திருமணம் செய்ய மறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம் சோலையூர் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மகளுடன் தனது சொந்த ஊரு தொட்டியம் கிராமத்திற்கு சென்றார். கோவிந்தனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சென்னையில் இருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த சதீஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தொட்டியம் கிராமத்திற்கு தான் காதலித்த பெண்ணை தேடிச் சென்றுள்ளார் சதீஷ். அங்கு இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
Category: திருச்சி
திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி என்ற தனியார் பிரியாணி கடையின் அறிவிப்பால் ஏற்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா அச்சத்தின் மருந்து சமூக இடைவெளி இன்று குவிந்தனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் உள்ள தனியார் பிரியாணி கடையில் பத்து பைசாவிற்கு பிரியாணி என்ற வித்தியாசமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. இதனால் காலை முதலே ஆயிரக்கணக்கான பிரியாணி பிரியர்கள் பிரியாணி கடை முன்பு குவிந்தனர். கொரோனா […]
மூன்று திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவதாக காதல் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஜெயில் கார்னரில் அமைந்துள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்திக் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து கடந்த வருடம் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் மீது சுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தொலைபேசியை எடுத்து சோதித்தபோது கார்த்திக் […]
மாடியின் கைப்பிடியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் உள்ள இளம்குறிச்சியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் கிராமப்புறங்களில் ஓம வாட்டர், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது இரண்டு சக்கர வாகனத்தில் பழையகோட்டை, வீரப்பூர் சந்தைப்பேட்டை வழியாக தோப்புபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட ஒரு வீட்டின் மாடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சிறுவனின் […]
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த திருநங்கை அமிலம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான சம்யுக்தா என்பவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் திருநங்கை சம்யுக்தா பிறந்த நாளான நேற்று அமிலம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். […]
திருச்சி மாவட்டத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற இரண்டு குழந்தைகள் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே உள்ள கரையோரத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அனிதா என்ற தம்பதியினர் ஆறுவயது தர்ஷினி மற்றும் நாலு வயது நரேன் ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். அனிதா திருச்சி தில்லைநகரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் காரணத்தால், அனிதாவின் தாய் இரு குழந்தைகளையும் […]
ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் முறையை கைவிட வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம். கட்டுமானம் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நலவாரிய ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் மற்றும் பதிவு முறையை கைவிட வலியுறுத்தி திருச்சியில் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டுமான தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
திருச்சி அருகே சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். திருச்சி மணிகண்டம் அடுத்த வடக்கு பாகனூரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய இருதயசாமி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து வந்துகொண்டிருந்த சொகுசு காரில் பிரபாகரன், பிரபு, ராஜலிங்கம், சதீஷ்குமார், பழனிசாமி உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். திருச்சி, நாமக்கல் சாலையில் முசிறி அருகே உள்ள உமையாள்புரம் என்ற இடத்தில் சொகுசு கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியுடன் நேருக்கு […]
மனைவியின் ஆபாச படத்தை இணையதளத்தில் விட்ட கணவனுக்கு நீதிமன்றம் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் திவாகர். 2006-ம் ஆண்டு இவருக்கும் , கம்ப்யூட்டர் என்ஜினீயரான பெண் ஒருவருக்கும் திருமணம் ஆனது. அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் சென்னையில் வசித்தனர்.பெண் என்ஜினீயர் 2007ஆம் ஆண்டு சென்னை சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு அளித்தார் .மனுவில் அவர் கூறியதாவது,”எனது கணவர் நான் குளிக்கும் […]
தந்தை இறந்ததால் படிப்பை தொடர முடியாத சூழலில் இருக்கும் பட்டியல் என மானவனுக்கு 8 லட்சம் ரூபாய் அளித்தால்தான் மாற்றுச் சான்றிதழ் அளிக்க முடியும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ஒட்றைப்பிடாரத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற மாணவன் இந்த புகாரை கூறியிருக்கிறார். திருச்சி மாவட்டம் சிறுதன் ஊரில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரிகளில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை செலுத்தி பிஎஸ்சி மேலாண்மை படிப்பை அவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் […]
