தூத்துக்குடியில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதேபோல தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]
Category: தூத்துக்குடி
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய 2,200 பேர் தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் 15 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க 1500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தங்க வைப்பதற்கான […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று எம்பி கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருள்களின் இருப்பு குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வுமேற்கொண்டார். இதையடுத்து எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது , “இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். கொரோனா சிறப்புப் பிரிவில் […]
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர் தூத்துக்குடி, […]
தூத்துக்குடி அருகே சாலையைக் கடக்க முயன்ற நபர் காரால் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி விடும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நேற்று சாலைபுதூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதி சாலை தடுப்பு சுவரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே […]
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில், கட்டுப்பாடுகள் அதிகரித்தது மட்டுமல்லாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பொருத்தவரை வைரஸ் காரணமாக துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அனைத்தும், அதிலுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் ஸ்கேன் மூலமாக ஸ்கிரீனிங் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கப்பல்களில் சரக்குகள் இறக்கப்டுகின்றது. இதனைத்தொடர்ந்து கப்பல்களில் இருந்து யாரும் சிப்பந்திகள், மாலுமிகள் உள்ளிட்ட யாரும் தரைதளத்தில் […]
திருச்சி அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் ஐம்பத்தி ஒரு சவரன் நகை ஐந்தரை லட்சம் பணம் உள்ளிட்டவற்றை திருடிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாலாஜி நகரில் 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி வேலைக்கு […]
தூத்துக்குடியில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலரை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கல்லூரி மாணவி புகார் அளித்திருக்கிறார். தூத்துக்குடியில் சொந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் இளம்பெண் ஏமாற்றப்பட்டுள்ளார். பள்ளிக்காலம் முதல் காதலித்து வந்த காதலர் காதலியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பதுள்ளதால் இந்த துயர சம்பவம் வெளியே வந்துள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது ஊரை சேர்ந்த […]
நாளை கோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுக்கான தேர்தலில் திமுக 8, அதிமுக 5, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 , சுயேச்சைகள் 4 இடங்களில் வென்றன. இந்நிலையில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்ட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட்து. அந்த உத்தரவில் ஒத்திவைக்கப்பட்ட கோவில்பட்டி […]
பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியவர் கைது சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்செல்வி. இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் என்பவர் எதிர்பாராத நேரம் வீட்டிற்குள் நுழைந்து தங்கச்செல்வியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த தமிழ்ச்செல்வி சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து முருகனை […]
தூத்துக்குடி அருகே சக மாணவனின் வாகனத்தை திருடிய 19 வயது இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை கல்லூரி வாசலில் நிறுத்திவிட்டு சென்று, பின் திரும்பி வந்து பார்த்த போது அதனை காணவில்லை. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் நாசரேத் பகுதியில் மற்றொரு இடத்தில் எலக்ட்ரிக்கல் […]
தூத்துக்குடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 7 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை அடுத்த கூடம் பள்ளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அவரது உறவினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தரும் டீலர்கள் குறித்து விசாரித்து வந்துள்ளார். அப்போது கோரம்பள்ளம் பிஎஸ்பி நகரைச் சேர்ந்த கோயில்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக […]
தூத்துக்குடி அருகே நண்பன் பேசாததால் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் பகுதியை அடுத்த அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் தேவநேசன். இவரது கணவர் சாமுவேல் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள் ஒரு மகன் இருந்தனர். அதில் மூத்த மகள் அமுதா பிகாம் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில் அமுதா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நெருக்கமாக நட்பாக பழகி […]
தூத்துக்குடி அருகே விபத்தில் போலீஸ் SI உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட மாசார்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நேற்றைய தினம் இரவு மேலக்கரந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மாசார்பட்டி பகுதிக்கு உட்பட்ட அச்சம்குளம் கிராமத்தில் தவறு நடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை பகுதியை அடுத்து லாரி ஒன்று […]
காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலு மூடு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தௌபீக், முகமது சமீம் உள்பட 4 பேர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக போலீசார் கைது செய்தது. இதையடுத்து தௌபீக், முகமது சமீம் உள்பட 4 பேரிடம் நடத்திய விசாரணையில் காயல்பட்டினத்தில் மொய்தின் பாத்திமா என்பவரின் வீட்டிற்கு இவர்கள் […]
தூத்துக்குடி மாவட்டம் இளையராசனேந்தலை தலைமையகமாக கொண்டு புதிய யூனியன் அமைக்க வேண்டுமென 15 பஞ்சாயத்தை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து குருவிகுளம் யூனியனில் இருந்து இளையரசனேந்தல் பிரிவை சேர்ந்த 15 பஞ்சாயத்துக்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. ஆனால் இதில் ஊரக உள்ளாட்சித் துறை தவிர்த்து மற்ற அனைத்தும் சேர்க்கப்பட்டதால் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கு 35 கிலோ மீட்டர் தூரம் இந்த 15 பஞ்சாயத்துகளை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற மார்ச் 3ஆம் தேதி ஐய்யா வைகுண்டர் அவதார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வைகுண்டர் அவதார விழா தூத்துக்குடி மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இவ்வாண்டு மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட அவதார விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை […]
அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3 ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு தேர்வுகள் எழுதுபவர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரத்ததான கழக நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ரத்ததான கழக உறுப்பினர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு புத்துயிர் இரத்ததான கழக தலைவர் தலைமை தாங்க மற்றவர்கள் அவருடன் சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், மருத்துவமனை வளாகத்திற்குள் சிமெண்ட் […]
தூத்துக்குடி அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் மீனவ தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி பெட்ரா. இவர்கள் இருவருக்கும் ரபீக், எட்வின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரபீக் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். எட்வின் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களது தாய் […]
தூத்துக்குடி அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியையும், பக்கத்து வீட்டு இளைஞனையும் மேள கலைஞர் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியையடுத்த புங்கவர்ணத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். வயது 50 இவர் மேள கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மாரியம்மாள். வயது 45. இவர்கள் இருவருக்கும் 3 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். கடைசி மகனைத் தவிர மற்ற அனைவரும் திருமணமாகி தனி வீட்டில் வசித்து வருகின்றனர். கடைசி […]
திருமணமான பெண் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சாத்தான்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மேல தெருவை சேர்ந்தவர் ஹமீத். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது ஷிபானாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணம் முடிந்து ஷிபானா கணவருடன் வசித்து வரும் வேலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் முறையாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். எனவே ஷிபானா […]
திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியையும், அவருடைய ஆண் நண்பரையும் பெண்ணின் கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நந்தம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். மேளம் வாசிக்கும் தொழில் செய்துவரும் இவருக்கு, திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சண்முகத்தின் எதிர் வீட்டில் வசிப்பவர் ராமமுர்த்தி. திருமணமாக ராமமுர்த்தி அதே ஊரில் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் ராமமுர்த்திக்கும் சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]
தூத்துக்குடி அருகே படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை அடுத்த பண்டாரவிளை வன்னியனுர் பகுதியில் வசித்து வருபவர் இரட்டை முத்து. இவருக்கு சரவணன் என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இருவரும் தூத்துக்குடியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளனர். இருவருக்கும் படிப்பிற்கேற்ற வேலையும் கிடைக்காமல், எதிர்பார்த்த ஊதியம் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவுதியில் இறந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி உதவி கலெக்டரிடம் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை அடுத்த சிவந்திபட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் அல்லி பப்பா. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். கணவனை இழந்து இவர் குழந்தைகளை பராமரித்து வளர்த்து இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டி கொடுத்ததோடு மூத்த மகனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இளைய மகன் வேல்முருகன் என்பவன் சவுதி […]
மனைவியை பிரிந்து தனியே இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் . நாசரேத்து மில்ரோடு சேர்ந்த பூ வியாபாரியான ஆறுமுகம் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து மனைவியர் இறந்து விட்ட காரணத்தினால் மூன்றாவது முறையாக கஸ்தூரி என்பவரை திருமணம் செய்திருந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கஸ்தூரியின் தாயார் உடல்நிலை பாதிக்கப்படவே கஸ்தூரி சென்னை சென்றுள்ளார். மனைவியை பிரிந்து தனியாக இருந்த ஆறுமுகம் மன வேதனையிலும் மன விரக்தியில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]
தனியே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் புதிய பாலத்தில் வரும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பழைய பாலத்தின் வழியாக திரும்பி செல்வதால் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி சேர்ந்தவர் இசக்கி தாய் ஆள் நடமாட்டம் இல்லாத புதுப்பாலம் வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென பின்னால் இரண்டு சக்கர […]
பெண்கள் , குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி பயிற்சி அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஆணையர் குழு சார்பில் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிமன்றத்தின் சமரச மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி ஹேமா தலைமை தாங்கினார். மேலும் […]
தூத்துக்குடி அருகே மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு தீக்குளிக்க முயன்ற மாற்றுத் திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா பசுமை வீடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து கோவில்பட்டி தாசில்தார் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வ உ சி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவர் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்க வேண்டி கடந்த 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை இவருக்கு ஸ்கூட்டர் […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் ஒரு கோடியே 33 லட்சத்து 535 ரூபாய் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த பணியை கோவில் செயலாளர் தலைமை தாங்கி பார்வையிட்டார். இதில் குரு குலதெய்வ பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது […]
இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகரை சேர்ந்தவர் பால்சாமி இவரது மனைவி செல்லம்மாள் இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்து தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்றைய முன் தினம் மகளுக்கு மொட்டை போடுவதன் காரணமாக கோவிலுக்கு செல்ல தீர்மானம் செய்யப்பட்டது ஆனால் குழந்தையின் தாய் செல்லம்மாள் கோவிலுக்கு தான் வரவில்லை என்று கூறியுள்ளார். எனவே பால்சாமி […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பப்பரப்பா என்ற பெண் மனு கொடுப்பதாக கூறி உள்ளே நுழைந்துள்ளார். நுழைவுவாயிலில் காவல்துறை அதிகாரிகள் அவரது பையை சோதனையிட்டபோது அதில் மண்ணெண்ணெய் கேன் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் இவ்வாறு தெரிவித்தார், […]
பலநாள் தேடி வந்த பிரபல ரவுடியை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் நெல்லை மாவட்ட காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகளும் இருந்துள்ளன. மேலும் அந்த ரவுடிக்கும் கூலிப்படையினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். பல நாள் முயற்சி செய்த […]
தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மணமகன் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் மகுடம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த வாரம் எட்டையபுரம் பகுதியில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சமூகநலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் என்பவர் தூத்துக்குடி மாவட்ட அனைத்து […]
கணவன்-மனைவி இடையே நடந்த சண்டையினால் பெண் தற்கொலை. தூத்துக்குடியில் உள்ள சுனாமி காலனி சிலுவைப் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரை காதல் திருமணம் செய்தவர் ஜாஸ்மின். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கை வெறுத்து மனமுடைந்த ஜாஸ்மின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்ய எண்ணி விஷத்தைக் குடித்து மயங்கியுள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஜாஸ்மினை […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு, விபூதிப் பிரசாதம் வழங்கிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோயிலாகவும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இக்கோயிலில், ரூ.250 கட்டணத்தில் சிறப்பு விரைவு தரிசனம், ரூ.100 கட்டணத்தில் […]
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பெயரில் கோவில்பட்டி நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கோவில்பட்டி தெற்கு பஜார், மார்கெட் ரோடு, கிருஷ்ணன் கோவில் ரோடு, பூ மார்கெட், மெயின் ரோடு ஆகியப் பகுதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர்கள் குழு செய்த இந்த ஆய்வில் […]
தமிழகத்தில் ஆப்ரேஷன் சாகர் காவச் பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 19 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முயல் தீவு வழியாக இரண்டு விசைப்படகில் ஒரு குழு ஊருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் வேடத்தில் பதுங்கியிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டுகள் திட்ட வரைபடங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று நாகை கடற்கரை பகுதிகளில் கடலோர காவல்படை படகில் […]
தென்தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 76 சிற்றின வகைகளில் 46,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளன. தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து 51 நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுமார் 76 சிற்றின வகைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் […]
தூத்துக்குடி அருகே திருமணமான 5 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த பெரியசாமிபுர கிராமத்தை சேர்ந்தவர் பாக்கிய ஜார்ஜ். இவரும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் மகள் மேரி என்பவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் […]
தூத்துக்குடி அருகே ஆசிரியர்களின் கொடுஞ்செயலால் விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை அடுத்த செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் பெருமாள். இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பேச்சியம்மாள். அருகிலுள்ள பாளையங்கோட்டையில் இயேசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக […]
தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிகமான கவுன்சிலர் வைத்து இருந்த நிலையிலும் ஒன்றியத் தலைவராக அதிமுகவை தேர்வு செய்தது. இந்த தேர்தலில் முறைகேடாக அதிமுகவை தேர்வு செய்ததாக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் நான்குமணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற கொண்டிருந்த போது திடீரென்று திமுக தொண்டர்கள் லட்சுமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் […]
ஒரே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பொது விநியோகத் திட்டங்கள் குறித்து அங்காடிகளில் தொடர்ந்து கண்காணிக்கவும், அத்தியாவசிய பொருட்களில் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை சிறப்பான முறையில் கவனித்து வருமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் […]
மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 12 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மற்றும் ஹைட்ரோகார்பன் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஹைட்ரோகார்பன் விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். அது இருக்கக்கூடிய வளத்தை பயன்படுத்தக்கூடிய ஒன்று என்று கூறி அதனை […]
நான்கு வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியினரின், நான்கு வயது சிறுவன் ஹரிஸ், தேசியக் கொடிகளை பார்த்து அந்த கொடிகளுக்குரிய நாட்டின் பெயரைச் சொல்லி அசத்துகிறார். தனியார் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுவனிடம் 40 நாடுகளின் கொடிகளை ஆசிரியர்கள் காண்பித்தனர், இரண்டு நிமிடத்தில் அந்த நாட்டின் பெயரை சொல்லி சிறுவன் அசத்தியுள்ளார். விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும், நாட்டின் […]
மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் மரியமிக்கேலம்மாள் (95). இவரது வளர்ப்பு மகன் நிகோலஸ் (42), மருமகள் இந்திரா (34). இதனிடையே, நிகோலஸ் இந்திராவுடன் சேர்ந்த தனது வளர்ப்பு தாயை கொடுமைப்படுத்திவந்ததாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகாரின்பேரில், சமூக நலத் துறை அலுவலர்களும், காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினரும் […]
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ரயில் வாசல் படியில் பயணம் மேற்கொண்ட வாலிபர் தவறி விழுந்து தலை துண்டாகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் ஆரம்பிக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றின் தலை துண்டாக கிடந்துள்ளது. இதனை நெல்லை to ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயில் ஓட்டுனர் பார்த்து ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி தலைமை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட […]