Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாட்டியின் இறுதி சடங்கு முடிந்து…. பேரன் உயிரிழப்பு…. கதறிய குடும்பத்தினர்…!!

ஒரே நாளில் இரண்டு வாலிபர்கள் கண்மாயில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் இருளப்பன் என்பவரது மகன் சதீஷ்குமார்(22). இவர் சம்பவத்தன்று பக்கத்தில் உள்ள உள்ள கண்மாயில் அவருடைய அண்ணன் முனியசாமி மற்றும் பெரியசாமி ஆகியவர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சதீஷ்குமார் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

6 இடங்களில் விரைவில் அகழாய்வு தொடங்கும் …!!

தூத்துக்குடி மாவட்டம் சிவகலை உட்பட 6 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகாநாத் சிங் படைகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்தார். மேலும் இந்தியாவின் தொன்மை குறித்து ஆய்வு செய்யும் குழுவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்பதில் ஏற்பட்ட தகராறு…. பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு …!!

தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிக்குட்பட்ட தென்திருப்பேரை கோட்டூர் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்து வருகிறார். இன்று காலை 6 மணி அளவில் தென்கரையிலுள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தாஸை சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதலியோடு வாழனும்… அடம்பிடித்த காதலன்….. பின்னர் செய்த செயலால் ஷாக் ஆன தந்தை …!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது  இளம்பெண் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரி விடுமுறை என்பதால்  இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் காதலிப்பது பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் பெண்ணின் தந்தை ” இது நமது குடும்பத்திற்கு சரியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் பிரிவை தாளாத கணவரின் நெகிழ்ச்சியான செயல்…!!

தூத்துக்குடி அருகே 48 ஆண்டு காலம் இன்ப துன்பங்களை சேர்ந்து கடந்த மனைவியின் பிரிவைத் தாளாத கணவர் அவருக்கு கோயில் கட்டி சிலை  வைத்து வழிபட்டு வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. முடிவைத்தானேந்தல் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாடசாமி என்பவர்  மனைவிக்காக கோயில் எழுப்பியவர்.  கோவா விடுதலை, பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற மாடசாமி வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.  இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 48 ஆண்டுகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆபத்தான சாலை – வாகன ஓட்டிகள் அச்சம்

தூத்துக்குடி அருகே ஆபத்தான சாலையில் உயிர் பயத்துடன் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடத்தில் இருந்து வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தட்டார்மடம் கடைவிதியிலிருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள சாலை தோண்டப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஆபத்தான நிலையில் பயணம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி – கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை

தூத்துக்குடி கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை மானாவாரி விவசாயத்திற்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் படர்ந்தபுளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை முத்தையாபுரம் முள்ளக்காடு போன்ற பகுதிகளில் இரவு 9 மணியில் இருந்து சுமார் 3 மணி நேரம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தண்ணீர் பாட்டில் வைத்து கட்டிடம்” தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சி…!!!

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களுக்கு தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய காலி பாட்டில்கள் அனைத்தும் மாநகராட்சி மூலம் சேகரித்து வைக்கப்பட்டு பெருமாள்புரம் திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் மற்றும் குளியல் அறை கட்டும் பணியை சோதனை முயற்சியாக […]

Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

எப்படி இந்த யோசனை…? “மன் கி பாத் நிகழ்ச்சி” தூத்துக்குடி தொழிலாளருடன் மோடி உரையாடல்…!!!

தூத்துக்குடி  மாவட்டத்தில் முடிதிருத்தும் நிலையம்  நடத்திவருபவரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாடினார். மாதந்தோறும்  கடைசி ஞாயிறு அன்று  ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில்   அகில இந்திய வானொலி மூலம் பிரதமர்  மோடி அவர்கள்  நாட்டு மக்களிடையே காலை 11 மணி அளவில்  கலந்துரையாடுகிறார். அவ்வகையில்  இன்று நடைபெற்ற ‘மன் கி பாத் ‘நிகழ்ச்சியில்  பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் முடி திருத்தும் தொழிலாளி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திரையரங்கை திறப்பதில் தாமதம் ஏன்..? அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்…!!

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை மக்களே நிராகரிப்பார்கள் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அரசை தொடர்ந்து கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலினை சட்டமன்ற தேர்தலின் போது மக்களே நிராகரிப்பார்கள் என்றார். தொடர்ந்து திரையரங்குகள் திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த […]

Categories
கடலூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுச்சேரி மாநில செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை…!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொடியேற்றம் விழாவில் அதிமுக – திமுக இடையே மோதல்…!!

