அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அபி பில்டிங் மெட்டீரியல் சப்ளையர்ஸ் என்ற கட்டுமான உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு எல்லா நேரத்திலும் பொருட்களை ஏற்றுவதற்கு அதிக அளவில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும் உபகரணங்களை ஏற்றிச்செல்லும் போது வாகனத்தில் இருந்து ஒரு சில நேரத்தில் இரும்பு தட்டுகள் வழியில் வந்து விழும். […]
Category: திருச்சி
ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளின் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி பகுதியில் பூதநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ராமசாமி என்பவர் வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இதனை அடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் ராமசாமியின் வீட்டை அகற்ற சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் பொன்னாம் பட்டி பேரூராட்சி […]
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தோளூர்பட்டி கிராமத்தில் திருமுருகன் என்ற சென்ட்ரிங் தொழிலாளி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அரசலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை செய்வதற்காக திருமுருகன் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக திருமுருகன் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த திருமுருகனை அக்கம் பக்கத்தில் […]
வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த தாயை போலீசார் மகனுடன் சேர்த்து வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஈச்சம்பட்டி பகுதியில் கல்கி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இவருக்கு வயது 75 ஆகும். இவருடைய கணவர் 20 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதன்பின்பு மூதாட்டியை அவருடைய மகன் கவனிக்காததால் அவர் ஆதரவின்றி ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றார். இதனை அடுத்து வயதான காலத்தில் மூதாட்டிக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து […]
வழிந்து ஓடும் கழிவு நீரால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிமாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப் படுகின்றது. இங்கிருந்து ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பேருந்துகள் நிற்கும் இடத்தில் கட்டண கழிப்பிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கால்வாய் நிரம்பி பேருந்துகள் நிற்கும் இடத்தில் வழிந்து ஓடியது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். அது […]
ரூபாய் 82 ஆயிரத்து மோசடி செய்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் பகுதியில் வசந்தவேலு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் whatsapp மற்றும் telegram வாயிலாக பதிவு ஒன்று வந்துள்ளது. இதனை வசந்த வேலுவும் திறந்து பார்த்துள்ளார். இதனை அடுத்து மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு ரூபாய் 1600 முதலீடு செய்தால் 600 லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வசந்த […]
பல கடைகளில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பால் ஏஜென்சி கடையை நடத்தி வருகின்றார். இவர் இவருடைய கடையின் பூட்டை உடைத்து ₹2900மும், பக்கத்து தெருவில் உள்ள மீரா மொய்தின் என்பவருடைய செருப்பு கடையில் ரூ.2000மும், சீனிவாசன் என்பவருடைய கடையில் 1700 ரூபாயும், பக்கத்து தெருவில் உள்ள சாமுவேல் ராஜ் என்பவருடைய பழக்கடையில் ரூபாய் 2500, கோகுல்ராஜ் என்பவர் நடத்தி வரும் […]
அரசு பேருந்துகள் மோதி கொண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று கரூர் நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. இதே போல் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எல்லரசு பாலம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு அரசு பேருந்துகளும் முன்பக்க பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி அபிஷேக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் நின்று ஆண்டனி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆண்டனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஜெட்லி ஆண்ட்ரூஸ் மற்றும் இரண்டு சிறுவர்களை […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி வங்கியிலிருந்து 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு கிருஷ்ணசாமி பாலக்கரை பகுதியில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் முதியவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20896 வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். வருகிற 4- ஆம் தேதி முதல் இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 4.15 மணிக்கு வந்து 4. 25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதனை அடுத்து வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மைசூரு-மயிலாடுதுறை வாராந்திர சிறப்பு கட்டண ரயில் எண் 06251 இரவு 11.45 […]
12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பகுதியில் பிரவீனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரவீனா எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக […]
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தல்லாக்குடி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இவர் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளக்குடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர் தல்லாக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை […]
திருச்சி மாவட்டத்தில் கிராம பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக சின்னதுரை இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று காலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைக்கு மது அருந்துவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு […]
வீட்டின் கதவை உடைத்து துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பாதுகாப்பு துறையில் மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர்க்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு வீட்டின் உள்ளே சென்று […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் தங்கசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி(64) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது மனைவி உறவினர்களான பூஜா(30), ரஞ்சனா(20) பேரன் பிரதுன் ஆகியோருடன் காரில் நவல்பட்டு பகுதியில் இருக்கும் மருமகன் லட்சுமணன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் திருச்சி சுந்தரம் பிள்ளை தெருவில் வசிக்கும் ராமகிருஷ்ணன்(65) என்பவர் அவரது மனைவி பத்மாவுடன்(60) காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த காரை மோகன்(45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். […]