திருச்சி சங்கிலி ஆண்டபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. திருச்சி சங்கிலி ஆண்டபுரம் பகுதியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் ஒரு குடிசையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து வேகமாக தீ அருகே இருந்த குடிசைக்கு பரவியது. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். […]
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அலகாபாத் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று கண்டன முழக்கம் இட்டனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 28 ஆண்டுகள் […]
திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆன நிலையில் பெண் தனது காதலனுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பஸ் ஓட்டுநராக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவர் ரம்யா என்ற பெண்ணை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகாலிங்கம் வழக்கம்போல கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று விட வீட்டில் இருந்த குழந்தையும் மனைவியும் காணவில்லை என்று உறவினர்கள் […]
தொட்டியம் அருகே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியம் அருகே இருக்கின்ற சித்தூர் என்ற கிராமத்தில் பொய்யாமொழி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு 18 வயது உடைய தனலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. நேற்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து […]
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசி அவமதிப்பு செய்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனாம்குளத்தூர் பகுதியிலுள்ள சமத்துவபுரத்தில் நுழைவுவாயிலில் பெரியார் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மீது காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலையினை சுத்தம் செய்தனர். இவ்விவகாரத்தில் […]
தொப்புள் கொடியுடன் குழந்தையொன்று மூட்டை கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இதனை அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்து பிரித்தனர். அதில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதனை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கி குழந்தையின் உண்மையான தாய் யார் என்று […]
மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்ததில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தஉடையான்பட்டியை சேர்ந்த கிலாரியணா நாகசெல்வி இவர் பள்ளமேடு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மணப்பாறையில் இருந்து ஊருக்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு […]
தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் குழந்தையை புதரில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகே உள்ள ஒரு முட்புதரில் ஒரு பெரிய பையில் இக்குழந்தை வீசப்பட்டு இருந்தது .பையிலிருந்து குழந்தை சத்தம் கேட்டதும் அப்பகுதியில் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அப்பகுதிக்கு வந்த போலீசார் பையை சோதனையிட்டபோது வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட மூட்டை போல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது தொப்புள்கொடி கூட வெட்டாத நிலையில் பிறந்து சில […]
7 நாட்களில் நல்ல முடிவை எடுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம். கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 80 ஆயிரம் பேர் வேலை கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என சமூக செயற்பாட்டாளர் திருமதி சபரிமாலா தெரிவித்துள்ளார். திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஏழு நாட்களுக்குள் நல்ல முடிவை அரசு […]
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி ரங்கநாயகி தாயார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெண்பட்டு உடுத்தி கிளிமாலை, ஏலக்காய் ஜடைமாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி தங்கப் பல்லக்கில் புறப்பட்டு கண்ணாடி அறைக்கு சென்றார். பின்னர் அரையர்கள் சேவை கண்டு தங்க முலாம் பூசப்பட்ட கொலுமண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்சி பாலக்கரை பகுதியில் நகை கடை அதிபரை தாக்கி 8 பவுன் தங்க நகை பறித்துச் சென்று 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை பாலக்கரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ரவிச்சந்திரன். இவர் திருச்சி பாலக்கரை இடத்தில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 21ஆம் தேதி இரவு நகை செய்யும் ஆசாரி வீட்டில் இருந்து 8 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இருசக்கர வாகனத்தில் […]
திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது. 50 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மைகள் நல்ல நலிவடைந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை. உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் இந்த பூம்புகார் நகரில் கொலுபொம்மை பொருட்காட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலைஞர்களின் கலைத்திறமையை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனால் இந்த பூம்புகாரில் இருக்கும் கொலு பொம்மைகளை வேங்கி பயன்பெறுமாறு அப்பெண்மணி கேட்டுக்கொண்டார்.
