Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மீன் மார்க்கெட் போறீங்களா….? ரூபாய் 5,000 அபராதம் கட்ட வேண்டாம்…. முக கவசத்துடன் போங்க….!!

வேலூர் மீன் மார்க்கெட்டில் விதிகளை மீறிய விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மக்கான் அருகில் புதிதாக மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதியம் 12 மணி வரை மட்டுமே இறைச்சிக்கடைகளுக்கு அனுமதி விதித்துள்ளனர். இதனால் மீன் வாங்கிச் செல்வதற்காக சென்ற பொதுமக்கள் கூட்ட கூட்டமாக முக கவசம் அணியாமல் நின்றுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மீன் மார்க்கெட்டுக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா அச்சம்…. தப்பிச்சென்ற முன்னாள் ராணுவ வீரர்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

கொரோனா அச்சத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற முன்னாள் ராணுவவீரர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டியூர் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஏழுமலை மற்றும் அவரது மனைவி ரேவதி ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இதில் ஏழுமலை முன்னாள் ராணுவ வீரராக இருந்துள்ளார். ஆனால் தற்போது மேல்மாயில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாதிப்பு அதிகமா இருக்கு…. ஆந்திரா மாநிலம் போக முடியாது…. 35 பேருந்துகள் நிறுத்தம்….!!

வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்க்கு இயக்கப்பட்டு வந்த 35 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இதனையடுத்து ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும்தான் கார், பேருந்துகள் போன்ற வண்டிகள் இயங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. காவல்துறையினருக்கு இது அவசியம்…. சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு சுகாதாரத்துறை சார்பில் 1000 மருந்து பெட்டகம் விநியோகிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தொற்று பாதித்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், மருந்து பெட்டகம், ஜிங்க், மற்றும்  வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடேயே வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெவ்வேறு காரணங்களுக்காக…. ஒரேநாளில் உயிரிழந்த 12 பேர்…. தகவல் கொடுக்காத மருத்துவமனை நிர்வாகம்….!!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 12 நபர்கள் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினசரி 400 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகம் பாதித்தவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

” கோவேக்சின் கோவிசீல்டு” வேலூருக்கு 5,500 வந்திருக்கு…. குளிர்சாதன கிடங்கில் பாதுகாப்பு….!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்திற்கு 5,500 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று சேரும் இடங்களான மார்க்கெட், பேருந்து நிலையம், மற்றும் கடைவீதி போன்ற பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சளிமாதிரியை சேகரித்து வருகின்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேகமெடுக்கும் கொரோனா தொற்று” ஒரே நாளில் 648 பேருக்கு உறுதி…. பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரியின் அறிவுரை….!!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 648 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரையிலும் 516 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 648 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட நபர்கள் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள், மீதம் இருப்பவர்கள் சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலை வாங்கித் தரேன்னு சொன்னாங்க… வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளலாரை பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அக்சயகுமார் என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்சயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை நம்பி தீபா தரப்பிலிருந்து ஆறு தவணைகளாக ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரம் வரை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாக்கு எண்ணிக்கை முடிந்து…. ஊர் திரும்பிய துணை ராணுவப்படை வீரர்கள்…. பூங்கொத்து கொடுத்து வழியனுப்பிய காவல் அதிகாரிகள்….!!

துணை ராணுவப் படை வீரர்கள் ஊர் திரும்பிய போது காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கே.வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு, பாலிடெக்னிக் கல்லூரியில் துணை கமாண்டர் பங்கஜ்குமார்ராம் தலைமையில், துணை ராணுவபடை வீரர்கள் 97  பேர் கடந்த 8ம் தேதியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதால் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தாய், சேய் இருவரும் பலி…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய்-சேய் இருவரும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாவில் இருக்கும் பாபு ராஜேந்திர பிரசாத் தெருவில் ராஜா என்பவர் பேக்கரி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால், வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கருத்தரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சிகிச்சையை அடுத்து மகாலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமிக்கு பிரசவவலி ஏற்பட்டு தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஒரே நாளில் 489 பேருக்கு …. வேலூரில் அதிகரிக்கும் தொற்று…. தீவிரபடுத்தப்படும் கட்டுப்பாடுகள்….!!

