Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாஜக செயலாளர் கொலை… பாஜக ஆர்ப்பாட்டத்தில் கடை ஊழியர் படுகாயம்…

திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு. பாலகரை மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்த இவர் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இன்று அதிகாலை மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயரகுவை  அடையாளம் […]

Categories
அரசியல் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை… திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சியில் பாஜக பிரமுகர்  விஜயரகு என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் இன்று அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி  காலையில்  உயிரிழந்தார். இதனிடையே முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

அரசியலில் ஆர்வம் – நடிகர் சதீஸ்..!!

 அரசியலுக்கு வருவது என் கையிலே இல்லை என்று நடிகர் சதீஸ் கூறினார். நடிகர் சதீஸ், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கலை விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் நான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் தான் உள்ளது, என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.  

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு நிறைவு

திருச்சியில் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றுள்ளது. கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. கருங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 633 காளைகள் 429 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 22 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். இருந்தும் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டினை நடத்தி முடித்துள்ளனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி…. சூடு வைத்து… பாலியல் தொந்தரவு…. தாயின் 2வது கணவர் கைது…!!

திருச்சியில் 8 வயது  சிறுமிக்கு தாயின் 2 வது  கணவர் சூடு வைத்து பாலியல் தொந்தரவு  அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைல்டு லைன் இயக்குனர் முரளிதரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின்  தலைமையாசிரியர் தங்களது பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தந்தை சூடு வைத்து சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும்  தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ந்து போன அவர் உடனடியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாற்றிலா நடவு மூலம் அதிகம் மகசூல்.. கண்டறிந்த பொறியியல் பட்டதாரி..!!

நாற்றிலா நடவு மூலம் அதிக மகசூல் அளிக்கும் விதைகளை பொறியியல் பட்டதாரி ஒருவர் வழங்கி வருகிறார். திருச்சி மாவட்டம் சிறுகமணியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வெங்கடேசன் என்பவர் நாற்று இல்லா நடவு எனும் நடைமுறையை அறிமுக படுத்தியுள்ளார் அதாவது கேப்சூல்  எனப்படும் மாத்திரை உறைகளில் விதைகளை அடைக்கும் இவர் அவற்றை வீசி எறிவதன் மூலமோ அல்லது மண்ணில் புதைப்பதன்  மூலமோ  நடவு செய்யலாம் என்கிறார். மாத்திரை உறைகளுக்கு பதிலாக பொட்டலங்களில் விதைகளை வைத்து அன்பளிப்பாக கொடுக்கும் வகையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏழை வயிற்றில் அடிக்கும் அரசு அதிகாரிகள்….. ரூ198 கோடி மோசடி….. நீதிமன்றத்தில் தன்னார்வலர்கள் அறிக்கை….!!

திருச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 198 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களை கொண்டு கிராமப்புற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் பல்வேறு விதங்களில் நிதி இழப்பை ஏற்படுத்தும்  வகையில் 198 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மது போதையில் வாகனம் ஓட்டியவருக்கு போலீஸ் வேலை….. நீதிமன்றம் சிறப்பு தண்டனையால்…. இளைஞர் உற்சாகம்….!!

மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சியில் மது  போதையில் சென்ற இளைஞருக்கு சாலை போக்குவரத்தை சரி செய்யும் பணி  தண்டனையாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டியதால் போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில் சீரார் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் இரண்டு தினங்களுக்கு மாநகர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இயற்கை விவசாயம்” 80 கிலோ வெங்காயம்….. விரைவில் விற்பனை….. விவசாயிகளாக மாறி வரும் திருச்சி கைதிகள்….!!

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிடப்பட்ட சுமார் 80 கிலோ வெங்காயம் விற்பனைக்கு வரவுள்ளது. திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வளாகத்தில் உள்ள அங்காடி மூலமாக விற்கப்பட்டு வருகின்றன. சிறைக்குள் பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் கைதிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வாறு சிறையில் பயரிடப்பட்ட கரும்புகள் பொங்கல் திருவிழாவை ஒட்டி விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் இயற்கை முறையில் சின்ன வெங்காயத்தை கைதிகள் பயரிட்டு தற்போது அறுவடை செய்து உள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காந்தி மார்க்கெட்” களைகட்டும் கஞ்சா விற்பனை…. நடவடிக்கை எடுக்க கோரி பாமக மனு….!!

