திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடுமையாக இருந்த நிலையில், தற்போது ஆறாவது கட்ட ஊரடங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி […]
Category: திருச்சி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சாலையோர நிழற்குடையில் பெண் குழந்தை விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளை பிறந்த உடனே கள்ளிப்பால் ஊற்றி கொல்வதும் வீதிகளில் வீசி எறியும் அவலமும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. திருச்சி மாவட்டம் சேத்துப்பட்டு என்ற இடத்தில் சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரலை அங்கிருந்தவர்கள் கேட்டனர். அழுகை குரல் கேட்ட இடத்திற்கு சென்று அவர்கள் பார்த்தபோது கூடை ஒன்றில் 3 மாத பெண் குழந்தை இருந்தது. அழுகுரலுடன் கூடையில் […]
காணாமல் போன பென் டிரைவ்வை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொலைந்து போன பென் டிரைவ்வை கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாகஈர்த்தது. மணப்பாறையில் இன்று காலை முதல் ஒரு ஆம்னிவேனில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு அதில் ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் கருப்பு நிறத்தில் உள்ள பென் […]
இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழக முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரிப்பு. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் எவ்வித தளர்வின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் அத்தியாவசிய கடைகளைத் தவிர எந்த ஒரு கடைகள் இயங்காது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுக்கடை முன்பு குவிந்தனர். தாங்கள் விரும்பிய மதுக்களை ஆயிரக் கணக்கான பணம் கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் நேற்று மது விற்பனை […]
கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறால் காவல் நிலையம் முன்பு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அருகே தேங்காய் மற்றும் பழக்கடை நடத்தி வருகின்றார். தற்போது கோயில்கள் மூடப் பட்டிருப்பதால் இவரது கடையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கமணியிடம் மாகாளிக்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தானும் அதே பகுதியில் கடை வைக்கப்போவதாக கூறி […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
வையம்பட்டி அருகே தேர்வில் தோல்வியடைந்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகேயுள்ள பழையகோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவருக்கு 17 வயதில் ரேணுகா என்ற மகள் உள்ளார்.. இவர், ஓந்தாம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.. இந்நிலையில் நேற்று திடீரென காலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி ரேணுகா 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.. […]
மண்ணச்சநல்லூர் அருகே வங்கி அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் மகன்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள உளுந்தங்குடியை சேர்ந்த வண்ணமணி என்பவருக்கு புகழேந்தி(36) மற்றும் கோவிந்தன்(35) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் புகழேந்தி திருச்சியிலுள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நிலப்பிரச்சனை காரணமாக உளுந்தங்குடியை சேர்ந்த இரயில்வே காவலர் ரெங்கராஜ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், வண்ணமணி மற்றும் கோவிந்தன் […]
முன்விரோதம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் பகுதியை சேர்ந்த வண்ணமணி என்பவருக்கு கோவேந்திரன், மற்றும் புகழேந்தி ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் புகழேந்தி என்பவர் திருச்சி தில்லை நகரில் இருக்கும் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. நிலப்பிரச்சனை தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ரங்கராஜ் […]
திருமணம் முடிந்த 4 நாட்களில் சகோதரி வீட்டிற்கு விருந்திற்கு சென்ற புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டாம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரியின் வீட்டிற்கு திருமண விருந்திற்காக செல்ல, புதுமணத் தம்பதியினருக்கு பிரம்மாண்டமாக விருந்து சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது. அச்சமயம் தேவி தனி அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரை அழைக்க […]
கொரோனா தொற்றி கொள்ளுமோ என்ற அச்சத்தில், ஸ்ரீரங்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நேதாஜி சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் தனபால். பாய்லர் ஆலை ஊழியரான இவருக்கு புவனேஸ்வரி (54) என்ற மனைவியும், பத்மநாபன் என்ற மகனும் உள்ளார்.. பத்மநாபன் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதேபோல நேற்று காலை வழக்கம்போல தனபாலும் வேலைக்கு சென்றுவிட்டார். புவனேஸ்வரி மட்டும் வீட்டில் […]
திருச்சி அருகே மகன் இறந்த சோகத்தில் போதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகேயுள்ள உறையூர் இந்திராநகரை சேர்ந்தவர் மகான்.. இவருக்கு வயது 34.. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் இவருக்கு ரேவதி(28) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்தது.. ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது […]
