திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல் பூரண குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரளா தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்விரைவாக குணம் அடைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 32 […]
Category: திருச்சி
திருச்சியில் அத்தியாவசிய பொருள் வாங்கும் அடையாள அட்டை மே 3 வரை செல்லும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,204 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. திருச்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து அதிரடி காட்டியுள்ளார். திருச்சியில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை, நீலம் மற்றும் […]
திருச்சியில் இனி வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய கூடாது என 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குட்செட் யாரட்க்கு நாள்தோறும் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு ரயில் மூலம் வந்து சுமை தூக்கும் தொழிலாளர்களால் இறக்கப்பட்டு பின் லாரியில் ஏற்றி அரசு குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக சுமார் 350க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்வதால் லாரி ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் […]
திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 58 ஆக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் […]
19 நாட்கள் கோரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோட்டை சேர்ந்த இளைஞன் குணமடைந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 154 பேரை பரிசோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் இளைஞர். […]
ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை வழங்கினார்கள் காவல்துறையினர். தோப்புக்கரணம் தண்டால் ரன்னிங் தண்டனைகள் எல்லாம் பயன் அளிக்காததால் பச்சைமிளகாயை கொடுத்து கடித்து சாப்பிட வைக்கும் புதிய தண்டனையை கொடுக்க தொடங்கியுள்ளனர் காவல்துறையினர். தெருக்களில் வெட்டியாய் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு இந்த முறை கடுமையான தண்டனைகள் காத்திருந்தது. திருச்சியில் பச்சை மிளகாயை கையில் கொடுத்து கடித்து சாப்பிட சொல்லி இருக்கின்றனர் போலீசார். கண்ணில் நீர் வர பச்சைமிளகாயை கடிக்கும் தண்டனைக்கு இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள […]
கொரோனா குறித்த விழிப்புணர்வில் அம்மன் TRY சுரங்கப்பாதை அமைத்து கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வில் காவல்துறை, திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஈடுபட்டுள்ள நிலையில். பல தனியார் தொண்டு நிறுவனங்களும் அத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அம்மன் TRY கம்பிகள் சார்பில் திருச்சியில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம் செய்து உடை வழங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களை கண்ட திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் அனைவரையும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். இரண்டு முதியவர்கள் உட்பட 3 பேருக்கு முடி திருத்தம் செய்ய முயன்ற அவருக்கு, அந்த […]
தமிழ்நாட்டில் கொரானாவின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துவருகிறது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ சிகிச்சை பிரிவில் 110 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஈரோட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இனிமேல் இருசக்கர வாகனங்களில் ஒரு நபர் மட்டுமே மாஸ்க் அணிந்து வர வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி 2 பேர் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்களும் கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி தவறாக தகவல் பரப்பினால் […]
திருச்சி : திருச்சியில் 4 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரையை சேர்ந்த 54 […]
திருச்சி அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் ஐம்பத்தி ஒரு சவரன் நகை ஐந்தரை லட்சம் பணம் உள்ளிட்டவற்றை திருடிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாலாஜி நகரில் 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி வேலைக்கு […]
திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மலேசியா மற்றும் ஷார்ஜாவில் இருந்து தமிழகத்திலுள்ள திருச்சிக்கு வருகை தந்த 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர்களிடம் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவத்துறை நிபுணர்கள், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் மூவரையும் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உணரப்பட்டதால் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் […]
திருச்சியில் அனுமதி இன்றி இயங்கி வந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருச்சியில் பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஸ்ரீரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் […]
இஸ்லாமிய மக்களுக்கு ஆபத்து என்றால் முதலில் களமிறங்குவது தேமுதிக தான் இருக்கும் தெரிவித்துள்ளார் பொருளாளர் பிரேமலதா திருச்சியில் நிருபர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் கூறியிருப்பதாவது “தேமுதிகவிற்கு மாநிலவை எம்பி பதவி கொடுக்குமாறு அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அதற்கு அதிமுக மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர். ஒரு மாநில அவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போது நாங்கள் பேசியிருந்தோம் அதன்படி வழங்குவார்கள் என நம்புகிறோம். […]
திருச்சி அருகே வாரசந்தையை நீக்கக்கோரி காய்கறி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட கடைகளில் 126 காய்கறி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் தங்களது வியாபாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென வாரசந்தை என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தின் தெப்பக்குளம் பகுதிகளிலும், கீதா புரத்திலும் […]
கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் காணாமல் போனதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் கனிமொழி கடந்த 15ஆம் தேதி உறவினர் மோகனசுந்தரம் என்பவருடன் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வந்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய கனிமொழி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கனிமொழி உறவினரிடம் திரும்பி வரவில்லை. இதனால் கனிமொழியை உறவினர் பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் […]
திருச்சி மாவட்டத்தில் திருமணமான சில நாட்களில் கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்த மனைவிக்கு அவர் குறித்த அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த லூயிஸ் விக்டர் இவரது மகன் எட்வின் ஜெயக்குமார்(36) இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக (cashier ) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த ரெஜினா (32) (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு […]
இளைஞர் ஒருவர் பெண் போலீசாரை அவதூறாக சித்தரித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் லால்குடி கீழவீதி மகாமாரியம்மன் கோவிலின் விழாவையொட்டி 16ஆம் தேதி அபிஷேகபுரம் எனுமிடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் மக்கள் திரண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதியில் ஆயுதப்படை சேர்ந்த இரண்டு பெண் காவல்துறையினர் நடந்து […]
பொது தேர்வை பயமின்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு ஆலோசனை. திருச்சியில் ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமம் மற்றும் புதிய தலைமுறை கல்வி இணைந்து , மாணவர்கள் பொதுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி நடந்தது. சமயபுரம், இருங்கலூர் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஆதிசங்கரர் குழுமம் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி குழுமம் டீன் ராஜா, தாளாளர் மஞ்சுளா செந்தில்நாதன் ஆகியோர் […]
உங்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் யார்? என்பதை அறிந்து அதற்கு பயன்படக்கூடிய வகையில் மக்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ கீதாஜீவன் – ஜீவன் தம்பதியினரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள ஏவிஎம் கமலவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது […]
இன்று காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி பூ சந்தையில் ரோஜா விற்பனை அமோகமாக காணப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் தங்களது காதலை வெளிப்படுத்தி வருவர். அந்த வகையில் காதலர் தினம் என்றாலே ரோஜா, சாக்லேட், காதலர் தின சிறப்பு அட்டை உள்ளிட்டவை அதிகம் விற்பனை செய்யப் படுபவை. அந்த வகையில், திருச்சியில் உள்ள பிரபலமான காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் […]
திருச்சி அருகே சத்திரம் வழித்தடத்தில் செல்லும் மாநகர பேருந்து நாள்தோறும் பழுதடைவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருபைஞ்சீலி வரை நாள்தோறும் அரசு மாநகர பேருந்து ஒன்று பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் கூலித் தொழிலாளிகள் என 100க்கும் மேற்பட்ட பொது மக்களை ஏற்றிச் சென்று வருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து மிகவும் பழைய பேருந்து என்பதால் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடும். அதேபோல் நேற்று காலையில் சத்திரம் பேருந்து […]
திருச்சி அருகே ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம், சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கம் சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்வுக்கு மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வேதரத்தினம் தலைமை தாங்க, அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவிக்கப்பட்டு, மீண்டும் ஹெல்மெட் அணியாமல் வரக்கூடாது […]
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாத்தா சொத்தை பேரனுக்கு வழங்க கோரி ஏட்டாக பணிபுரியும்பெண் காவலரின் கணவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்தில் சந்தேகப்படும்படி தாடியுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அவரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்று சுவர் மீது ஏறி குதித்து உள்ளே […]
திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்தவர் அப்பாஸ். திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆன நிலையில் 15 தினங்களுக்கு முன்பு எட்டாவதாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் 6 குழந்தைகளையும் முதல் குழந்தையான 15 வயது சிறுமியின் கட்டுப்பாட்டில் விட்டு சென்றனர். அப்போது 1 1/2 வயதான குழந்தை ஹரி குளியலறையில் விளையாடிக் கொண்டிருக்கையில் தண்ணீர் இருந்த வாலியில் தவறிவிழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி […]
கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார். தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த செந்தில் குமார், நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே போனவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் ஒரு மரத்தில் பிணமாக தொங்கி உள்ளார் செந்தில்குமார். இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல்துறையினரிடம் அளித்த […]
திருச்சியில் மணமகனின் நண்பர்கள் நித்தியானந்தாவை வைத்து பேனர் அடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணமகன் இளவரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணமகள் விஜிக்கும் லால்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டின் சார்பாக, மணமக்களை வாழ்த்தியும், திருமண விழாவிற்கு வரும் பொதுமக்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்களை வரவேற்றும் பேனர்கள் வைத்திருந்தனர். […]
மோதலில் ஈடுபட்ட திருச்சி பிராட்டியூர் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் மீதான எப்ஐஆர்ஐ ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி பிராட்டியூர் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும் பாட்டில்களாலும் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 28 மாணவர்களை கைது […]
திருச்சியில் 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்கள் விற்கப்பட்ட குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இரண்டு தம்பதியினர் வேறொரு தம்பதியினரிடம் இருந்து குழந்தையை வாங்கியதாகவும், அதேபோல் மற்றொரு தம்பதியினர் வேறொரு தம்பதியினருக்கு தங்களது குழந்தையை விற்றதாகவும் குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் துறை சார்பில் […]
திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பொலிரோ கார் திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே ஓட்டுநர், காரில் பயணித்த 3 பேர் சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீர் ஊற்றியும், […]
திருமணமான 8 மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஆத்திரம் அடைந்த கணவன் 2 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் நகரில் வசித்து வருபவர் கமலகாந்த் என்ஜினீயரான இவருக்கும் புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஜீவிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் […]
முசிறி அருகே சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தடயங்கள் தொல்லியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குருவம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் பாபு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொன்மையான கலை சின்னங்களையும், அதற்கான சான்றுகளையும் அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து பாபு கூறுகையில், “இந்த ஊரின் கிழக்கே பழமை வாய்ந்த சோழர் கால சிவலிங்கம், நீர்பாசன அடைவுத் தூண், பழமையான கிணறு, பழமையான அய்யனார் சிலை போன்றவை இருக்கிறது. இவ்வூரில் உள்ள […]
கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து கணவரே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் கமல்காந்த் (33). இவரது மனைவி ஜீவிதா (26). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கமல்காந்த் சில வாரங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த், இரண்டு மாத கர்ப்பிணி என்றும் […]
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 6 பேர் தமிழ்நாட்டில் உள்ளதாக சொல்லப்படுகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் இதுவரை 304 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பார்த்தோமானால் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது.அவர்கள் இருவருமே கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அந்த மாநில அரசு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கடுத்து தமிழகத்தில் பார்த்தோமானால் , […]
மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் 10,12,15,18,21 ஆகிய வயது பிரிவினருக்கு தனித்தனியாக, இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். நேற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றும் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்க 26ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்ட […]
திருச்சி அருகே பர்தா அணிந்து குழந்தையை கடத்தி விற்க முயன்ற இந்து தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியையடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சரசு. இவர் தனது 2 வயது குழந்தையுடன் கடந்த 26 ஆம் தேதி அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பர்தா அணிந்து வந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் குழந்தையுடன் பேச்சு கொடுத்தவாறே அதனை தூக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த […]
திருச்சி: புத்தூர் அருகே தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, 10 சவரன் செயின் பறித்த இளைஞருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி புத்தூர் கனரா வங்கி காலனியைச் சேர்ந்தவர் சுபா (40). 2014ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வீட்டின் முன்பு சுபா நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், தனக்குத் தாகமாக உள்ளதாகக் கூறி குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து சுபா […]
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் பாலக்கரை மண்டலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயரகு அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஹெச்.ராஜா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருச்சியில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை சீக்கிரமாக […]
திருச்சியில் கஞ்சா போதையில் நண்பனை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். திருச்சியில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதியில் உள்ள கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளைஞரை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், இறந்தவர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்றும், நண்பர்களுக்கு இடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரால் முகமது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்தது. […]
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஐந்து நாட்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வாணியம்பாடி தனியார் மைதானத்தில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மாபெரும் கண்டன பேரணி […]
ஆபாச படங்களைக் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்ததாக இரண்டு இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே ராக்கின்ஸ் சாலைப் பகுதியில் அதிகமாக செல்போன் பழுதுநீக்கும், உதிரிபாகங்கள் விற்பனைசெய்யும் கடைகள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ஆபாச படங்களை இணையதளத்திலிருந்து பலருக்கும் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்துதருவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுலோச்சனா தலைமையில் காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அங்கு ஒரு செல்போன் […]
திருச்சியில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் அடுத்தடுத்து நடந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் பாரதிய ஜனதா பிரமுகர் விஜயரகு நேற்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் நேற்று இரவு திருச்சி மரக்கடை அருகே மாநகராட்சி கழிவறையில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்தஇளைஞர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக பாலக்கரை […]