பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழவண்ணார்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வங்கியில் பணிபுரியும் நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி இளையராஜா தனது தம்பி பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து நித்யா பணிபுரியும் வங்கிக்கு சென்று நிலம் வாங்குவதற்கு கடன் தருமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் இளையராஜா, தம்பி பாலமுருகன், […]
Category: திருச்சி
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பெட்டவாய்த்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஒரு சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த […]
வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார்கோட்டை சோமசுந்தர நகர் அருகே இருக்கும் சுடுகாட்டு பகுதியில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக […]
திருச்சி மாவட்டத்தில் வாழை மட்டையில் இருந்து சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழில் கூடத்தை முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் சலோம் பவுண்டேஷன் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் மாரிமுத்து, இயக்குனர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் புதிய முயற்சியாக இயற்கையான முறையில் வாழை மட்டையில் இருந்து நார் மற்றும் நாப்கின் தயாரிப்பது குறித்து அவர்கள் விளக்கமளித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த நாப்கின் […]
2 மரங்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகே சில வருடங்களுக்கு முன்பு அரச மரம் மற்றும் வேப்ப மரத்தை நட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த மரங்கள் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து பூக்கும் நிலையில் இருக்கிறது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அந்த2 மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதேபோல் நேற்று யாக பூஜை உள்ளிட்ட […]
குளித்தலையைச் சேர்ந்த பக்தர்கள் 33 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே இருக்கும் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ரிச்சாண்டார் திருமலை, ஊர் பாறைப்பட்டி, அழகாபுரி, கவுண்டம்பட்டி, ஆலத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு சமூகத்தினர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மாட்டு வண்டியில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். இவர்கள் சென்ற 2017 ஆம் வருடம் வந்து வழிபாடு செய்த நிலையில் […]
தாத்தையங்கார் பேட்டை அருகே சரக்கு வேன் மோதி போலீஸ் ஏட்டு உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு தங்கவேல். இவர் தாத்தையங்கார் பேட்டை அருகில் உள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ள நிலையில் மருத்துவ விடுப்பில் இருக்கின்றார். இந்நிலையில் இவர் நேற்று தாத்தையங்கார்பேட்டைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்த பொழுது அருகே வந்த சரக்கு வேன் தங்கவேலு மீது மோதியது. இதனால் ஏட்டு தங்கவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ […]
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த சில மாதங்களாக 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோவிலில் ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. இந்த பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதனையடுத்து இந்து […]
கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவலதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கால்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஐயப்பன் என்பவர் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் விநாயகர் கோவில் அருகே திடீரென ஐயப்பன் விஷம் குடித்துவிட்டார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் விஷ பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிலர் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் […]
அரசு பேருந்தும் கதிரடிக்கும் எந்திரமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு வழிப்பாதையில் கதிரடிக்கும் எந்திர வாகனம் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும் கதிரடிக்கும் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கரை கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டாள்(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆண்டாள் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆண்டாள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஷ்வாம்பாள் சமுத்திரத்தில் விவசாயியான கலிங்க மூர்த்தி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளியம்மை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை […]
மருத்துவர்களுக்காக நடைபெற்ற விளையாட்டு போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் இந்திய மருத்துவ மன்றம் சார்பாக டாக்டர்களுக்கான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் டாக்டர் களுக்காக ஓட்டப்பந்தயம், நடைபோட்டி, இறகுபந்து, த்ரோபால், குண்டெறிதல், கிரிக்கெட், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடினார்கள். மேலும் வெற்றி பெற்ற […]
மர்மமான முறையில் இறந்த தொழிலாளி வழக்கில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி அருகே உள்ள விடுதலைபுரம் நடுத்தெருவை சேர்ந்த முருகேசன் என்பவர் பெரியகுறுக்கை கிராமத்தில் உள்ள ராஜபாளையத்தில் செந்தில் என்பவருக்கு சொந்தமாக உள்ள பண்ணை தோட்டத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில் சென்ற 22ஆம் தேதி முருகேசனின் மனைவி சகுந்தலா பண்ணை தோட்டத்துக்கு கணவரை தேடிச் சென்றுள்ளார். அங்கிருந்த ஒருவர் அவர் வெளியே சென்று விட்டதாக கூறியதால் காத்திருந்த அவர் ஒரு மணி […]
திருச்சி முகாம் சிறையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 இலங்கைத்தமிழர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் விசா காலாவதி, போலி பாஸ்போர்ட், போலி முத்திரையுடன் இந்தியா வந்த இலங்கை, நைஜீரியா, கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தண்டனை காலம் முடிந்தும் நாடு திரும்ப முடியாமல் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழர்கள் 10 பேர் தங்களை விடுதலை […]
தனக்குத் தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள மான்பூண்டி ஆற்றில் முட்புதரின் நடுவில் குழந்தையின் அழுத சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே அவர்கள் அந்த குழந்தையை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தைக்கு […]
பள்ளியை சூறையாடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் மின்விசிறி, டியூப் லைட், டேபிள்கள் மற்றும் கழிவறை போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர். தற்போது மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் வகுப்பறையில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை […]
காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். திருச்சி மாவட்டம், உப்பிலிய புறத்தை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில் மரகதவல்லி தாயார் உடனுறை உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் இந்து அறநிலைய துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விநாயகர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு சான்று வழங்க ரூ 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள நொச்சியம் அருகில் குமரகுடி பகுதியில் வசித்து வருபவர் இளவரசன். இவர் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்த மாணிக்கம் என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு ரூ 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் தர […]