திருச்சி மாநகராட்சி மாநகராட்சி பகுதியில் 17ஆம் தேதி வரை கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, கமலா தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மட்டுமல்லாமல், சுகாதாரத்துறை மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் தினமும் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் […]
பெண்களிடம் விசாரிப்பதாக நள்ளிரவில் பாலியல் ரீதியாக பேசிவந்த சிறுகனூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வளித்து திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர், மணிவண்ணன். இவர் இதற்கு முன்னதாக பணியாற்றிய காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் அல்லது யாரையும் அழைத்து செல்லாமல் தனியாக சென்று விசாரணை என்கிற பெயரில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுபற்றி காவல் உயர் அலுவலர்களுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி […]
திருமணமான 8 மாதங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இருக்கும் எடமலைப்பட்டி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த நீலவேணி என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்துவைத்தனர். திருமணத்திற்குப் பிறகு மாமனார், மாமியார், கணவர் என நீலவேணி கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென நீலவேணியின் அலறல் சத்தம் கேட்டு […]
துவரங்குறிச்சியில் முட்புதருக்குள் கிடந்த 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு, பத்திரமாக குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் மருத்துவமனை பகுதியிலுள்ள முட்புதரின் அருகே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று காலை பொழுதில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, முட்புதரிலிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனைக்கேட்ட அந்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தான், அங்கு ஒரு பெண் குழந்தை கிடந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள் துவரங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]
திருச்சி மணப்பாறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அண்ணகிளி என்ற 17 வயது பொண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி நிலையில் மாணவி 6 மாத கர்ப்பமாகினார்.இந்த நிலையில் கல்யாணம் பண்ண சொல்லி பலமுறை வற்புறுத்தப்பட்டது. கல்யாணம் பண்ண ராம்கி மறுத்த நிலையில் அவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் […]
திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டிய உறவினர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சிறுமி உடல் கிடந்தது எப்படி தெரியும் என்ற கோணத்தில் இரண்டு பேரிடம் விசாரணை நடக்கிறது. இரண்டு பேரின் செல்போனில் சிறுமியின் புகைப்படங்கள் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், திருச்சி […]
தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கைது செய்ய கோரி இளம்பெண் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள பகவான் பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி.. இவருக்கு வயது 22 ஆகிறது.. ராம்கி கவரப்பட்டியைச் சேர்ந்த தனது மாமன் மகள் உறவு முறை கொண்ட இளம்பெண்ணை கடந்த ஓராண்டிக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்து வந்ததால் 5 மாதம் கர்ப்பிணியான அந்த பெண், தன்னை […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது […]
நண்பனுக்கு மனைவியை 9 ஆண்டுகளாக தாரை வர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கே கே நகர் அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம். இவருக்கு வயது 41 ஆகிறது.. இவரும், மத போதகரான முகமது பாரூக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 2005 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்ணான பர்வீன் என்பவரை தீவிரமாக காதலித்ததால் தன்னுடைய பெயரை முகமது அஸ்லாம் என மாற்றிக் கொண்டார். […]
சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேலும் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் சைக்கிளில் முதியவர் மீது காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதற்கு நியாயம் கேட்ட முதியவரை அந்த காவலர் நாடு ரோட்டில் வைத்து தாக்கிய காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய உறையூர் காவல் நிலைய காவலர் […]
திருச்சி மாநகர காவல் ஆணையராக மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆணையராக பணியாற்றி வந்த வரதராஜு இன்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய ஆணையராக ஐ.ஜி அமல்ராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
திருச்சியில் பொதுமக்களுடன் நல்லுறவை பேணாத 80 காவலர்கள் பணியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்த காரணத்தினால் தந்தையும், மகனும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கே கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். […]
புதிதாக திருமணமான பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே இருக்கும் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தான் நாகராஜ் 28 வயதுடைய இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த இளைஞருக்கும், மஞ்சம்பட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய உமா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய […]
கொரோனா தடுப்பு தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு என்பது முழுக்க முழுக்க மருத்துவத்துறை தொடர்பானது என விளக்கம் அளித்துள்ளார். இன்று திருச்சி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை சிறு குறு தொழில் முனைவோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் உரையாற்றிய அவர், ரூ.200 கோடி கடனுதவிக்காக நிதி ஒதுக்கீடு செய்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் 29ம் தேதி திங்கட்கிழமை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். […]
திருச்சியில் கொரோனவால் இறந்தவர் சடலத்தை திறந்தவெளியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஆம்புலன்சில் இருந்து சடலத்தை எடுத்து வருவோர் பாதுகாப்பு உடையின்றி வந்துள்ளனர். மேலும் இதில் ஒருவர் மட்டுமே முழுவதுமாக பாதுகாப்பு கவச உடை அணிந்துள்ளார். மற்ற இருவரும் முகக் கவசம் அணிந்த நிலையில் சாதாரண உடையிலேயே இருந்தனர். மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ண துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் […]
தமிழகம் முழுவதும் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,380, செங்கல்பட்டில் 146, கோவையில் 12, கடலூரில் 29, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 44, ஈரோட்டில் 5, கள்ளக்குறிச்சியில் 43, காஞ்சிபுரத்தில் 59, கன்னியாகுமரியில் 9, கரூரில் 3, கிருஷ்ணகிரியில் 3, மதுரையில் 137, நாகப்பட்டினத்தில் 2, நாமக்கல்லில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரியில் 17, பெரம்பலூரில் 12, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 22, ராணிப்பேட்டையில் 29, சேலத்தில் 7, […]
வருகின்ற 26ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் ஆய்வு செய்ய இருக்கின்றார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி பாசனத்தை நம்பி இருக்கக்கூடிய பகுதியில் குறுவை சாகுபடி தொடங்கப்பட இருக்கின்றது. இந்த குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பாகவே திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீர் உடனடியாக […]
தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,276, செங்கல்பட்டில் 162, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 61, திருவண்ணாமலை 49, கடலூரில் 77, நெல்லையில் 15, மதுரையில் 27, விழுப்புரத்தில் 20, தூத்துக்குடியில் 50, கள்ளக்குறிச்சியில் 16, ராணிப்பேட்டையில் 70, திண்டுக்கல்லில் 15, சேலத்தில் 14, கோவையில் 2, வேலூரில் 15, தஞ்சையில் 12, திருச்சியில் 8, விருதுநகரில் 2, ராமநாதபுரத்தில் 51, தேனியில் 3, தென்காசியில் 5, திருவாரூரில் […]
அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 5 கிலோ அரிசி எப்படி போதும் என பொதுமக்கள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2005 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து, வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் […]
திருச்சியில் இரவு நேரத்தில் 2 திருநங்கைகளுக்கு லிப்ட் கொடுத்த தொழிலதிபர் நகைகள் மற்றும் பணத்தை பறி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் அருகேயுள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ரகுமான். இவர் கட்டிட கலை நிபுணரான பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை தொடர்பாக சத்தியமங்கலம் சென்று அங்கு பணிகளை முடித்து விட்டு நாமக்கல் அருகே காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த 2 திருநங்கைகள் அவரது காரை வழிமறித்து ரகுமானிடம், இரவு […]
லால்குடியில் இருந்து கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்ற பெற்றோர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், லால்குடியிலுள்ள பரமசிவபுரம் 8ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஹரிஹரன்(24) என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவன ஊழியரான இவரும், மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த மாரிராஜன் என்பவரது மகள் கீதா சோப்ராவும் (19), காதலித்து வந்துள்ளனர்.. இந்நிலையில் இருவரும் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் […]
சிறுமியை திருமணம்செய்த இளைஞர், திருமண நிகழ்வில் நண்பர்கள் எடுத்த டிக் டாக் வீடியோவால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் 17 வயதுடைய மகள் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் அவருக்கும் பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய பழனிசாமி என்ற இளைஞருக்கும் கடந்த 3ஆம் தேதி (புதன்கிழமை) மணமகனுடைய வீட்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது மணமகனின் நண்பர்கள், புதுவீட்டிற்கு வருகைதந்த தம்பதியினரை, ‘மருமகளே! […]
ஜெலட்டின் குச்சியை கடித்ததால் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு விஷ்ணு தேவ் (6) என்ற மகன் உள்ளார்.பூபதியின் அண்ணன் கங்காதரன் ஆற்றில் மீன் பிடிக்க பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து 3 ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளாா். அதன்பின் இவர்களின் உறவினர்களான தமிழரசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து 2 ஜெலட்டின் குச்சிகளை காவிரி ஆற்றில் வெடிக்கச் செய்து மீன்களை பிடித்துள்ளார். […]
கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் சுமார் 75 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை முதல் […]
