-வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் சக்தி நகர் அருகில் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி மற்றும் வேன் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் […]
201 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 2,401 பேருக்கு பணி நியமன ஆணையை 6 அமைச்சர்கள் வழங்கினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கணேசன், கயல்விழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த முகாமில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் […]
மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள புளியமரத்தோட்டம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது, நாங்கள் ஆய்வரும் தனியாருக்கு சொந்தமான 25 வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சங்கிலிப்பள்ள ஓடையில் […]
ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 வீடுகளையும் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளது. இந்த உடுமலை பழனி சாலையில் இந்த பள்ளத்தை ஒட்டி நாராயணன் காலனி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும். தற்போது உடுமலை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர்வாரி […]
மர்ம விலங்கு கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஒரு பசுமாடு 3 கன்றுக்குட்டிகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று 10 மாதம் மற்றும் 2 மாத வயதுள்ள 2 கன்றுக்குட்டிகளை கடித்து குதறியது. இதில் 2 கன்றுக்குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
புதையல் நகை எனக்கூறி பண மோசடி செய்த வட மாநில கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மன்னரை பசும்பொன் நகரில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி பாலுவின் ஓட்டலுக்கு சாப்பிட வந்த வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் பாலுவை சந்தித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலை பகுதியில் கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கைலாசநாதர் கோவிலில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தின் துணை ஆணையர் கைலாசநாதர் கோவிலில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை ஆய்வு செய்தார். […]
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்துசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னமார் கோவிலில் உள்ள உண்டியலில் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றி வரும் திருப்பூர் ஆயுதப்படை காவலரான அருள் குமார் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவினாசி முத்து செட்டிபாளையம் […]
திடீரென நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தை சுற்றி மருதுறை, கீரனூர், நால்ரோடு, ஆலம்பாடி, சிவன்மலை உள்ளிட்ட 10-ம் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் நேற்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வின் போது பெரிய சத்தம் ஒன்றும் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நில அதிர்வின் போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தததோடு, வீட்டில் உள்ள அனைத்துப் […]
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே நொய்யல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீர் குடித்த சில ஆடுகள் இறந்த நிலையில் நீரில் மிதந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆடுகளை மீட்க முடியாததால் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீனவர்கள் உதவியுடன் […]