வேலூர் மாவட்டத்தில் மேலும் 489 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.   வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில்  மேலும் 489 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா ஒழியவும்…. நாடு பழைய நிலைக்கு திரும்பவும்…. திருநங்கைகளின் சிறப்பு வழிபாடு….!!

வேலூரில் கொரோனா அடியோடு போக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் தாலி கட்டி சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருடந்தோறும் நடைபெற்று வரும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் நடைபெற இருந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பாக வேலூரில் பழையடவுன் பஜனைகோவிலில் வைத்து கூத்தாண்டவர் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மக்களே உஷாரா இருங்க…. ஒரே நாளில் 500ஐ நெருங்கிய கொரோனா…. வேலூரில் அதிகரிக்கும் பாதிப்பு….!!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவ்வாறு இரண்டு நாட்களுக்கு முன்பு  441 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது நேற்று ஒரே நாளில் 497 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது. மேலும் வேலூர் மாநகராட்சியில் மட்டும் 300 க்கும் மேற்பட்டவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொதுமக்களே கவனம்…. பேருந்தில் அனுமதி இல்லை…. சுகாதாரத்துறையினர் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு…!!

வேலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு பேருந்தில் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுஇடங்களில் முககவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். எனவே பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் சிலர் பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதை செலுத்திக் கொள்ளுங்கள்… எந்த உடல்நலக்குறைவும் வராது… மாவட்ட அதிகாரியின் அசத்தலான விழிப்புணர்வு…!!

வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரையிலும் 92 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில்  நாளொன்றுக்கு 60% நபர்கள் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே மாநகராட்சி தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து வேலூர் மாநகராட்சியில் வசிக்கக்கூடிய 45 வயதிற்கு மேல் இருப்பவர் அனைவருக்கும் 30 ம் தேதி தடுப்பூசி செலுத்துவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் உடல் நலக்குறைவு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறு உத்தரவு வரும் வரை… இவங்க பார்க்க வரவே கூடாது… சிறைச்சாலையில் விதிக்கப்பட்டுள்ள தடை…!!

வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மத்திய சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  கிளை சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை  உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்ப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறைச்சாலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடுத்தடுத்து நடைபெற இருந்த குழந்தைதிருமணம்… தடுத்து நிறுத்திய சைல்டுலைன்… வேலூரில் பரபரப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக 18 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு நடைபெற இருந்த மூன்று திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி. குப்பம் அருகில் இருக்கக்கூடிய குறிஞ்சிநகரில் 18 வயதிற்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்தப் புகாரின்பேரில் நேற்றைக்கு முன்தினம் இரவு சைல்டுலைன் அணிஉறுப்பினர்கள் வெங்கடேசன், மகாலட்சுமி, மற்றும் சமூக நல அலுவலர் ராணி போன்றோர் அங்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது குடியாத்தம் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

2 நாளாகியும் வெளிய வரல… விடுதியில் கிடந்த சடலம்… சிக்கிய பரபரப்புக் கடிதம்…!!

வேலூர் விடுதியில் வால்பாறை நகராட்சி தூய்மை ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜான்சன் என்பவர் வசித்து வந்தார். இவர் கோவை மாவட்டத்தில் வால்பாறை நகராட்சியில் தூய்மை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜான்சன் கல்லீரல் பாதிப்பால் சிரமப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வேலூருக்கு சென்றுள்ளார். அங்கு ஆற்காடு சாலையில் இருக்கும் விடுதியில் சிகிச்சைக்காக தங்கியுள்ளார். இதனையடுத்து அங்கு இருக்கக்கூடிய தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளைஞரின் வேடிக்கை செயல்… என்னால சொல்ல முடியாது… கண்டித்து அனுப்பிய காவல்துறையினர்…!!