திருச்சி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை அடுத்த குண்டுர் பர்மா காலனி தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் திருவெரும்பூர் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சவுண்ட் சர்வீஸ் செய்து தரும் கடையை நடத்தி வருகிறார். சுபநிகழ்ச்சிகளுக்கு தனது கடைகள் மூலம் மைக், சவுண்ட் செட் அமைத்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். அதேபோல் ஜெனரேட்டர்களை வாடகைக்கு விடுவார். அதன்படி, நேற்று நவல்பட்டு அண்ணாநகர் […]
கரூர் மாவட்டம் மண்மங்கலம் புலியூர், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி, காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கரூரில் சில இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்தது. காலை நேரங்களில் அதிகப்படியான வெயிலும் மாலை நேரங்களில் மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் அரைமணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுவதிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக […]
கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையை பொருத்தவரை தற்போதுவரை 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த 10 நாட்களாக திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனாவால் தொடர்ந்து சிகிச்சையில் பெற்று வந்தார். அவருக்கு நீரிழிவு நோய் இந்த நிலையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டதால் அவர் […]
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காமராஜ் நகர் சேர்ந்தவர் செல்வகுமார் இவரது மகனான பிரபுக்கு (27) தாமினிஎன்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது, இந்த தம்பதியினருக்கு 7 மாதத்தில் கை குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. பிரபுவின் மனைவி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தாமினி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி உறவினர்கள் முன் பேச்சுவார்த்தை […]
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்துகின்றார். மத்திய நிதியமைச்சர் 20 லட்சம் கோடி அறிவித்திருந்தார்கள் அது அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான எந்தவிதமான சலுகைகளும் இல்லை. கொரோனா பாதிப்பால் விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, சந்தை படுத்த முடியவில்லை. பொதுமக்களும் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பதால் விவசாயிகள் மிகுந்த துயரத்துக்குள்ளாகிள்ளோம். உடனடியாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் ஓய்வூதியம் […]
தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்கள் […]
ஊரடங்கால் சந்திக்க முடியாமல் இருந்த காதலர்கள் பூட்டிக்கிடந்த கோவில் முன்பு திருமணம் செய்துகொண்டு காவல்துறையில் தஞ்சமடைந்துள்ளனர் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ் என்பவர் புறா வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஞாயிறுதோறும் பொன்மலை பகுருதியில் நடக்கும் புறா சந்தைக்கு அசாத் பிரின்ஸ் சென்ற பொழுது போகும் வழியில் இருக்கும் காட்டுரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]
குடும்ப மரியாதைக்காக பெற்ற மகள்களை தாய் எலி மருந்து வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கனகராஜ் இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு ஒரு மகனும் கோகிலா(13), லலிதா(11) என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். கணவர் சகோதரர்களுடன் சாந்தமீனா மகன் மற்றும் மகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்ற சமயம் அவருடைய மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக […]
திருச்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல்திங்கள் கிழமை வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே பொது மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இதனை காரணமாக வைத்து வெளியே வரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஆங்காங்கே மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சேலம் […]
திருச்சியில் வருகின்ற 25, 26ம் தேதிகளில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருச்சி மாநகர பகுதிகளில் தற்காலிக […]
கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது ஊதியத்தை திருச்சி கிராம நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் அளித்தனர். இந்த ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் வட்டாட்சியர் காதர் அலியை நேரில் சந்தித்து வணங்கினார். […]
திருச்சியில் டீ கேனில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தது நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கள்ளசாராயம் காய்ச்ச தடை விதிக்கப்பட்டதோடு, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் சட்டத்த்தை மதிக்காமல் போலிஸுக்கு தெரியாமல் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது திருச்சியில் நடைபெற்று சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் பகுதியில் உள்ள வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதை போலீசார் […]
திருச்சியில் காவல்துறை சார்பில் தரப்படும் கலர் அட்டைகளில், ஜூன் 24-ஆம் தேதி வரை அச்சடிக்கப்பட்டு இருப்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பச்சை, பிங்க், நீலம் உள்ளிட்ட கலர் அட்டைகள் வழங்கி, அதன்படி பொதுமக்கள் காய்கறி […]