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது.   திருச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பை அகற்றக் கோருதல்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 350 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இதனை பெற்ற அவர் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களை விரைவாக சமர்ப்பிக்க கோரி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

20ஏக்கர், 60,000 சதுர அடி…. ரூ30,00,00,000 செலவில்… சாய்பாபா கோவில்…. கும்பாபிஷேகத்திற்கு திருச்சியில் குவிந்த பக்தர்கள்…!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம்  சமயபுரம் அருகே கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக் கலையுடன் 20 ஏக்கர் பரப்பளவில் 60,000 சதுர அடியில் 30 கோடி ரூபாய் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேகம் விழா கடந்த 17ம் தேதி தொடங்கி காவிரி ஆற்றிலிருந்து 1,008 குடங்களில் எடுத்து வரப்பட்ட தண்ணீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்டி தூக்கிய காளைகள்….. சிறுமி உட்பட 30 பேர் படுகாயம்….. திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம்  பொத்தமேட்டுப்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு, போட்டியில்  காளை முட்டி தூக்கியதில் சிறுமி உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை  அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே புனித வியாகுல மாதா ஆலய மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண மணப்பாறை வட்டாட்சியர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதை  தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 650 காளைகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழப்பு… போலீசார் சந்தேகம்.!!

திருச்சியில் துப்பாக்கியால் சுட்டு, துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் அருகே சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிகுமார் (30). இவர் துப்பாக்கி சுடும் வீரராவார். சசிகுமார் சொந்தமாக ரைபிள் கிளப் வைத்து நடத்தி, பலருக்கும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

”மனைவி தோற்க கணவன் வென்றார்” உள்ளாட்சி தேர்தலில் சுவாரசியம் …!!

திருச்சி மணச்சநல்லூர் ஒன்றியத்தில் மனைவி தோற்க கணவன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில்  திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியத்தின் 1_ஆவது வார்டில் திமுகவில் போட்டியிட்ட கீதா  ஸ்ரீதர் 1727 பெற்றார். அதே போல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட  குமார் 1859 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடியுரிமை மசோதா : கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!

மசோதாவுக்கு எதிராகவும் டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள், திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள்  போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து […]

Categories
செய்திகள் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘ நீங்க தர டிப்ஸ் தான் எங்கள் வாழ்வாதாரமே’ – கேஸ் டெலிவரி தொழிலாளர்கள் உருக்கம்!

திருச்சி: ‘டிப்ஸ்’ மூலம்தான் எங்கள் வாழ்வே நடக்கிறது என சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிற்சங்கத் தலைவர் கணேஷ் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் தராதீர்கள்’ , என ஒரு எண்ணெய் நிறுவனம் தற்போது விளம்பரம் செய்து வருகிறது. இதனால் கேஸ் நுகர்வோர் எங்கள் மீது கோபத்திலும், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் குடோனில் தீவிபத்து …!! 3மணி நேரம் போராட்டம் …!!பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் …!!

திருச்சியில் டயர் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  எரிந்து நாசமாயின. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட் அருகே கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டயர் குடோன் ஒன்று உள்ளது .மூன்றடுக்கு கட்டடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த குடோனில் இன்று அதிகாலை 4மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இது பற்றி தகவலறிந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரமாக போராடி தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர் . சல்பர் கலந்துள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆபாச படத்தை இணையத்தில் பகிர்ந்த இளைஞர் கைது….. திருச்சியில் பரபரப்பு…!!

ஆபாச படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் சிறுவர் சிறுமிகளை  ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை பார்ப்பவர்கள் பகிர்பவர்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுமார் 3,000 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு பிறகு கைது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி வெங்காய மண்டியில் அலுவலர்கள் திடீர் சோதனை

வெங்காயம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் குடிமைப் பொருள் புலனாய்வு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் தங்கம் – வெள்ளி விலையைப் போன்று வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில இடங்களில் வெங்காயம் பதுக்கி வைத்து விலை ஏற்றம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12 வயது சிறுவனை அடித்துக் கொன்று குப்பைக் கிடங்கில் வீசிய 4பேர் கைது …!!

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது     திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு  தகவல் வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி, அரியமங்கலம், அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் வாஷித். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள்.!!

இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் […]

Categories
திருச்சி புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிறந்து 21 நாள்களே ஆன குழந்தை… “ரூ 1,15,000 க்கு விற்பனை “… 3 பேர் அதிரடியாக கைது..!!

மணப்பாறையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை 1,15,000  ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம், இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மேலும், மூன்றாவது முறையாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விஜயா குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து திருச்சி மருத்துவமனையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை பெற்றோரின் உதவியுடன் செவிலி, தரகர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

”எங்களை விடுவியுங்கள்” 20 பேர் தற்கொலை முயற்சி… திருச்சி சிறையில் பரபரப்பு …!!

