திருச்சியில் காவலர் ஒருவரை மிக தரக்குறைவாக குடிபோதையில் இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இளைஞர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை பறிமுதல் செய்துள்ளார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் எல்லை மீறி மிக […]
Category: திருச்சி
திருச்சியில் நாடகம் பார்க்கும் ஆசையில் ஒரு பெண் வீட்டு வாசலில் மகளை தூங்க வைத்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் இருக்கும் கிராமத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தனது 7 -வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இக்கிராமத்தில் மழை பொழிய வேண்டும் என்று வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாகவே நடைபெற்று வருகிறது இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக தாய் மற்றும் மகள் இருவரும் சென்றுள்ளனர். நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த […]
விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வேலூர் தேர்தலை நடத்தக் கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்னு போராட்டத்தில் ஈடுபட்டார். விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிலியில் உள்ள சந்தர் மந்தரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர் அய்யாக்கண்னு. ஆனால் இவர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும் பலனும் இல்லை. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை நடத்தக் கூடாது என்று படுத்து புரண்டு அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மக்களவைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட […]
திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் சட்டக்கல்லுரி மாணவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சில இளைஞர்கள் காதலுக்காக எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் காதலை ஏற்காமல் போனால் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.அந்த வகையில் திருச்சியில் தவச்செல்வன் என்ற இளைஞர் ஒருவர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார். அதற்கு அம்மாணவி சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் […]
நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 15 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்த ரெங்கர், நேற்று இரவு தனது 15 மாத குழந்தையுடன் அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களுள் ஒருவரான செந்திலிடம் மற்றொரு நண்பர் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரெங்கருக்கும் அவர் நண்பருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார் . அப்போது தவறுதலாக […]
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடமும் மொட்டையடிக்க கூடுதலாக பணம் வசூலித்த 13 பேரை கோவில்நிர்வாகம் சஸ்பண்ட் செய்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த கோவிலாக சமயபுர மாரியம்மன் கோவில் மக்களால் பார்க்கப்படுகிறது . இக்கோவிலில் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம் .இதில் பெரும்பாலானோர் மொட்டையடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மொட்டை அடிக்க கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.மொட்டை […]
திருச்சியில் மழை வேண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் […]
மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் மருந்து மாத்திரை கொடுக்கும் ஊழியர் மது அருந்திவிட்டு போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் கலாட்டா செய்த வீடியோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் செய்த இந்த கலாட்டா சம்பவம் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இவர் மது போதையில் தகராறு செய்யும் சம்பவம் அங்கே வந்திருந்த பயணிகளை முகம் […]
திருச்சியில், லைஃப் கேர் சென்டர் என்ற குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் , காவலர் உயிரிழந்த மர்ம சம்பவத்தால் அம்மையத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கே.கே.நகரில் உள்ள லைஃப் கேர் சென்டர் மையத்தில், கடலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் காவலராக பணிபுரிந்துவந்தார் . இந்நிலையில் மர்மமான முறையில் அவர் திடீரென உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனால் ,அரசு மருத்துவர்கள் குழு ஆய்வு […]
காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த சர்சை பேச்சுக்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது […]
சமயபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 212 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா காரினை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் சோதனையிட்டபோது 212 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து காரில் வந்த இரண்டு இளைஞர்களை […]
திருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. திருச்சியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை சிஸ்கோ என்ற தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் எற்றி ஏ.டி.எம். மையங்களில் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சேதுராமன் காலனி என்ற இடத்தை கடந்து செல்லும்போது பணம் நிரப்பும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே அப்பகுதி மக்கள் தீயை அணைத்ததுடன், பணப்பெட்டியினை வண்டியில் இருந்து தனியாக அகற்றினர்.திடீரென […]
திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக கிளிமாலை கொண்டு வரப்பட்டது. இதை அணிந்த படி, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருளினார் . அப்போது ,பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா’ என பரவசத்துடன் தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு […]
திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள விஸ்வநாதர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட பகுதிகள் மற்றும் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 வயது முதல் 50 வயது வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெற்றது 12 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி […]
திருச்சி to திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விசாயி மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் இவர் விவசாயம் செய்து வருகிறார் நேற்றைய தினம் காலை ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து […]
திருச்சியில் மனைவியிடம் இருந்து சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு நிரந்தர வேலை […]
திருச்சியில் சாலை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் சாலை பணியாளர்களுக்கான 41 மாத பணி நீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் திருச்சி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர புதிய கோப்புகளிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சாலையில் பணியாளர்களுக்கு […]
திருச்சி அருகில் நில பிரச்சனையை மனதில் கொண்டு குழநதையை தாக்கிய திமுகவின் நகர செயலாளர் மற்றும் ttv தினகரன் ஆதரவாளர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் அழகுமணி.இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த திமுகவின் முன்னாள் நகர செயலாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு என்பது நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகுமணியின் மூன்று வயது குழந்தையை ரவிச்சந்திரன் மற்றும் டிடிவி தினகரனின் ஆதரவாளர் சரவணன் ஆகிய இருவரும் துணியை கிழித்து தலைமுடியை இழுத்து அடித்ததாக அழகுமணி காவல் […]
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள் காணிக்கையாகச் செலுத்தும் காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் […]
திருச்சி மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 60_இல் உள்ள இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் […]
மணப்பாறையில் பொதுமக்கள் திடீரென பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து முறையாக தண்ணீர் வசதி மக்களுக்கு செய்யவில்லை என அனைத்து மக்களும் குற்றம் சாடினர் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் […]
திராவிட கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கல் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக வழிபடும் கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹிந்துக்களிடமும் , கிருஷ்ணரை வழிபடுவோரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மேலும் கீ.வீரமணி மற்றும் திராவிட கழகத்திற்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து […]