Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

300 கிலோ கடல் அட்டை கடத்தல்….. தப்பி ஓட்டம்….. 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

தூத்துக்குடி அருகே ஆம்னி வேனில் கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்த காவல்துறை  அதிகாரிகள் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் இன்று அதிகாலை கடற்கரை பகுதியில் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.   அப்போது ஆம்னி வேனில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த உதவி ஆய்வாளர் கடத்தலில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என் சாவுக்கு கணவன்… மகன்கள் தான் காரணம்….. தூக்கில் தொங்கிய பெண்….. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் கணவன்  மற்றும் மகன்கள் செலவுக்கு பணம் தராததால் மனைவி தூக்கில் தொங்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயல் பவுலா நகரில் வசித்து வருபவர் ராஜ். இவரது மனைவி பெயர் ராஜகன்னி. ராஜ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர் ராஜ் மற்றும்  அவரது இரண்டு மகன்களும் கடலில் மீன்பிடி தொழில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் விளையாட்டு … ”மாஸ் காட்டிய இளைஞர்கள்”… சுகந்தலையில் கொண்டாட்டம் …!!

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சுகந்தலையில் விளையாட்டுப் போட்டி உற்சாகமாக நடந்து முடிந்தது. தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் புதுஆடை அணிந்து , வீடுகளில் கோலம் போட்டு , பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல இரண்டாம் நாள் பண்டிகையாக மாட்டு பொங்கலையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு போட்டி நடத்தி அன்றைய நாளை உற்சாகத்துடன் போக்குவார்கள்.   […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் விளையாட்டு போட்டி…. சுகந்தலையில் கோலாகலம்….!!

பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி சுகந்தலையில் சிறப்பாக நடைபெற்றது.. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாட்டுப்பொங்கலான இன்று அனைத்து பகுதியிலும் விளையாட்டுப் போட்டி நடத்தி மாட்டுப்பொங்கலை சிறப்பாக தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை கிராமத்தில் விளையாட்டு போட்டி நடத்துவதற்காக அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. EVLK இளைஞரணி சார்பில் பொங்கல் விளையாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி வளர்ச்சியில் என் பங்கு இருக்கும்….. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு பேச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் விரைவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் அதில் எனது பங்கும் கட்டாயம்  இருக்கும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுக சங்கத்தில் நேற்றையதினம் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த உலகில் பல்வேறு தொழிலதிபர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநரும் தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறந்த ஏற்றுமதியாளர்களாக தேர்நதெடுக்கப்பட்ட 38 பேருக்கு விருது வழங்கிய, பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் 13 மணி நேரம் தத்தளித்த ஆறு மீனவர்கள்!

படகு கவிழ்ந்து 13 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 6 பேரை சக மீனவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 3 மணியளவில் டோமினிக் என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்ற டோமினிடக், ராஜ், இசக்கி ராஜா, ராஜ், சூசை, இளங்கோ ஆகிய ஆறு மீனவர்கள் கூடங்குளம் அருகே 16 நாட்டிக்கல் மைலின் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் அதிகக் காற்று வீசியபோது படகில் ஏற்பட்ட ஓட்டையால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

‘தரமற்ற ரேஷன் அரிசி…. 1 கிலோவுக்கு ரூ 25 வழங்க வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!

ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பின் அதற்கான பணத்தை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குறைதீர் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ஆம் தேதி மாலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பஞ். தலைவர், கவுன்சிலர்.”… மாஸ் காட்டிய தம்பதிகள்..!!

உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்று வியப்படைய வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டதில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவின் படி தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை ஆளும் அதிமுக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட முக்காணி பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்றது வியப்படையச் செய்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை கொள்ளை!

கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 110 பவுன் தங்கநகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மருத்துவர் சொக்கலிங்கம் குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”புதிய பஞ்சாயத்து தலைவர்” சுகந்தலை ஊர் சார்பில் பாராட்டு ….!!

சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற திரு. வெங்கடேசனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இரவு பகலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. திமுக தலைமையிலான கூட்டணி 272 , 2338 இடங்களையும் , அதிமுக 241 , 2185 இடங்களையும் கைப்பற்றியது. தேர்தல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு…

திருச்செந்தூர் ,ஆறுமுகநேரி ஆத்தூரில் 4-ம் தேதி மின்தடை. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட  ஆத்தூர், ஆறுமுகேனரி, குரும்பூர், காயல்பட்டிணம் மற்றும் திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர  பராமரிப்பு  பணியின்  காரணமாக வருகின்ற 4ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகேனரி, பேயன்விளை, கயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், அடைக்கலாபுரம், தாளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், அம்மன்புரம், நல்லூர், பூச்சிக்காடு, கானம்கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கபுரம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி: சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு..!!

இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்தல் 27ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாவட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி மாற்றதால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு…

திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள்  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் வாக்குச்சாவடியை மறு சீரமைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   காயாமொழியில் ஏழாவது வார்டு வாக்குச்சாவடி    ஐந்தாவது வார்டிற்கும் ஐந்தாவது வார்டு வாக்குச்சாவடி ஏழாவது வார்டிற்கும் மற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து  வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள்  கூறியுள்ளனர்.    

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”நகையை பறித்த கொள்ளையன்” கத்திய குளோரியம்மாள்….. தூத்துக்குடியில் பரபரப்பு ….!!

கடைவீதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 19 பவுன் தாலிச் செயினை பறித்த கொள்ளையனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மட்டக்கடை தெற்கு நாடார் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி குளோரியம்மாள் (75). நேற்று அப்பகுதியிலுள்ள கடைக்கு குளோரியம்மாள் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குளோரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 19 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். அதிர்ச்சியில் குளோரியம்மாள் கூச்சலிடவே, அப்பகுதி […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைதிறப்பு விவரம்….

தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி  திருக்கோவில்.பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர்  மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 29 -ம் தேதி முடிய (17.12.2019 முதல் 14.01.2020 முடிய )                   நடைதிறப்பு விவரம்   நடைதிறப்பு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

யாருகிட்டயும் சொல்லாத… 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி …!!

 பள்ளி படிக்கும் 11வகுப்பு  மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தைபிறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வகைக்குளத்தில் உள்ளள முடிவைத்தானந்தல் பகுதியில்மாணவி ஒருவர் வயிறு வலி என்று கூறி 6மாத குழந்தையை பெற்றெடுத்தார். இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு எப்போதும் செல்வது வழக்கம் .அப்போது அங்கு பூசாரியாக இருக்கும் 46வயதான ராஜ் என்பவருக்கும் மாணவிவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .ஒருநாள் அம்மாணவியை யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு அழைத்த பூசாரி குளிர்பானத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” ரூ12,000க்கு அசத்தல் கார்…… SNAP DEAL பெண் மோசடி…….!!

ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண் ஒருவர் ஏமாற்றும் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை  சேர்ந்தவர் கேபிள் ஆப்பரேட்டர் பாலாஜி. இவரை செல்போனில் தொடர்புகொண்ட பெண் குரல் ஒன்று ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி அதற்கான சான்று வாட்ஸ் அப்பில் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேவை இல்லை எனில் 12,500 ரூபாய் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரத்தில் விளை நிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது . கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 1/4லிட்டர் மருந்து தேவைப்படும். ஆனால்  இவ்வகை ட்ரோன்களை வைத்து மருந்து தெளிக்கும் போது 110மில்லி இருந்தாலே போதுமனதாக உள்ளது .இந்த முறையில் மருந்து தெளிக்க ஏக்கருக்கு 700 மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது. .உளுந்து ,மக்காச்சோளம் ,கம்பு போன்ற  பயிர்களுக்கு இந்த முறையில் மருந்து தெளிக்கும் போது நல்ல முறையில் மகசூல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…..!!

குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பெய்த கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர், பாரதி நகர், கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுகதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமும் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சரிக்கு சமமாக பெண்கள்…. ”சிலம்பத்தில் அசத்தல்”….. கிங் ஆக மாறிய மாஸ்டர் …!!

புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தேர்வாகிய குரும்பூரை சேர்ந்த 11 பேருக்கு பயிற்சி அளித்த மாஸ்டர் ஸ்டீபனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஆண்டு தோறும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மாவட்ட வாரியாக வீரர்களை தேர்வு செய்து , மாநில அளவிலான போட்டி நடத்தி வருகின்றது.அந்தவகையில் தற்போது 30_ஆம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பாட்டபோட்டி மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றது. தூத்துக்குடி மாவட்டம் அளவிலாக நடைபெற்ற போட்டி இம்மாவட்டத்தில் உள்ள தருவை மைதானத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேர் கைது …!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .   ஓட்டப்பிடாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தனர் .இது குறித்து விசாரணை செய்து வந்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட முத்தரையரத்தை சேர்ந்த தினேஷ்குமார் ,மதுரை மாவட்டம் மேலுரைச்சேர்ந்த கருப்பசாமி ,நெல்லை திசையன்விளையை சேர்ந்த துரை ஆகியோரை கைது செய்தனர் .அவர்களிடம் இருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிலம்பத்தில் அசத்தல்…. ”சாதித்த குரும்பூர் மாணவர்கள்”….. குவியும் பாராட்டு ..!!

கோவில்பட்டியில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் குரும்பூர் பகுதி மாணவர்கள் அசத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாரதியார் மற்றும் குடியரசுதின விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி கோவில்பட்டி VOC அரசுப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் ஏராளமான பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை முதல் நடைபெற்ற இந்த போட்டியில் திருச்செந்தூர் தாலுகா குரும்பூரின் தமிழர் வீர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை… பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ”ராகுலிடம் விசாரியுங்க” முகிலன் தீடீர் முழக்கம் …!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல் துறைக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட முகிலனிடம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அண்ணன் ….. தம்பி ….. சித்தாப்பா ….. என்று பலருடன் உல்லாசம்….. பெண் எரித்துக் கொலை

அண்ணன் , தம்பி , சித்தப்பா என்று சொல்லி பல  ஆண்களுடன் நெருக்கம் வைத்திருந்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெருமாள், கவிதாவை விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த கவிதாவிற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்துவந்த எட்வின், குமரன் நகரில் வீடு பார்த்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் ஆடு திருடும் மர்ம கும்பல்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடந்த மாதம் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆறுமுகம் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் கடந்த மாதம் 24ம் தேதி திருடப்பட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. இதையடுத்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“யூரியா தட்டுப்பாடு” விவசாயிகளுக்குள் தள்ளு முள்ளு….. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தடையின்றி யூரியா வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் பருவ மழையை எதிர்பார்த்து வேளாண்மை செய்யப்பட்ட பயிர்கள் 40 நாட்கள் கடந்த நிலையில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே யூரியா வழங்கும் சமயங்களிலும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விளாத்திகுளம் புதூர் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்புடன் யூரியா விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“டெங்கு அபாயம்” குடியிருப்பு பகுதிக்குள் தேங்கி நிற்கும் மழைநீர்…… மகிழ்ச்சிபுரத்தில் சோகம்…!!

தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட மகிழ்ச்சி புறத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி  மாவட்டம் மகிழ்ச்சிபுரம் பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், மழை நீர் வழிந்தோட முறையான வசதி அங்கு இல்லாததால் தெருக்களிலே நீர் தேங்கியுள்ளது. இதனால் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைநீர் மற்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமண விழாவில் அசிங்கமா பேசிய இளைஞர்…… கத்தி குத்தால் மரணம்……. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே திருமண வரவேற்பு வீட்டில் குடி போதையில் தகராறு செய்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூர் அருகே  ராணி மகாராஜா புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ராஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் குடி போதையில் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குமாரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீண்டும்……. 2 வயது குழந்தை பலி…… சுர்ஜித்தை பார்த்த பின்பும் பெற்றோர்கள் அலட்சியம்….!!

தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதியினர் தொலைக்காட்சியில் சுர்ஜித் மீட்பு பணியை பார்த்துக் கொண்டு அலட்சியமாக இருந்ததால் அவர்களது 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா ஆகிய தம்பதிக்கு ரேவதி சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் நேற்றையதினம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து தொலைக்காட்சியில் கண்ணிமைக்காமல் ஆர்வமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

6 நாள் ஆச்சு…… இன்னும் முடியல…… ரூ2,00,00,000 தாண்டிய உண்டியல் பணம்……!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவை முன்னிட்டு காணிக்கையாக உண்டியலில் 2,86,71,715 ரூபாய் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். அதேபோல் இந்த வருடமும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பக்தர்கள் விழாவிற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே காப்புகட்டி, விரதம் இருந்து பின், சாமி அலங்கார வேடமிட்டு ஊரிலுள்ள அனைவரிடமும் ஊர் ஊராகச் சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து அதனை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வட இந்திய மாணவர்களே அதிகம்… “நம் மாணவர்களுக்கு வாய்ப்பில்லை”… எம்பி கனிமொழி பேச்சு.!!

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வெளிநாடுகளில் நம் மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையெனப் பேசினார். கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டன. அப்போது கனிமொழி பேசுகையில், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பிற்கு எந்த நிறுவனம் வேலை தரும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்முகத் தேர்விற்குச் செல்லவேண்டும், பல நேரங்களில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று தெரியமால் தவற விட்டுவிடுகிறோம் என்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”தண்டவாளத்தில் சிக்கிய கைலி” மாண்டு போன நகைக்கடை தொழிலாளி ….!!

தூத்துக்குடியில் தண்டவாளத்தில் கைலி சிக்கியதால் ரயிலில் அடிபட்டு நகைக்கடை தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  தூத்துக்குடி சுந்தரராமன் புரத்தைச் சேர்ந்த பாலகணேஷ் என்பவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பொழுது அவரது கைலி தண்டவாளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த முத்துநகர் விரைவு ரயில் பால கணேஷ் மீது வேகமாக மோதியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் சேர்ந்து காதலி பலாத்காரம்”…. காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது..!!

விளாத்திகுளத்தில் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த காதலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த  16 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளைஞரை  காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலருக்கு  வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததும் தனது காதலை முறித்துக் கொண்டார் அப்பெண். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி  காதலர் இசக்கி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்லலாம் என்று கூறி அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

2 மாதத்தில் 19 கொலைகள்…. 7 ஆய்வாளர் உட்பட 40 காவலர்கள் மாற்றம்….!!

தூத்துக்குடி மாநகரில் நடைபெற்ற தொடர் கொலைகள் சம்பவங்களின் எதிரொலியாக, 7 ஆய்வாளர்கள் உள்பட 40 காவலர்கள் அதிரடியாக மாற்றபட்டுள்ளனர். முத்துநகர் , தொழில் நகரம் என்று புகழப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 19 பேர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சட்ட ஒழுங்கு குறைபாடு என்ற பல குற்றச்சாட்டுக்கு எழுந்தன. இந்நிலையில் நெல்லை  சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு  பல்வேறு காவல் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பித்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த குற்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சுய தொழில்” தேனீக்கள் மூலம் வருவாய் ஈட்டும் தொழிலாளி…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இயற்கை முறையில் தேனீக்களை வைத்து தேன் சேகரித்து சம்பாதித்து வருகிறார் ஒரு தொழிலாளி. தேன் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை மக்கள் மறந்து வரும் நிலையில் சாத்தான்குளத்தில் நகுலன் என்ற தொழிலாளி இயற்கை முறையில் தேன் சேகரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளார். சொந்த ஊரான குமரி மாவட்டம் குளித்தலையில் இருந்து தேனிகளை கொண்டு வந்து இங்கு உள்ள தோட்டங்களில் வைத்துள்ளார். தேனீக்கள் அந்த தோட்டத்தில் உள்ள முருங்கை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட்டின் சகி திட்டம்…. இனி வேலை வாய்ப்பு பயமில்லை… மகிழ்ச்சியில் தூத்துக்குடி மக்கள்…!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சகி என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் காளான் உற்பத்தி, தேனி வளர்ப்பு மற்றும் தையல் பயிற்சி உள்ளிட்ட சுயதொழில் பயிற்சிகள் பெண்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான மையங்கள் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து தொழில் பயிற்சி பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம்ரீதியாக செய்யப்படும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மெதுவா போங்க ”வேகமா போகாதீங்க” வெட்டி கொலை செய்த கும்பல்….!!

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை கை தட்டி கேட்ட இளைஞர்கள் 2 பேரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சிவந்தாக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் . 38 வயதான இவர் மரைன் என்ஜினீயராக பணியாற்றி வருகின்றார். அதே போல ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்க்கும் விவேக் பிரையண்ட் நகர் 9_ஆவது தெருவில் வசித்து வருகின்றார். நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று  மாலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகேயுள்ள சிவந்தாக்குளம் பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அங்கே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் காயம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வடக்கு மயிலோடை அருகேயுள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழில் செய்துவரும் இவரும், இவரது மனைவியும்  சம்பவதினத்தன்று வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் மாற்றுத்திறனாளியான பால்ராஜின் மகன்  மகாராஜன்(20) தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்ததில் மகாராஜனின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் இருந்த மின்சாதன பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த மகாராஜன் கயத்தாறு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 4 மாதத்தில் கருத்து வேறுபாடு… தூக்கில் தொங்கிய காதலி… கதறும் காதலன்..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூரை  சேர்ந்த பிரபாகரனும், வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த ஆஷாவும் வீட்டில்  பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வேலைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கருகிய பருத்தி பயிர்கள்… வேதனையில் உருகிய விவசாயிகள்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வடபகுதிகளில் பெய்த மழையை விட தென்தமிழகத்தில் நடப்பாண்டில் போதிய மழை பெய்யாமல் கிணறுகள் வறண்டு பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீரின்றி கருகும் பருத்தி சாகுபடி செய்த நிலங்களில் கால்நடைகளை மேய விடும் […]

Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள முதல்வர் வேண்டுகோள்…. நிறைவேற்றிய தூத்துக்குடி கல்லூரி… குவியும் பாராட்டு…!!

கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சினிமாவை மிஞ்சிய கொடூரம்… காவல் நிலைய வாசலிலே தொழிலதிபர் வெட்டி கொலை..!!

தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சும் வகையில் காவல் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் சிவகுமார்.  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், பல்வேறு நிலையில் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள தனது அண்ணன் முத்துக்குமார் அலுவலகத்திற்கு சென்று விட்டு சிவகுமார் திரும்பியுள்ளார். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புது புது டிசைனில் விநாயகர் சிலைகள்… அசத்தும் சிலை தயாரிப்பாளர்கள்..!!

சாத்தான்குளம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பாலகுருசாமி கோவிலில் விநாயகர் சிலை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  3 முதல் 13 அடி வரை உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு புதிதாக குபேர விநாயகர், சிவன் ருத்ரதாண்டவம், அகத்தியர் தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விடும் காட்சிகள் போன்றவற்றை மிகவும் தத்துரூபமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும் போதே மரணம் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்..!!!

கோவில்பட்டியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே திடீரென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணம் அடைந்தார்.   தூத்துக்குடி அருகே அமைந்துள்ள கோவில்பட்டியில் கிழக்கு போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இசக்கிமுத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடியாகும். இவருக்கு செல்வி (வயது 50) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பரலோகமாதா ஆலய விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று மூச்சுத் திணறலால் மயங்கி கீழே விழுந்துள்ளார்.       இதையடுத்து அருகில் இருந்த சகபோலீசார் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் ..!! டிஜிபி திரிபாதி உத்தரவு ..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 8 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், தூத்துக்குடி என்ஐபி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்ஐபி சிஐடியாக பணியாற்றிய முரளிதரன், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணிபுரிந்த முத்தமிழ் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சகாயஜோஸ் சென்னைக்கும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து ஒருவர் பலி..!!

தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து தீ பிடித்ததில் ஓய்வுபெற்ற கேப்டன் ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மட்டக்கடை  சேர்ந்த ஓய்வு பெற்ற கேப்டன் ஸ்டீபன் என்பவர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே  அவர்கள் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து எட்டி பார்த்துள்ளனர். அப்போது குளிரூட்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயை கட்டுப்படுத்தினர். வீட்டினுள் ஸ்டீபன்  மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“புதிய கல்வி கொள்கை-2019” மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்..!!

நாகலாபுரத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கை குறித்து சரியான கருத்தை மக்களிடம் தெரிவிக்க விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், நேற்று தூத்துக்குடி  மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில், புதிய கல்விக் கொள்கை-2019 என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் அக்கல்லூரி மாணவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்… ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்…!!

கோவில்பட்டியில் நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர்  இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில்  பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் அதீத […]

Categories

Tech |