வேலூரில் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் இளைஞர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது,  கலெக்டர் அலுவலகம் மேம்பாலம் அருகில் சத்துவாச்சாரி காவல் அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று நபர்கள் பயணித்து வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, ஒரே வண்டியில் மூன்று நபர்கள் பயணம் செய்வது தவறு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனா பரவல்” அதிகரிக்கும் இறப்பு விதம்… சுகாதாரத்துறை அதிகாரிகளின் தகவல்…!!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களை சேலம் மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று பேரும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதனாலதான் அடைச்சுட்டாங்க… ஏமாற்றத்தில் திரும்பிய பொதுமக்கள்…. நடைபெறும் சுகாதார நடவடிக்கை…!!

குடியாத்தத்தில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்  வங்கி அடைக்கப்பட்டுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வேலூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, 297 பேருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருக்கும் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் இந்தியன் வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இரவுநேர ஊரடங்கால்… ரயில் நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளி… பின்பற்றப்பட்ட கட்டுப்பாடுகள் …!!

வேலூரில் இரவு நேர ஊரடங்கால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே வேலூர் மாவட்டத்தில் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரவு 10 மணிக்கு மேல் பஸ், ஆட்டோ, கார், வேன் போன்ற எந்த வாகனமும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாக்குபையில் இதான் இருக்கா…? வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த 300 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.   வேலூர் மாவட்டத்திலுள்ள பாகாயம் காவல் அதிகாரி இன்ஸ்பெக்டர் சுபா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் ஓட்டேரி ஏரி மதகு அருகில் அரசு மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் மது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஐயோ கடவுளே” பெத்த பிள்ளைகளையும் பறிகொடுத்துட்டேன்….. பெத்தவரும் போய்ட்டாரு…. பெண்ணின் விபரீத முடிவு…!!!

வேலூர் மாவட்டத்தில் மோகன் என்பவர் சொந்தமாக பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மோகன் கடைக்கு பட்டாசு வாங்க வந்தவர்கள் பட்டாசு வெடித்து டெமோ காட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது மோகனுடைய பேரன்கள் தனுஷ், தேஜஸ் ஆகிய இருவரும் கடைக்குள் இருந்துள்ளனர். இதையடுத்து மோகன் வெளியே வந்து பட்டாசு வெடித்து டெமோ காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறியானது கடைக்குள் விழுந்து பட்டாசு கடை தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் தன்னுடைய பேரன்களை காப்பாற்றுவதற்காக கடைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

BREAKING: தமிழகத்தில் காலையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…. சோகம்….!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தனது இரண்டு பிள்ளைகளும் இழந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி லத்தேரி பேருந்துநிலையத்தில் இருந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் வித்யா லட்சுமியின் தந்தை மோகன், குழந்தைகள் தனுஜ், தேஜஸ் உயிரிழந்தனர். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான வித்யாலட்சுமி,தன் குழந்தைகள் இல்லாத உலகில் தானும் வாழ கூடாது, இனிமேல் நமக்கு ஒன்றும் இல்லை என்று நினைத்து ரயிலில் பாய்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொலைபேசியில் வந்த தகவல்…. அதிரடி சோதனையில் பறக்கும்படையினர்…. 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!!

பெங்களூருக்கு கடத்த முயற்சித்த 5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  வேலூர் மாவட்ட அலுவலரான பானுவுக்கு தொலைபேசி வாயிலாக ரேஷன் அரிசியை கடத்தப்போவதாக  தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பறக்கும் படையின் உதவியுடன்  பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் தீவிர சோதனை பணி நடத்தப்பட்டது. அப்போது லாரி ஒன்றில் 5 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் வெற்றிவேல் மற்றும் தினேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, காஞ்சிபுரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காட்டு யானையின் அட்டூழியம்…. எங்கள் நிலத்துக்குள் வந்துவிடுமோ….? அச்சத்தில் விவசாயிகள்…!!

தோட்டத்திற்குள் யானை நுழைந்து வாழை மரங்களை சூறையாடிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு அருகில் இருக்கக்கூடிய பல்வேறு ஊர்களில் மா, வாழை, நெல் போன்றவை விளைவிக்க பட்டன. இந்நிலையில் விவசாயிகளுக்கு வேதனை அளிக்கும் விதமாக யானை அங்கு இருக்கக்கூடிய விளைநிலங்களை சூறையாடி வருகிறது. அவ்வகையில் வாழை தோட்டம் ஒன்றிற்குள் புகுந்த யானை அங்கிருந்த மரங்களை சூறையாடியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடித்தும் தீப்பந்தங்களை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனா பரவல்” அதிகரிக்கும் பாதிப்பு…. அச்சத்தில் மக்கள்…!!

கொரானா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவ்வகையில் வேலூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதும் குறையவில்லை. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 192 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பட்டாசு கடையில் திடீர் வெடிவிபத்து…. தாத்தாவுடன் உயிரிழந்த 2 பேரன்கள்..!!

வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர். கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும் தீயை அணைக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியே கேட்ட உறுமல் சத்தம்…. குடும்பத்தையே தாக்கிய சிறுத்தை…. வீட்டிற்குள் சிறைப்பிடித்த மக்கள்….!!

 மூன்று நபரை தாக்கி விட்டு வீட்டிற்குள் நுழைந்த  சிறுத்தையை  வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள எர்த்தாங்கள் கலர்பாளையத்தில் பிரேமா என்பவர் வாழ்ந்து வருகிறார். நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வெளியில் உறுமல் சத்தம் கேட்டபோது வெளியில்  வந்து பார்த்த பிரேமாவை சிறுத்தை தாக்கியுள்ளது. இதனால் பயத்தில் அலறிய பிரேமாவின் சத்தத்தால் அவளது மகன் மனோகர் மற்றும் மகள் மகாலட்சுமி ஆகியோர் வெளியே வந்து பார்த்த போது  அவர்களையும் சிறுத்தை தாக்கியது. அவர்களின்  அலறல் சத்தம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பதவி பணத்துக்காக…. மனைவியின் தம்பியை கதற கதற கொலை செய்த கணவன்… அதிர வைக்கும் சம்பவம்..!!

மாமியாரின் பதவி பணத்தை பெறுவதற்காக தனது சொந்த மனைவியின் தம்பியை அதற்கு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு ராஜா என்ற மகனும் உஷா என்ற மகளும் உள்ளனர். உஷாவிற்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி உயிர் இறந்ததற்காக அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

Flash News: 2 நாட்கள் விடுமுறை… அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

BREAKING: அனைத்து கடைகளுக்கும் தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக வாரச்சந்தைகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாத்திய படுகொலை: ரூ.4.12 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு…!!

அரக்கோணத்தில் சாதிய வன்மம் காரணமாக இளைஞர்கள் அர்ஜூன் மற்றும் சூர்யா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமாவளவன் அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும்படியும் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் உயிரிழந்த வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 4.12 லட்சம் மற்றும் மாதம் ரூ.5000 நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் வேலூர்

வசமாக சிக்கிய துரைமுருகன்…! ஷாக் ஆன ஸ்டாலின்…. அரண்டு போன திமுக….!!

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த விவகாரத்தில் காட்பாடி தொகுதி வேட்பாளரும், திமுக பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட குப்பாத்தா மேட்டூர் பகுதியில் நேற்று இரவு திமுக பிரமுகர் திரு. கோபி என்பவர் பணம் பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படையினர் சம்ப படத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோபி பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதற்காக இப்படியா…? பாட்டியின் கழுத்தை அறுத்து கொன்ற…. பேரனின் வெறிச்செயல்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் சாந்தி (60). இவருடைய பேரனான அஜித் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய பாட்டியிடம் அஜித்  குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பாட்டி கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த அஜித் தன்னுடைய பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த காவல்துறையினர் சாந்தியின் சடலத்தை கைப்பற்றி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தாயாரின் வீடியோவை வெளியிடுவேன்” அடிக்கடி பாலியல் தொல்லை…. மருத்துவமனை ஊழியரின் பரபரப்பு புகார்…!!

மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த குடியாத்தம் பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், இந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணும், அவரது  தாயாரும் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் அதனை வீடியோ […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மரத்தில் ஏறி மாட்டி கொண்டவர்…. சிறை காவலர்களிடம் சிக்கியவை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா பொட்டலங்களை வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அதே சிறையில் அடைத்து விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர் அங்கிருந்து தென்னை மரத்தில் ஏறி சிறை வளாகத்தை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து சிறை காவலர்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து தப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குழந்தை இல்லாத விரக்தி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கலாசிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் திவ்யா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உரசிய இரு கம்பிகள்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…!!

உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் கிராமம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திநகர் சிங்காரம் தெருவில் மகேந்திரன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் பில்லர் அமைப்பதற்காக குணசேகரன் கம்பி கட்டியுள்ளார். அப்போது பில்லருக்கு கட்டியிருந்த கம்பி திடீரென சாய்ந்ததால் குணசேகரன் கம்பியை பிடிக்க முயற்சி செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர்…. போராடி மீட்ட பொதுமக்கள்….. நடந்த துயர சம்பவம்…!!

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருட்டு சூழ்ந்த இடத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இவரின் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வேலூர் தெற்கு காவல் துறையினர் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்ன நடந்துச்சுனே தெரியல… தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை..!!

ஓடும் ரயிலில் குறுக்கே பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்விலாச்சூர் என்ற கிராமத்தில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் ராஜேஷ் குமார். இவர் மத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நந்திதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில்  ஜெயந்தி மற்றும் அவரது மகள் நந்திதா இருவரும் விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் போலீசார் இருவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்… 300 பேர் அதிரடி கைது… பலத்த பாதுகாப்பில் போலீஸ்…!!

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கியுள்ளார். மேலும் அரசு ஊழியர் சங்க தலைவர் சரவனராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முழுநேர அரசு ஊழியராக வேண்டும், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆபீசுக்கு வந்த போன் கால்…! நேரில் சென்ற அதிகாரிகள்… அடுத்தடுத்து நடந்த அதிரடி …!!

வேலூரில் அடுத்தடுத்து நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்களை குழந்தை நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. மற்றும் அதே மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும் ஆந்திராவை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் நாளை திருமணம் நாளை நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட குழந்தை நல உதவி எண்ணிற்கு வந்த புகாரின் அடிப்படையில் குழந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3கோரிக்கைகள் இருக்கு…! ஓயமாட்டோம், ஓயமாட்டோம்…. மாற்றுத்திறனாளிகள் ஆவேச போராட்டம் ..!!

மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வேலூரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூரில் மாற்றுத்திறனாளிகள் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையாக கொரோனா நிவாரண நிதி உதவியாக மூன்றாயிரம் ரூபாய் தரக் கோரியும், மற்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது போல 3 அல்லது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விசேஷத்துல கலந்துக்க போனேன்… அதுக்குல்ல இப்படி பன்னிட்டாங்க… விசாரணையில் போலீஸ்…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பக்தவச்சலம். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை… ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் குடும்பம்…!!

ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொய்கை மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவருடைய மகன் வசந்தகுமார் என்பவர் லடாக்கில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடைய குடும்பத்தில் நடந்த பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குடும்பத்தகராறு” ராணுவ வீரர் மனம் தளரலாமா…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையால் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்தார். வசந்தகுமார் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சென்ற மாதம் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து சில நாட்களாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் வாக்குவாதம் காரணமாக அவர் யாரிடமும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரிசீலிக்கப்பட்ட மனு… வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி முருகன் சந்திப்பு… பாதுகாப்பில் ஆயுதப்படை காவல்துறையினர்…!!

முன்னால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நளினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜெயிலில் இருக்கும் கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நளினி மற்றும் முருகன் நேரில் சந்தித்துப் பேசுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நள்ளிரவில் செய்த செயல்… சத்தம் போட்டதால் வெளிச்சமானது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் பின்னால் ஆடுகளை கட்டி போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். அதன்பின் நள்ளிரவில் திடீரென்று ஆடுகள் கட்ட தொடங்கியுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு சரவணன் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆட்டை திருட வந்தது தெரியவந்துள்ளது. உடனே அவர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம் […]

Categories

Tech |