செவந்தாம்பட்டி, பில்லாதுரை உள்ளிட்ட இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டார்கள். திருச்சி மாவட்டம், தா.பேட்டை பேரூராட்சி சார்பாக பொது சுகாதாரத் தூய்மை பணி சிறப்பு முகாம் நடந்தது. பேரூராட்சித் தலைவர் ராஜலட்சுமி கணேசன் தலைமை தாங்கிய இந்த முகாமில் துணை தலைவர் எம். மயில்வாகனன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் பேரூராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த முகாமில் செவந்தாம்பட்டி, பில்லாதுரை உள்ளிட்ட இடங்களில் […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியில் ரஞ்சித்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் முசிறியில் இருக்கும் தாய் மாமா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து ரஞ்சித்குமார் மீண்டும் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லை நகரில் இருக்கும் காபிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் கே.டி ஜங்ஷனில் சாலையோரமாக இருக்கும் ஐயங்கரன் பேக்கரி மற்றும் காபி கடை இருக்கின்ற நிலையில் நேற்று மாலை சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீப்பிடித்தது. முன்பக்கத்தில் பிடித்த தீ வேகமாக கடை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து […]
திருச்சி மாவட்டத்திலுள்ள மேலப்புலிவார்டுரோட்டில் தனியார் பஸ்- கார் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் மரக்கடையில் இருந்து சிங்காரத்தோப்பு வரை செல்லும் ரோட்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் காரணமாக அங்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து மேலபுலிவார்டுரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது அருகே சென்று கொண்டிருந்த […]
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஜெம்புநாதபுரம் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கீதா(17) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுந்தரம் இறந்துவிட்டார். இந்நிலையில் அண்ணன் உறவு முறை வரும் வாலிபரை சங்கீதா காதலித்ததாக தெரிகிறது. இதற்கு சங்கீதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா சாமி கும்பிட்டு வருவதாக […]
வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தரப்பட்டி கிராமத்தில் வேல்முருகன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சபிதா(9) என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா இறந்துவிட்டதால் வேல்முருகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில் தனது தாய் சுப்புலட்சுமியிடம் வேல்முருகன் மதுகுடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சுப்புலட்சுமி மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த வேல்முருகன் தனது […]
மணப்பாறை அருகே சாலை விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பலியாகிய நிலையில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் காமராஜ், கார்த்திக், செஞ்சி வானகரத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை, கவியரசு, சுரேஷ் ஆவடியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக முடிவெடுத்து கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பும் பொழுது […]
தெற்கு ரயில்வே சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திருச்சி ரயில்வே கோட்டம் விருதுகளை தட்டிச் சென்றது. இந்தியா முழுவதும் 67-வது ரயில்வே வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வேயில் சிறப்புற பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இது ஐ.சி.எப்பில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடந்ததையடுத்து விழாவிற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிஜி மால்யா தலைமை தாங்கினார். இதையடுத்து தெற்கு ரயில்வேயில் […]
அரசு மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியாநல்லூர் பகுதியில் மாவடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி(41) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்தபோது மாவடியான் இறந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மகேஸ்வரிக்கு சமையல் கூடத்தில் பணி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மகேஸ்வரி நோயாளிகளுக்கு சமைத்த […]
கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோழி இறைச்சி, சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், மணப்பாறை, முசிறி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 47 கடைகளிலிருந்து 138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை […]
சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் மரக்கிளை முறிந்து அரசு பேருந்தின் மீது விழுந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று முன்தினம் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் திடீரென மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் துறையூர் பேருந்து நிலையம், காவல் நிலையம், துறையூரிலிருந்து முசிறி செல்லும் ரோடு, ஆத்தூர் செல்லும் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே ராட்சத புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் […]
காணாமல் போன புதுப்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கீழக்கோரைப்பட்டி கிராமத்தில் தையல் தொழிலாளியான பழனிச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி(19) என்ற பெண்ணுக்கும் கடந்த 29-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து ரேவதியை காணவில்லை. இதனால் பழனிச்சாமியின் உறவினர்கள் ரேவதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பழனிச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூ இறந்துவிட்டார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட செல்வராணி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராணி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]
மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 21 வயதுடைய நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கழுத்தை அறுத்துக் கொண்டும், மாணவியின் மோதிரத்தை வாங்கி கொண்டு தன்னை காதலிக்குமாறு நாகராஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மாணவியை நாகராஜ் […]
திருமங்கலம் கிராமத்தில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி அருகே இருக்கும் திருமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் இருக்கும் கூழையாற்றில் இரவு நேரத்தில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மகன் ரஞ்சித்குமார் டார்ச் லைட்டை ராமச்சந்திரனின் முகத்தின் மீது அடித்திருக்கின்றார்கள். இதனால் ராமச்சந்திரன் இது பற்றி அவர்களிடம் கேட்ட பொழுது ரஞ்சித்குமார் மற்றும் ராமச்சந்திரனுக்கு இடையே […]
அக்கியம்பட்டி மலை பகுதியில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அடுத்து இருக்கும் அக்கியம்பட்டியில் உள்ள மலைப்பகுதியில் செடிகளில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக விடிய விடிய பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டன.
திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 29 ஆம் தேதி நாளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விடுமுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. நாளை விடுமுறை என்பதால் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு […]
ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் களிமேடு அருகே நேற்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே காவிரி நகர் பகுதியில் பொன்னம்பலம்- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பொன்னம்பலம் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மூத்த மகள் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனையடுத்து 2-வது மகளும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இதனால் […]
உணவு பொட்டலத்திற்காக ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளரை மற்றொரு தொழிலாளி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள முதலியார்சத்திரத்தில் வாழ்ந்து வருபவர் சங்கர். இவர் குட்ஷெட் யார்டில் லாரி ஒப்பந்ததாரராக உள்ளார். இவரிடம் செல்வம் என்கிறவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகின்றார். சென்ற 23ஆம் தேதி வேறொரு லாரி ஒப்பந்ததாரர் இருந்ததால் அவரின் இறுதிச் சடங்கிற்கு தொழிலாளர்கள் அனைவரும் சென்ற 23ஆம் தேதி சென்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கு உணவு விற்கும் பெண் ஒருவர் விஜயன் என்பவருக்காக […]
மனைவிடம் சொல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வராத கணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நவீன்நிஷா(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான 10 நாட்களில் மகேஸ்வரன் மனைவியிடம் சொல்லாமல் திடீரென வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நவீன்நிஷா அவரது பெற்றோரிடம் கேட்டபோது சில நாட்களில் மகேஸ்வரன் வந்து விடுவார் என […]
முன்பகை காரணமாக நடந்த தாக்குதலில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியில் கேசவன் என்ற சக்திவேல்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தம்பி சுதாகருடன் இணைந்து காந்தி மார்க்கெட்டில் சுமை துக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், அவரது […]
பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் முயற்சி எடுத்து வருவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை மற்றும் பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு 1,000 புத்தகங்களை வழங்கி சிறிய நூலகம் போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து தமிழக முழுவதிலும் இதேபோன்று 1 லட்சத்து 80 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக […]
இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அண்ணன், தம்பி இருவரும் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அக்பர் அலி. இவருடைய தம்பி முகம்மது மூசா. இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தோகமலை அருகிலுள்ள குருணி குளத்துட்டியில் இருக்கும் அக்பர் அலியின் மனைவியை பார்த்துவிட்டு திரும்பி சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மொட்டை காமநாயக்கனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறி […]
விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் கெங்கவல்லி பகுதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளியான அண்ணாதுரை(32). இவர் கடந்த 2016-ஆம் வருடம் திருச்சி வந்திருந்த நிலையில் அவர் திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த […]
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி 22 வயதுடைய தர்மா என்பவர் திருச்சி, ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதையடுத்து ஏர்போர்ட் காவல்துறையினர் தர்மாவை கைது செய்துள்ளனர். மேலும் தர்மா மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொள்ளை வழக்கு, வழிப்பறி உட்பட பல வழக்குகள் பதிவாகி […]
திருச்சி மாவட்டத்திற்கு வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அந்த விடுமுறையை ஈடு செய்ய மே 7-ஆம் தேதி பணி நாளாக செயற்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சோதனை சாவடி அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். திருச்சி கரூர் இடையான பைபாஸ் சாலையில் உள்ள சோதனைச்சாவடி எண் 7 அருகிலிருக்கும் உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு கீழ் நேற்று முன்தினம் காலையில் 50 வயது உள்ள பெண்ணின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதுபற்றி மலைக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் திருச்சி உறையூரில் உள்ள வெட்டும்புலி சந்தையை சார்ந்த முகமது ரபிக் என்பவரின் மனைவி மும்தாஜ் பேகம் என்பது தெரியவந்துள்ளது. […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் அருகே இருக்கும் ஊட்டத்தூர் அம்மன் காலனியில் வசித்து வந்தவர் 24 வயதுடைய சிவகுமார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் ஊட்டத்தூரிலிருந்து பி.கே.அகரம் நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் […]
துவரங்குறிச்சி அருகே திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 25 வீரர்களை காளைகள் முட்டியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அடுத்த கரடிப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதைத்தொடர்ந்து உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 655 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்றார்கள். இதில் சில காளைகள் தன்னை பிடிக்க முயன்ற வீரர்களை முட்டியது. இதனால் 25 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் பலத்த காயம் அடைந்ததால் […]