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நாகநல்லூர் ஊராட்சியில் 164 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் நாகநல்லூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு நாகநல்லூர் ஏரி நிரம்பி வழிகிறது. சுமார் 7 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெண்ணிடமிருந்து 4 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு கீழகாசிபாளையம் பகுதியில் வைஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் வைஷாலியை தொடர்பு கொண்டு பேசி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் வைஷாலி 4 லட்சத்து 74 ஆயிரத்து 594 ரூபாய் முதலீடு செய்துள்ளார். […]
குழந்தைகளோடு மாயமான பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தீபாவளி சீட்டு சேகரிப்பு செய்து தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக காமாட்சியிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள் அதன் முதிர்வு தொகையோடு பணத்தை கேட்டுள்ளனர். நேற்று முன்தினம் 9 வயது மகன், 6 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி […]
மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை ஒருவர் காரால் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் இருந்து தனியார் பேருந்து சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஓயாமரி அருகே சென்றபோது ஒரு காரை முந்தி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மீது உரசி விட்டு தனியார் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் விரட்டி சென்று மற்றொரு இடத்தில் வைத்து பேருந்தை நிறுத்த முயன்றார். அப்போதும் பேருந்து கார் […]
தொழிலதிபரிடம் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னகடை வீதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயோமெடிக்கல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பர் ரமேஷ்குமார்(43) என்பவர் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தின் […]
ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று மூலஸ்தானத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்ட நம் பெருமாள் சந்திராபுஷ்கரணி குளத்திற்கு வந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து காலை 9:45 மணிக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் […]
பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலை பட்டி புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்கள் பொது கழிவறைக்கு வரும்போது ஆபாசமாக படம் பிடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியானது அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்று உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தின் அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டட்டுள்ளது. இந்த போட்டியை சங்க மேலாளர் மதன் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டியில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இதில் சமநிலை […]
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் […]
திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவலர்கள் மற்றும் 20 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பனானா லீப் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் […]
திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு அருகில் 90 காபி பார் ஒன்று உள்ளது. இதே போல் கரூர் பைபாஸ் ரோட்டில் அகிலாண்டேஸ்வரி டீ கடை ஒன்று உள்ளது. இந்த இரண்டு கடைகளிலும் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் அந்த கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். இந்த சோதனையில் அந்த கடைகளில் புகையிலை […]
வேன் மோதி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அருண் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் இருந்தார். இவரும் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் என்ற மாணவனும் ஒன்றாக படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு டியூஷனுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் முன்புறமாக சரக்கு […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோதிஸ்காந்த்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவர் களமாவூர் மேம்பாலம் வழியே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாணவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோதிஸ்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]
மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி அருகே வீரானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வீரானந்தம் பக்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் ஜெயபாரதி ஸ்ரீஹரிக்கு விஷம் கொடுத்து கொன்ற […]
பாலியல் புகாரை தொடர்ந்து ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. பெண் ஒருவருடன் டி.எஸ்.பி பரவாசுதேவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் மீதான உண்மை தன்மைகள் ஆராயப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஎஸ்பிஐ பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என் நேருவால் புகழ்ந்து பேசப்பட்டவர். குறிப்பாக வாசுதேவன் மிகவும் திறமையானவர் என்று கே என் […]
தாய் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை செங்குளம் காலனியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பானுப்பிரியா கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 6-ஆம் தேதி தனது மகளுக்கு பானுப்பிரியா சாப்பாடு […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலை ஜே.ஜே நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தினர் திருச்சி சிந்தாமணி பகுதியில் இருக்கும் கந்தசாமி என்பவரது வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் சென்று பார்த்த போது அந்த செல்போன் கோபுரம் மாயமானதை கண்டு சுரேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி ஜே. எம் 1 நீதிமன்றத்தில் […]
போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் இறந்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் ஜாவித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் போதை மாத்திரை வாங்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த ஜாவித்தை பக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாவித் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் லாரி ஓட்டுனரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை சரியில்லாததால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனை அறிந்த பொதுமக்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக புலிவலம் சாலை விரிவாக்க பணியின் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பணியை விரைந்து […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலைய ரோடு, மணப்பாறை கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுமக்களிடம் பிஸ்கட், டீ போன்ற வச்சி வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கையில் கம்பி அல்லது குச்சியுடன் சுற்றி திரிந்த வாலிபரை பார்த்ததும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதனால் சாந்திவனம் மனநல காப்பக நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர் கோவில் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாரியப்பன் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டியில் உள்ள செந்தில்கணேஷ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தின் முன்பு பணத்தை மீட்டு தரக்கோரியும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
வளநாடு அருகே 8 பேரை திருமணம் செய்து கொண்டு பணம், நகையை திருநங்கை மோசடி செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை கனகனந்தல் பகுதியைச் சேர்ந்த பபிதா ரோஸ் என்பவர் திருநங்கை ஆவார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு அருகே இருக்கும் அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் வீடு கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒரு சதுர அடி 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக […]
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடனானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம். இந்த கொலை வழக்கை முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் […]
வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் திருமலை பகுதியில் செல்வம் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியமங்கலம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு காந்தி மார்க்கெட் பால்பண்ணை அருகே உள்ள மதுபான கடைக்கு செல்வம் நண்பர்களுடன் மது குடிப்பதற்காக சென்றுள்ளார். அந்த மதுபான கடை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் செல்வத்துக்கும், மது குடிக்க வந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்காரன் பட்டி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் சேவல்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். இந்த பள்ளிக்குள் நுழைஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (57) என்பவர் சென்றுள்ளார். இவர் மாணவியிடம் தான் ஒரு சமூக சேவகர் என்றும், பள்ளியில் போடும் மதிய உணவு மற்றும் கழிவறைகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு மாணவியிடம் ஒரு பாத்திரத்தில் மதிய உணவு […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் திருநங்கையான பபிதா ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஏப்ரல் மாதம் நான் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டேன். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டேன். இதனால் சிறப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் கடலூர் மாவட்டத்தைச் […]
“விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாதாரண பயிர்களில் இருந்து எடுக்கும் லாபத்தை விட முறையாக மரப்பயிர் விவசாயம் செய்தால் 3 – 5 மடங்கு கூடுதலாக லாபம் எடுக்க முடியும்” என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிலுள்ள ‘லிட்டில் ஊட்டி’ என்ற வேளாண் காட்டில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் நேற்று (செப் 18) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு […]
புத்தகம் படிப்பதினால் ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புத்தகத் திருவிழா தொடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் ஜான் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் மைதானத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்தியுள்ளது. இந்த விழாவானது நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி உள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3 லட்சத்தை 45 ஆயிரம் பணத்தை மோசடி செய்த ஆறு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சூர்யா. இந்நிலையில் சாந்தி கடந்த சில நாட்களாக தனது மகன் சூர்யாவிற்கு அரசு வேலை வாங்க முயற்சித்து வருகிறார். அந்த சமயத்தில் சாந்திக்கு இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி மணிகண்டன் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த சமயத்தில் […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் இருந்து 3 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பாண்டமங்கலம் தியாகராய நகர் பகுதியில் சாந்தி(56) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியராஜூக்கு அரசு வேலை வாங்குவதற்காக சாந்தி முயற்சி செய்து கொண்டிருந்தபோது இந்து முன்னணி நிர்வாகியான மணிகண்டன் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அரசு வேலை வாங்கி […]
கடன் தொல்லையால் தம்பதியினர் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை காவேரி நகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சேகர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்த சேகருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக சுமார் 1 […]
முதியவரிடம் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதவத்தூர் பகுதியில் நிர்மல் குமார்(67) என்பவர் வசித்து வருகிறார். இவர் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் நிர்மல் குமாரின் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்களது செல்போன் எண்ணுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு பணம் பரிசு விழுந்துள்ளது. […]
திருச்சி வாத்தலை அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஆம்னி வேன் மீது மோதியதில் ராசாத்தி (43) குழந்தை ரக்ஷனா உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நாமக்கல்லை சேர்ந்த ராஜா என்பவர் தன் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]