விளாத்திகுளத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே  கொடியேற்றும் விழாவில் மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அண்மையில் அதிமுகவிலிருந்து  விலகி திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற திரு மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளத்தில் திமுக கொடியேற்று விழா நேற்று மாலை நடைபெற்றது. அந்த நேரத்தில் விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ திரு சின்னப்பன் தலைமையிலான ஆளும் கட்சியினரும் அங்கு கொடி ஏற்றுவதற்கு வந்தன. போலீஸ் தடையை மீறி அதிமுகவினர் கொடியேற்ற சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா – வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

கோவில் தசரா விழாவிற்கு   போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இவ்விழாவில்  வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சூரசம்ஹார விழா இந்த ஆண்டு கோயில் முன்பாக நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி மகன்… இந்திய ஜூனியர் ஹாக்கி அணி… பயிற்சி முகாமில் தேர்வு…!!!

கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் மகன் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தேசிய விளையாட்டாக திகழும் ஹாக்கியில் மிகவும் புகழ்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்று. அங்கு நூறு ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அழிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை ‘ஹாக்கி பட்டி’ என்று கூறுவார்கள். தேசிய ஹாக்கி அணியில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்நிலையில் களிமண் தரையில் விளையாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கு சேர்க்கை புல்வெளி மைதானம் அமைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்… தூத்துக்குடியில் சரக்கு பெட்டக முனையம்… மத்திய மந்திரியிடம் கனிமொழி மனு…!!!

தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரியை நேரில் சந்தித்து கனிமொழி கோரிக்கை மனு வழங்கியுள்ளார். டெல்லியில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரியை திமுக எம்பி கனிமொழி நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், “தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்றம் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை விரைவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்கும் போது தகராறு… தொழிலாளியை காலில் விழ வைத்த கும்பல்… விரட்டிப் பிடித்த போலீஸ்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இருக்கின்ற ஒளைகுலம் வடக்குத் தெருவில் 55 வயதுடைய பால்ராஜ் என்பவர் வசித்துவருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் 60 வயதுடைய சிவசங்கு என்பவருக்கும் பால்ராஜ்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமங்கலக்குறிச்சியில் பால்ராஜ் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி…. வெளியான 2 காரணங்கள்…. எது உண்மை…?

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜி.பி.முத்து டிக் டாக் செயலியில் காணொளி வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட ஜி.பி.முத்து குடும்ப பிரச்சனையினால் சமூக வலைதளங்களில் தன்னால் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று அதில் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜி.பி.முத்து திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவரிடம் காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன் பக்க கதவை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளை …!!

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் சமையல் மாஸ்டர் வீட்டில் திருடப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டி மாவட்டம் அருகே கழுகுமலை செந்தூர்நகர் தெருவை சேர்ந்தவர் சங்கர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் கதவை திறந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 1.25 லட்சம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு ….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மஞ்சள் நீர் காயல் ஊராட்சியில் சுமார் 500 நூற்றுக்கு குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மறைந்த எஸ்.பி.பி.க்கு மேடை மெல்லிசை கலைஞர்கள் இசை அஞ்சலி …!!

மறைந்த பின்னணி பாடகர் திரு. எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் மேடை மெல்லிசை கலைஞர்கள் சார்பில் இன்று இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேடை இசை கலைஞர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் திரு. எஸ்.பி.பி-யின் பாடல்களைப் பாடி இசை அஞ்சலி நிகழ்ச்சியும் நடந்தினர்.