திருச்சியில் 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயன் ஏரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய்மாமன் அருள்பாண்டிக்கு தேனியில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அப்பெண் தனது காதலருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருள்பாண்டிக்கு 13 வயது சிறுமியுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு […]
திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி பகுதியை சேர்ந்த ஹெலன் ராணி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதியினர் வாழவந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியில் சென்ற ஹெலன் ராணி வெகு நேரமாகியும் வீடு […]
10 லட்சம் நிவாரணம் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஆட்டோ தொறிற்சங்கம் சார்பில், சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு அரசால் தற்கொலைக்குத் தூண்டப்படும் தொழிலாளர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து […]
திருச்சியில் டாஸ்மாக் கடையில் இருந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மணப்பாறை அருகே மேட்டுக்கடையில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. சூப்பர்வைசராக சுப்பிரமணி விற்பனையாளர்கள் ஆக மாரியப்பன், மணிவாசகம் ஆகியோர் பணியாற்றினர். இந்த கடையில் தினசரி 2 லட்சம் ரூபாய் வரை மது விற்பனை நடக்கும். கடந்த சனிக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5.42 […]
கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை கட்டி வைத்து கொடூரமாக அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் அக்பர்.. இவரை திருச்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி புதுக்கோட்டை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள செங்கலாக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளது. பின்னர் அங்கு, அவரை கயிற்றால் கட்டிவைத்து அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதில் அக்பர் பலியாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த […]
மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும், மின் வாரிய தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசை கண்டித்தும் , திருச்சியில் மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. திருச்சி தெண்ணூறு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகம் முன்பு, மின் வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மின் வாரியத்தை கண்டித்தும், மத்திய அரசு […]
தனியார் பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள்யின் வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்து சேவைகள் நடைபெற்று வந்தன. அவ்வாறு தனியார் பேருந்து சேவையும் சுமார் 10 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 மாத காலமாக வேலையின்றி தவிக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஓட்டுநர் தொழில் […]
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கிட கோரி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள முகவநூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேலை இன்றி வருமானம் இழந்து தவிக்கும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் […]
திருச்சியில் 15 நாட்களில் சம்பா சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் கையில் பணம் இன்றி தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பா சாகுபடி விவசாயத்தை பெரிதும் நம்பியிருக்கும் திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சாகுபடி சிறப்பாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் போதியளவு நீர் வரத்து, நெல்மணிகள் கையிருப்பு என அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும், ஊரடங்கால் சம்பா சாகுபடி செய்வதற்கு தேவையான பணம் கையில் இல்லை விவசாயிகள் […]
அபின் எனும் போதைப் பொருள் கடத்திய திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ‘அபின்’ எனும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அபின் போதை பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் காரில் வந்த இரண்டு பேரையும் விசாரித்தனர். இதில் […]
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கடத்தி வந்தவர்களிடம் சுங்க துறை அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு விமானம் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பிரத்யேக விமானங்கள் அனுமதிக்கப்பட்டு இயங்கிவருகின்றன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]
திருச்சி அருகே போதைப்பொருள் கடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியிலிருந்து மதுரைக்கு அபின் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வைத்து கடத்தப்பட்ட அபினை பறிமுதல் செய்த போலீசார் அடைக்கலராஜ் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அடைக்கலராஜ் பாரத ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்தவர். தற்போது அக்கட்சியின் OVC அணியின் மாநில செயற்குழு […]
திருச்சியில் மகளிடம் வரதட்சணை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த திரு. மகாலிங்கம், மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமதி ஹேமாபாரதி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திரு. தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகாலிங்கம் இறந்துவிட்ட […]
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் கருப்புச்சட்டை அணிந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வடமாநிலத்தவர் அதிகம் சேர்வதை தமிழக முதலமைச்சர் தடுக்க வேண்டும் என எஸ். ஆர். எம். யூ. துணை பொதுச்செயலாளர் திரு. வீரசேகரன் அப்போது வலியுறுத்தினர்.`
சொல்லை மீறி தங்கை காதல் திருமணம் செய்ததால் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் நீலவதி தம்பதியினர் .இத்தம்பதியினருக்கு பால்ராஜ் மற்றும் சின்னத்துரை என்ற மகன்களும் மீரா, கல்பனா மற்றும் மீனா என மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகனான பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வர இளைய மகன் சின்னதுரை மற்றும் மீனா தனியார் நிறுவனம் ஒன்றில் […]
மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரின் மகன் சோபியாஸ்.. 17 வயதுடைய இவர் தினக் கூலியாக வேலைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் பெற்றோர் கண்டித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனதளவில் நொந்து போன சோபியாஸ் நேற்று […]
திருச்சியில் ரம்மி விளையாடுவதற்காக கடன் வாங்கி கடனாளியானா காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பெரியார் நகரில் ஆனந்த் என்ற 26 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்காக தன்னுடன் பணியாற்றுகின்ற நண்பர்களிடம் அடிக்கடி கடன் வாங்கி இருக்கிறார். அதன்பிறகு வாங்கிய கடனை […]
மயிலாடுதுறையை சார்ந்த ஒரு குடும்பத்தில் வளரும் ஒரு நாய் அதனுடைய தனிப்பட்ட குணாதிசயங்களால் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருஇந்தளுர் பகுதியில் வசிப்பவர்கள் பிலோமினாமேரி – அலெக்ஸாண்டர் தம்பதியினர். 5 வருடங்களாக குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினரின் குடும்பத்தில், தாயைப் பிரிந்த நாய்க்குட்டி ஒன்று வந்து சேர்ந்துள்ளது. அந்த நாய்க்கு அப்புக்குட்டி எனப் பெயரிட்டு, தங்களது முதல் குழந்தையைப்போல் அவர்கள் அன்பு காட்டி வளர்த்து வருகின்றனர். அப்புகுட்டி, அதன் தனிப்பட்ட […]
ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து திருச்சியில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்காக தேர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அப்ரண்டிஸ் பயிற்சி முடிக்கப்பட்டவர்கள் 500 நூற்றுக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஆணை வழங்குவதற்காக பொன்மலை பணிமனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடந்த 3 நாட்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தமிழகத்தைச் […]
திருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அனைவருக்கும் நினைவிருக்கும் சென்ற 2018 ஆம் ஆண்டு ஆர்ஆர்பி நடத்திய தெற்கு ரயில்வே தேர்வில் 400க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில், தேர்ச்சி பெற்றிருந்த தமிழர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தது. இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல வட மாநில தொழிலாளர்கள் ரயில்வே பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இந்த […]
கொரோனாவில் இரண்டாவது அலை தொடங்குவது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,241 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் […]
மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலை அளித்த சிறுவனை தட்டிக்கேட்ட சிறுமியின் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சொக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்துதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிறுவனின் சகோதரர்கள் ராஜா, சுப்பிரமணி, பெரியப்பா மாரியப்பன், அவரது மகன்கள் காந்தாமணி, அருணாச்சலம், […]
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்கள் மறைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் இறப்பு இல்லை என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் இன்று காலை ஸ்ரீரங்கம் தனியார் மருத்துவமனையில்கொரோனாவால் இறந்தவர் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றினர். அந்த காட்சியை அருகில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து வீடியோவாக ஒருவர் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு தமிழக அரசின் மீது பல்வேறு சந்தேகங்களையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர். திருச்சி மாவட்டத்தில் […]
தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் இல்லங்களில் சமூக இடைவெளியுடன் தொழுகைகளை நடத்தினர். திருச்சியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியுடன் அமர்ந்து பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த தியாக திருநாளில் அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்கவும், அமைதி, சமாதானம், மனிதநேயம் தழைக்கவும், இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சேலம் சங்கர் நகரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை தங்கள் வீடுகளிலேயே கொண்டாடினர். சமூக இடைவெளி கடைபிடித்து […]
வறுமையை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது என அதிலிருந்து மீண்டு வந்த மருந்து விற்பனைப் பிரதிநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் சாதார வீதியை சேர்ந்த 48 வயதான சங்கர ராமன் ஆங்கில மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கொரோனா எதிரொலியாக விற்பனை மூலம் வரும் கமிஷனை மட்டுமே ஊதியமாக வழங்க முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வாடகை வீட்டில் வசிக்கும் சங்கரராமன் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிர்த்துள்ளார். மன உளைச்சலால் […]
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்புள்ளவர்களை விசாரித்து தமிழகத்திலும் சோதனை மேற்கொள்ள என்.ஐ.ஏ. முடிவெடுத்துள்ளது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் ஊழியர்களான சுரேஷ் அவருடைய உறவினர் சந்திப்பு உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தங்கம் கடத்தல் விவகாரம் தமிழ்நாட்டிலும் முக்கிய விமானங்கள் மூலம் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் […]
வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த இளம்பெண் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியை சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும் திருச்சி திருவெறும்பூர் எழில் நகரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கணவர் கண்ணன் மற்றும் மாமனார் மாமியார் மற்றும் கொழுந்தனார் என நால்வரும் வரதட்சணை கூடுதலாக கேட்டு முத்துலட்சுமியை மிரட்டி துன்புறுத்தி வந்தனர். கருக்கலைப்பு மற்றும் பல்வேறு இன்னல்களை […]