விடுதலை செய்ய கோரி 20 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது திருச்சி மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கூடிய அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள , குறிப்பாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்றவர்கள் , போலி பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தியவர்கள் ,  அனுமதி இல்லாமல் இந்தியாவில் வாழ்தந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இலங்கை , வங்கதேசம் , சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். 70_க்கும் மேற்பட்டோர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

Breaking : ரூ 1.15 லட்சத்துக்கு குழந்தை விற்பனை …!!

திருச்சியில் குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை சேர்த்த செல்வம்- விஜயா  தம்பதிகளுக்கு மூன்றாவதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையை விற்பனை செய்ய முன்வந்த தம்பதிகள் ஊத்துக்குளியை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ 1.15 லட்சத்துக்கு விற்பனை செய்தது. இதற்க்கு மணப்பாறை அரசு மருத்துவமையில் இருந்து குழந்தையை விற்க அந்தோணியம்மாள் என்கின்ற புரோக்கர் உதவியுள்ளார்.  இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் மணப்பாறை மருத்துவமையில் […]

Categories
திருச்சி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே பயங்கரம்… விடுதி காப்பாளரை கொலை செய்த மாணவன்..!!

திருச்சி தனியார் வேளாண் கல்லூரி விடுதி காப்பாளரை மாணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் அப்துல் ஹக்கீம்(20). இவர் துறையூர்- முசிறி சாலையில் உள்ள கண்ணனூர் பகுதியில் இயங்கும் இமயம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அப்துல் ஹக்கீம், கடந்த சில நாள்களாக கல்லூரி, விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நிரந்திர பாதை வேண்டும்……. பிணத்தை வைத்து சாலை மறியல்……. திருச்சியில் பரபரப்பு….!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம்பத்தூர்சத்திரம் என்கின்ற இடத்தில் மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் என்பத்துர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள். இவர் வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை அன்று இறந்து போனார். இதனையடுத்து இவரை அடக்கம் செய்வதற்காக இவரது உறவினர்கள் காவிரிக்கரையில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். செல்லும் வழியில் உள்ள மயான சாலை தனியாருக்கு சொந்தமானதாக இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அந்த சாலையை கடக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்துத் தீப்பற்றி எரிந்த கார்… தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு…!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், மேம்பால பக்கவாட்டில் மோதி கார் முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ (20). இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை நாகர்கோவிலிலிருந்து தனது ஸ்கோடா காரில் பாண்டிச்சேரி நோக்கி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணப்பாறை அருகே இவரது காரின் டயர் வெடித்ததுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதயம் கனக்கிறது…. உன் மூச்சு சத்தம் தான் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது… அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்..!!

உன் மூச்சு சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைந்து இயங்க வைத்தது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித்  கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது… ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி..!!

அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆழ்துளை கிணறு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#prayforsurjeeth: ”மீண்டு வா குட்டி பையா”…. சுர்ஜித்தின் வைரல் வீடியோ …!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 70 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 29 மணி நேரத்தைக் கடந்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ‘240,00,00,000 ஆண்டு ”பழமையான பாறைகள்” நில அமைப்பியல் பேராசிரியர்….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSurjith : ”இதே போல ஆட மீண்டு வா ” …. வைரலாகும் வீடியோ ….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

4_ஆம் நாளாக தொடரும் மீட்புப்பணி – 64 மணி நேரம் கடந்தது….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 63 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 64 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித் மீட்புப்பணி : நிலவரம் என்ன ? மகனுடன் இரவு விசிட் அடித்த OPS …!!

நடுகாட்டுப்பட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்துக்கு இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுகாட்டுப்பட்டிஇஎல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 54 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புயலாக வேலை செய்து 15 நிமிடங்களில் பழுதை சரிசெய்த மீட்பு பணியாளர்கள்!

பழைய ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது வேகமாகச் சரி செய்யப்பட்டு மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 52 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ஆழ்துளைக் கிணற்றின் அருகே புதிதாக ஆழ்துளை அமைக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பழைய ரிக் இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட மீட்பு பணிகள் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய இயந்திரத்தை பொருத்தும் பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2010_த்திலே சொன்னேன்…. ”மெத்தனம் அவலம்” சுர்ஜித் குறித்து விவேக் வேதனை …!!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியை சுஜித்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வருத்தத்தை பல இடங்களில் பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் விவேக்-ம் தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் வந்த ஒரு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிக் பழுது சரி செய்யப்பட்டது – 30 நிமிடம் பணி முடக்கம் …!!