Categories
ஆன்மிகம் இந்து தூத்துக்குடி மாநில செய்திகள்

தூத்துக்குடி குலசை திருவிழா : யார் வரலாம்…. யார் வரக்கூடாது….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தூத்துக்குடி மாவட்டத்தின் குலசை திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு அதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசை கோவில் தசரா திருவிழா வருடம்தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட கூடிய ஒரு திருவிழா. இந்த நாளன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ஏன் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட காளி உள்ளிட்ட அம்மன் வேடமிட்டு பக்தர்கள் தரிசனத்தில் ஈடுபடுவார்கள். மிக சிறப்பாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவிற்கான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆதிச்சநல்லூர், சிவகளையில் அடுத்த ஆண்டும் அகழ்வாராய்ச்சி …!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் சிவகளை மற்றும் கோர்க்கை பகுதிகளில் அடுத்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ஆம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது. இதேபோல் சிவக்களையிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த அகழ்வாராய்ச்சி கடந்த 1-ம் தேதி முடிவு பெற்றது. இதில் ஆதிச்சநல்லூரில் 27 முதுமக்கள் தாழியும்,  சிவக்களையில் 34 முதுமக்கள் தாழியும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த இடங்களில் தமிழ் பிராமி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளி – கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி

தூத்துக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் உதவியுடன் ஓராண்டில் 6,000 மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி நகரம் தொழிற்சாலை மிகுந்த பகுதி என்பதால் இங்கு மற்ற நகரங்களை விட ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 6,000 மரக்கன்றுகளை நகர் முழுவதும் நட்டு சாதனை படைத்துள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடியேறிய முதல் நாளில்… “மனைவியின் தலையில் கல்லைப்போட்டு”… கொலை செய்து தப்பிய கணவன்..!!

குடும்பத்தகராறு கணவன் மனைவியை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்புசாமி-சண்முகலட்சுமி தம்பதியினர். நேற்று சண்முகலட்சுமிக்கும் கருப்புசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருப்பசாமி சண்முகலட்சுமியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். அதன் பிறகு மனைவி இறந்ததை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் பூட்டிய வீட்டில் சண்முகலட்சுமி இறந்து கிடக்க இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

டெல்லி பயணத்துக்கும் செயற்குழு கூட்டத்துக்கு தொடர்பில்லை! அமைச்சர் கடம்பூர் ராஜு…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர்கள் டெல்லி செல்வதற்கும் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர்கள் டெல்லி  செல்வதற்கு அதிமுக செயற்குழு கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உடன் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சம் இல்லை – கடம்பூர் ராஜூ கருத்து

அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சம் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்காட்சிகளில் முதல்வர் வேட்பாளர்களுக்கு பஞ்சம் இருப்பதாக முன்னால் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வேலை செய்ய விடல” செல்போனுக்கு வரும் தவறான படங்கள்… தர்ணாவில் இறங்கிய பெண் அலுவலக உதவியாளர்….!!

பெண் அலுவலக  உதவியாளர் தன்னை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும்  தனது மொபைலுக்கு ஆபாசம் படங்கள் அனுப்புவதாகவும் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ.உ.சி  பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இந்த அலுவலகத்தில் உதவி அலுவலராக தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.அப்போது அவர் கூறுகையில், “எனது அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் என்னை ஏழு வருடங்களாக பணியை செய்யவிடாமல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிறையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் பொலிசார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி இம்மாத இறுதிக்குள் […]

Categories
கரூர் சென்னை சேலம் தூத்துக்குடி மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே லாரி மீது கார் மோதியது விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் நேரிட்ட  சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு சி.பி.ஐ., தடயவியல் அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை …..!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் காவல்துறையினரால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி மேம்பாட்டு திட்டம்…!!!

தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டு திட்டம் ரூ. 381 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. ஏ.ஏ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய விமான நிலையங்களின்  ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடியில் அமைத்துள்ள  விமான நிலையத்தில் விமான ஓடுதளத்தை அகலப்படுத்துதல், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் நிர்மாணித்தல்,புதிய விமான முனைய  கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டம்  ரூ.381 கோடி மதிப்பில் தொடக்கப்பட இருக்கிறது. இதில் 13,530 சதுர மீட்டர் பரப்பளவில் விமானம் முனையை கட்டிடம் அமைய இருக்கிறது. இதனால் அதிகபட்சமாக 600 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெனிக்ஸ் கடை மீண்டும் திறப்பு – எஜமானனை தேடும் செல்லப்பிராணி…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் பெனிக்ஸின் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெனிக்ஸ் பாசத்துடன் வளர்த்த நாய் கடைக்குள் அவரை தேடி வரும் காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் சிபியை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜெயராஜ், […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போட்டு இருக்காங்க…. ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியும்…. பாய்ந்து அடித்த சிபிஐ ….!!

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் மீது பொய் வழக்கின்  அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சிபிஐ காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது. சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ்  இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறையிலிருக்கும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இளைஞர் மீது பொய் வழக்குப் பதிந்ததைக் கண்டித்து போராட்டம்…!!

சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பசும்பொன் தேவர் மக்கள் போராட்டம் நடத்தினர்.  சாத்தான்குளம் போலீசார் இளைஞர் ஒருவரை தாக்கி கொலை வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்குதல் – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை…!

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அதற்கான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் சேர்ந்த மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாட்டின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தந்தை மகன் கொலை வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை…!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக திருச்செந்தூரில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் பால் துறை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ததை அடுத்து டெல்லி சிபிஐ […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி துரைமுத்து சாவு… உறவினர்கள் செய்த செயல்… வெளிச்சத்திற்கு வந்த மர்மங்கள்…!!

போலீசார் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து வெடி குண்டு வீசி பயிற்சி எடுத்தது போன்ற வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.  ஏராளமான கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி துரைமுத்து, வெடிகுண்டு தயாரித்து மீண்டும் ஒரு கொலை செய்வதற்கு தயாராகி வருகிறான் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அவனை பிடிக்கச் சென்ற போலீசார் மீது துரைமுத்து  வெடிகுண்டை வீசியதால் அந்த வெடிகுண்டு வெடித்து, காவலர் சுப்ரமணியன் உயிரிழந்த நிலையில், பிரபல ரவுடி துரைமுத்துவும் பலியானான். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரவுடியுடன் ஏற்பட்ட மோதலில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழப்பு – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

நெல்லை அருகே ரவுடியுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் ரவுடி துறை முத்துவை பிடிக்க சென்ற போது வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்ரமணியன் உயிரிழந்தார். அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடலில் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய முதலில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. தொடர்ந்து உடற்ககூரு ஆய்வு ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியத்தின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் தீர்ப்பு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகார அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேபியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துப்பாக்கிச் சூடு முதல் தீர்ப்பு வரை…. ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை..!!

ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு கடந்து வந்த பாதையை இப்பொழுது காணலாம். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு மே 22ம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள்13 பேர் கொல்லப்பட்டனர். 2018 மே 28-ஆம் தேதி காற்று நீருக்கு  மாசு ஏற்படுத்தியதாக […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லட்டு, பட்டாசு… கோஷமிட்டு வரவேற்ப்பு… தூத்துக்குடியில் கொண்டாட்டம் …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் சென்னை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை – மேல்முறையீடு செய்ய வேதாந்தா முடிவு..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பளித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். தூத்துக்குடி மக்கள் சாலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடி காட்டிய நிலையில் தற்போது வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.  பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 39 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS : ஸ்டெர்லைட்க்கு தடை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. மக்கள் மகிழ்ச்சி …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு ? இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பு – தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாயை தாக்கிய தந்தை…”அடித்து கொலை செய்த மகன்கள்”… பரபரப்பு சம்பவம்..!!

தட்டார்மடம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கொன்ற மகன்களை போலீசார் கைது செய்தனர்.. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இருக்கும் உசரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் தான் துரை.. இவருக்கு வயது 48 ஆகிறது.. கூலி வேலை செய்துவரும் இவருக்கு செல்வம் என்ற மனைவியும், ஜெகன் (21), சிவா (19) என்ற 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.. துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.. நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். ஏற்கனவே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அமோக விளைச்சல் கண்டுள்ள வெண்டைக்காய் – விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெண்டைக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளதுடன் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் ஆலந்தலை சவலபேரி உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கரில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். 60 நாட்களில் விளைச்சல் தரும் வெண்டைகாய் தற்போது நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மேலும் கடந்த வாரங்களில் கிலோ 4 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் தற்போது 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி-அமமுக சார்பில் நிதியுதவி…!!

மூணாறு நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களது  குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர். கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் 26 பேர் பலியாகினர். இதில் கோவிந்தா புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து  இறந்தவர்களின் குடும்பத்தினரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் காவலர்கள் பொய் வழக்கு பதிவு செய்ததாக புகார்…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் திரு. பால கிருஷ்ணன், திரு. ரகு கணேஷ் ஆகியோர் தங்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்ததாக வந்த புகாரை அடுத்து கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வம் புகார் அளித்தவர்களிடம்  நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவரும் பணம் பெற்றுக் கொண்டு, பல்வேறு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த […]

Categories

Tech |