பழுதாகி இருந்த ரிக் இயந்திரம் 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது. மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 53 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.   […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தடைகளைத் தாண்டி , மீண்டு வாடா….. G.V பிரகாஷ் ட்வீட் …!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று நடிகரும் , இசையமைப்பாளருமான GV பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 52  மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 88 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் ஆழ்துளை கிணற்றுக்கருகே 100 அடி ராட்ஷச கிணறு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிக் இயந்திரத்தில் பழுது – பணிகள் நிறுத்தம்…!!

 ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், சுஜித்தை மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 51 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ரிக் இயந்திரத்தில் 35 அடிக்கு மேல் துளையிடப்பட்டது. புதிய ரிக் இயந்திரத்தை ஒன்றிணைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்துவருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் பழைய ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ரிக் இயந்திரத்தின் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : ”ரிக் இயந்திரத்தில் பழுது” மீட்புப்பணியில் தொய்வு …!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 51 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 100 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் ஒரு நபர் செல்லும் அளவில் 100 அடிக்கு கீழ் ராட்சச கிணறு அமைத்து அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டு வா சுஜித் – மாநிலம் முழுவதும் பிரார்த்தனை….!!

சிறுவன் சுஜித்தை காப்பாற்ற மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனை நடைபெற்றுவருகிறது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 50 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இறைவன் கருணையால் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். வேலூரை அடுத்துள்ள கோடியூர் பகுதியில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுஜித் பெயரை மலர்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்தனர். அதேபோல், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்கவரும் கூட்டத்தால் மீட்புப் பணியில் தொய்வு….!!

நடுக்காட்டுப்பட்டியில் சிறுவனை மீட்கும் பணி நடைபெற்றுவரும் இடத்தில் வேடிக்கை பார்க்கவரும் கூட்டத்தால் மீட்பு பணிகள் தொய்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ரிக் இயந்திரத்தின் மூலம் அதன் அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. இப்பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடந்தாலும் வேடிக்கை பார்க்கவரும் மக்கள் கூட்டத்தால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. மணப்பாறையிலிருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வரும் சாலையில் தடுப்புகளை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாடே தீபாவளி கொண்டாட்டம் ….. தமிழகம் சுர்ஜித்_காக போராட்டம் …. ராகுல் ட்வீட் ..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித்_க்காக தனது வேதனையை ராகுல் காந்தி ட்வீட்_டரில் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 49 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

48 மணி நேரம் …. மீண்டு வா சுர்ஜித்! – இதுவரை நடந்தது என்ன ? முழு அப்டேட் …!!

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் சுஜித்தை மீட்கும் பனி 48 மணி நேரமாக நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மதுரையைச் சேர்ந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செயற்கைக்கோள் அனுப்பும் நம்மிடம் குழந்தையை மீட்க என்ன கருவிகள் உள்ளது? திருமா கேள்வி

செவ்வாய் கிரகத்துக்கு செயற்கோளை அனுப்பும் நம்மிடம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையைக் காப்பாற்ற என்ன கருவிகள் உள்ளது என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாளவலவன் எம்.பி., ” ஆழ்துளை கிணற்றிலிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற இன்னும் பல மணி நேரம் ஆகலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். குழந்தை சுர்ஜித்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் நடைபெறுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அப்பா கூப்பிட்டு வா ? அப்பா கூப்பிடு வா ? கண்கலங்க செய்யும் வைரல் வீடியோ …!!

சுர்ஜித் மீட்புப்பணி குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ அனைவரையும் கண்கலங்க வைக்கின்றது. திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழந்தை சுர்ஜித்_க்காக ‘தீபாவளி கொண்டாட்டம் இல்லை’ மணப்பாறை பகுதி மக்கள் …!!

சுர்ஜித்  பத்திரமாக மீட்க வேண்டுமென்று தமிழகம் எங்கும் பல பகுதிகளில் பிராத்தனை நடைபெற்று வருகின்றது. திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீட்புப் பணி தொய்வின்றி நடக்கிறது…. முதல்வர் அடிக்கடி கேட்டறிகிறார் – விஜயபாஸ்கர்

சுர்ஜித் மீட்புப்பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்ணீரோடு வாழ்த்துகின்றேன் , கைதட்டுகின்றேன் – வைரமுத்து ட்வீட் ….!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று கவிஞ்சர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 43 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பி நீ வா…! அப்ப தான் உண்மையான தீபாவளி…. எழுந்து வா தங்கமே – ஹர்பஜன் ட்வீட்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று ஹர்பஜன் சிங்க் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories

Tech |